8th Std Social Science Term 3 Solution | Lesson.2 காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

பாடம்.2 காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை - 8th Social Science Guide

பாடம்.2 காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. ……………………….. சமூகமானது தனக்குள்ளிருந்தும் வெளியிலிருந்தும் மாற்றங்களை உட்கிரகித்தும், வெளிப்படுத்தியும், நீக்கியும் தொடரந்து மாறிக்கொண்டே இருக்கிறது.

  1. மனித
  2. விலங்கு
  3. காடு
  4. இயற்கை

விடை : மனித

2. இந்தியாவிலுள்ள முதல் பெண் மருத்துவர்

  1. தர்மாம்பாள்
  2. முத்துலட்சுமி அம்மையார்
  3. மூவலூர் ராமாமிர்தம்
  4. பண்டித ரமாபாய்

விடை : முத்துலட்சுமி அம்மையார்

3. சதி எனும் நடைமுறை ஒழிக்கப்பட்ட ஆண்டு 

  1. 1827
  2. 1828
  3. 1829
  4. 1830

விடை : 1829

4. பி.எம். மலபாரி என்பவர் ஒரு

  1. ஆசிரியர்
  2. மருத்துவர்
  3. வழக்கறிஞர்
  4. பத்திரிக்கையாளர்

விடை : பத்திரிக்கையாளர்

5. பின்வருவனவற்றில் எவை/எது சீர்திருத்த இயக்க(ங்கள்)?

  1. பிரம்ம சமாஜம்
  2. பிராத்தனை சமாஜம்
  3. ஆரிய சமாஜம்
  4. மேற்கண்ட அனைத்தும்

விடை : மேற்கண்ட அனைத்தும்

6. பெதுன் பள்ளி ……………. இல் J.E.D பெதுன் என்பவரால் நிறுவப்பட்டது.

  1. 1848
  2. 1849
  3. 1850
  4. 1851

விடை : 1849

7. 1882ஆம் ஆண்டில் சிறுமிகளுக்கான ஆரம்பப் பள்ளிகளைத் தொடங்க எந்த ஆணையம் பரிந்தரைத்தது?

  1. வுட்ஸ்
  2. வெல்பி
  3. ஹண்டர்
  4. முட்டிமன்

விடை : ஹண்டர்

8.  சாரதா குழந்தை திருமண மசோதாவனது சிறுமிகளுக்கான குறைந்தபட்ச திருமண வயதை _____________ என நிர்ணயித்தது

  1. 11
  2. 12
  3. 13
  4. 14

விடை : 14

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. _____________ 1819 இல் கிறிந்துவ சமயப்பரப்பு குழுக்களால் அமைக்கப்பட்டது

விடை : பெண் சிறார் சங்கம்

2. சிவகங்கையை சேர்ந்த _____________ என்பவர் பிரிட்டிஷாரை எதிர்த்து வீரமாக போராடினார்

விடை : வேலுநாச்சியார்

3. இந்திய ஊழியர் சங்கத்தை நிறுவியர் _____________ 

விடை : கோபால கிருஷ்ண கோகலே

4. தமிழ் நாட்டின் மிகப்பெரிய சமூக சீர்த்திருத்தவாதிகளில் ஒருவர் _____________ ஆவார்

விடை : ஈ.வெ.ரா. பெரியார்

5. கந்துகூரி வீரசலிங்கம் வெளியிட்ட பத்திரிக்கையின் பெயர் _____________ ஆகும்

விடை : விவேசுவர்தினி

III.பொருத்துக

1. பிரம்மஞான சபைஇத்தாலிய பயணி
2. சாரதா சதன்சமூக தீமை
3. வுட்ஸ் கல்வி அறிக்கைஅன்னிபெசன்ட்
4. நிக்கோலோ கோண்டிபண்டித ரமாபாய்
5. வரதட்சணை1854
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – உ, 4 – அ, 5 – ஆ

IV. சரியா / தவறா?

1. ரிக் வேத காலத்தில் பெண்கள் கெளரவிக்கப்பட்டனர்

விடை : சரி

2. தேவதாசி முறை ஒரு சமூக தீமை

விடை : சரி

3. இந்தியா சமூக சீர்திருத்த இயக்கத்தின் முன்னோடி ராஜா ராம் மோகன்ராய்

விடை : சரி

4. பெண்களுக்கான 23 சதவீத இட ஒதுக்கீடு என்பது பெண்களின் சமூக-அரசியல் நிலையை மேம்படுத்துவதைக் குறிக்கிறது.

விடை : தவறு

5. 1930ஆம் ஆண்டு சாரதா சட்டம் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கான திருமண வயதை உயர்த்தியது

விடை : சரி

V. சரியான கூற்றைத் தேர்ந்தேடு

1. சரியான இணையை கண்டுபிடி

  1. மகளிர் பல்கலைக்கழகம் – பேராசிரியர் D.K. கார்வே
  2. நீதிபதி ரானேட – ஆரிய சமாஜம்
  3. விதவை மறுமணச் சட்டம் – 1855
  4. ராணி லட்சுமிபாய் – டெல்லி

விடை : ii மற்றும் ii

2. மாறுபட்ட ஒன்றினைக் கண்டுபிடி

  1. குழந்தை திருமணம்
  2. சதி
  3. தேவதாசி முறை
  4. விதவை மறுமணம்

விடை : விதவை மறுமணம்

3. பின்வரும் கூற்றுகளை கவனிக்கவும்

i) பேகம் ஹஸ்ரத் மாஹால், ராணி லட்சுமிபாய் ஆகியோர் ஆங்கிலேயர் மீது ஆயுதமேந்திய கிளர்ச்சியில் ஈடுபட்டனர்

ii) தமிழ்நாட்டின் சிவகங்கையச் சேர்ந்த வேலுநாச்சியார், பிரிட்டிஷாருக்கு எதிராக வீரமாக போராடினார்

மேலே கொடுக்கப்பட்ட எந்த வாக்கியம்(ங்கள்) சரியானவை?

  1. i மட்டும்
  2. ii மட்டும்
  3. i மற்றும் ii
  4. இரண்டுமில்லை

விடை : i மற்றும் ii

4. கூற்று : ராஜாராம் மோகன்ராய் அனைத்த இந்தியர்களாலும் மிகவும் நினைவு கூறப்படுகிறார்

காரணம் : இந்திய சமூகத்தில் இருந்த சதி என்ற தீயபழக்த்தை ஒழித்தார்

  1. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறானவை
  2. கூற்று சரியானது காரணம் தவறு
  3. கூற்று சரியானது மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது
  4. கூற்று சரி காரணம் கூற்றை விளக்கவில்லை

விடை : கூற்று சரியானது மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது

VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளின் விடையளி

1. பெண்களின் முன்னேற்த்திற்காக போராடிய முக்கிய தலைவர்களின்பெயரினை குறிப்பிடுக

  • ராஜாராம் மோகன்ராய்
  • தயானந்த சரஸ்வதி
  • கேசவ சந்திர சென்
  • ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
  • பண்டித ரமாபாய்
  • டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார்
  • ஜோதிராவ் பூலே
  • ஈ.வெ.ரா. பெரியார்
  • டாக்டர் தர்மாம்பாள்

2. சமூக தீமைகளில் சிலவற்றை பட்டியலிடுக

  • பெண் சிசுக்கொலை
  • பெண் சிசு கருக்கொலை
  • குழந்தைத் திருமணம்
  • சதி
  • தேவதாசி முறை

3. இடைக்கால இந்தியாவில் குறிப்பிடத்தக் பெண்கள் யாவர்?

  • ரசியா சுல்தானா
  • ராணி துர்காவதி
  • சாந்த் பீபி
  • நூர்ஜஹான்
  • ஜஹனாரா
  • ஜீஜாபாய்
  • மீராபாய்

4. இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட முக்கியமான பெண்களை குறிப்பிடுக

  • பேகம் ஹஸ்ரத் மஹால்
  • ராணி லட்சுமி பாய்
  • வேலுநாச்சியார்

5. சதி பற்றி ஒரு குறிப்பு வரைக

இந்திய சமூகத்தில் நிலவிய மற்றொரு சமூகதீமை சதி ஆகும். குறிப்பாக ராஜபுத்திரர்களிடையே இப்பழக்கம் காணப்பட்டது. 1829-ல் ராஜாராம் மோகன்ராய் அவர்களின் முயற்சியால் சதி ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

VII. பின்வருபவைகளுக்கு விரிவான விடை தருக

1. சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்கினைக் கண்டறியவும்

  • தொடக்க கால காலனிய எதிர்ப்பு பாேராட்டத்தில் பெண்கள் பல்வேறு வகைகளில் முக்கிய பங்காற்றினர்.
  • பேகம் ஹஸ்ரத் மாஹால், ரானி லட்சுமி பாய், வேலுநாச்சியார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்
  • விடுதலைப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் அயல்நாட்டு பொருட்களை புறக்கணித்தல், ஊர்வலங்களில் கலந்து கொள்வது, சட்டங்களை மீறதல் மூலம் தடியடி பெற்ற சிறைக்கு சென்றனர்.
  • விடுதலைப் பேராட்டத்தில் அவர்களது பங்களிப்பு வெகுஜன தன்மையில் புதிய பரிணாமத்தை சேர்ததது.

2. சமூக தீமைகளை ஒழிப்பதில் சமூக சீர்திருத்தவாதிகளின் பங்களிப்பை விளக்குக

  • சமூக தீமைகளை ஒழிப்பதற்காக பல சமூக சீர்திருத்தவாதிகள் பல்வேற சமூக சீர்திருத்த இயக்கங்களை உருவாக்கினர்.
  • இவை பெண்களக்கு கல்வி அளிப்பது, அவர்களின திருமண வயதை உயர்த்துவது, விதவைகளை கவனித்துக் கொள்வது, அதே போன்று சாதி முறையின் இறுக்கமான தன்மையை நீக்குவது மற்றும் ஒடுக்கபட்பட் வகுப்பை சமத்தவநிலைக்கு உயர்த்துதல் ஆகியவற்றின் மூலம் பெண்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்க முயன்றது.
  • இவ்வியக்கங்கள் வழிநடத்திய சீர்திருத்தவாதிகளே நவீன இந்தியாவின் முன்னோடிகள் ஆவர்.
  • ராஜாராம் மோகன்ராய், தயானந்த சரஸ்வதி, கேசவ சந்திர சென்,  ஈஸ்வர சந்திர வித்யாசாகர்,  பண்டித ரமாபாய், டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார், ஜோதிராவ் பூலே, ஈ.வெ.ரா. பெரியார், டாக்டர் தர்மாம்பாள் முக்கிய சீர்திருத்தவாதிகள் ஆவர்

3. சீர்திருத்த இயக்கத்தின் தாக்கம் குறித்து விரிவாக விடையளிக்கவும்

  • பெண்களின் விடுதலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியது.
  • இது மக்களிடையே தேசிய விழிப்புணர்வு உருவாக்கியது
  • தியாகம், சேவை மற்றும் பகுத்தறிவு உணர்வு ஆகியவற்றை உருவாக்கியது
  • சதி மற்றம் பெண் சிசுக்கொலை ஆகியவை சட்டவிரோதமாக்கப்பட்டது.
  • விதவை மறுமணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்

 

சில பயனுள்ள பக்கங்கள்