8th Std Social Science Solution | Lesson.16 புவிப்படங்களைக் கற்றறிதல்

பாடம்.16 புவிப்படங்களைக் கற்றறிதல்

8th Std Social Science Book Back Answers Lesson 16

பாடம்.16 புவிப்படங்களைக் கற்றறிதல்

கலைச்சொற்கள்

புவிப்படம்புவிப்படம் என்பது முழு புவியையோ அல்லது அதன் ஒரு பகுதியையோ ஒரு குறிப்பிட்ட அளவையுடன் இரு பரிமாணத்தில் புவிப்படத்தை ஒரு சமதளப் பரப்பில் சித்தரிக்கப்படுவதாகும்.Map
புவிப்படவியல்புவிப்படவியல் என்பது புவிப்படத்தை உருவாக்கும் ஒரு கலையறிவியல் ஆகும்.Cartography
புவிப்பட அளவைபுவிப்பரப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைவிற்கும் புவியின் மீதுள்ள அதே பகுதியின் தொலைவிற்கும் இடையேயான விகிதாச்சாரம்.Map Scale
காணிப்புவிப் பதிவேடுவரி விதிப்பிற்குரிய நில உடைமையின் அளவு சார்ந்த பதிவேடு.Cadastre

சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. புவிப்பட தயாரிப்பு முறை குறித்து கையாளும் பாடப்பிரிவு ________ ஆகும்.

  1. மக்களியல்
  2. புவிப்படவியல்
  3. இயற்கையமைப்பு
  4. இடவியல்

விடை: புவிப்படவியல்

2. ஒரு பகுதியின் இயற்கையம்சங்களைக் காட்டும் புவிப்படம் ________

  1. நிலக்கனிய புவிப்படம்
  2. நிலத்தோற்ற புவிப்படம்
  3. காலநிலையியல் புவிப்படம்
  4. மூலாதார புவிப்படம்

விடை: நிலத்தோற்ற புவிப்படம்

3. ஆழம் குறைந்த நீர்ப்பகுதிகள் ________ வண்ணம் மூலம் குறிப்பிடப்படுகிறது

  1. மஞ்சள்
  2. பழுப்பு
  3. வெளிர்நீலம்
  4. அடர் நீலம்

விடை: வெளிர்நீலம்

4. பிளான்கள் என்று அழைக்கப்படும் புவிப்படங்கள் ________ ஆகும்

  1. நிலக்கானி புவிப்படங்கள்
  2. தலப்படங்கள்
  3. சம அளவுக்கோட்டு படங்கள்
  4. போக்குவரத்து படங்கள்

விடை: பெரிய பிரிப்பு மலைத்தொடர்

5. மக்கட்தொகை பரவலை ________ மூலம் காண்பிக்கலாம்

  1. கோடுகள்
  2. வண்ணங்கள்
  3. புள்ளிகள்
  4. சம அளவுக்கோடுகள்

விடை: புள்ளிகள்

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. புவிக்கோள மாதிரி என்பது ________ உண்மையான உருவ மாதிரியாக்கமாகும்.

விடை: புவியின்

2. புவியின் கோள வடிவத்தை ஒரு சமதளபரப்பில் வரையப்படும் முறை ________ எனப்படும்

விடை: புவிப்படம்

3. சமஅளவு உயரமுள்ள இடங்களை இணைக்கும் கோடு ________

விடை: சமஅளவுக்கோடு (ஐசோலைன்)

4. காணிப்படங்கள் பொதுவாக ________ பராமரிக்கப்படுகின்றன

விடை: அரசாங்கத்தால்

5. ________ புவிப்படங்கள் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன

விடை: கருத்துப்

பொருத்துக

1. புவிப்பட விளக்கம்45o
2. வட கிழக்குபழுப்பு நிறம்
3. சம உயரக்கோடுகருத்துப்படங்கள்
4. காணிப்படங்கள்புவிப்படத்தின் திறவுகோல்
5. நிழற்பட்டைப் படம்வரி விதிப்பு
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – உ, 5 – இ

சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

1. கூற்று : சிறிய அளவை புவிப்படங்களில் பிரதான தோற்றங்களை மட்டுமே காண்பிக்கப்படுகின்றன

காரணம் : குறைந்த அளவு இடமே உள்ளதால், பெரிய பரப்பிலான கண்டங்கள் மற்றும் நாடுகள் போன்றவற்றை மட்டுமே காண்பிக்க இயலும்

  • கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
  • கூற்று தவறு, காரணம் சரி
  • கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
  • கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

விடை: கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

2. கூற்று : மரபுக் குறியீடுகளும், சின்னங்களும் வரைபடத்தின் திறவுகோல் ஆகும்

காரணம் : இவை குறைந்த அளவிலான படத்தில் அதிக விவரங்களைத் தருகின்றன

  • கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
  • கூற்று தவறு, ஆனால் காரணம் தவறு
  • கூற்று சரி, காரணம் தவறு
  • கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

விடை: கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

ஓரிரு வாக்கியங்களில் விடையளி

1. புவிப்பட அளவை வரையறு

புவிப்பட அளவை என்பது புவிப்பரப்பில் உள்ள தொலைவிற்கும் புவிப்படப் பரப்பில் உள்ள தொலைவிற்கம் இடையிலான விகிதத்தை குறிப்பதாகும்

2. இயற்கையமைப்பு புவிப்படம் என்றால் என்ன?

ஒரு பகுதியின் பல்வேறு இயற்கை அம்சங்களை காண்பிப்பதற்கு வரையப்படும் படங்கள் இயற்கையமைப்பு அல்லது நிலத்தோற்ற புவிப்படங்கள் எனப்படுகின்றன.

3. வரைபடக் கோட்டுச் சட்டம் பற்றி குறிப்பு வரைக

கோள வடிவமான புவியை ஒரு சமதளப் பரப்பில் வரைவதற்கு பின்பற்றப்படும் ஒரு நுணுக்க முறையே வரைபட கோட்டுச் சட்டமாகும்

4. இடைநிலைத் திசைகளின் பெயர்களை குறிப்பிடுக

  • வடகிழக்கு
  • வடமேற்கு
  • தென்கிழக்கு
  • தென்மேற்கு

5. காணிப் புவிப்படங்களின் பயன்கள் யாவை?

உள்ளாட்சி அமைப்புகளான நகராட்சி, வரிவிதிப்பு, பெரும் பண்ணை, பராமரிப்பு, சட்ட ஆவணங்களில் சொத்து விவரங்களை குறிப்பிடுதல் போன்றவற்றிற்கு பயன்படுகிறது

வேறுபடுத்துக

1. நிலத்தோற்றப் படங்கள் மற்றும் கருத்துப்படங்கள்

நிலத்தோற்றப் படங்கள்கருத்துப்படங்கள்
1. ஒரு பகுதியின் பல்வேறு இயற்கை அம்சங்களை காண்பிப்பதற்கு வரையப்படும் படங்கள்வெப்பநிலை வேறுபாடுகள், மழைப்பரவல், மக்களடர்த்தி போன்ற ஒரு குறிப்பிட்ட கருப்பொருளுக்காகத் தயாரிக்கப்படுபவை
2. இயற்கை அமைப்புகளான பாலைவனங்கள், ஆறுகள், மலைகள், சமவெளிகள் மற்றும் பீடபூமிகள் ஆகியவற்றை குறிப்பிடுவது இதன் முதன்மையான நோக்கமாகும்.உலகளாவிய மக்களடர்த்தி, நோயத்தாக்கம் போன்றவற்றின் பிரதேச வேறுபாடுகளை காண்பிக்க முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது

2. பெரிய அளவை புவிப்படங்கள் மற்றும் சிறிய அளவை புவிப்படங்கள்

பெரிய அளவை புவிப்படங்கள்சிறிய அளவை புவிப்படங்கள்
1. சிறிய பகுதிகளான வட்டம் அல்லது மாவட்டம் போன்றவற்றை காண்பிக்க பயன்படுத்தப்படுகின்றனகண்டங்கள் அல்லது நாடுகள் போன்ற பெரிய நிலப்பகுதிளைக் காண்பிக்க பயன்படுத்தப்படுகின்றன
2. அதிக பரப்பில் குறைவான விவரங்களை தருகிறதுகுறைவான பரப்பில் அதிக விவரங்களை தருகிறது.

3. புவிகோள மாதிரி மற்றும் புவிப்படம்

புவிகோள மாதிரிபுவிப்படம்
1. புவிகோள மாதிரியானது புவியை முப்பரிமாணத்தில் சித்தரிக்கின்றதுபுவிப்படங்களை புவியின் இரு பரிமாண சித்தரிப்பாகும்.
2. இது புவியின் வடிவிலான ஒரு சிறிய தோற்றமாகும்முழு புவியையோ அல்லது ஒரு பகுதியையோ சமதளபரப்பில் அளவையுடன் பதிலீட்டுக் காட்டும் ஒரு முறை ஆகும்.

பின்வருபவைகளுக்கு விரிவான விடை தருக

1. பல்வேறு புவிப்பட அளவைகளை விரிவாக விளக்குக

வாக்கிய முறை அல்லது சொல்லளவை

  • இம்முறையில் அளவுத்திட்டமானது சொற்களால் விவரிக்கப்படுகிறது
  • 1செ.மீ. என்பத 1கி.மீ அதாவது வரைபடத்தில் 1 செ.மீ. என்பது நிலப்பகுதியில் 1கி.மீ தூரத்தை குறிக்கின்றது.

பிரதிபின்ன முறை (அ) எண்சார் பின்னமுறை (அ) விகிதாச்சார முறை

  • இம்முறையில் புவிபடப்பரப்பில் உள்ள தொலைவும் புவிபரப்பில் உள்ள தொலைவும் ஒரே அளவில் குறிப்பிடப்படுகிறது
  • உதாரணமாக 1 : 50,000 என்பது புவிப்படத்தில் 1 அலகு என்பது புவியில் 50,000 அலகுகளை குறிக்கின்றது.

வரை கலை அல்லது நேரியல் அளவை

  • இந்த அளவை ஒரு சிறிய வரைக்கோல் போன்று வரைபடத்தின் அடிப்குதியில் குறிப்பிடப்பட்டிருக்கும். இக்கோடு மேலும் சிறிய அளவிலான பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும்
  • இதன் ஒவ்வொரு சிறு பகுதியும் நிலப்பகுதியிலுள்ள ஒரு குறிப்பிட்ட தூரத்தை குறிப்பதாக அமைந்துள்ளது.
  • இவ்வளவைகள் மாறாதவை என்பதால் புவிப்படநகல்கள் எடுத்துக் கொள்ள ஏதுவாக உள்ளது இதன் சிறப்பம்சமாகும்

2. காணிப்புவிப்படங்கள் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தை விவரி

ஒரு குறிப்பிட்ட இடத்தின் எல்லைகள் மற்றும் நில உடமைகள் பற்றிய விவரங்களை காண்பிக்க காணிப் புவிப்படங்கள் பயன்படுகின்றன. இவ்வகைப்படங்கள் திட்ட புவிப்படங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன

இவை பெரிய அளவை கொண்டுள்ளதால் குறிப்பிட்ட இடத்தின் எல்லைகள் மற்றம் கட்டடங்களின் முழு விவரங்களையும் அளிக்கின்றன

காணிப்புவிப்படத்தின் முக்கியத்துவத்துவம்

  • காணிப்புவிப்படங்கள் ஒரு நிலத்தின் நில உடமை, எல்லைகள், மாதிரிப்படங்கள், கட்டடத்திட்டப் படங்கள், விளக்கப்படங்கள் ஆகியவை மூலம் ஆவணங்களாக பதிவு செய்கின்றன
  • தொடக்கத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தின் மதிப்பினை அறிந்துகொள்வும்
  • வரிவிதிப்பிற்கும் இவ்வகை புவிப்படங்கள் பயன்படுத்தப்பட்டன

3. மரபுக்குறியீடுகள் மற்றும் சின்னங்கள் குறித்து ஒரு பத்தி எழுதுக

  • புவிப்படத்தில் பல்வேறு தோற்றங்களைக் குறிப்பிடப்படுவதற்கு புவிப்படக்குறியீடு மற்றம் சின்னங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
  • இச்சின்னங்கள் புவிப்பட திறவு விசை பகுதியில் விளக்கப்பட்டுள்ளன.
  • ஒரு சிறிய பகுதியில் அதிக தகவல்களை இக்குறியீடுகள் மற்றும் சின்னங்கள் அளிக்கின்றன. இதன் மூலம் புவிப்பட கருத்துகளையும் எளிதில் புரிந்துகொள்ள முடியும்
  • சில குறியீடுகள் மற்றும் சின்னங்களை பயன்படுத்த சர்வதேச ஒப்பந்தம் அல்லது நடைமுறை பின்பற்றப்படுகிறது. இவை மரபுக்குறியீடுகள் மற்றும் சின்னங்கள் எனப்படுகின்றன

சில பயனுள்ள பக்கங்கள்