பாடம் 1.1. தமிழ்மொழி வாழ்த்து
நூல் வெளி
 
 
 
 
  | 
சொல்லும் பொருளும்
- நிரந்தரம் – காலம் முழுமையும்
 - வண்மொழி – வளமிக்கமொழி
 - வைப்பு – நிலப்பகுதி
 - இசை – புகழ்
 - சூழ்கலி – சூழ்ந்துள்ள அறியாமை இருள்
 - தொல்லை – பழமை, துன்பம்
 
| எதுகை இரண்டாம் எழுத்து ஒன்றி வருவதை எதுகைத்தொடை என்பர். 
  | 
| மோனை முதல் எழுத்து ஒன்றி வருவதை மோனைத்தொடை என்பர். 
  | 
| இயைபு சொற்கள் ஒத்த ஓசையிலோ ஒரே எழுத்திலோ முடிவதை இயைபுத்தொடை என்பர். 
  | 
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்
- வைப்பு
 - கடல்
 - பரவை
 - ஆழி
 
விடை : வைப்பு
2. என்றென்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- என் + றென்றும்
 - என்று + என்றும்
 - என்றும் + என்றும்
 - என் + என்றும்
 
விடை : என்று + என்றும்
3. வானமளந்தது என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- வான + மளந்தது
 - வான் + அளந்தது
 - வானம் + அளந்தது
 - வான் + மளந்தது
 
விடை : வானம் + அளந்தது
4. அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
- அறிந்ததுஅனைத்தும்
 - அறிந்தனைத்தும்
 - அறிந்ததனைத்தும்
 - அறிந்துனைத்தும்
 
விடை : அறிந்ததனைத்தும்
5. வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
- வானம்அறிந்து
 - வான்அறிந்த
 - வானமறிந்த
 - வான்மறிந்
 
விடை : வானமறிந்த
குறுவினா
1. தமிழ் எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?
ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து, புகழ் கொண்டு வாழ்கிறது
2. தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?
வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளர்கிறது
சிறுவினா
தமிழ் மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகளை எழுதுக.
| எக்காலத்தும் நிலைபெற்று வாழ்க! எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் தமிழே வாழ்க! ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் புகழ்கொண்ட தமிழே வாழ்க! உலகம் உள்ள வரையிலும் தமிழே வாழ்க! எங்கும் உள்ள அறியாமை இருள் நீங்கட்டும். தமிழ் உயர்வுற்று உலகம் ழுழுவதும் சிறப்படைக! பொருந்தாத பழங்கருத்தால் உண்டாகும் துன்பங்கள் நீங்கி தமிழ்நாடு ஒளிரட்டும். என்றென்றும் தமிழே! வாழ்க வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் தன்மையை அறிந்து வளரும் தமிழே! வாழ்க  | 
கூடுதல் வினாக்கள்
கோடிட்ட இடங்களை நிரப்புக
1. கருத்தை அறிவிக்கும் கருவி _______
விடை : மொழி
2. தமிழர்கள் தமிழை _______ எனக் கருதி போற்றி வந்துள்ளனர்
விடை : உயிர்
3. தொல்லை என்பதன் பொருள் _______
விடை : பழமை
4. இசை என்பதற்கு பொருள் _______
விடை : புகழ்
5. தமிழ்தேனீ என்று பாரதியாரைப் புகழ்ந்தவர் _______
விடை : பாரதிதாசன்
6. இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி விடுதலை போருக்கு வித்திட்டவர் _______
விடை : பாரதியார்
7. கவிதைகள் மட்டுமின்றி சந்திரிகையின் கதை, தராசு உள்ளிட்ட உரைநடை நூல்களையும், வசனக் கவிதைகளையும், சீட்டுக் கவிகளையும் எழுதியவர் _______
விடை : பாரதியார்
8. நிரந்தரம் என்பதன் பொருள் _______
விடை : காலம் முழுமையும்
தமிழ்மொழி வாழ்த்து இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்தெழுதுக
- வாழ்க – வாழிய
 - எங்கள் – என்றென்றும்
 - வண்மொழி – வளர்மொழி
 - அகன்று – அறிந்த
 
குறுவினா
1. பாரதியார் நடத்திய இதழ்கள் எவை?
- இந்தியா
 - விஜயா
 
2. பாரதிதாசன் பாரதியாரை எவ்வாறெல்லாம் புகழ்ந்துள்ளார்?
- சிந்துக்குத் தந்தை
 - செந்தமிழ்த் தேனீ
 - புதிய அறம் பாட வந்த அறிஞன்
 - மறம் பாட வந்த மறவன்
 
3. தமிழ்நாடு எவ்வாறு ஒளிர்கிறது?
பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கி ஒளிர்கிறது
4. தமிழ்மொழி எங்கு சிறப்படைய வேண்டும் என பாரதியார் கூறுகிறார்?
தமிழ்மொழி மேன்மையுற்று உலகம் முழுவது சிறப்படைய வேண்டும்.
சிறுவினா
பாரதியார் குறிப்பு வரைக
  | 
சில பயனுள்ள பக்கங்கள்