பாடம் 1.2. ஆழிக்கு இணை
நூல் வெளி
தமிழழகனாரின் இயற்பெயர் சண்முகசுந்தரம். இவர் சந்தக்கவிமணி என்று குறிப்பிடப்படுகிறார். இளம் வயதிலேயே இலக்கணப் புலமையும் செய்யுள் இயற்றும் ஆற்றலும் பெற்றவர். பன்னிரண்டு சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார். தனிப்பாடல் திரட்டு (ஐந்தாம் பகுதி – கழகப் பதிப்பு) என்னும் நூலிலிருந்து இந்தப்பாடல் எடுத்தாளப்பட்டுள்ளது. தனிப்பாடல் திரட்டு என்பது புலவர் பலரின் பாடல்களின் தொகுப்பு ஆகும். |
சொல்லும் பொருளும்
- துய்ப்பதால் – கற்பதால், தருதலால்
- மெத்த வணிகலம் – அணிகலன், பெரிய வணிகக் கப்பல்
- மேவலால் – பொருந்துதலால், பெறுதலால்
- நித்தம் – நாள்தோறும்
- ஆழி – கடல்
இரட்டுற மொழிதல் அணி
|
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. தமிழ்த்தாய் ஐம்பெருங்காப்பியங்களை _______ அணிந்துள்ளாள்.
- மாலையாக
- ஆடையாக
- அணிகலண்களாக
- மகுடமாக
விடை : மகுடமாக
2. பெரிய கப்பல்கள் _______ மீது செல்லும்.
- ஊழி
- ஆழி
- நாழி
- தாழி
விடை : ஆழி
3. முத்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- மூன்று + தமிழ்
- முத்து + தமிழ்
- மு + தமிழ்
- முத் + தமிழ்
விடை : மூன்று + தமிழ்
4. தன் அலையால் சங்கினைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது இத்தொடரில் தன் என்னும் சொல் _______ குறிக்கிறது.
- அணிகலனைக்
- கடலைக்
- கப்பலைக்
- தமிழைக்
விடை : கடலைக்
பாடலின் பொருள் உணர்ந்து, தொகைச் சொற்களை விரித்து எதுதுக
1. முத்தமிழ்
விடை: இயல் தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்
2. முச்சங்கம்
விடை: முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம்
3. முச்சங்கு
விடை: வெண்சங்கு, சலஞ்சலம் சங்கு, பாஞ்சசன்யம் சங்கு
குறு வினா
1. தமிழ் யாரால் காக்கப்பட்டதாகத் தமிழழகனார் கூறுகிறார்?
தமிழ் சங்கப் பலகையில் அமர்ந்திருந்த சங்கப்புலவர்களால் காக்கப்பட்டதாகத் தமிழழகனார் கூறுகிறார்
2. தமிழ் யாரால் காக்கப்பட்டதாகத் தமிழழகனார் கூறுகிறார்?
ஒரு சொல் அல்லது தொடர் இரு பொருள் தருமாறு அமைவது இரட்டுற மொழிதல் அணி ஆகும். இதனைச் சிலேடை என்றும் கூறுவர்
சிறு வினா
தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை விளக்குக.
பாடல் | தமிழ் | கடல் |
முத்தமிழ் | இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ் | முத்தினை அமிழ்ந்து எடுத்தல் |
முச்சங்கம் | முதல், இடை, கடை ஆகிய முச்சங்கம் | மூன்று வகையான சங்குகள் தருதல். |
மெத்த வணிகலன் (மெத்த + அணிகலன்) | ஐம்பெருங்காப்பியங்கள் | மிகுதியான வணிகக் கப்பல்கள் |
சங்கத்தவர் காக்க | சங்கப் பலகையிலிருந்து சங்கப் புலவர்கள் பாதுகாத்தமை. | நீரலையைத் தடுத்து சங்கினைத் காத்தல். |
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. தமிழ், ஆழி இரண்டுக்கும் பொருள்படும்படி இரட்டுற மொழிதலணி அமைய பாடியவர்
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- எழில் முதல்வன்
- தமிழழகனார்
- தேவநேயப் பாவாணர்
விடை : தமிழழகனார்
2. கடல் தரும் சங்குகளின் வகைகள்
- இரண்டு
- மூன்று
- நான்கு
- ஐந்து
விடை : மூன்று
3. தமிழழகனார் படைத்துள்ள சிற்றிலக்கிய நூல்களின் எண்ணிக்கை
- 10
- 12
- 14
- 16
விடை : 12
4. முத்தினையும், அமிழ்தினையும் தருவதாகச் தமிழழகனார் குறிப்பிடுவது
- மூங்கில்
- மழை
- தேவர்கள்
- கடல்
விடை : கடல்
5. தமிழ் அணிகலன்களாகப் பெற்றவை
- ஐம்சிறுங் காப்பியங்கள்
- ஐம்பெருங்காப்பியங்கள்
- சங்க காப்பியங்கள்
- நீதி காப்பியங்கள்
விடை : ஐம்பெருங்காப்பியங்கள்
6. இரட்டுற மொழிதல் அணியின் மறுபெயர்
- சிலேடை அணி
- வேற்றுமை அணி
- பிறதுமொழிதல் அணி
- சொற்பொருள் பின்வருநிலையணி
விடை : சிலேடை அணி
7. ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள்பட வருவது
- வேற்றுமை அணி
- பிறதுமொழிதல் அணி
- இரட்டுற மொழிதல் அணி
- சொற்பொருள் பின்வருநிலையணி
விடை : இரட்டுற மொழிதல் அணி
8. சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படுபவர்
- ஆறுமுகம்
- சண்முகமணி
- ஞானசுந்தரம்
- சண்முகசுந்தரம்
விடை : சண்முகசுந்தரம்
குறுவினா
1. தமிழ் எப்படி வளர்ந்தது?
தமிழ், இயல் இசை நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது
2. தமிழ் எவற்றால் வளர்க்கப்பட்டது;
தமிழ் முதல், இடை, கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது
3. தமிழ் எவற்றை அணிகலனாய் பெற்றது?
ஐம்பெருங்காப்பியங்கள் என அழைக்கப்படும் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகியவற்றை அணிகலன்களாகப் பெற்றது
4. கடல் எவற்றையெல்லாம் தருகிறது?
- முத்தும், அமிழ்தும் கிடைக்கிறது
- வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூன்று சங்குகள் கிடைக்கின்றன
5. இரட்டுற மொழிதல் அணி என்றால் என்ன?
ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள் பட வருவது இரட்டுற மொழிதல் அணி என்பர். இதனை சிலேடை அணி என்றும் அழைப்பர்.
சிறுவினா
1. தமிழழகனார் – குறிப்பு வரைக
|
2. தமிழ் குறித்து தமிழழகனார் கூறுவன யாவை?
சங்கப் பலகையில் அமர்ந்திருந்த சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது. |
சில பயனுள்ள பக்கங்கள்