பாடம் 3.2 வருமுன் காப்போம்
நூல்வெளி
| கவிமணி எனப் போற்றப்படும் தேசிய விநாயகனார் குமரி மாவட்டம் தேரூரில் பிறந்தவர். முப்பத்தாறு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர் ஆசியஜோதி, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை உள்ளிட்ட பல கவிதை நூல்களையும் உமர்கய்யாம் பாடல்கள் என்னும் மொழிபெயர்ப்பு நூலையும் படைத்துள்ளார். மலரும் மாலையும் என்னும் நூலிலிருந்து ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.  | 
சொல்லும் பொருளும்
- நித்தம் நித்தம் – நாள்தோறும்
 - வையம் – உலகம்
 - மட்டு – அளவு
 - பேணுவயல் – பாதுகாத்தல்
 - சுண்ட – நன்கு
 - திட்டுமுட்டு – தடுமாற்றம்
 
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. காந்தியடிகள் _____ போற்ற வாழ்ந்தார்.
- நிலம்
 - வையம்
 - களம்
 - வானம்
 
விடை : வையம்
2. நலமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- நலம் + எல்லாம்
 - நலன் + எல்லாம்
 - நலம் + எலாம்
 - நலன் + எலாம்
 
விடை : நலம் + எல்லாம்
3. இடம் + எங்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
- இடவெங்கும்
 - இடம்எங்கும்
 - இடமெங்கும்
 - இடம்மெங்கும்
 
விடை : இடமெங்கும்
வருமுன்காப்போம் இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனை, எதுகை, இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.
மோனை
- உடலின் – உலகில்
 - காலை – காற்று
 - இடமும் – இனிய
 - சுத்தமுள்ள – சுகமும்
 - அருமை – அடையும்
 - திட்டு – தினமும்
 
எதுகை
- உடலின் – இடமும்
 - கூழை – ஏழை
 - சுத்தமுள்ள – நித்தம்
 - திட்டு – மட்டு
 - அருமை – வருமுன்
 - பட்டிடுவாய் – ஓட்டிவிடும்
 
இயைபு
- தினமும் – இடமும்
 - கூழை – ஏழை
 - திட்டு – மட்டு
 - குடியப்பா – உறங்கப்பா
 - உணணாமல் – தின்பாயேல்
 
குறுவினா
1. நம்மை நோய் அணுகாமல் காப்பவை யாவை?
நடைப்பயிற்சியும், நல்ல காற்றும் நம்மை நோய் அணுகாமல் காப்பவை ஆகும்
2. அதிகமாக உண்பதால் ஏற்படும் தீமையாகக் கவிமணி குறிப்பிடுவன யாவை?
அதிகமாக உண்பதால் செரிமானம் தடுமாறி நாள்தோறும் நோய்வாய்ப்பட்டு பாயில் விழுவீர்கள் என கவிமணி குறிப்பிடுகிறார்.
சிறுவினா
உடல் நலத்துடன் வாழக் கவிமணி கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக
| உடலில் உறுதி கொண்டவரே, உலகில் மகிழ்ச்சி உடையவராவார். உடல் உறுதியற்ற நோயாளர்க்கு வாழும் இடமும் செல்வமும் இனிய வாழ்வு தராது. சுத்தம் நிறைந்துள்ள எல்லா இடங்களிலும் சுகம் உண்டு. நாள்தோறும் நீங்கள் தூய்மையைப் போற்றிப் பாதுகாத்தல் நீடித்த வாழ்நாளைப் பெயலாம். காலையும், மாலையும் நடைப்பயிற்சி மேற்கொண்டு, நல்ல காற்றைச் சுவாசித்து வருவோரை நோய் அணுகாது. அவர் உயிரைக் கவர எமனும் அணுக மாட்டான். எனவே நீங்கள் கூழைக் குடித்தாலும் குளித்த பிறகே குடித்தல் வேண்டும். நீங்கள் வறுமையில் வாழ்ந்தாலும் இரவில் நன்றாக உறங்க வேண்டும். அளவாக உண்ணாமல் அதிகமாக உண்பதால் செரிமானம் தடுமாறி நாள்தோறும் நோய்வாய்ப்பட்டு பாயில் விழுவீர்கள். தூய்மையான காற்றும், நல்ல குடிநீரும், நன்கு பசித்த பிறகு உண்பதும் நம்மை நோய் அணுகாமல் காப்பாற்றும்! நூறாண்டு வாழ வைக்கும். அரிய நம் உடல் நலமோடு இருப்பதற்கான வழிகள் இவை என்பதை அறிவீர்களாக! ஆகவே நோய் வரும் முன் காப்போம்! உலகம் புகழ வாழ்வோம்!  | 
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடு
1. நோயற்ற வாழ்வே குறைவற்ற __________
- வாழ்வு
 - செல்வம்
 - இல்லம்
 - பொருள்
 
விடை : செல்வம்
2. கவிமணி எனப் போற்றப்படுபவர்
- பாரதியார்
 - பாரதிதாசன்
 - தேசிய விநாயகனார்
 - வாணிதாசன்
 
விடை : தேசிய விநாயகனார்
3. உமர்கய்யாம் பாடல்கள் என்னும் மொழிபெயர்ப்பு நூலை படைத்துள்ளார்.
- பாரதியார்
 - பாரதிதாசன்
 - கவிமணி
 - வாணிதாசன்
 
விடை : கவிமணி
4. வையம் என்பதற்கு __________ என்பது பொருள்
- வானம்
 - உலகம்
 - நிலம்
 - நீர்
 
விடை : உலகம்
5. மலரும் மாலையும் _______ நூலை எழுதியவர்
- பாரதியார்
 - பாரதிதாசன்
 - கவிமணி
 - வாணிதாசன்
 
விடை : கவிமணி
6. கதர் பிறந்த கதையின் ஆசிரியர்
- பாரதியார்
 - பாரதிதாசன்
 - கவிமணி
 - வாணிதாசன்
 
விடை : கவிமணி
7. ஆசியஜோதி நூலின் ஆசிரியர்
- பாரதியார்
 - பாரதிதாசன்
 - கவிமணி
 - வாணிதாசன்
 
விடை : கவிமணி
8. கவிமணி _____ ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றினார்
- 32
 - 34
 - 38
 - 36
 
விடை : 36
குறுவினா
1. அறிவுடைமை என்பது என்ன?
நோய் வந்த பின் தீர்க்க முயல்வதை விட வருமுன் காப்பதே அறிவுடமை ஆகும்.
2. வருமுன் காப்போம் என்ற பாடல் எந்த நூலிலில் இருந்து தரப்பட்டுள்ளது?
வருமுன் காப்போம் என்ற பாடல் மலரும் மாலையும் என்னும் நூலிலிருந்து தரப்பட்டுள்ளது.
3. நம்மை நூறாண்டு வாழ வைப்பவை யாவை?
தூய்மையான காற்றும், நல்ல குடிநீரும், நன்கு பசித்த பிறகு உண்பதும் நம்மை நோய் அணுகாமல் காப்பாற்றும்! நூறாண்டு வாழ வைக்கும்.
4. கூழைக் குடிக்கும் முன் செய்ய வேண்டிய செயல் என கவிமணி கூறுகிறார்?
கூழைக் குடிக்கும் முன் குளித்த வேண்டும் என கவிமணி கூறுகிறார்
5. நல்ல உடல் நலத்திற்கு அடிப்படையானது எது?
நல்ல உணவு, உடல் தூய்மை, உடற்பயிற்சி ஆகியவை நல்ல உடல் நலத்திற்கு அடிப்படை.
6. உலகில் மகிழ்ச்சி உடையவர் யார்?
உடலில் உறுதி கொண்டவரே, உலகில் மகிழ்ச்சி உடையவர் ஆவார்
7. இனிய வாழ்வைத் தராது எவை?
உடல் உறுதியற்ற நோயாளர்க்கு வாழும் இடமும் செல்வமும் இனிய வாழ்வு தராது.
சில பயனுள்ள பக்கங்கள்