Tamil Nadu 8th Standard Tamil Book Term 2 வேற்றுமை Solution | Lesson 1.5

பாடம் 1.5 வேற்றுமை

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது _______ ஆகும்.

  1. எழுவாய்
  2. செயப்படுபொருள்
  3. பயனிலை
  4. வேற்றுமை

விடை : வேற்றுமை

2. எட்டாம் வேற்றுமை _______ வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது.

  1. எழுவாய்
  2. செயப்படுபொருள்
  3. விளி
  4. பயனிலை

விடை : விளி

3. உடனிகழ்ச்சிப் பொருளில் _______ வேற்றுமை வரும்.

  1. மூன்றாம்
  2. நான்காம்
  3. ஐந்தாம்
  4. ஆறாம்

விடை : மூன்றாம்

4. அறத்தான் வருவதே இன்பம் இத்தொடரில் _______ வேற்றுமை பயின்று வந்துள்ளது.

  1. இரண்டாம்
  2. மூன்றாம்
  3. ஆறாம்
  4. ஏழாம்

விடை : மூன்றாம்

5. மலர் பானையை வனைந்தாள் இத்தொடர் _______ பொருளைக் குறிக்கிறது.

  1. ஆக்கல்
  2. அழித்தல்
  3. கொடை
  4. அடைதல்

விடை : ஆக்கல்

பொருத்துக.

1. மூன்றாம் வேற்றுமைஅ. இராமனுக்குத் தம்பி இலக்குவன்.
2. நான்காம் வேற்றுமைஆ. பாரியினது தேர்
3. ஐந்தாம் வேற்றுமைஇ. மண்ணால் குதிரை செய்தான்
4. ஆறாம் வேற்றுமைஈ. ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன்.
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ

குறுவினா

1. எழுவாய் வேற்றுமையை விளக்குக.

எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல் எழுவாய் தனித்து நின்று இயல்பான பொருளைத் தருவது எழுவாய் வேற்றுமை ஆகும். முதல் வேற்றுமை என்றும் கூறுவர்.

(எ.கா.) பாவை வந்தாள்.

2. நான்காம் வேற்றுமை உணர்த்தும் பொருள்கள் யாவை?

  • கொடை
  • பகை
  • நட்பு
  • தகுதி
  • அதுவாதல்
  • பொருட்டு
  • முறை
  • எல்லை

3. உடனிகழ்ச்சிப் பொருள் என்றால் என்ன?

வினை கொண்டு முடிகிற பொருளைத் தன்னிடத்தும் உடன் நிகழ்கிறதாக உடையது உடனிகழ்ச்சி ஆகும். ஒடு, ஓடு ஆகிய மூன்றாம் வேற்றுமை உருபுகள் உடனிகழ்ச்சிப் பொருளில் வரும்.

கூடுதல் வினாக்கள்

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. வேற்றுமை வகை ________

விடை : எட்டு

2. இரண்டாம் வேற்றுமை உருபு ________

விடை :

3. ________ வரும் வேற்றுமை ஆறாம் வேற்றுமை

விடை : உரிமைப் பொருளில்

4. தலையின் இழிந்த மயிர் இதில் இடம் பெறும் ________ பொருள் நீங்கல்

விடை : ஐந்தாம் வேற்றுமை

சிறு வினா

1. வேற்றுமை என்றால் என்ன?

பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறைமையை வேற்றுமை என்பர்.

2. வேற்றுமை உருபுகள் என்றால் என்ன?

பெயர்ச்சொல்லுடன் இணைக்கப்படும் அசைகைள வேற்றுமை உருபு என்பர்.

3. மூன்றாம் வேற்றுமைக்குரிய உரிய உருபுகள் யாவை?

ஆல், ஆன், ஒடு, ஓடு

4. ஐந்தாம் வேற்றுமைக்குரிய உரிய உருபுகள் யாவை?

இல், இன்

5. ஆறாம் வேற்றுமைக்குரிய உரிய உருபுகள் யாவை?

அது, ஆது, அ

6. மூன்றாம் வேற்றுமை உருபு எவ்வெவ் பொருள்களில் வரும்?

கருப்பொருள், கருத்தா பொருள்

7. சொல்லுருபுகள் என்றால் என்ன?

சில இடங்களில் உறுப்புகளுக்கு பதிலாக முழு சொற்களே வருவது உண்டு. அவற்றைச் சொல்லுருபுகள் என்பர்.

8. ஐந்தாம் வேற்றுமையிலும், ஏழாம் வேற்றுமையிலும் வரும் உருபு எது?

இல்

9. முதல் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை ஆகியவற்றின் வேறு பெயர்கள் யாவை?

  • முதலாம் வேற்றுமையை எழுவாய் வேற்றுமை என்பர்
  • எட்டாம் வேற்றுமையை விளி வேற்றுமை என்பர்

குறு வினா

வேற்றுமை எத்தனை வகைப்படும்?

வேற்றுமை  எட்டு வகைப்படும்

  1. முதல் வேற்றுமை
  2. இரண்டாம் வேற்றுமை
  3. மூன்றாம் வேற்றுமை
  4. நான்காம் வேற்றுமை
  5. ஐந்தாம் வேற்றுமை
  6. ஆறாம் வேற்றுமை
  7. ஏழாம் வேற்றுமை
  8. எட்டாம் வேற்றுமை

மொழியை ஆள்வோம்!

இரண்டு தொடர்களை ஒரே தொடராக்குக.

1. முத்து நன்கு படித்தான். முத்து வாழ்வில் உயர்ந்தான்.

விடை: முத்து நன்கு படித்ததால் வாழ்வில் உயர்ந்தான்.

2. மழை நன்கு பெய்தது. எங்களால் விளையாட முடியவில்லை.

விடை: மழை நன்கு பெய்ததால் விளையாட முடியவில்லை.

3. எனக்குப் பால் வேண்டும். எனக்குப் பழம் வேண்டும்.

விடை: எனக்குப் பாலும் பழமும் வேண்டும்.

4. திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகக் கருதப்படுபவர். அவர் பதினெண் சித்தர்களில் ஒருவராகக் கருதப்படுபவர்.

விடை: திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும் பதினெண் சித்தர்களில் ஒருவராகவும் கருதப்படுபவர்.

5. அறநெறிகளைக் கூறும் நூல்களைக் கற்க வேண்டும். அவை கூறும் கருத்துகளைப் பின்பற்ற வேண்டும்.

விடை: அறநெறிகளைக் கூறும் நூல்களைக் கற்று பின்பற்ற வேண்டும்.

6. குணங்குடி மஸ்தான் சாகிபு எக்காளக்கண்ணி நூலை இயற்றியுள்ளார். நந்தீசுவரக்கண்ணி நூலை இயற்றியுள்ளார்.

விடை: குணங்குடி மஸ்தான் சாகிபு எக்காளக்கண்ணி, நந்தீசுவரக்கண்ணி ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

பின்வரும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

விபத்தில்லா வாகனப் பயணம்

சாலைவிதிகளுக்கு உட்பட்டு வாகனம் ஓட்டும் முறைகளை அறிந்து, வாகனங்களை இயக்கினால் விபத்துகளைத் தவிர்க்கலாம்.

  • ஓட்டுநர் வாகனத்தைச் சாலையின் இடப்புறத்தில் செலுத்துவதுடன், எதிரேவரும் வாகனத்திற்கு வலப்புறமாகக் கடந்து செல்லப் போதிய இடம் விட வேண்டும்.
  • சந்திப்புச் சாலைகள், பயணிகள் கடக்கும் இடங்கள், திரும்பும் இடங்கள் ஆகியவற்றை நெருங்கும்போது வாகனத்தின் வேகத்தைக் குறைக்க வேண்டும். அவ்விடங்களில் இருப்பவர்களுக்கு எவ்வித ஆபத்தும் நேராது என்று உறுதி செய்த பிறகே கடந்து செல்ல வேண்டும்.
  • சாலைச்சந்திப்பில் நுழையும்போது, அந்தச் சாலையில் ஏற்கெனவே செல்லும் வாகனங்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.
  • தீயணைப்பு வாகனம், அவசரச்சிகிச்சை ஊர்தி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து, அவை தடையின்றிச் செல்வதற்குக் கண்டிப்பாக வழி விட வேண்டும்.
  • எல்லா ஓட்டுநர்களும் தேவையான இடங்களில் கை சைகை அல்லது வாகன எச்சரிக்கை விளக்குகளைத் தவறாமல் பயன்படுத்த வேண்டும்.
  • மலைச்சாலைகள், மிகவும் சரிவான சாலைகள் ஆகியவற்றில் கீழ்நோக்கிச் செல்லும் வாகனங்கள், மேல்நோக்கி வரும் வாகனங்கள் பாதுகாப்பாகக் கடந்து செல்ல முன்னுரிமை தர வேண்டும்.

வினாக்கள்

1. விபத்துகளை எவ்வாறு தவிர்க்கலாம்?

சாலை விதிகளுக்கு உட்பட்டு வாகனம் ஓட்டும் முறைகளை அறிந்து வாகனங்களை இயக்கினால் விபத்துகளைத் தவிர்க்கலாம்.

2. கண்டிப்பாக வழிவிட வேண்டிய வாகனங்கள் யாவை?

  • தீயணைப்பு வாகனம்
  • அவசர சிகிச்சை ஊர்தி

3. சாலைச் சந்திப்புகளில் எவற்றுக்கு முதலிடம் தர வேண்டும்?

சாலைச்சந்திப்பில் நுழையும்போது, அந்தச் சாலையில் ஏற்கெனவே செல்லும் வாகனங்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.

4. மலைச்சாலைகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறை யாது?

கீழ்நோக்கிச் செல்லும் வாகனங்கள், மேல்நோக்கி வரும் வாகனங்கள் பாதுகாப்பாகக் கடந்து செல்ல முன்னுரிமை தர வேண்டும்.

5. வாகனம் செலுத்தும் முறையை எழுதுக.

வாகனத்தைச் சாலையின் இடப்புறத்தில் செலுத்துவதுடன், எதிரேவரும் வாகனத்திற்கு வலப்புறமாகக் கடந்து செல்லப் போதிய இடம் விட வேண்டும்.

மொழியோடு விளையாடு

படத்தைப் பார்த்து எழுதுக

பகுத்தறிவு - Rational தத்துவம் - Philosophy சீர்திருத்தம் - Reform
ஓரெழுத்துச் சொல்பூ
இரண்டு எழுத்துச் சொல்பால்வாழை
மூன்று எழுத்துச் சொல்கன்றுபழம்
நான்கு எழுத்துச் சொல்புல்வெளிவாழை இலை
ஐந்து எழுத்துச் சொல்தாய்ப்பசுகன்றுகள்

நிற்க அதற்குத் தக…

கலைச்சொல் அறிவோம்.

  • தொண்டு – Charity
  • நேர்மை – Integrity
  • ஞானி – Saint
  • பகுத்தறிவு – Rational
  • தத்துவம் – Philosophy
  • சீர்திருத்தம் – Reform

 

சில பயனுள்ள பக்கங்கள்