பாடம் 1.5. வேற்றுமை
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது _________ ஆகும்.
- எழுவாய்
- செயப்படுபொருள்
- பயனிலை
- வேற்றுமை
விடை : வேற்றுமை
2. எட்டாம் வேற்றுமை ___________ வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது.
- எழுவாய்
- செயப்படுபொருள்
- விளி
- பயனிலை
விடை : விளி
3. உடனிகழ்ச்சிப் பொருளில் _____________ வேற்றுமை வரும்.
- மூன்றாம்
- நான்காம்
- ஐந்தாம்
- ஆறாம்
விடை : மூன்றாம்
4. அறத்தான் வருவதே இன்பம் இத்தொடரில் ________ வேற்றுமை பயின்று வந்துள்ளது.
- இரண்டாம்
- மூன்றாம்
- ஆறாம்
- ஏழாம்
விடை : மூன்றாம்
5. மலர் பானையை வனைந்தாள் இத்தொடர் ________ பொருளைக் குறிக்கிறது.
- ஆக்கல்
- அழித்தல்
- கொடை
- அடைதல்
விடை : ஆக்கல்
II. பொருத்துக.
1. மூன்றாம் வேற்றுமை | அ. இராமனுக்குத் தம்பி இலக்குவன். |
2. நான்காம் வேற்றுமை | ஆ. பாரியினது தேர் |
3. ஐந்தாம் வேற்றுமை | இ. மண்ணால் குதிரை செய்தான். |
4. ஆறாம் வேற்றுமை | ஈ. ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன். |
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ |
III. சிறு வினா
1. எழுவாய் வேற்றுமையை விளக்குக.
எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல் எழுவாய் தனித்து நின்று இயல்பான பொருளைத் தருவது எழுவாய் வேற்றுமை ஆகும். முதல் வேற்றுமை என்றும் கூறுவர். (எ.கா.) பாவை வந்தாள். |
2. நான்காம் வேற்றுமை உணர்த்தும் பொருள்கள் யாவை?
- கொடை
- பகை
- நட்பு
- தகுதி
- அதுவாதல்
- பொருட்டு
- முறை
- எல்லை
3. உடனிகழ்ச்சிப் பொருள் என்றால் என்ன?
வினை கொண்டு முடிகிற பொருளைத் தன்னிடத்தும் உடன் நிகழ்கிறதாக உடையது உடனிகழ்ச்சி ஆகும். ஒடு, ஓடு ஆகிய மூன்றாம் வேற்றுமை உருபுகள் உடனிகழ்ச்சிப் பொருளில் வரும் சான்று தாயோடு குழந்தை சென்றது, அமைச்சரோடு அலுவலர்கள் சென்றனர் |
கூடுதல் வினாக்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
1. உடனிகழ்ச்சிப் பொருளில் வரும் வேற்றுமை
- நான்காம் வேற்றுமை
- ஐந்தாம் வேற்றுமை
- மூன்றாம் வேற்றுமை
- ஏழாம் வேற்றுமை
விடை : மூன்றாம் வேற்றுமை
2. முல்லைக்குத் தேர் கொடுத்தான் இதில் இடம் பெறும் நான்காம் வேற்றுமைப் பொருள்
- தகுதி
- கொடை
- பகை
- முறை
விடை : கொடை
3. இன், இல் இவை ஐந்தாம் வேற்றுமை உருபுகள் ஆகும்.
- நான்காம் வேற்றுமை
- ஐந்தாம் வேற்றுமை
- ஏழாம் வேற்றுமை
- மூன்றாம் வேற்றுமை
விடை : ஐந்தாம் வேற்றுமை
4. ஆறாம் வேற்றுமை உருபுகளில் இக்காலத்தில் _____, _____ உருபுகள் பயன்படுத்துவது இல்லை.
- ஐ, ஆல்
- ஒடு, ஓடு
- இன், இல்
- ஆது, அ
விடை : ஆது, அ
5. நான்காம் வேற்றுமையின் சொல்லுருபு
- ஆனவன்
- பொருட்டு
- இல்லை
- உடைய
விடை : பொருட்டு
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. வேற்றுமை வகை _______
விடை : எட்டு
2. இரண்டாம் வேற்றுமை உருபு ________
விடை : ஐ
3. ________ வரும் வேற்றுமை ஆறாம் வேற்றுமை
விடை : உரிமைப் பொருளில்
4. தலையின் இழிந்த மயிர் இதில் இடம் பெறும் ________ பொருள் நீங்கல்
விடை : ஐந்தாம் வேற்றுமை
III. சிறு வினா
1. வேற்றுமை என்றால் என்ன?
பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறைமையை வேற்றுமை என்பர்.
2. வேற்றுமை உருபுகள் என்றால் என்ன?
பெயர்ச்சொல்லுடன் இணைக்கப்படும் அசைகைள வேற்றுமை உருபு என்பர்.
3. மூன்றாம் வேற்றுமைக்குரிய உரிய உருபுகள் யாவை?
ஆல், ஆன், ஒடு, ஓடு
4. ஐந்தாம் வேற்றுமைக்குரிய உரிய உருபுகள் யாவை?
இல், இன்
5. ஆறாம் வேற்றுமைக்குரிய உரிய உருபுகள் யாவை?
அது, ஆது, அ
6. மூன்றாம் வேற்றுமை உருபு எவ்வெவ் பொருள்களில் வரும்?
கருப்பொருள், கருத்தா பொருள்
7. சொல்லுருபுகள் என்றால் என்ன?
சில இடங்களில் உறுப்புகளுக்கு பதிலாக முழு சொற்களே வருவது உண்டு. அவற்றைச் சொல்லுருபுகள் என்பர்.
8. ஐந்தாம் வேற்றுமையிலும், ஏழாம் வேற்றுமையிலும் வரும் உருபு எது?
இல்
9. முதல் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை ஆகியவற்றின் வேறு பெயர்கள் யாவை?
- முதலாம் வேற்றுமையை எழுவாய் வேற்றுமை என்பர்
- எட்டாம் வேற்றுமையை விளி வேற்றுமை என்பர்
III. குறு வினா
வேற்றுமை எத்தனை வகைப்படும்?
வேற்றுமை எட்டு வகைப்படும்
|
மொழியை ஆள்வோம்!
I. ஒரு சொல்லை ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களுடன் இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.
- மா – மாவிலை, மாமரம், மாங்காய்
- தேன் – மலர்த்தேன், தேன்சிட்டு, தேன் கூடு
- மலர் – தேன்மலர்
- செம்மை – சேயிலை, செங்குருவி, செந்தேன்
- சிட்டு – சிட்டுக்குருவி, தேன்சிட்டு
- கனி – மாங்கனி, கனிமரம், தேன்கனி
- குருவி – சிட்டுக்குருவி, குருவிக்கூடு
- இலை – மாவிலை
- காய் – மாங்காய், காய்கனி
- கூடு – குருவிக்கூடு, தேன்கூடு
- முட்டை – குருவிமுட்டை
- மரம் – மாமரம், செம்மரம்
II. உரிய இடங்களில் நிறுத்தக்குறிகளை இடுக.
1. பூக்கள் நிறைந்த இடம் சோலை ஆகும்
விடை : பூக்கள் நிறைந்த இடம் சோலை ஆகும்.
2. திருக்குறள் அறம் பொருள் இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்டது
விடை : திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்டது.
3. தமிழ்மொழி செம்மையானது வலிமையானது இளமையானது
விடை : தமிழ்மொழி செம்மையானது, வலிமையானது, இளமையானது.
4. கபிலன் தன் தந்தையிடம் இன்று மாலை விளையாடப் போகட்டுமா என்று கேட்டான்
விடை : கபிலன், “தன் தந்தையிடம் இன்று மாலை விளையாடப் போகட்டுமா?” என்று கேட்டான்.
5. திரு.வி.க எழுதிய பெண்ணின் பெருமை என்னும் நூல் புகழ்பெற்றது
விடை : திரு.வி.க. எழுதிய ‘பெண்ணின் பெருமை’ என்னும் நூல் புகழ்பெற்றது.
III. உரிய இடங்களில் நிறுத்தக்குறிகளை இடுக.
நூல் பல கல் என்பர் பெரியோர் அறிவை வளர்க்கும் நூல்கள் அனைத்தையும் நம்மால் விலை கொடுத்து வாங்க முடியுமா முடியாது நூலகங்கள் இக்குறையை நீக்க உதவுகின்றன பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைத்து நூல்களும் நிறைந்த இடம் நூலகம் ஆகும். நூலகத்தின் வகைகளாவன மையநூலகம் மாவட்ட நூலகம் கிளை நூலகம் ஊர்ப்புற நூலகம் எனக்குப் பிடித்த நூல்களுடன் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் மகிழ்ச்சியடைவேன் என்றார் நேரு ஆகவே நூலகத்தின் பயன் அறிவோம் அறிவு வளம் பெறுவோம்
விடை :-
‘நூல் பல கல்’ என்பர் பெரியோர். அறிவை வளர்க்கும் நூல்கள் அனைத்தையும் நம்மால் விலை கொடுத்து வாங்க முடியுமா? முடியாது. நூலகங்கள் இக்குறையை நீக்க உதவுகின்றன. பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைத்து நூல்களும் நிறைந்த இடம் நூலகம் ஆகும். நூலகத்தின் வகைகளாவன மையநூலகம், மாவட்ட நூலகம், கிளை நூலகம், ஊர்ப்புற நூலகம். ‘எனக்குப் பிடித்த நூல்களுடன் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் மகிழ்ச்சியடைவேன்’ என்றார் நேரு. ஆகவே, நூலகத்தின் பயன் அறிவோம்! அறிவு வளம் பெறுவோம்!
IV. விளம்பரத்தைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.
1. எந்த நாளை முன்னிட்டுப் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது?
உலக புத்தக நாள்
2. புத்தகக் கண்காட்சி எங்கு நடைபெறுகிறது?
இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானம்
3. புத்தகக் கண்காட்சி எத்தனை நாள்கள் நடைபெறுகிறது?
11 நாட்கள் (ஏப்ரல் 13 முதல் ஏப்ரல் 23 வரை)
4. புத்தகக் கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணம் எவ்வளவு?
நுழைவு கட்டணம் இல்லை
5. புத்தகம் வாங்குவோருக்கு வழங்கப்படும் சலுகை யாது?
10% கழிவு
மொழியோடு விளையாடு
கீழ்க்காணும் வினாக்களுக்கு விடைகளைக் கட்டத்தில் நிரப்புக. வட்டத்தில் சிக்கிய எழுத்துகளை எடுத்து எழுதுக. எழுத்துகளை முறைப்படுத்திக் கல்வி பற்றிய பழமொழியைக் கண்டறிக.
1. திரைப்படப் பாடலாசிரியர் சோமுவின் ஊர்.
ஆ | ல | ங் | கு | டி |
2. கேடில் விழுச்செல்வம் ____.
க | ல் | வி |
3. குமர குருபரர் எழுதிய நூல்களுள் ஒன்று.
நீ | தி | நெ | றி | வி | ள | க் | க | ம் |
4. ‘கலன்’ என்னும் சொல்லின் பொருள்.
அ | ணி | க | ல | ன் |
5. ஏட்டுக்கல்வியுடன் ________ கல்வியும் பயில வேண்டும்.
இ | ய | ற் | கை |
6. திரு.வி.க. எழுதிய நூல்களுள் ஒன்று.
உ | ரி | மை | வே | ட் | கை |
7. மா + பழம் என்பது _____ விகாரம்.
தோ | ன் | ற | ல் |
கட்டத்தில் சிக்கிய எழுத்துகள்
ஆ | ல் | றி | அ | ற் | வே | ற |
பழமொழி : அறிவே ஆற்றல்
நிற்க அதற்குத் தக….
கலைச்சொல் அறிவோம்
- நிறுத்தக்குறி – Punctuation
- மொழிபெயர்ப்பு – Translation
- அணிகலன் – Ornament
- விழிப்புணர்வு – Awareness
- திறமை – Talent
- சீர்திருத்தம் – Reform
சில பயனுள்ள பக்கங்கள்