Tamil Nadu 8th Standard Tamil Book Term 2 புணர்ச்சி Solution | Lesson 3.5

பாடம் 3.5. புணர்ச்சி

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. விகாரப் புணர்ச்சி _______ வகைப்படும்.

  1. ஐந்து
  2. நான்கு
  3. மூன்று
  4. இரண்டு

விடை : மூன்று

2. பாலாடை இச்சொல்லுக்குரிய புணர்ச்சி

  1. இயல்பு
  2. தோன்றல்
  3. திரிதல்
  4. கெடுதல்

விடை : இயல்பு

பொருத்துக

1. மட்பாண்டம்தோன்றல் விகாரம்
2. மரவேர்இயல்புப் புணர்ச்சி
3. மணிமுடிகெடுதல் விகாரம்
4. கடைத்தெரு திரிதல் விகாரம்
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ

சிறுவினா

1. இயல்பு புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

நிலைமொழியும் வரும் மொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது இயல்பு புணர்ச்சி ஆகும்

சான்று : தாய் மொழி

தாய் + மொழி = தாய் மொழிக இரு சொற்களிலும் எந்த மாற்றமும் நிகழவில்லை. எனவே இது இயல்பு புணர்ச்சி

2. மரக்கட்டில் – இச்சொல்லைப் பிரித்து எழுதிப் புணர்ச்சியை விளக்குக.

மரம் + கட்டில் – திரில் விகாரப்புணர்ச்சியின் படி “ம்” என்பது “க்” ஆகத் திரிந்து மரக்கட்டில் எனப் புணர்ந்து, இரண்டு சொற்கள் இணையும் போது ஒன்றுக்கு மேற்பட்ட விகாரங்கள் நிகழ்வது உண்டு.

கெடுதல் விகாரத்தின்படி நிலைமொழி ஈற்றில் உள்ள மகர மெய் மறைந்து தோன்றல் விகாரத்தின் படி “க்” என்ற மெய்யெழுத்து தோன்றியது.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கெடுதல் விகாரம் அமைந்துள்ள சொல்லை தேர்க

  1. தமிழ்த்தாய்
  2. விற்கொடி
  3. மனமகிழ்ச்சி
  4. நாடகக்கலை

விடை : மனமகிழ்ச்சி

2. ஒன்றிற்கு மேற்பட்ட விகாரங்கள் இடம்பெற்றுள்ள சொல்லைத் தேர்க

  1. தமிழ்த்தாய்
  2. விற்கொடி
  3. மனமகிழ்ச்சி
  4. நாடகக்கலை

விடை : நாடகக்கலை

குறுவினா

1. புணர்ச்சி என்றால் என்ன?

நிலை மொழியின் இறுதி எழுத்தும் வருமொழியின் முதல் எழுத்தும் இணைவதைப் புணர்ச்சி ஆகும்.

2. உயிரீற்றுப் புணர்ச்சி என்றால் என்ன?

நிலை மொழியின் இறுதி எழுத்து உயிர் எழுத்தாக இருந்தா ல் அஃது உயிரீற்றுப் புணர்ச்சி எனப்படும்.

எ.கா.: சிலை + அழகு = சிலை யழகு (லை =ல்+ஐ)

3. மெய்யீற்றுப் புணர்ச்சி என்றால் என்ன?

நிலை மொழியின் இறுதி எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அஃது மெய்யீற்றுப் புணர்ச்சி எனப்படும்.

எ.கா.: மண் + அழகு = மண்ணழகு

4. உயிர் முதல் புணர்ச்சி என்றால் என்ன?

வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அஃது உயிர் முதல் புணர்ச்சி எனப்படும்.

எ.கா.: பொன் + உண்டு = பொன்னுண்டு

5. மெய் முதல் புணர்ச்சி என்றால் என்ன?

வருமொழியின் முதல் எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அஃது மெய் முதல் புணர்ச்சி எனப்படும்.

எ.கா.: பொன் + சிலை = பொற்சிலை (சி = ச்+ இ)

6. விகாரப் புணர்ச்சி என்றால் என்ன?

இரண்டு சொற்கள் இணையும் போது நிலை மொழியிலோ வருமொழியிலோ அல்லது இரண்டிலுமோ மாற்றங்கள் நிகழுமாயின், அது விகாரப் புணர்ச்சி எனப்படும்.

7. விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?

விகாரப் புணர்ச்சி தோன்றல், திரிதல், கெடுதல் என மூவகைப்படும்.

8. தோன்றல் விகாரம் என்றால் என்ன?

நிலை மொழியும் வருமொழியும் இணையும் போது புதிதாக ஓர் எழுத்துத் தோன்றுவது தோன்றல் விகாரம் ஆகும்.

எ.கா.: தமிழ் + தாய் = தமிழ்த்தாய்

9. திரிதல் விகாரம் என்றால் என்ன?

நிலை மொழியும் வருமொழியும் இணையும் போது ஓர் எழுத்து வேறு எழுத்தாக மாறுவது திரிதல் விகாரம் ஆகும்.

எ.கா.: வில் + கொடி = விற்கொடி

10. கெடுதல் விகாரம் என்றால் என்ன?

நிலை மொழியும் வருமொழியும் இணையும் போது ஓர் எழுத்து மறைவது கெடுதல் விகாரம் ஆகும்.

எ.கா.: மனம் + மகிழ்ச்சி = மனமகிழ்ச்சி

மொழியை ஆள்வோம்!

தான், தாம் என்னும் சொற்கள்

தான் என்பது ஒருமையைக் குறிக்கும். தாம் என்பது பன்மையைக் குறிக்கும்.

இவ்வேறுபாட்டினை அறிந்து தொடர்களில் பயன்படுத்த வேண்டும்.

தான், தன்னை, தன்னால், தனக்கு, தனது ஆகியவற்றை ஒருமைத் தொடர்களில் பயன்படுத்த வேண்டும்.

தாம், தம்மை, தம்மால், தமக்கு, தமது ஆகியவற்றைப் பன்மைத் தொடர்களில் பயன்படுத்த வேண்டும்.

(எ.கா.)

தலைவர் தமது கையால் பரிசு வழங்கினார்.

மாணவன் தனது கையால் பெற்றுக் கொண்டான்.

(இங்குத் தலைவர் என்பது ஒருவரைக் குறித்தாலும் இது மரியாதைப் பன்மை ஆகும்)

(எ.கா.)

மாடுகள் தமது தலையை ஆட்டின.

கன்று தனது தலையை ஆட்டியது.

கோடிட்ட இடங்களைப் பொருத்தமான சொற்களால் நிரப்புக.

1. சிறுமி ______ (தனது/தமது) கையில் மலர்களை வைத்திருந்தாள்.

விடை: தனது

2. அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகத் ______ (தனது/தமது) உழைப்பை நல்கினார்.

விடை: தமது

3. உயர்ந்தோர் ______ (தம்மைத்தாமே/தன்னைத்தானே) புகழ்ந்து கொள்ள மாட்டார்கள்.

விடை: தம்மைத்தாமே

4. இவை ______ (தான்/தாம்) எனக்குப் பிடித்த நூல்கள்.

விடை: தாம்

5. குழந்தைகள் ______ (தன்னால்/தம்மால்) இயன்ற உதவிகளைப் பிறருக்குச் செய்கின்றனர்.

விடை: தம்மால்

தொடரில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக.

முதியவர் ஒருவர் தனது கால்களில் செருப்பில்லாமல் தன்னால் இழுக்க முடியாத வண்டியை இழுத்துச் சென்றார். அதனைக் கண்ட கிருஷ்ணா தம்முடைய சித்தப்பாவிடம் அவருடைய காலணிகளைக் கொடுக்குமாறு கூறினாள். அவரிடம் விலையுயர்ந்த காலணிகள்தான் இருந்தன. எனவே, தனது வேறு காலணிகளைப் பிறகு தருவதாகச் சித்தப்பா கூறினார்.

விடை:-

முதியவர் ஒருவர் தனது கால்களில் செருப்பில்லாமல் தன்னால் இழுக்க முடியாத வண்டியை இழுத்துச் சென்றார். அதனைக் கண்ட கிருஷ்ணா தன்னுடைய சித்தப்பாவிடம் அவருடைய காலணிகளைக் கொடுக்குமாறு கூறினான். அவரிடம் விலையுயர்ந்த காலணிகள்தான் இருந்தன. எனவே, தமது வேறு காலணிகளைப் பிறகு தருவதாகச் சித்தப்பா கூறினார்.

மொழியை ஆள்வோம்!

பொருத்துக

1. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போலஅ. ஒற்றுமையின்மை
2. கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போலஆ. பயனற்ற செயல்
3. பசு மரத்து ஆணி போலஇ. தற்செயல் நிகழ்வு
4. விழலுக்கு இறைத்த நீர் போலஈ. எதிர்பாரா நிகழ்வு
5. நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போலஉ. எளிதில் மனத்தில் பதிதல்
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – உ , 4 – ஆ, 5 – அ

உவமைத் தொடர்கள்

நாம் பேச்சிலும் எழுத்திலும் கருத்துகளை எளிதாக விளக்குவதற்காகச் சில தொடர்களைப் பயன்படுத்துவோம். அவை உவமைத் தொடர்கள் எனப்படும்.

ஒவ்வொரு உவமைத் தொடருக்கும் தனிப் பொருள் உண்டு.

(எ.கா)

1. மடை திறந்த வெள்ளம் போல் – தடையின்றி மிகுதியாக.

திருவிழாவைக் காண மடைதிறந்த வெள்ளம் போல மக்கள் வந்தனர்.

2. உள்ளங்கை நெல்லிக்கனி போல – வெளிப்படைத் தன்மை

பாரதியின் பாடல்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல அனைவருக்கும் விளங்கும்.

உவமைத் தொடர்களைப் பயன்படுத்தித் தொடர் அமைக்க.

1. குன்றின் மேலிட்ட விளக்கைப் போல

விடை: குன்றின் மேலிட்ட விளக்கைப் போல திருக்குறளின் புகழ் உலகமெங்கும் பரவியுள்ளது.

2. வேலியே பயிரை மேய்ந்தது போல

விடை: வேலியே பயிரை மேய்ந்தது போல நாட்டை காப்பாற்ற வேண்டிய தலைவர்களே மக்களை துன்புறுத்துகின்றன.

3. பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல

விடை: பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல பரிசுத் தொகையாக இலட்சம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவனுக்குக் கோடி கிடைத்தது.

4. உடலும் உயிரும் போல

விடை: உடலும் உயிரும் போல கணவனும் மனைவியும் அன்போடு வாழ்ந்தன.

5. கிணற்றுத் தவளை போல

விடை: கிணற்றுத் தவளை போல மூடர்கள் தம் பேச்சினாலே தம் அறியாமையை வெளிப்படுத்தி விடுவர்.

தமிழ் எண்கள் அறிவோம். (விடுபட்ட கட்டங்களை நிரப்புக)

12345678910
  ௪ ௭௧0
11121314151617181920
௧௨௧௩௧  ௪௧௫௧௬௧ ௭௧௮௧௯௧0
212223௩24  ௪252627282930
௨௧௨௨௨௩௨  ௪௨௫௨௬௨ ௭௨௮௨௯௨0

வண்ணமிடப்பட்டுள்ள எண்களுக்குரிய தமிழ் எண்களை எழுதுக

1. உலக ஈர நில நாள் பிப்ரவரி 2

விடை: உ

2. உலக ஓசோன் நாள் செப்டம்பர் 16

விடை: க௬

3. உலக இயற்கை நாள் அக்டோபர் 3

விடை: ௩

4. உலக வனவிலங்கு நாள் அக்டோபர் 6

விடை: ௬

உலக இயற்கைச் சீரழிவுத் தடுப்பு தினம் அக்டோபர் 5

விடை: ௫

மொழியை விளையாடு

பின்வரும் பாடலைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

உடலின் உறுதி உடையவரே
உலகில் இன்பம் உடையவராம்;
இடமும் பொருளும் நோயாளிக்கு
இனிய வாழ்வு தந்திடுமோ?

சுத்தம் உள்ள இடமெங்கும்
சுகமும் உண்டு நீயதனை
நித்தம் நித்தம் பேணுவையேல்
நீண்ட ஆயுள் பெறுவாயே!

காலை மாலை உலாவிநிதம்
காற்று வாங்கி வருவோரின்
காலைத் தொட்டுக் கும்பிட்டுக்
காலன் ஓடிப் போவானே!

கூழை யேநீ குடித்தாலும்
குளித்த பிறகு குடியப்பா
ஏழை யேநீ ஆனாலும்,
இரவில் நன்றாய் உறங்கப்பா!

தூய காற்றும் நன்னீரும்,
சுண்டப் பசித்த பின்உணவும்
நோயை ஓட்டி விடும்அப்பா!
நூறு வயதும் தரும்அப்பா!

அருமை உடலின் நலமெல்லாம்
அடையும் வழிகள் அறிவாயே!
வருமுன் நோயைக் காப்பாயே!
வையம் புகழ வாழ்வாயே!

வினாக்கள்

1. உலகின் இன்பம் உடையவர் யார்?

உடலில் உறுதி உடையவர் உலகில் இன்பம் உடையவர் ஆவார்.

2. காலன் யாரை நெருங்க மாட்டான்?

காலையும், மாலையும் நடைப்பயிற்சி மேற்கொண்டு, நல்ல காற்றைச் சுவாசித்து வருவோரை நோய் அணுகாது.

3. ஏழையாக இருந்தாலும் ஒரு மனிதனுக்குத் தேவையானது எது?

நீங்கள் ஏழையாக இருந்தாலும் இரவில் நன்றாக உறங்க வேண்டும்.

4. நோயை ஓட்டிவிடுபவை எவை?

தூய்மையான காற்றும், நல்ல குடிநீரும், நன்கு பசித்த பிறகு உண்பதும் நம்மை நோய் அணுகாமல் காப்பாற்றும்! நூறாண்டு வாழ வைக்கும்.

வட்டத்திலுள்ள பழமொழிகளை கண்டுபிடித்து எழுதுக

8th Std Tamil Book Back Answers Term 1 Lesson 3-5-2

  • முயற்சி திருவினையாக்கும்
  • அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு
  • சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்
  • அறிவே ஆற்றல்
  • கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
  • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
  • வருமுன் காப்போம்
  • சுத்தம் சோறு போடும்
  • பருவத்தே பயிர் செய்
  • பசித்து புசி

நிற்க அதற்குத் தக…

கலைச்சொல் அறிவோம்.

  1. குறிக்கோள் – Objective
  2.  பல்கலைக்கழகம் – University
  3.  ஒப்பந்தம் – Agreement
  4. இரட்டை வாக்குரிமை – Double voting
  5. வட்ட மேசை மாநாடு – Round Table Conference
  6.  அரசியலமைப்பு – Constitution
  7. முனைவர் பட்டம் – Doctorate
  8. நம்பிக்கை – Confidence

சில பயனுள்ள பக்கங்கள்