பாடம் 1.1 சிங்கி பெற்ற பரிசு
சொல்லும் பொருளும்
- கொத்தார் – பூங்கொத்துகளை அணிந்த
- குழல் – கூந்தல்
- சிலம்பு, பாடகம், கெச்சம், தண்டை – காலில் அணியும் அணிகலன்கள்
- காேலத்து நாடு – கலிங்க நாடு
- நாங்கூழு – மண்புழு
- மாண்ட – இறந்த
- பண்டு – முன்பு
- காலாழி – கால் மோதிரம் (மெட்டி)
நூல்வெளி
- திரிகூட ராசப்பக் கவிராயர் தென்காசி மாவட்டத்தில் பிறந்தவர்.
- திருக்குற்றாலநாதர் கோவில் வித்துவான் என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர்.
- திருக்குற்றாலத் தலபுராணம், திருக்குற்றால மாலை, குரல்வாய்மொழி பிள்ளைத்தமிழ் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்
- இவரது நூல்களுள் திருக்குற்றாலக் குறவஞ்சி திரிகூட ராசப்பக் கவிராயரின் கவிதைக் கீரிடம் என்று போற்றப்படுகிறது.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. மனதில் தோன்றிய கருத்துகளை _____ பேச வேண்டும்.
- அஞ்சி
- அஞ்சாமல்
- அணிகலன்களாக
- மகுடமாக
விடை: அஞ்சாமல்
2. முறுக்குகள் நிறைந்த தண்டையைப் பரிசாக அளித்த நாடு
- கலிங்க நாடு
- கண்டிய நாடு
- சேலத்து நாடு
- பாண்டிய நாடு
விடை: கலிங்க நாடு
3. பயமில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- பய + இல்லை
- பய + மில்லை
- பயம் + மில்லை
- பயம் + இல்லை
விடை: பயம் + இல்லை
4. கால் + ஆழி என்பதனைச் சேர்த்துழுதக் கிடைக்கும் சொல்
- கால்ஆழி
- காலாஆழி
- காலாழி
- காலஅழி
விடை: காலாழி
5. சிங்கிக்குப் பலவகைப் பொருள்கள் கிடைக்க காரணம்
- நடனமாடுதல்
- பாட்டுப் பாடுதல்
- குறி சொல்லுதல்
- மருத்துவம் செய்தல்
விடை: குறி சொல்லுதல்
பொருத்துக
1. பாம்பு | பாடகம் |
2. மண்புழு | மணிக்கச்சம் |
3. தவளை | கால் மோதிரம் |
4. குண்டலப் பூச்சி | சிலம்பு |
விடை: 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ |
குறுவினா
1. சிங்கிக்குப் பரிசாகக் கிடைத்த அணிகலன்கள் யாவை?
சிலம்பு, தண்டை, பாடகம்,மணிக்கச்சம், கால் மோதிரம்
2. சிங்கன் தான் எதனைக் கண்டு அஞ்சுவதாகக் கூறினான்?
சிங்கியின் அணிகலன்களைக் கண்டு அஞ்சுவதாகக் கூறினான்
சிறுவினா
கலிங்க நாட்டாரும் கண்டியநாட்டாரும் சிங்கிக்கு வழங்கிய பரிசுகள் யாவை?
முறுக்குகள் நிறைந்த தண்டைகள், கால்மோதிரம் பீலி
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. திருக்குற்றாலநாதர் கோவில் வித்துவான் என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர்.
- குணங்குடி மஸ்தான் சாகிபு
- திரிகூட ராசப்பக் கவிராயர்
- திருமூலர்
- அகத்தியர்
விடை: திரிகூட ராசப்பக் கவிராயர்
2. திரிகூட ராசப்பக் கவிராயரின் கவிதைக் கீரிடம் என்று போற்றப்படும் நூல்
- திருக்குற்றாலத் தலபுராணம்
- திருக்குற்றால மாலை
- திருக்குற்றாலக் குறவஞ்சி
- குரல்வாய்மொழி பிள்ளைத்தமிழ்
விடை: திருக்குற்றாலக் குறவஞ்சி
3. பண்டு என்பதன் எதிர்ச்சொல்
- முன்பு
- பக்கம்
- பின்பு
- தூரம்
விடை: பின்பு
சிறு வினா
திரிகூட ராசப்பக் கவிராயர் எழுதிய நூல்கள்?
திருக்குற்றாலத் தலபுராணம், திருக்குற்றால மாலை, குரல்வாய்மொழி பிள்ளைத்தமிழ்