Tamil Nadu 8th Standard Tamil Book Term 3 விடுதலைத் திருநாள் Solution | Lesson 1.2

பாடம் 1.2. விடுதலைத் திருநாள்

நூல்வெளி

மீ.இராேசேந்திரன் என்னும் இயற்பெயர் மீரா கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றினார்

“அன்னம் விடு தூது” என்னும் இதழை நடத்தியவர்.

ஊசிகள், குக்கூ, மூன்றும் ஆறும், வா இந்தப் பக்கம், கோடையும் வசந்தமும் இவரது படைப்புகளாகும்

இவர் எழுதிய “கோடையும் வசந்தமும்” என்னும் நூலிலிருந்து ஒரு கவிதை இங்குத் தரப்பட்டுள்ளது.

I. சொல்லும் பொருளும்

  1. சீவன் – உயிர்
  2. வையம் – உலகம்
  3. சத்தியம் – உண்மை
  4. சபதம் – சூளுரை
  5. ஆனந்த தரிசனம் – மகிழ்வான காட்சி
  6. மோகித்து – விரும்பு

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. வானில் முழுநிலவு அழகாகத் ___________ அளித்தது.

  1. தயவு
  2. தரிசனம்
  3. துணிவு
  4. தயக்கம்

விடை : தரிசனம்

2. இந்த _________ முழுவதும் போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு.

  1. வையம்
  2. வானம்
  3. ஆழி
  4. கானகம்

விடை : வையம்

3. சீவனில்லாமல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. சீவ + நில்லாமல்
  2. சீவன் + நில்லாமல்
  3. சீவன் + இல்லாமல்
  4. சீவ + இல்லாமல்

விடை : சீவன் + இல்லாமல்

4. விலங்கொடித்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. விலம் + கொடித்து
  2. விலம் + ஒடித்து
  3. விலன் + ஒடித்து
  4. விலங்கு + ஒடித்து

விடை : விலங்கு + ஒடித்து

5. காட்டை + எரித்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

  1. காட்டைஎரித்து
  2. காட்டையெரித்து
  3. காடுஎரித்து
  4. காடுயெரித்து

விடை : காட்டையெரித்து

6. இதம் + தரும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

  1. இதந்தரும்
  2. இதம்தரும்
  3. இதத்தரும்
  4. இதைத்தரும்

விடை : இதந்தரும்

III. குறு வினா

1. பகத்சிங் கண்ட கனவு யாது?

இன்று இந்தியாவின் விடியல் தோன்றிய நாள் என்று பகத்சிங் கனவு கண்டார்.

2. இருண்ட ஆட்சி என எதனை மீரா குறிப்பிடுகிறார்?

300 ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்திய அந்நியரின் ஆட்சியை இருண்ட ஆட்சி என்று மீரா குறிப்பிடுகிறார்

IV. சிறு வினா

இந்தியத்தாய் எவ்வாறு காட்சியளிக்கிறாள்?

அடிமையாகத் தவித்துக் கொண்டிருந்த இந்தியத் தாய் சினத்துடன் எழுந்து,

தன்னுடைய கை விலங்கை உடைத்து,

பகைவரை அழித்து,

தன்னுடைய அவிழ்ந்த கூந்தலை முடித்து,

தன் நெற்றியில் திலகமிட்டு காட்சியளிக்கிறாள்.

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ________ என்னும் இதழை நடத்தியவர் மீரா

விடை : அன்னம் விடு தூது

2. விடுதலைத் திருநாள் என்னும் கவிதைப்பேழை பகுதி இடம் பெறும் நூல் ________

விடை : கோடையும் வசந்தமும்

3. மீரா ________ பணியாற்றியவர்

விடை : கல்லூரி பேராசிரியராகப்

4. மீராவின் இயற்பெயர் ________

விடை : மீ.இராேசேந்திரன்

5. சதி வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்

விடை : பகத்சிங்

II. பிரித்து எழுதுக

  1. முற்றுகையிட்ட = முற்றுகை + இட்ட
  2. சீவனில்லாமல் = சீவன் + இல்லாமல்
  3. முட்காட்டை = முள் + காட்டை
  4. மூச்சுக்காற்றை = மூச்சு + காற்றை
  5. இதந்தரும் = இதம் + தரும்
  6. தமிழால் = தமிழ் + ஆல்
  7. பகையைத்துடைத்து = பகையை + துடைத்து
  8. வாய்ப்பளித்த = வாய்ப்பு + அளித்த
  9. அரக்கராகி = அரக்கர் + ஆகி

III. சிறு வினா

1. குடும்பத்தினருக்கு மட்டுமே மகிழ்ச்சி அளிக்கும் நாள்கள் எது?

பிறந்த நாள், திருமண நாள் போன்றன தொடர்புடைய குடும்பத்தினருக்கு மட்டுமே மகிழ்ச்சி அளிக்கும் நாள்களாகும்.

2. குறிப்பிட்ட சமயத்தினருக்கு மட்டுமே மகிழ்ச்சி அளிக்கும் விழா எது?

சமயத் தொடர்பான விழாக்கள் குறிப்பிட்ட சமயத்தினருக்கு மட்டுமே மகிழ்ச்சி அளிக்கும்.

3. கவிஞர் மீரா இயற்றிய நூல்களை எழுதுக

ஊசிகள், குக்கூ, மூன்றும் ஆறும், வா இந்தப் பக்கம், கோடையும் வசந்தமும்

4. மீரா நடத்திய இதழ் எது?

மீரா நடத்திய இதழ் அன்னம் விடு தூது

5. விடுதலைத் திருநாள் நூலில் மீ.இராசேந்திரன் குறிப்பிட்டுள்ள தலைவர் யார்?

பகத்சிங்

6. விடுதலைத் திருநாள் குறித்து கவிஞர் மீரா கூறுவதென்ன?

உயிரற்ற பிணங்களைப் போல் கிடந்த நாட்டு மக்கள் அனைவரையும் பிடித்திருந்த அறியாமை என்னும் உறக்கத்தை ஓட ஓட விரட்டிய நாள் இன்று கவிஞர் மீரா கூறுகிறார்

7. தாய் நாட்டை தமிழால் வணங்குவோம் என்று கவிஞர் மீரா கூறக்காரணம் யாது?

இன்பம் தரும் இந்த விடுதலைத் திருநாளைக் கொண்டாட வாய்ப்பளித்த, நம் தாய்நாட்டை தமிழால் வணங்குவோம் என்று கவிஞர் மீரா கூறுகிறார்.

IV. சிறு வினா

கவிஞர் மீரா குறிப்பு வரைக

  • மீராவின் இயற்பெயர் மீ.இராேசேந்திரன்
  • மீரா கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றினார்
  • அன்னம் விடு தூது என்னும் இதழை நடத்தினார்
  • ஊசிகள், குக்கூ, மூன்றும் ஆறும், வா இந்தப் பக்கம், கோடையும் வசந்தமும் இவரது படைபுகளாகும்

 

சில பயனுள்ள பக்கங்கள்