பாடம் 1.4 இடைச்சொல், உரிச்சொல்
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மொழிப் பயன்பாட்டை முழுமையாக்கும் சொல்
- பெயர்ச்சொல்
- வினைச்சொல்
- இடைச்சொல்
- உரிச்சொல்
விடை: இடைச்சொல்
2 உறுபசி என்னும் சொல்லில் உறு என்பதன் பொருள்
- குறைவு
- காவல்
- மிகுதி
- கூர்மை
விடை: மிகுதி
3. கடிநகர் என்பதன் பொருள்
- மணமிக்க நகர்
- காவல்மிக்க நகர்
- செல்வம் மிக்க நகர்
- கல்வி மிக்க நகர்
விடை: காவல்மிக்க நகர்
சிறுவினா
1. சொற்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
சொற்கள் நான்கு வகைப்படும். அவை:
- பெயர்ச்சொல்
- வினைச்சொல்
- இடைச்சொல்
- உரிச்சொல்
2. இடைச்சொல் என்றால் என்ன? இடைச்சொற்களின் வகைகளை எழுதுக.
பெயர், வினை என்னும் இரண்டு வகைச் சொற்களுக்கும் முன்னாலோ பின்னாலோ இணைந்து நின்று அச்சொற்களின் பொருளைத் தெளிவுபடுத்துவது இடைச்சொல் ஆகும்.
இடைச்சொல் வகைகளுள் சில:
வேற்றுமை உருபுகள்:
ஐ, ஆல், கு, இன், அது, கண்
விகுதிகள்:
என், ஆன், ஆள், ஆர், தல்
சாரியைகள்:
அத்து, அற்று, அம்
உவம உருபுகள்:
போல, போன்ற
சொல்லுருபுகள்:
மூலம், கொண்டு, இருந்து, பற்றி, வரை,
3. உரிச்சொல் என்றால் என்ன?
பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது உரிச்சொல் ஆகும். இது பெயருக்கும் வினைக்கும் அடையாக வரும்.
சான்று:
சால – சாலச்சிறந்தது
4. ஒரு சொல் பல பொருள்களில் வருவதை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
உரிச்சொற்களில் ஒரு சொல் பல பொருள்களுக்கு உரியதாய் வருவது உண்டு.
சான்று:
கடிமலர் – மணம் மிக்க மலர்
கடிநகர் – காவல் மிக்க நகர்
கடிவிடுதும் விரைவாக விடுவோம்
கடிநுனி – கூர்மையான நுனி
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. உறு, தவ, நனி என்ற மூன்று உரிச்சொற்களும் _______ ஒரே பொருளில் வருகின்றன
- கடி
- சால
- கழி
- மிகுதி
விடை: மிகுதி
2 கடி என்ற சொல் தரும் பொருள்களில் பொருந்தாதது
- மணம்
- காவல்
- மிகுதி
- கூர்மை
விடை: மிகுதி
மொழியை ஆள்வோம்
எதிர்மறைச் சொற்கள்
வந்தது நீ அல்ல; பார்த்தது நான் அல்ல; நான் படித்த புத்தகம் இது அல்ல என்றெல்லாம் பேசுகின்றோம். இவையெல்லாம் சரியான தொடர்கள் அல்ல. எதிர்மறை வினைமுற்றுகள் பல உண்டு. அவற்றை இடம் அறிந்து பயன்படுத்த வேண்டும்.
தன்மை
- ஒருமை – நான் அல்லேன்.
- பன்மை – நாம் அல்லோம்.
முன்னிலை
- ஒருமை – நீ அல்லை.
- பன்மை – நீவீர் அல்லீர்.
படர்க்கை
- ஆண்பால் – அவன் அல்லன்.
- பெண்பால் – அவள் அல்லள்.
- பலர்பால் – அவர் அல்லர்.
- ஒன்றன்பால் – அஃது அன்று.
- பலவின் பால் – அவை அல்ல.
வேறு, உண்டு, இல்லை ஆகியவை மூவிடத்திற்கும், ஐம்பாலுக்கும் பொதுவான சொற்கள் ஆகும்.
பின்வரும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக.
1. அதைச் செய்தது நான் அன்று.
விடை: அதைச் செய்தது நான் அல்லேன்
2. பானையை உடைத்தது கண்ணன் அல்ல.
விடை: பானையை உடைத்தது கண்ணன் அல்லன்
3. மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அல்லை.
விடை: மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அன்று
4. சித்தர்கள் செயற்கையை விரும்பியவர்கள் அல்லோம்.
விடை: சித்தர்கள் செயற்கையை விரும்பியவர்கள் அல்லர்
5. பகைவர் நீவீர் அல்லர்.
விடை: பகைவர் நீவீர் அல்லீர்
மொழியோடு விளையாடு
வட்டத்தில் உள்ள எழுத்துகளைப் பயன்படுத்திச் சொற்களை உருவாக்குக
கருமை | கடுமை |
கரும்பு | கடமை |
நாடு | பழமை |
களை | கடம் |
வித்து | வேற்றுமை |
வேழம் | கல் |
கற்பு | புதுமை |
பல் | நாற்று |
வேல் | நாடகம் |
புல் | நாம் |
சொற்களை வரிசைப்படுத்திச் சரியான தொடரை எழுதுக.
1. பார்க்கும் பொழுது உள்ளது அதிசயமாக உன்னை சிங்கி
விடை: உன்னைப் பார்க்கும் பொழுது அதிசயமாக உள்ளது சிங்கி
2. சிறுசிறு எம்.ஜி.ஆர் நாடகங்களில் தொடங்கினார் வேடங்களில் நடிக்கத்
விடை: நாடகங்களில் சிறு சிறு வேடங்களின் நடிக்கத் தொடங்கினர் எம்.ஜி.ஆர்
3. வேலையை நோய் குப்புசாமி இழந்து இருந்தார் காரணமாக
விடை: நோய் காரணமாக குப்புசாமி வேலையை இழந்து இருந்தார்
5. இயல்பு மாற்றமும் எவ்வித இணைவது புணர்ச்சி இன்றி
விடை: எவ்வித மாற்றமும் இன்றி இணைவது இயல்பு புணர்ச்சி
நிற்க அதற்குத் தக…
கலைச்சொல் அறிவோம்.
- கதாநாயகன் – The Hero
- முதலமைச்சர் – Chief Minister
- தலைமைப்பண்பு – Leadership
- குதிரையேற்றம் – Equestrian
- வரி – Tax
- வெற்றி – Victory
- சட்ட மன்ற உறுப்பினர் – Member of Legislative Assembly
- ஆதரவு – Support