பாடம் 1.5 வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்
பின்வரும் தொடர்களை வல்லினம் மிகும், மிகா இடங்கள் என வகைப்படுத்துக.
| சுட்டுத் திரிபு | வல்லினம் மிகும் |
| திசைப் பெயர்கள் | வல்லினம் மிகும் |
| பெயரெச்சம் | வல்லினம் மிகாது |
| உவமைத் தொகை | வல்லினம் மிகும் |
| நான்காம் வேற்றுமை விரி | வல்லினம் மிகும் |
| இரண்டாம் வேற்றுமை தொகை | வல்லினம் மிகாது |
| வினைத் தொகை | வல்லினம் மிகாது |
| உருவகம் | வல்லினம் மிகும் |
| எழுவாய்த் தொடர் | வல்லினம் மிகாது |
| எதிர்மறைப் பெயரெச்சம் | வல்லினம் மிகாது |
சிறுவினா
1. சந்திப்பிழை என்றால் என்ன?
| வல்லினம்மிக வேண்டிய இடத்தில் மிகாமல் எழுதுவதும் மிகக் கூடாத இடத்தில் வல்லின மெய் இட்டு எழுதுவதும் தவறாகும். இதனைச் சந்திப் பிழை அல்லது ஒற்றுப்பிழை எனக் கூறுவர் |
2. வேற்றுமைகளில் வல்லினம் மிகும் இடங்களை எழுதுக.
| இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படையாக வரும் இடத்திலும், நான்காம் வேற்றுமை உருபு வெளிப்படையாக வரும் இடத்திலும் வல்லினம் மிகும். சான்று தலையைக் காட்டு, எனக்குத் தெரியும் |
3. வல்லினம் மிகாத் தொடர்கள் ஐந்தனை எழுதுக.
|
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடு
1. இரண்டாம் வேற்றுமை உருபு
- கு
- ஆல்
- ஐ
- இன்
விடை: ஐ
2. நான்காம் வேற்றுமை உருபு
- கு
- ஆல்
- ஐ
- இன்
விடை: கு
3. தமிழ்த்தாய் இலக்கணக்குறிப்பு தருக
- உருவகம்
- உவமைத்தொகை
- உம்மைத்தொகை
- எண்ணும்மை
விடை: உருவகம்
4. தாய்தந்தை இலக்கணக்குறிப்பு தருக
- உருவகம்
- உவமைத்தொகை
- உம்மைத்தொகை
- எண்ணும்மை
விடை: உம்மைத்தொகை
5. மகர மெய்யில் முடியும் சொல்லை அடுத்து வல்லினம் வந்தால், மகர மெய் அழிந்து அவ்விடத்தில் வல்லினம் மிகும் என்பதை குறிக்கும் சொல்
- மரச்சட்டம்
- வடக்குத்தெரு
- அப்படிச்செய்
- தமிழ்த்தாய்
விடை: மரச்சட்டம்
6. கூற்றை ஆராய்க
1. பெயரச்சம், எதிர்மறைப் பெயரெச்சம் ஆகியவற்றை அடுத்து வல்லினம் மிகாது.
2. எழுவாய்ச் சொற்களை அடுத்து வல்லினம் மிகாது.
3. வினைத்தொகையில் வல்லினம் மிகும்.
4. உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது.
- 1 மட்டும் தவறு
- 2 மட்டும் தவறு
- 3 மட்டும் தவறு
- 4 மட்டும் தவறு
விடை: 3 மட்டும் தவறு
நெடுவினா
1. வல்லினம் மிகும் இடங்களை அட்டவணைப்படுத்துக
1. | அந்த இந்த என்னும் சுட்டுத்திரிபுகளை அடுத்து வல்லினம் மிகும். (எ.கா.) அந்தப்பக்கம். இந்தக்கவிதை. |
2. | எந்த என்னும் வினாத்திரிபை அடுத்து வல்லினம் மிகும். (எ.கா.) எந்தத்திசை? எந்தச்சட்டை? |
3. | இரண்டாம் வேற்றுமை உருபாகிய ஐ வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும். (எ.கா.) தலையைக் காட்டு. பாடத்தைப்படி |
4. | நான்காம் வேற்றுமை உருபாகிய கு வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும். (எ.கா.) எனக்குத் தெரியும். அவனுக்குப் பிடிக்கும். |
5. | இரண்டாம் வேற்றுமை உருபாகிய ஐ வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும். (எ.கா.) தலையைக் காட்டு. பாடத்தைப்படி |
6. | நான்காம் வேற்றுமை உருபாகிய கு வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும். (எ.கா.) எனக்குத் தெரியும். அவனுக்குப் பிடிக்கும். |
7. | இகரத்தில் முடியும் வினையெச்சங்களை அடுத்து வல்லினம் மிகும். (எ.கா.) எழுதிப் பார்த்தாள். ஓடிக் களைத்தான். |
8. | உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் வன்தொடர்க் குற்றியலுகரமாக இருந்தால் மட்டும் வல்லினம் மிகும். (எ.கா.) பெற்றுக் கொண்டேன். படித்துப் பார்த்தார். |
9. | எதிர்மறைப் பெயரெச்சத்தின் இறுதி எழுத்து கெட்டு வருவது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகும். இதில் வல்லினம் மிகும். (எ.கா.) செல்லாக்காசு, எழுதாப்பாடல். |
10. | எதிர்மறைப் பெயரெச்சத்தின் இறுதி எழுத்து கெட்டு வருவது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகும். இதில் வல்லினம் மிகும். (எ.கா.) செல்லாக்காசு, எழுதாப்பாடல். |
11. | உவமைத்தொகையில் வல்லினம் மிகும். (எ.கா.) மலர்ப்பாதம், தாய்த்தமிழ். |
12. | உருவகத்தில் வல்லினம் மிகும். (எ.கா.) தமிழ்த்தாய், வாய்ப்பவளம். |
13. | எண்ணுப்பெயர்களில் எட்டு, பத்து ஆகிய இரண்டு பெயர்களில் மட்டும் வல்லினம் மிகும். (எ.கா.) எட்டுப்புத்தகம், பத்துக்காசு. |
14. | அப்படி, இப்படி, எப்படி ஆகிய சொற்களை அடுத்து வல்லினம் மிகும். (எ.கா.) அப்படிச்செய், இப்படிக்காட்டு, எப்படித்தெரியும்? |
15. | திசைப்பெயர்களை அடுத்து வல்லினம் மிகும்.(எ.கா.) கிழக்குக்கடல், மேற்குச்சுவர், வடக்குத்தெரு, தெற்குப்பக்கம். |
16. | மகர மெய்யில் முடியும் சொல்லை அடுத்து வல்லினம் வந்தால், அந்த மகர மெய் அழிந்து அவ்விடத்தில் வல்லினம் மிகும். (எ.கா.) மரம் + சட்டம் = மரச்சட்டம், வட்டம் + பாறை = வட்டப்பாறை. |
2. வல்லினம் மிகா இடங்களை அட்டவணைப்படுத்துக
1. | எழுவாய்ச் சொற்களை அடுத்து வல்லினம் மிகாது. (எ.கா.) தம்பி படித்தான் , யானை பிளிறியது. |
2. | அது, இது, எது ஆகிய சொற்களை அடுத்து வல்லினம் மிகாது. (எ.கா.) அது சென்றது. இது பெரியது, எது கிடைத்தது? |
3. | பெயரெச்சம், எதிர்மறைப் பெயரெச்சம் ஆகியவற்றை அடுத்து வல்லினம் மிகாது. (எ.கா.) எழுதிய பாடல், எழுதாத பாடல். |
4. | இரண்டாம் வேற் றுமை உருபு மறைந்து வரும் இடங்களில் (இரண்டாம் வேற்றுமைத் தொகை) வல்லினம் மிகாது. (எ.கா.) இலை பறித்தேன், காய் தின்றேன். |
5. | உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் மென்தொடர்க் குற்றியலுகரமாகவோ, இடைத் தொடர்க் குற்றியலுகரமாகவோ இருந்தால் வல்லினம் மிகாது. (எ.கா.) தின்று தீர்த்தான், செய்து பார்த்தாள். |
6. | வினைத்தொகையில் வல்லினம் மிகாது. (எ.கா.) எழுதுபொருள், சுடுசோறு |
7. | அப்படி, இப்படி, எப்படி ஆகிய சொற்களைத் தவிர, படி என முடியும் பிறசொற்களை அடுத்து வல்லினம் மிகாது. (எ.கா.) எழுதும்படி சொன்னேன். பாடும்படி கேட்டுக்கொண்டார். |
8. | உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது. (எ.கா.) தாய்தந்தை, வெற்றிலைபாக்கு |
மொழியை ஆள்வோம்
பிழைகளைத் திருத்தி எழுதுக.
1. அதைச் செய்தது நான் அன்று.
விடை: அதைச் செய்தது நான் அல்லேன்
2. பானையை உடைத்தது கண்ணன் அல்ல.
விடை: பானையை உடைத்தது கண்ணன் அல்லன்
3. மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அல்லை.
விடை: மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அன்று
4. சித்தர்கள் செயற்கையை விரும்பியவர்கள் அல்லோம்.
விடை: சித்தர்கள் செயற்கையை விரும்பியவர்கள் அல்லர்
5. பகைவர் நீவீர் அல்லர்.
விடை: பகைவர் நீவீர் அல்லீர்
எதிர்மறைச் சொற்களினால் நிரப்புக
1. தாங்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள் இவை _________
விடை: அல்ல
2. உங்களோடு வருவோர் _________ அல்லோம்.
விடை: நாம்
3. மணிமேகலை செல்வ வாழ்வை விரும்பியவள் _________
விடை: அல்லன்
4. ஈ மொத்த பண்டங்கள் உடலுக்கு நன்மை செய்வன _________
விடை: அல்ல
5. இந்த நிலத்துக்கு உரிமையாளர் ____________ அல்லை.
விடை: நீ
மொழியோடு விளையாடு
சொற்களை உருவாக்குக

| கருமை | கடுமை | பல் |
| கரும்பு | கடமை | வேல் |
| நாடு | பழமை | புல் |
| களை | கடம் | நாற்று |
| வித்து | வேற்றுமை | நாடகம் |
| வேழம் | கல் | நாம் |
| கற்பு | புதுமை | வேம்பு |
கதை நிகழ்வுக்கேற்பச் சொற்றொடரை முறையாக வரிசைப்படுத்துக.
- தொண்டைமானிடம் ஒளவை தூது போதல்.
- தொண்டைமான் படையெடுத்து வரும் செய்தியை அதியமான் ஒளவைக்குத் தெரிவித்தல்.
- ஒளவைக்குத் தொண்டைமான் தன் படைக்கருவிகளைக் காட்டுதல்.
- அதியமான் ஒளவைக்கு நெல்லிக்கனி வழங்குதல்.
- தொண்டைமான் போர் வேண்டாம் என்று முடிவு செய்தல்.
- தொண்டைமானிடம் ஒளவை அதியமானின் படைச்சிறப்பைக் குறிப்பால் உணர்த்துதல்.
விடை :-
- அதியமான் ஒளவைக்கு நெல்லிக்கனி வழங்குதல்.
- தொண்டைமான் படையெடுத்து வரும் செய்தியை அதியமான் ஒளவைக்குத் தெரிவித்தல்.
- தொண்டைமானிடம் ஒளவை தூது போதல்.
- ஒளவைக்குத் தொண்டைமான் தன் படைக்கருவிகளைக் காட்டுதல்.
- தொண்டைமானிடம் ஒளவை அதியமானின் படைச்சிறப்பைக் குறிப்பால் உணர்த்துதல்.
- தொண்டைமான் போர் வேண்டாம் என்று முடிவு செய்தல்.
நிற்க அதற்குத் தக…
கலைச்சொல் அறிவோம்.
- குதிரையேற்றம் – Equestrian
- ஆதரவு – Support
- கதாநாயகன் – The Hero
- வரி – Tax
- முதலமைச்சர் – Chief Minister
- வெற்றி – Victory
- தலைமைப்பண்பு – Leadership
- சட்ட மன்ற உறுப்பினர் – Member of Legislative Assembly
சில பயனுள்ள பக்கங்கள்