Tamil Nadu 8th Standard Tamil Book Term 3 பால் மனம் Solution | Lesson 3.4

பாடம் 3.4 பால் மனம்

8ஆம் வகுப்பு தமிழ், பால் மனம் பாட விடைகள் - 2023

குன்றென நிமிர்ந்து நில் > 3.4 பால் மனம்

நூல் வெளி

கோமகளின் இயற்பெயர் இராஜலட்சுமி;

சிறுகதைகள், குறும்புதினங்கள், வானொலி, தொலைக்காட்சி நாடகங்கள் முதலியவற்றை எழுதியுள்ளார்.

இவரது அன்னை பூமி என்னும் புதினம் தமிழ்நாடு அரசின் விருதினைப் பெற்றது.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை விருதினையும் பெற்றுள்ளார்.

உயிர் அழுதாய், நிலாக்கால நட்சித்திரங்கள், அன்பின் சிதறல் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

பால் மனம் எனும் இக்கதை அ.வெண்ணிலா தொகுத்த மீதமிருக்கும் சொற்கள் எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு

குழந்தை கிருஷ்ணாவின் பணபுநலன்களைப் பற்றித் தொகுத்து எழுதுக.

முன்னுரை

“பால்மனம்” எனும் இக்கதை அ.வெண்ணிலா எனபவர் தொகுத்த “மீதமிருக்கும் சொற்கள்” என்னும் நூலில் இடம் பெறுகின்றது. குழந்தை கிருஷ்ணாவின் பண்புகளை இனி காண்போம்.

கிருஷ்ணாவின் செயல்கள்

ராமுவின் அண்ணன் மகள் கிருஷ்ணா. அவள் அனைவரின் மீதும் அன்பும் இரக்கமும் உள்ளவள். ஒருநாள் தெரு நாயைப் பார்த்து பரிதாபப்படுகின்றாள். அம்மா அதை தொடக்கூடாது, அப்பா திட்டுவார்கள் என்றாள். அப்பா சொன்னால் தெடலாமா? என்றாள் கிருஷ்ணா, தெருவில் கீரை கொண்டு வரும் பாட்டியைக் கண்டதும், அவளைத் தொடப் போகிறாள். அவள் உடம்பு சரியில்லாததால் அவளைத் தொடக்கூடாது என்றாள் அம்மா, சித்தப்பா, அப்பாவுக்கு உடம்பு சரியில்லாத போது நீங்கள் மட்டும் தொடலாமா? என்றாள். கிருஷ்ணா அடுத்து கைவண்டி இழுத்து வரும் ஒருவரைப் பாரத்து, அவரிடம் செருப்பு இல்லை உங்கள் செருப்பைக் கொடுங்கள் சித்தப்பா என்றாள். தன் தம்பிக்காக வைத்திருந்த பாலை எடுத்து கிருஷ்ணா ஆட்டுக்குட்டிக்குப் புகட்டுகிறாள். அம்மா என்ன மகள்? இப்படி இருக்கிறாளே! என்று புலம்புகிறார். ராமு, கிருஷ்ணாவின் மனித நேயத்தை கண்டு வியக்கிறார்.

மனமாற்றம்

ராமு படித்து முடித்துவிட்டு வேலைக்கு சென்று, ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் திரும்புகிறார். இப்போது கிருஷ்ணாவிற்கு எட்டு வயது. அண்ணன் அண்ணியால் கிருஷ்ணா முற்றிலுமாக மாறி விட்டாள். சித்தப்பா, தம்பி தெரு நாய்க்குப் பால் சாதத்தைப் போடுகிறான் பாருங்க, டாமிக்கு தான் போடனும் என்கிறது. பிறகு ஆட்டுக்குட்டி மீது கல்லெடுத்து வீசுகிறாள். சாலை வேலை செய்யும் கூலியாள் தண்ணீர் கேட்டவுடன் கொடுக்க மறுக்கிறாள். கிருஷ்ணாவின் மன மாற்றத்தை ராமு உணர்கிறார்.

ஏமாற்றம்

குழந்தைகளின் மனதை அவர்கள் வளர வளர இந்தச் சமுதாயமும் அவர்களின் பெற்றோரும் மாற்றுகின்றனர். இரக்க குணம் இல்லாமல் அவர்களை வளர்க்கும் செயல் ராமுக்கு ஏமாற்றத்தை தந்தது. நான் பார்த்த இரக்கமான கிருஷ்ணா இப்போது முற்றிலும் மாறி விட்டாள் என்று நொந்து கொண்டார்.

முடிவுரை

கடவுளின் உறுப்பினராக குழந்தை பூமியில் பிறக்கிறது. ஆனால் மனிநேயம்  இல்லாத மனிதனின் உறுப்பினனாக உலகத்தை விட்டு நீங்குகிறது.

கூடுதல் வினாக்கள்

1. குழந்தைகளின் மனம் எப்படிபட்டது?

குழந்தை மனம் எல்லா உயிர்களையும் சமமாகக் கருதுவது; பிறர் துன்பம் கண்டு இரங்குவது; அதனை நீக்க முயல்வது.

2. குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவர் யார்?

குழந்தைகளின் வளர்ச்சியில் பெற்றோர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

3. குழந்தைகளின் மன இயல்புகளில் மாற்றம் எதனால் ஏற்படுகிறது?

சமூகம், பெற்றோர்களின் தாக்கத்தால் குழந்தைகளின் மன இயல்புகளில் மாற்றம் ஏற்படுகிறது

4. கோமகளின் இயற்பெயர் என்ன?

கோமகளின் இயற்பெயர் இராஜலட்சுமி;

5. கோமகளின் அன்னை பூமி என்னும் புதினம் பெற்ற விருதுகள் யாவை?

இவரது அன்னை பூமி என்னும் புதினம் தமிழ்நாடு அரசின் விருதினைப் பெற்றது.
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை விருதினையும் பெற்றுள்ளார்.

6. கோமகள் எழுதியுள்ள நூல்கள் யாவை?

உயிர் அழுதாய், நிலாக்கால நட்சித்திரங்கள், அன்பின் சிதறல் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

 

சில பயனுள்ள பக்கங்கள்