9th Std Science Term 1 Solution in Tamil | Lesson.1 அளவீடுகளும், அளவிடும் கருவிகளும்

பாடம் 1. அளவீடுகளும், அளவிடும் கருவிகளும்

அளவீடுகளும், அளவிடும் கருவிகளும் Book Back Answer

பாடம் 1. அளவீடுகளும், அளவிடும் கருவிகளும்

1. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. சரியான ஒன்றைத் தேர்ந்தேடு

  1. மி.மீ < செ.மீ < மீ < கி.மீ
  2. மி.மீ > செ.மீ > மீ > கி.மீ
  3. கி.மீ< மீ< செ.மீ < மி.மீ
  4. மி.மீ > மீ > செ.மீ > கி.மீ

விடை :  மி.மீ < செ.மீ < மீ < கி.மீ

2. அளவுகாேல், அளவிடும் நாடா மற்றும் மீடடர் அளவுகாேல் ஆகியவை கீழக்கண்ட
எந்த அளவை அளவிடப் பயன்படுகின்றன?

  1. நிறை
  2. எடை
  3. காலம்
  4. நீளம்

விடை : நீளம்

3. ஒரு மெடரிக் டன் என்பது

  1. 100 குவின்டால்
  2. 10 குவின்டால்
  3. 1/10 குவின்டால்
  4. 1/100 குவின்டால்

விடை : 10 குவின்டால்

4. சென்னைக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே உள்ள தொலைவை எந்த அலகில் கணக்கிட முடியும்?

  1. கிலாே மீட்டர்
  2. மீட்டர்
  3. சென்டி மீட்டர்
  4. மில்லி மீட்டர்

விடை : கிலாே மீட்டர்

5. கீழக்கண்டவற்றுள் எது நிறையை அளவிடும் கருவியல்ல

  1. சுருள் தராசு
  2. பாெதுத் தராசு
  3. இயற்பியல் தராசு
  4. எணணியல் தராசு

விடை : சுருள் தராசு

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

1. ————— ன் அலகு மீட்டர் ஆகும்.

விடை : நீளத்தின்

2. 1 கி.கி அரிசியினை அளவிட ————— தராசு பயன்படுகிறது.

விடை : பொதுத்

3. கிரிக்கெட் பந்தின் தடிமனை அளவிடப் பயன்படுவது ————— கருவியாகும்.

விடை : வெர்னியர் அளவி

4. மெல்லிய கம்பியின் ஆரத்தை அளவிட ————— கருவி பயன்படுகிறது.

விடை : திருகு அளவி

5. இயற்பியல் தராசைப் பயன்படுத்தி அளவிடக் கூடிய துல்லியமான நிறை ——— ஆகும்.

விடை : 1 மில்லி கிராம்

III. சரியா? தவறா? எழுதுக

1. மின்னாேட்டத்தின் SI அலகு கிலாேகிராம். ( தவறு )

2. கிலாேமீட்டர் என்பது ஒரு SI அலகு முறை.  ( தவறு )

3. அன்றாட வாழ்வில், நாம் நிறை என்ற பதத்திற்கு பதிலாக எடை என்று பயன்படுத்துகிறாேம். ( சரி )

4. இயற்பியல் தராசு, பாெதுத் தராசை விடத துல்லியமானது. அது மில்லிகிராம்
அளவிற்கு நிறையைத் துல்லியமாக அளவிடப் பயன்படுகிறது. ( சரி )

5. ஒரு டிகிரி செல்சியஸ் என்பது 1 K இடைவெளி ஆகும். பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸ் என்பது 273.15 K ( சரி )

IV. பொருத்துக

1.

இயற்பியல் அளவு SI அலகு
1. நீளம் கெல்வின்
2. நிறை மீட்டர்
3. காலம் கிலோகிராம்
4. வெப்பநிலை விநாடி
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – ஈ, 4 – அ

2.

கருவி அளவிடப்படும் பொருள்
1. திருகு அளவி காய்கறிகள்
2. வெர்னியர் அளவி நாணயம்
3. சாதாரணத் தராசு தங்க நகைகள்
4. மின்னணுத்தராசு கிரிக்கெட் பந்து
விடை : 1 – ஆ, 2 – ஈ, 3 – அ, 4 – இ

3.

அளவு கருவி
1. வெப்பநிலை பொதுத்தராசு
2. நிறை அளவுகோல்
3. நீளம் மின்னணுக் கடிகராம்
4. காலம் வெப்பநிலைமானி
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ

V. கூற்று மற்றும் காரணம் வகை

1. கூற்று (A) : SI அலகு முறை ஒரு மேம்படுத்தப்பட்ட அளவீட்டு முறை ஆகும்.

காரணம் (R) : SI முறையில் நிறையின் அலகு கிலாேகிராம் ஆகும்.

  1. A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல.
  2. A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது சரியான விளக்கம்
  3. A சரி ஆனால் R தவறு
  4. A தவறு ஆனால் R சரி

விடை : A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல.

2. கூற்று A : கணக்கிடும் முறை நம்முடைய அன்றாட வாழ்கையில் நம்  அனைவருக்கும் மிக முக்கியமான ஒன்றாகும்.

காரணம் (R) : மதிப்பீட்டுத் திறன் என்பது காலம் வீணாவதைக் குறைக்கின்றது.

  1. A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல.
  2. A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது சரியான விளக்கம்
  3. A சரி ஆனால் R தவறு
  4. A தவறு ஆனால் R சரி

விடை : A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல.

3. கூற்று (A) : ஒரு பையின் நிறை 10கி.கி என்பது அறிவியல் பூர்வமாக சரியான
வெளிப்படுத்துதல் ஆகும்.

காரணம் (R) : அன்றாட வாழ்வில் நாம் நிறை என்ற வார்த்தைக்குப் பதிலாக எடை என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறேதம்.

  1. A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல.
  2. A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது சரியான விளக்கம்
  3. A சரி ஆனால் R தவறு
  4. A தவறு ஆனால் R சரி

விடை : A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல.

4. கூற்று (A) : 0°c = 273.16K நாம் அதை முழு எண்ணாக 273k என எடுத்துக் காெள்கிறோம்.

காரணம் (R) : செல்சியஸ் அளவை கெல்வின் அளவிற்கு மாற்றும் பாேது 273 ஐக்
கூட்டினால் பாேதுமானது.

  1. A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல.
  2. A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது சரியான விளக்கம்
  3. A சரி ஆனால் R தவறு
  4. A தவறு ஆனால் R சரி

விடை : A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது சரியான விளக்கம்

5. கூற்று (A) : இரண்டு வான் பாெருட்களுக்கு இடையை உள்ள தொலைவு ஒளி ஆண்டு என்ற அலகினால் அளக்கப்படுகிறது.

காரணம் (R) : ஒளியானது தொடர்ந்து ஒரு ஆண்டு செல்லக்கூடிய தொலைவு ஓர் ஒளி ஆண்டு எனப்படும்.

  1. A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல.
  2. A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது சரியான விளக்கம்
  3. A சரி ஆனால் R தவறு
  4. A தவறு ஆனால் R சரி

விடை : A சரி ஆனால் R தவறு

VI. பத்தியிலிருந்து கேட்கப்படும் வினா

1. கீழக்கண்ட பததியைப் படித்து கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளி.

ஒரு பாெருளில் அடங்கியுள்ள மாெத்த பருப்பாெருட்களின் அளவே நிறை எனப்படும். நிறையை அளவிடுவது லேசான மற்றும் கனமான பாெருட்களின் வேறுபாட்டை அறிய உதவுகிறது. பல்வேறு பாெருட்களின் நிறையை அளவிட பாெதுத்தராசு மற்றும் மின்னணுத்தராசு பயன்படுத்தப்படுகின்றன. நிறையின் SI அலகு கிலாேகிராம் ஆகும். ஆனால் பல்வேறு பாெருள்களின் நிறையைப் பாெறுத்து பல்வேறு பாெருள்களின் நிறையைப் பாெறுத்து பல்வேறு விதமான மருந்துப் பாெருட்களின் (மாத்திரை) எடையை மில்லி கிராமிலும், ஒரு மாணவனின் நிறையை கிலாே கிராமிலும் சரக்கு வண்டிகளின் எடையை (நிறையை) மெட்ரிக் டன்னிலும் அளவிடுகிறோம்.

ஒரு மெட்ரிக் டன் என்பது = 10 குவின்டால்

1 குவிண்டால் = 100 கிலாே கிராம்

1 கிலாே கிராம் = 1000 கிராம்

1 கிராம் = 1000 மில்லி கிராம்

1. ஒரு மெட்ரிக் டன் என்பது

  1. 1000 கி.கி
  2. 10 குவின்டால்
  3. 1,000,000 கி
  4. 100 கி.கி

விடை : a, b மற்றும் c ஆகியவை சரி

2. ஒரு மாத்திரையின் எடையை எவ்வாறு அளவிடுவாய்?

  1. கி.கி
  2. கி
  3. மி.கி
  4. இதில் எதுவுமில்லை

விடை : மி.கி

VII. குறுகிய விடையளிக்க

1. அளவீடு என்றால் என்ன?

ஒரு பாெருளின் பண்பையாே அல்லது நிகழ்வையாே மற்றொரு பாெருளின் பண்புடனாே அல்லது நிகழ்வுடனாே ஒப்பிட்டு அப்பாெருளுக்காே அல்லது நிகழ்வுகாே ஒரு எண்மதிப்பை வழங்குவதாகும்.

2. SI அலகு வரையறு.

SI அலகு முறை என்பது பண்டைய அலகு முறைகளை விட நவீனமயமான மற்றும் மேம்படுதப்பட்ட அலகு முறையாகும்.

3. SI அலகின் விரிவாக்கம் என்ன?

International System of Units – (பன்னாட்டு அலகு முறை)

4. மீச்சிற்றளவு வரையறு.

ஒரு அளவுகாேலினால் அளக்க முடிந்த மிகச் சிறிய அளவு அதன் மீச்சிற்றளவு எனப்படும்.

5. திருகு அளவியின் புரிக்காேல் அளவினை எவ்வாறு கணக்கிடுவாய்?

ஒரு முழுச் சுற்றுக்கு திருகின் முனை நகரும் தொலைவு புரியிடைத் தூரம் எனப்படும். இது அடுத்தடுத்த இரு திருகுமறைகளுக்கு இடையேயுள்ள தொலைவிற்குச் சமம் ஆகும்.

6. 2மீ நீளம் காெண்ட ஒரு மெல்லிய கம்பியின் விட்டதை உனது கருவிப் பெட்டியிலிருக்கும் அளவுகாேலால் உன்னால் கண்டறிய முடியுமா?

  • முடியும்
  • ஒரு பென்சிலின் மீது மெல்லிய கம்பியை சுற்ற வேண்டும்
  • சுற்றுகளின் எண்ணிக்கையை என்ன வேண்டும்
  • மாெத்த சுற்றுகளின் நீளத்தை அளவு காேலினால் அளக்கவும்.
  • விட்டம் = சுற்றுகளின் நீளம் / சுற்றுகளின் எண்ணிக்கை

 

பயனுள்ள பக்கங்கள்