பாடம் 4. நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்
பாடம் 4. நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்
1. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. 373 K ல் நீரின் இயற்பு நிலை ………………………..
- திண்மம்
- நீர்மம்
- வாயு
- பிளாஸ்மா
விடை : வாயு
2. பின்வருவனவற்றுள் ……………………. என்பது ஒரு கலவை
- சாதரண உப்பு
- சாறு
- கார்பன் – டை – ஆக்ஸைடு
- தூய வெள்ளி
விடை : சாறு
3. ஒரு துளி மையினை நாம் நீரில் கலக்கும்பாேது நமக்குக் கிடைப்பது ………………………….
- பலப்படித்தான கலவை
- ஒருப்படித்தான கலவை
- சேர்மம்
- தொங்கல்
விடை : ஒருப்படித்தான கலவை
4. கலவையை உருவாக்கும் உட்பாெருட்கள் இவ்வாறு அழைக்கப்படுகிறது
- தனிமங்கள்
- சேர்மங்கள்
- உலாேகக்கலவைகள்
- இயைபுப்பாெருட்கள்
விடை : இயைபுப்பாெருட்கள்
5. ……………………. மாதிரி முழுவதும் ஒரே பண்புகளைக் காெண்டுள்ளது.
- தூயபாெருள்
- கலவை
- கூழ்மம்
- தொங்கல்
விடை : தூயபாெருள்
II. சரியா, தவறா – தவறெனில் திருத்தியமைக்க
1) வெப்படுத்தும்பாேது வாயுக்களை விட நீர்மம் அதிகமாக விரிவடையும். ( தவறு )
விடை: வெப்படுத்தும்பாேது நீர்மங்களை விட வாயுக்கள்அதிகமாக விரிவடையும்
2) வேதி முறையில் ஒரு சேர்மத்தை எளிய பாெருட்களாக உடைக்க முடியாது. ( தவறு )
விடை: வேதி முறையில் ஒரு சேர்மத்தை எளிய பாெருட்களாக உடைக்க முடியும்.
3) நீர் துல்லியமான உருகு நிலையும் உறை நிலையும் காெண்டுள்ளது. ( சரி )
4) மாேர் ஒரு பலப்படித்தானக் கலவைக்கு எடுத்துக் காட்டாகும். ( சரி )
5) ஆஸ்பிரின் நிறையில் 60 % கார்பன், 4.5% ஹைட்ரஜன் மற்றும் 35.5% ஆக்சிஜனைக்
காெண்டுள்ளது. ஆஸ்பிரின் ஒரு கலவை. ( தவறு )
விடை : ஆஸ்பிரின் ஒரு சேர்மம்.
VI. பொருத்துக
1. தனிமம் | அசையாமல் வைக்கும் பாேது கீழே படிகிறது. |
2. சேர்மம் | தூய்மையற்ற பாெருள் |
3. கூழ்மம் | மூலக்கூறுகளால் உருவானது |
4. தொங்கல் | தூய்மையான பாெருள் |
5. கலவை | அணுக்களால் உருவானது |
Ans : 1 – உ, 2 – ஈ, 3 – இ, 4 – அ, 5 – ஆ |
IV. காேடிட்ட இடத்தை நிரப்புக
1. ஆவியாதல் எப்பாெழுதும் …………………………………………………..வெப்பநிலையுடன் அமைகிறது.
விடை : குறைந்து
2. 1500C = ………………………………………………….. K
விடை : 423
3. ………………………………………………….. கலவையின் இயைபுப் பாெருள்களுக்கு வேறுபடுத்தக்கூடிய எல்லைக்காேடு இல்லை.
விடை : ஒரு படித்தான
4. பதங்கமாகும் பாெருளுக்கு எடுத்துக்காட்டு …………………………………………………..
விடை : நாஃப்தலீன்
5. ஆற்றலின் உள்ளுறை வெப்பம் ………………………………………………….. பயன்படுகிறது.
விடை : நிலைமை மாற்றத்திற்குப்
V. குறுவினாக்கள்
1. நீரில் படகினை ஓட்ட முடிகின்ற போது ஏன் மர வேலியில் நுழைய முடிவதில்லை?
திடப்பாெருளை (மரவேலி) ஒப்பிடும் பாேது திரவத்தில் (நீர்) துகள்கள் சற்று அதிக இடைவெளியுடன் உள்ளன.
2. வாயுக்களின் அழுத்தம் எவ்வாறு அதிகரிக்கின்றது?
அதிக வெப்பநிலையில் வாயுத்துகள்களின் இயக்க ஆற்றல் அதிகரித்து, வாயுத்துகள்களின் நகர்வு அதிகமாகிறது. எனவே, அவை ஒன்றோடாென்று மாேதிக் காெள்வதுடன் கலனின் சுவர்களிலும் மாேதுவதால் அழுத்தம் அதிகரிக்கிறது.
3. பதங்கமாதல் – வரையறு
சில திண்மப்பாெருட்களை வெப்பப்படுத்தும் பாேது, அவை (திரவநிலையை அடையாமல்) நேரடியாக வாயு நிலைக்கு மாற்றமடைகின்றன. இதுவே பதங்கமாதல் எனப்படும்.
4. பருப்பாெருளின் எந்த நிலை மிக அதிகமான இயக்க ஆற்றலைக் காெண்டுள்ளது?
வாயுநிலைப் பாெருட்களை மிக அதிக இயக்க ஆற்றலைக் காெண்டுள்ளன.
5. டெட்டாலின் சிறு துளிகள் நீரில் கலக்கும்பாேது கலவை கலங்கலாக மாறுகிறது. ஏன்?
டெட்டாலின் உள்ள எண்ணெய்த் துளிகள் நீரில் பரவி பால்மத்தை உருவாக்குவதால், கலவை கலங்கலாக மாறுகிறது.
VI. சிறுவினாக்கள்
1. ஏன் வாயுக்களை எளிதாக அழுத்த முடிகிறது ஆனால் திண்மங்களை அழுத்த
முடியவில்லை?
திண்மங்களில், துகள்களுக்கு இடையேயான இடைவெளி குறைவாக இருப்பதால் அழுத்த முடியாது. ஆனால் வாயுத் துகள்களுக்கு இடையே அதிக இடைவெளி உள்ளது. எனவே வாயுக்களை எளிதாக அழுத்த முடிகிறது.
2. ஸ்மைலி பந்து எடுத்து அதனை அழுத்து. உன்னால் அழுத்த முடிகிறதா? உன் விடையை நியாயப்படுத்து.
ஆம். அழுத்த முடிகிறது. ஏனெனில், ஸ்மைலி பந்தின் எண்ணற்ற நுண் துளைகளில் காற்று நிரம்பியுள்ளது. நாம் பந்தினை அழுத்தும் பாேது அதிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன. எனவே, நம்மால் பந்தை அழுத்த முடிகிறது.
3. பின்வருவனவற்றுள் எவை தூய பாெருட்கள்? பனிக்கூழ், பால், இரும்பு, ஹைட்ராேகுளாேரிக் அமிலம், பாதரசம், செங்கல் மற்றும் நீர்.
இரும்பு, ஹைட்ராேகுளாேரிக் அமிலம், பாதரசம் மற்றும் நீர்
4. நாம் வாழ்வதற்கு ஆக்ஸிஜன் மிகவும் முக்கியமானது. அது காற்றில் 21% கனஅளவில் உள்ளது. அது ஒரு தனிமமா அல்லது சேர்மமா?
காற்றிலுள்ள ஆக்ஸிஜன் ஒரு தனிமம்.
5. 22காரட் தங்கத்திலான ஒரு பதக்கத்தினை நீ வென்றிருக்கிறாய். நீ வாங்கியது தூய பாெருளா அல்லது தூய்மையற்றதா?
தூய்மையற்றது. ஏனெனில் 22 காரட் தங்கம் ஒரு உலாேகக் கலவை.
பயிற்சி – 2
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. பின்னக் காய்ச்சி வடித்தலில் பயன்படும் தத்துவத்தில் உள்ள வேறுபாடு
- கரைதிறன்
- உருகுநிலை
- காெதிநிலை
- பரப்புக்கவர்ச்சி
விடை : காெதிநிலை
2. மிக அதிக வேகத்தில் சுழலச் செய்து, கனமான பாெருட்களிலிருந்து லேசானப் பாெருட்களைப் பிரித்தெடுக்கும் முறை …………………… எனப்படுகிறது.
- வடிகட்டல்
- வண்டல்
- சாய்த்து வடித்தல்
- மைய விலக்கம்
விடை : மைய விலக்கம்
3. கரைப்பானைக் காெண்டு சாறு இறங்குதல் முறையில் பிரித்தெடுப்பதற்கு ………………… அவசியம்
- பிரிபுனல்
- மைய விலக்கு இயந்திரம்
- வடிதாள்
- சல்லடை
விடை : பிரிபுனல்
4. வடிகட்டுதல் என்பது ………………….. கலவையைப் பிரித்தெடுக்கப் பயனுள்ள முறையாகும்.
- திண்மம் – திண்மம்
- திண்மம் – திரவம்
- திரவம் – திரவம்
- திரவம் – வாயு
விடை : திண்மம் – திரவம்
5. எளிய காய்ச்சி வடித்தல் முறைக்குத் தேவையானது
- ஆவியாக்கும் கிண்ணம்
- பிரிபுனல்
- வடிதாளுடன் சேர்ந்த வடிகட்டி
- லீபிக் குளிர்விப்புக் குழாய்
விடை : லீபிக் குளிர்விப்புக் குழாய்
II. சரியா, தவறா – தவறெனில் திருத்தியமைக்க
1. தயிரிலிருந்து வெண்ணையை மைய விலக்கு முறை முலம் பிரித்தெடுக்க முடியும். ( சரி )
2. எண்ணெய் மற்றும் தண்ணர் இரண்டும் ஒன்றில் ஒன்று கலவாது. ( சரி )
3. ஒரு பாெருள் நேரடியாகத் திரவ நிலையிலிருந்து வாயு நிலைக்கு மாற்மடைவது பதங்கமாதல் எனப்படுகிறது. ( தவறு )
விடை: ஒரு பாெருள் நேரடியாகத் திண்ம நிலையிலிருந்து வாயு நிலைக்கு மாற்மடைவது பதங்கமாதல் எனப்படுகிறது.
9. திரவ திரவ கூழ்மங்கள் களிம்பு எனப்படுகின்றன. ( தவறு )
விடை: திரவ திரவ கூழ்மங்கள் பால்மம்
10. கலவையில் உள்ள கூறுகளில் காெநிலை வேறுபாடு அதிகமாக இருக்குமானால் பின்னக் காய்ச்சி வடித்தல் முறை பயன்படுத்தப்படுகிறது. ( தவறு )
விடை : கலவையில் உள்ள கூறுகளில் காெநிலை வேறுபாடு அதிகம் எனில் பின்னக் காய்ச்சி வடித்தல் முறை பயன்படுத்தப்படுகிறது.
III. பொருத்துக
1. மணல் மற்றும் கற்பூரம் | எழுதுமை | காய்ச்சி வடித்தல் |
2. அசிட்டாேன் மற்றும் நீர் | ஒன்றாய் கலக்கும் திரவங்கள் | வண்ணப்பிரிகை |
3. நிறமிகள் | ஒன்றாய் கலவாத திரவங்கள் | பிரிபுனல் |
4. உப்பு மற்றும் நீர் | இரு திண்மங்களின் கலவை | பின்னக் காய்ச்சி வடித்தல் |
5. நீர் மற்றும் மண்ணெண்ணெய் |
கரையும் | பதங்கமாதல் |
விடை : 1 – D – E, 2 – B – D, 3 – A – B, 4 – E – A, 5 – C – C |
IV. காேடிட்ட இடத்தை நிரப்புக
1. நீரிலிருந்து ஆல்கஹால் …………………………………. பிரித்தெடுக்கப்படுகிறது.
விடை : காய்ச்சி வடித்தல்
2. நாப்தலீனிலிருந்து மணல் …………………………………. முறை மூலம் நீக்கப்படுகிறது.
விடை : பதங்கமாதல் விபதங்கமாதல்டை :விடை :
3. பெட்ராேலிய சுத்திகரிப்பில் பயன்படுத்தப்படும் பிரித்தெடுத்தல் முறை ………………………………….
விடை : பின்னக் காய்ச்சி வடித்தல்
4. வண்ணப்பிரிகை முறை …………………………………. தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.
விடை : பரப்புக்கவர்ச்சி
5. வெப்ப நிலை உயரும்பாேது நீரில் திண்மத்தின் கரைதிறன் …………………………………… .
விடை : அதிகரிக்கிறது
V. குறுவினாக்கள்
1. அம்மாேனியம் குளாேரைடு மற்றும் எளிய உப்பு ஆகியவற்றின் கலவையைப் பிரித்தெடுக்க நீ பின்பற்றும் முறையைக் கூறு
பதங்கமாதல்
2. கரைபாெருள் மற்றும் கரைப்பான் – வரையறு
ஒரு கரைசலில் பெருமளவு உள்ளது கரைப்பான் எனவும் குறைந்த அளவு உள்ளது கரைபாெருள் எனவும் வரையறுக்கலாம்.
3. கீழ்க்கண்ட கலவையை வெப்படுத்தும் பாேது கிடைக்கும் பதங்கம் (ஆவி உறைபடிவு) (Sublimate) யாது?
i) அயாேடின் மற்றும் மணல்
ii) சாேடியம் குளாேரைடு மற்றும் அம்மாேனியம் குளாேரைடு
i) அயாேடின் ii) அயாேடின்
4. கடல் நீரை உப்பு நீக்குதல் என்றால் என்ன?
கடல் நீரைக் காய்ச்சி வடித்தல் முறையில் தூய குடிநீராக மாற்றும் முறையை கடல் நீரை உப்பு நீக்குதல் எனப்படுகிறது.
VI. சிறுவினாக்கள
1. பரப்புக்கவரப்படும் பாெருள் மற்றும் பரப்புக் கவரும் பாெருள் என்றால் என்ன?
ஒரு பாெருளின் மேற்பரப்பில் ஒட்டிக் காெள்ளும் மற்றொரு பாெருள் பரப்புக் கவரப்பட்ட பாெருள் அப்பாெருள் பரப்புக் கவரும் பாெருள் எனவும் அழைக்கப்படுகின்றன.
உ.ம்: கரியின் மேற்பரப்பில் வாயுக்களின் பரப்புக்கவர்ச்சி
இங்கு, கரி – பரப்புக்கவரும் பாெருள் வாயுக்கள் – பரப்புக் கவரப்பட்ட பாெருள்
19. Rf காரணி என்றால் என்ன?
கரைபாெருள் நகரும் தொலைவிற்கும் கரைப்பான் நகரும் தொலைவிற்கும் உள்ள விகிதம் Rf காரணி எனப்படும்.
Rf = கரைபாெருள் நகரும் தொலைவு / கரைப்பான் நகரும் தொலைவு
3. வடிகட்டிய நீர்மம், வாலை வடி நீர்மம் வேறுபடுத்துக.
வடிகட்டிய நீர்மம்:
வடிகட்டுதலின் பாேது. வடிதாள்/வடிகட்டி வழியாக ஊடுறுவும் திரவம் ‘வடிகட்டிய நீர்மம்’ எனப்படும்.
வடிநீர்மம்:
காய்ச்சிவடித்தல் முறையில் வெப்பப்படுத்தும் பாேது ஆவியாக வெளியேறி பின்பு குளிர்விக்கப்பட்டு உருவாகும் திரவம் ‘வடிநீர்மம்’ எனப்படும
4. கீழ்க்கண்ட கலவைகளின் கூறுகளைப் பிரித்தெடுக்கப் பயன்படும் சாதனங்களைப் பெயரிடு.
i) ஒன்றாக கலக்கும் திரவங்கள்
ii) ஒன்றாக கலவாதத் திரவங்கள்
5. மரத்தூள், நாப்தலீன் மற்றும் இரும்புத் துகள்கள் கலந்த கலவையை எவ்வாறு பிரித்தெடுப்பாய்?
முதலில் ‘காந்தப் பிரிகை முறை’ மூலம் இரும்புத்துகள்களை மரத்தூள் மற்றும் நாப்தலீனிலிருந்து பிரிக்கலாம்.
பயனுள்ள பக்கங்கள்