9th Std Science Solution in Tamil | Lesson.26 கணினி – ஓர் அறிமுகம்

பாடம் 26 கணினி – ஓர் அறிமுகம்

கணினி – ஓர் அறிமுகம் வினா விடை

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. தரவு மற்றும் தகவல்களைச் சேமிக்கும் சாதனம் எது?

  1. குழலிப்பெருக்கி
  2. தொலைக்காட்சி
  3. கணினி
  4. வானாெலி

விடை: கணினி

2. கணினியின் நான்காம் தலைமுறைக் கணினி எது?

  1. நுண்செயலி
  2. செயற்கை நுண்செயலி
  3. அபாகஸ்
  4. மின்மயப்பெருக்கி

விடை: நுண்செயலி

3. தரவு செயலாக்கத்தின் – படிநிலைகள்

  1. 7
  2. 4
  3. 6
  4. 8

விடை: 6

4. கூற்று 1. ஆபாகஸ் கணினியின் முதல் படிநிலை
கூற்று 2. இராணுவப் பயன்பாட்டிற்காக ENIAC பயன்படுத்தப்பட்டது.

  1. இரண்டும் சரி
  2. கூற்று 1 தவறு, 2 சரி
  3. கூற்று 1 சரி, 2 தவறு
  4. இரண்டும் தவறு

விடை: கூற்று 1 தவறு, 2 சரி

II. பொருத்துக

1. கணினியின் 3-ஆம் தலைமுறைதொகுப்புச் சுற்று
2. எழுத்து, எண்தகவல்
3. மின்மயப்பெருக்கிகணினியின் தந்தை
4. நேரடியாகப் பயன்படுபவதுதரவு
5. சார்லஸ் பாபேஜ்II தலைமுறை
Ans : 1 – அ, 2 – ஈ, 3 – உ, 4 – ஆ, 5 – இ

III. சிறுவினாக்கள்

1. கணினி – வரையறு

கணினி என்பது கட்டளைத் தொகுதிகள் அல்லது நிரல்களின் மூலம் தரவு மற்றும்
தகவல்களைச் சேமித்துக் கையாளுகின்ற ஒரு மின்னனுக்கருவி

2. தரவு – தகவல் வேறுபடுத்துக

தரவுதகவல்
1. தரமான மற்றும் அளவு மாறுபாடுகளின் மதிப்புகளின் தொகுப்புசெயல்படுத்தப்பட்ட தரவு
2. நேரடியாக பயன்படுத்த முடியாதுநேரடியாக பயன்படுத்தலாம்

3. தரவு செயலாக்கம் என்றால் என்ன?

தரவு செயலாக்கம் என்பது தரவுகளைச் சேகரித்துத் தேவைக்கேற்ப தகவல்களை மாற்றும் நிகழ்றவக் குறிப்பிடுவதாகும்.

IV. விரிவாக விடையளிக்க

1. தரவு தசயலாக்கத்தின் பல்வேறு படிநிலைகள் யாவை?

  • தரவு சேகரிப்பு (Data Collection)
  • தரவு சேமித்தல் (Storage of data)
  • தரவு வரிசைப்படுத்துதல் (Sorting of data)
  • தரவு செயலாக்கம் (Processing of data)
  • தரவு பகுப்பாய்வு (Data analysis)
  • தரவு விளக்கமும் முடிவுகளும் (Data presentation and conclusions)

2. கணினியின் தலைமுறைகளை அட்டவணைப்படுத்து

காலம்தலைமுறைமின்னணு உறுப்புகள்
1940 – 1956முதல் தலைமுறைவெற்றிடக் குழாய்கள்
1956 – 1963இரண்டாம் தலைமுறைமின்மயப்பெருக்கி (டிரான்சிஸ்டர்)
1964 – 1971மூன்றாம் தலைமுறைஒருங்கிணைந்த சுற்று
1972 – 2010நான்காம் தலைமுறைநுண்செயலி
2010க்கு பின்ஐந்தாம் தலைமுறைசெயற்கை நுண்ணறிவு

 

பயனுள்ள பக்கங்கள்