9th Std Science Term 2 Solution in Tamil | Lesson.1 வெப்பம்

பாடம் 1. வெப்பம்

வெப்பம் Book Back Answer

பாடம் 1. வெப்பம்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. கலாேரி என்பது எதனுடைய அலகு?

  1. வெப்பம்
  2. வேலை
  3. வெப்பநிலை
  4. உணவு

விடை : வெப்பம்

2. வெப்பநிலையின் SI அலகு

  1. ஃபாரன்ஹீட்
  2. ஜூல்
  3. செல்சியஸ்
  4. கெல்வின்

விடை :  கெல்வின்

3. நீரின் தன் வெப்ப ஏற்புத் திறன்

  1. 4200 Jkg-1K-1
  2. 420 Jg-1K-1 
  3. 0.42 Jg-1K-1
  4. 4.2 Jg-1K-1

விடை : 4200 Jkg-1K-1

4. ஒரு நீளமுள்ள இரண்டு உருளை வடிவிலுள்ள கம்பிகளின் குறுக்கு வெட்டுப் பரப்பின் விகிதம் 2:1 இரண்டு கம்பிகளும் ஒரே மாதிரியான பொருளில் செய்யப்பட்டிருந்தால் எந்தக் கம்பி வெப்பத்தை அதிகம் கடத்தும்?

  1. இரண்டும்
  2. கம்பி-2
  3. கம்பி-1
  4. எதுவும் இல்லை

விடை :  கம்பி-2

5. உயரமும் ஆரமும் சமமாக உள்ள இரண்டு உருளைகள் தாமிரம் மற்றும் அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ளன. எது அதிக வெப்பத்தைக் கடத்தும்?

  1. தாமிரக் கம்பி
  2. அலுமினியக் கம்பி
  3. இரண்டும்
  4. இரண்டும் இல்லை

விடை : தாமிரக் கம்பி

6. மூலக்கூறுகளின் இயக்கமின்றி வெப்பமானது ஒரு மூலக்கூறில் இருந்து அருகில் இருக்கும் மற்றாெரு மூலக்கூறுக்கு வெப்பத்தைக் கடத்தும் முறையின் பெயர் என்ன?

  1. வெப்பக்கதிர்வீச்சு
  2. வெப்பக்கடத்தல்
  3. வெப்பச்சலனம்
  4. b மற்றும் c

விடை : வெப்பக்கடத்தல்

7. வெப்பக் கடத்தல், வெப்பச் சலனம், வெப்பக் கதிர்வீச்சு ஆகியவற்றின் வெப்ப ஆற்றலைக் குறைவாக இழக்கும் கருவி

  1. சூரிய மின்கலம்
  2. சூரிய அழுத்த சவமயற்கலன்
  3. வெப்ப நிலைமானி
  4. வெற்றிடக் குடுவை

விடை : வெற்றிடக் குடுவை

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. வேகமாக வெப்பத்தைக் கடத்தும் முறை ……………………………

விடை : வெப்பக்கதிர்வீச்சு.

2. பகல் நேரங்களில், காற்று …………………………… இருந்து கடலில் இருந்து …………………………… பாயும்.

விடை : கடலில் இருந்து நிலத்திற்க்கு

3. திரவங்களும், வாயுக்களும் …………………………… முறையில் வெப்பத்தைக் கடத்தும்.

விடை : வெப்பச்சலனம்

4. வெப்ப நிலை மாறாமல் பொருளாென்று ஒரு நிலையில் இருந்து மற்றாெரு நிலைக்கு  மாறுவதை …………………………… என்கிறாேம்

விடை : நிலைமாற்றம்

5. நீரை …………………………… வெப்ப நிலைக்கு வெப்பப்படுத்தும் போது அது நீராவியாக மாறுகிறது.

விடை : 100°C

6. ஆற்றலின் ஒரு வகை ……………………………

விடை : வெப்பம்.

7. வெப்ப ஆற்றலின் அலகு ……………………………

விடை : ஜூல்.

8. மறை வெப்பம் என்பது ……………………………

விடை : உள்ளுறை.

9. பொருளின் நிறை காெடுக்கப்பட்டிருந்தால் வெப்ப ஏற்புத் திறன் …………………………… பெறுகிறது.

விடை : தன் வெப்ப ஏற்புத்திறனைப்

10. வெப்பப் பரிமாற்றத்தின் காரணமாக நீர்மங்களில் ஏற்படும் மாற்றம்

விடை : குளிர்தல்.

11. ஆவி என்பது ……………………………

விடை : வாயு.

12. நீரின் வெப்ப நிலையை …………………………… க்கு குறைக்கும் போது பனிக்கட்டியாக மாறுகிறது.

விடை : 0°C

III. கருத்து மற்றும் காரணம் வகைக் கேள்விகள்

சரியான ஒன்றைத் தேர்ந்தெடு

  1. கருத்தும் காரணமும் சரி. கருத்துக்கான காரணம் சரியானது.
  2. கருத்தும் காரணமும் சரி. ஆனால் கருத்துக்கான காரணம் தவறு.
  3. கருத்து சரி. காரணம் தவறு.
  4. கருத்து தவறு. காரணம் சரி.

1. கருத்து (A) : தாமிரப் பகுதியை அடிப் பகுதியாகக் காெண்ட பாத்திரங்கள் மூலம் விரைவாக சமைக்கலாம்

காரணம் (R) : தாமிரம் ஒரு எளிதிற் கடத்தி.

விடை : கருத்தும் காரணமும் சரி. கருத்துக்கான காரணம் சரியானது.

2. கருத்து (A) :மதிய வேளையில் அதிகமான சூரியக் கதிர்கள் பூமியை வந்ததடைகின்றன,

காரணம் (R) :சூரியக்கதிர்கள் வெப்பக் கதிர்வீச்சு மூலம் பூமியை வந்தடைகின்றன.

விடை : கருத்து சரி. காரணம் தவறு.

3. கருத்து (A) : வெப்ப நிலை 100°C எட்டியவுடன் வெப்ப நிலை மேலும் மாறாமல் நீர் நீராவியாக மாறுகிறது

காரணம் (R) : நீரின் காெதிநிலை 10°C

விடை : கருத்து சரி. காரணம் தவறு.

4. கருத்து (A) :அலுமினியம் தாமிரத்தை விட அதிகமாக வெப்பத்தைக் கடத்தும்.

காரணம் (R) :அலுமினியத்தின் தன்வெப்ப ஏற்புத்திறன் தாமிரத்தை விட அதிகம்.

விடை : கருத்து தவறு. காரணம் சரி.

IV. சிறுவினாக்கள்

1. வெப்பக் கடத்தல் வரையறு.

அதிக வெப்பப் நிலையில் உள்ள ஒரு பொருளிலிருந்து குறைவான வெப்ப நிலையில் உள்ள ஒரு பொருளுக்கு மூலக்கூறுகளின் இயக்கமின்றி வெப்பம் பரவும் நிகழ்வு வெப்பக் கடத்தல் எனப் டும்.

2. பனிக்கட்டியானது இரட்டைச் சுவர் கொள்கலன்களில் வைக்கப்படுவது ஏன்?

இரட்டைச் சுவர் காெள்கலன், அவற்றின் இடையே உள்ள காற்று ஆகியவை அரிதில் கடத்திகள் ஆகும். வெப்பக் கடத்தல் மூலம் வெளிப்புற வெப்பம் உள்ளே  செல்ல முடியாது. இதனால் பனிக்கட்டி நீண்ட நேரம் உருகி விடாமல் பாதுகாக்கப்படுகிறது.

3. மண் பானையில் வைத்திருக்கும் தண்ணீர் எப்போதும் குளிரோக இருப்பது ஏன்?

மண் பானையில் நுண்ணிய துவாரங்கள் உள்ளன. இவற்றின் வழியே கசிந்து செல்லும் நீர் ஆவியாக மாறுகிறது. ஆவியாதலுக்குத் தேவையான வெப்பத்தை அது நீரிலிருந்து எடுத்துக் காெள்கிறது. மண் பானையின் உள்ளே உள்ள நீர் வெப்பத்தை தொடர்ந்து இழப்பதால் அது எப்போதும் குளிர்ச்சியாக இருக்கிறது.

4. வெப்பச்சலனம் – வெப்பக்கதிர்வீச்சு இரண்டையும் வேறுபடுத்துக.

வெப்பச்சலனம் வெப்பக்கதிர்வீச்சு
1. பருப்பொருட்கள் தேவை பருப்பொருட்கள் தேவையில்லை
2. வெற்றிடத்தில் நடைபெறாது வெற்றிடத்தில் நடைபெறும்

5. கோடை காலங்களில் மக்கள் ஏன் வெள்ளை நிற ஆடை அணிவதை விரும்புகிறார்கள்?

வெள்ளை நிறம் சார்ந்த ஆடைகள் சிறந்த வெப்ப பிரதிபலிப்பானகள். எனேவ கோடை காலங்களில் உடலை குளிச்சியாக வைத்திருக்கப்ப பயன்படும்

6. தன் வெப்ப ஏற்புத் திறன் ெகரயற

ஓரலகு நிறையுள்ள (1Kg) பொருளின் வெபப் நிலையை ஒரு அலகு (1°C or 1K) உயர்த்தத் தேவையான வெப்ப ஆற்றலின் அளவு அதன் தன் வெப்ப ஏற்புத்திறன் எனப்படும்.

7. வெப்ப ஏற்புத் திறன் ெகரயறு.

ஓரு பொருளின் வெப்ப நிலையை 1°C உயர்த்தத் தேவையான வெப்ப ஆற்றல் வெப்ப ஏற்புத்திறன் எனப்படும்.

8. உருகுதலின் உள்ளுறை வெப்பம் வரையறு.

உருகுதல் நிகழ்வின் போது வெப்பமானது உட்கவரப்பட்டு அதே வெப்பமானது உறைதல் நிகழ்வின் போது (வெப்ப நிலையில் எந்த மாற்றமும் இல்லாமல்) வெளிவிடப்டும். இந்த வெப்பத்தை உருகுதலின் உள்ளுறை வெப்பம் என்கிறாேம்.

V. கட்டத்தில் விடுபட்ட இடங்களை நிரப்புக:

செயல்முறை கட்டம் I கட்டம் II
பதங்கமாதல் திடப்பொருள் ஆவி
திணமமாதல் திரவபொருள் திடப்பொருள்
உருகுதல் திடப்பொருள் திரவப்பொருள்
உறைதல் திரவப்பொருள் திடப்பொருள்
குளிர்தல் வாயுப்பொருள் திரவப்பொருள்

VI. கொடுக்கப்பட்ட தரவுகளிலிருந்து விடைகளைக் கண்டறிக.

ப் கு வெ டு கு
வெ வெ ப் ஜீ ல் ப் லி ளி
றை ளு ள் க் ம் ர்
ர் ச் மு சி ல் ம் ட்
ம் பு னி பி ற் லு லு ல்

குறிபபு:

1. ஆற்றலின் ஒரு வகை.

விடை : வெப்பம்

2. வெப்ப ஆற்றலின் அலகு.

விடை : ஜீல்

3. மறை வெப்பம்.

விடை : உள்ளுறை

4. பொருளின் நிறை கொடுக்கப்பட்டிருந்தால் வெப்ப ஏற்புத் திறன் ———- வெப்ப
ஏற்புத் திறனைப் பெறுகிறது.

விடை : தன்

5. வெப்பப் பரிமாற்றத்தின் காரணமாக நீர்மங்களில் ஏற்படும் மாற்றம். (கேள்வி தவறு நீர்மங்கள் வார்த்தைக்கு பதிலாக பாய்மங்கள் என்று இருக்க வேண்டும்)

விடை : வெப்பச்சலனம்

 

பயனுள்ள பக்கங்கள்