9th Std Science Solution in Tamil | Lesson.27 கணினியின் பாகங்கள்

பாடம் 27 கணினியின் பாகங்கள்

கணினியின் பாகங்கள் வினா விடை

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. உள்ளீட்டுக்கருவி அல்லாதது எது?

  1. சுட்டி
  2. விசைப்பலகை
  3. ஒலிப்பெருக்கி
  4. விரலி

விடை: ஒலிப்பெருக்கி

2. மையச்செயலகத்துடன் திரையை இணைக்கும் கம்பி ___________.

  1. ஈதர்நெட்
  2. வி.ஜி.ஏ
  3. எச்.டி.எம்.ஐ
  4. யு.எஸ்பி

விடை: வி.ஜி.ஏ

3. கீழ்காண்பனவற்றுள் எது உள்ளீட்டுக்கருவி?

  1. ஒலிப்பெருக்கி
  2. சுட்டி
  3. திரையகம்
  4. அச்சுப்பொறி

விடை: சுட்டி

4. கீழ்காண்பனவற்றுள் கம்பி இணைப்பு வகையைச் சேர்ந்தது எது?

  1. ஊடலை
  2. மின்னலை
  3. வி.ஜி.ஏ
  4. யு.எஸ்.பி

விடை: ஊடலை

5. விரலி ஒரு _________ ஆகப் பயன்படுகிறது.

  1. வெளியீட்டுக்கருவி
  2. உள்ளீட்டுக்கருவி
  3. சேமிப்புக்கருவி
  4. இணைப்புக்கம்பி

விடை: சேமிப்புக்கருவி

II. பாெருத்துக

1.வி.ஜி.ஏஉள்ளீட்டுக்கருவி
2. அருகலைஇணைப்புவடம்
3. அச்சுப்பொறிஎல்.இ.டி. தொலைக்காட்சி
4. விசைப்பலகைகம்பி இல்லா இணைப்பு
5. எச்.டி.எம்.ஐவெளியீட்டுக்கருவி
விடை : 1 – ஆ, 2 –ஈ, 3 – உ, 4 – அ, 5 – இ

III. சிறுவினாக்கள்:

1. கணினியின் கூறுகள் யாவை?

கணினியின் மூன்று பாகங்களான :

  1. உள்ளீடகம் (Input Unit)
  2. மையச்செயலகம் (CPU)
  3. வெளியீட்டகம் (Output Unit)

2. உள்ளீட்டகத்திற்கும் வெளியீட்டகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் இரண்டு கூறுக.

உள்ளீட்டகம்வெளியீட்டகம்
கணினி செயலகத்துக்கு தரவுகளையும் உள்ளீடுகளையும் உள்ளீடு செய்யும் அலகுமையச் செயலகத்திலிருந்து பெறப்படும் குறிப்புகள் பயனருக்கு கொண்டு செல்லும் அலகு
எகா : சுட்டி, வருடி, விசைப்பலகைஎகா : அச்சபபொறி, கணினித்திரை

3. பல்வேறு இணைப்பு வடங்களைக் கூறி, எவையேனும் மூன்றினை விளக்குக.

  • வி.ஜி.ஏ (VGA – Video Graphics Array)
  • எச்டிஎம்ஐ (HDMI – High Definition Multimedia Interface)
  • யுஎஸ்பி (USB – Universal Serial Bus)
  • தரவுக்கம்பி (Data Cable)
  • ஒலி வடம் (Audio Cable)
  • மின் இணைப்புக் கம்பி (Power Cord)
  • ஒலி வாங்கி இணப்புக்கம்பி (Mic cable)
  • ஈதர் நெட் இணைப்புக்கம்பி (Ethernet cable)

வி.ஜி.ஏ (VGA) இணைப்புக்கம்பி :

கணினியின் மையச் செயலகத்தைத் திரையுடன் இணடிக்க வி.ஜி.ஏ யன்படுகிறது.

யுஎஸ்பி (USB) புகைப்படம் :

அச்சுப்பொறி, வருடி, விரலி, சுட்டி, விசைப்பலகை, இணைப்புக்கருவி, திறன்பேசி, போன்றவற்றைக் கணினியு்ன் இணைக்கப் பயன்படுகிறது.

எச்டிஎம்ஐ (HDMI) புகைப்படம் :

உயர் வரையற்ற வீடியாே, டிஜிட்டல் ஆடியாே ஆகியவற்றை ஒரே ஒரு கேபிள் வழியாக எல்.இ.டி. கடத்துகிறது. தாெலைக்காட்சிகள், ஒளி வீழ்த்தி , கணினித் திரை ஆகியவற்றைக் கணினியுடன் இணைக்க யன்படுகிறது.

தரவுக்கம்பி (Data cable) :

கணினியின் மையச் செயலகத்துடன் கைப்பேசி, கையடக்கக் கணினி ஆகியவற்றை இணைக்க, தரவுக்கம்பி பயன்படுகிறது.

ஒலி வடம் (Audio Jack) :

ஒலி வடம் கணினியை ஒலிபெருக்கியுடன இணைக்கப் பயன்படுகிறது.

மின் இணைப்புவடம் (Power Cord) :

மையச் செயலகம், கணினித்திரை, ஒலிபெருக்கி, வருடி ஆகியவற்றிற்கு மின் இணைப்பை வழங்குகிறது.

ஒலி வாங்கி (Mic) இணைப்புவடம் :

ஒலிவாங்கியை மையச்செயலகத்துடன் இணைப்தற்கு ஒலிவாங்கி இணைப்பு வடம் உதவுகிறது.

ஈதர்நெட் (Ethernet) இணைப்புவடம்:

கணினியுடன் இணையவழித் தாெடர்பை ஏற்படுத்த ஈதர்நெட் இணைப்புவடம் பயன்படுகிறது.

பயனுள்ள பக்கங்கள்