9th Std Science Solution in Tamil | Lesson.15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

பாடம் 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

கார்பனும் அவற்றின் சேர்மங்களும் வடி

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. ஒரு தனிமம் வேறுபட்ட அமைப்பையும், ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையும் கொண்டிருப்பது.

  1. மாற்றியம்
  2. புறவேற்றுமை வடிவம்
  3. சங்கிலித் தொடராக்கம்
  4. படிகமாக்கல்

விடை:  புறவேற்றுமை வடிவம்

2. கார்பன் அதிகப்படியான கரிமச் சேர்மங்களை உருவாக்கக் காரணம்

  1. புறவேற்றுமை வடிவம் மற்றும் மாற்றியம்
  2. நான்கு இணைதிறன்
  3. சங்கிலித் தொடராக்கம்
  4. இவை அனைத்தும

விடை: சங்கிலித் தொடராக்கம்

3. நந்தினி பள்ளிக்கு மதிய உணவு கொண்டுவரும் (நெகிழி) கலனானது குறியீடு 5 உடைய ரெசினால் ஆனது. அந்த நெகிழிக் கலன் எதனால் தயாரிக்கப்பட்டிருக்கும்?

  1. பாலிஸ்டைரீன்
  2. பி.வி.சி
  3. பாலிபுரொப்பலீன்
  4. எல்.டி.பி.இ

விடை:  பாலிபுரொப்பலீன்

4. பாலி கார்பனேட் (PC) மற்றும் அக்ரைலோ நைட்ரைல் பியுட்டாடைஈன் ஸ்டைரின் (AB) முலம் தயாரிக்கப்படும் நெகிழியானது எந்த குறியீடு உடைய ரெசினால் ஆனது?

  1. 2
  2. 5
  3. 6
  4. 7

விடை:  7

5. ஓரடுக்குக் கார்பன் அணுக்களால் ஆன கிராஃபீன் எதிலிருந்து கிடைக்கிறது?

  1. வைரம்
  2. ஃபுல்லரின்
  3. கிராஃபைட்
  4. வாயு கார்பன்

விடை: கிராஃபைட்

6. நெகிழி மாசுபாட்டைத் தடுக்கும் நடைமுறைகள் _________ பாதுகாப்புச் சட்டம் 1988 ன் கீழ் வருகின்றன.

  1. வனத்துறை
  2. வனவிலங்கு
  3. சுற்றுச்சூழல்
  4. மனித உரிமைகள

விடை:  சுற்றுச்சூழல்

7. கிராஃபைட் கார்பனிலுள்ள தனித்த எலக்ட்ரான்­களின் எண்ணிக்கை

  1. ஒன்று
  2. இரண்டு
  3. மூன்று
  4. நான்கு

விடை:  ஒன்று

8. ஃபுல்லரினிலுள்ள கார்பன் அணுக்களின் அமைப்புகள்

  1. நான்முகி மற்றும் ஐங்கரம்
  2. ஐங்கரம் மற்றும் அறுங்கோணம்
  3. அறுங்கோணம் மற்றும் எழுகோணம்
  4. எழுகோணம் மற்றும் எண்முகி

விடை:  ஐங்கரம் மற்றும் அறுங்கோணம்

9. கார்பன் அதிகப்படியான கரிமச் சேர்மங்களை உருவாக்கக் காரணம்

  1. புறவேற்றுமை வடிவம்
  2. மாற்றியம்
  3. நான்கு இணைதிறன்
  4. சங்கிலித் தொடராக்கம்

விடை:  சங்கிலித் தொடராக்கம்

10. வைரம் ஒரு சிறந்த மின்கடத்தி அல்ல ஏனெனில்,

  1. அதன் கடினத் தன்மை
  2. அதில் கட்டுறா எலக்ட்ரான்கள் இல்லை
  3. அதன் சீரான வடிவம்
  4. அது நீரில் கரைவதில்லை

விடை:  அதில் கட்டுறா எலக்ட்ரான்கள் இல்லை

11. கீழ்க்கண்டவற்றுள் இரட்டைப் பிணைப்பு இல்லாதது எது?

  1. CO2
  2. C2H4
  3. HCl
  4. O2

விடை:  HCl

12. கீழ்க்கண்டவற்றுள் அதிக நச்சுத்தன்மை வாய்ந்தது எது?

  1. கார்பன் டைஆக்ஸைடு
  2. கார்பன் மோனாக்ஸைடு
  3. கால்சியம் கார்பனேட்
  4. சோடியம் பைகார்பனேட்

விடை:  கார்பன் மோனாக்ஸைடு

13. கீழ்க்கண்டவற்றுள் எந்த நெகிழி தமிழக அரசால் ஜனவரி 1, 2019 முதல் தடை செய்யப்பட்டுள்ளது?

  1. நெகிழித் தாள்
  2. நெகிழித் தேநீர் குவளை
  3. நெகிழித் தண்ணீர் பைகள்
  4. மேற்கண்ட அனைத்தும்

விடை:  மேற்கண்ட அனைத்தும்

14. கிராஃபைட்டை உராய்வுக் குறைப்பானாக எந்திரங்களில் பயன்படுத்தக் காரணம் என்ன?

  1. அது நல்ல மின்கடத்தி
  2. அது வழவழப்பான படலங்களால் ஆனது மற்றும் அதிக உருகுநிலை கொண்டது.
  3. அதன் அதிக அடர்த்தி
  4. அது வலிமையானது மற்றும் மிருதுவானது

விடை:  அது வழவழப்பான படலங்களால் ஆனது மற்றும் அதிக உருகுநிலை கொண்டது.

15. பென்சில் முனையில் இருப்பது எது?

  1. கிராஃபைட்
  2. வைரம்
  3. காரியம்
  4. கரி

விடை:  கிராஃபைட்

II. கோடிட்ட இடங்களை நிரப்பு.

1. ________ என்பவர் கார்பனுக்குப் பெயரிட்டர் ஆவார்.

விடை:  ஆண்டனி லவாய்சியர்

2. பக்மின்ஸ்டர் ஃபுல்லரின் _________ கார்பன் அணுக்களைக் கொண்டது.

விடை:  60

3. ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையும், வேறுபட்ட மூலக்கூறுக் கட்டமைப்பையும் கொண்ட சேர்மங்கள் ___________

விடை:  மாற்றியங்கள்

4. சல்பரின் கார்ப்பான் _____________

விடை:  5 Pts

5. நெகிழி ரெசின் குறியீடுகளின் எண்ணிக்கை ________

விடை:  7

6. பல்வேறு முறைகளில் கார்பன் உருவாவதற்குக் காரணம் அதன் _________

விடை:  சங்கிலி தொடராக்கம்

III. பொருத்துக

1. அல்கைன்பளபளப்பான பந்து
2. ஆண்ட்ரே ஜெம்ஆக்ஸிஜனேற்றம்
3. C – 60கிராஃபீன்
4. தெர்மாக்கோல்முப்பிணைப்பு
5. எரித்தல்பாலிஸ்டைரின்
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – உ, 5 – ஆ

IV. சுருக்கமாக விடையளி.

1. வேறுபடுத்துக : கிராஃபைட் மற்றும் வைரம்

கிராஃபைட்வைரம்
1. ஒவ்வொரு கார்பனும் நான்கு சகப்பிணைப்புகளைக் கொண்டுள்ளதுஒவ்வொரு கார்பனும் மூன்று சகப்பிணைப்புகளைக் கொண்டுள்ளது.
2. கடினமானது, அடர்த்தியானது, ஒளிபுகும் தன்மை உடையது.மிருதுவானது, தொடுவதற்கு வழவழப்பானது, ஒளி புகாத்தன்மை உடையது.
3. நான்முகி அலகுகள் முப்பரிமாண அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன.அறுங்கோண அலகுகள் தள அடுக்குகளில் அமைந்துள்ளன.

2. C2H6O ன் மாற்றியங்களை எழுதுக.

9th Science Guide Carbon and its Compounds Answers in English a

3. புறவேற்றுமை வடிவத்துவம் – வரையறு.

ஒரே தனிமத்தின் ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்கள் அவற்றின், இயற்பியல் பண்புகளில் வேறுபட்டும், வேதியியல் பண்புகளில் ஒன்றுபட்டும் இருக்கும் தன்மையே  புறவேற்றுமை வடிவத்துவம் ஆகும்.

4. கார்பன் அயனிச் சேர்மங்களை உருவாக்குவதில்லை, ஏன்?

கார்பனின் நான்கு இணைதிறன் எலக்ட்ரான்களைப் பெற்றிருப்பதால் எலக்ட்ரான்களை இழந்தோ அல்லது ஏற்றோ அயனிகளாக மாறுவதற்கான வாய்ப்பு குறைவு. எனவே கார்பன் சகபிணைப்பு எலக்ட்ரான் பகிர்வின் மூலம் ஊருவாக்குகிறது. இதனால் கார்பன் அயனிச் சேர்மங்களை உருவாக்குவதில்லை

5. ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிகள் ஆபத்தானவை ஏன்?

பயன்படுத்திய பின் தூக்கியெறியப்பட வேண்டிய நெகிழிகள், குறுகிய காலம் மற்றும் சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. உற்பத்தி செய்யப்படும் நெகிழியில் பாதியளவிற்கு மேலானவை பயன்படுத்திய பின் தூக்கியெறியப்பட வேண்டிய பொருள்களாகவோ பயன்படுகின்றன. இவை கழிவு நீர்க் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி நீர் நிலைகளை பாதிக்கின்றன. இவ்வகை நெகிழிகள் தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு உடல்நலக்கேட்டை உண்டு பண்ணுகின்றன.

6. தெவிட்டிய மற்றும் தெவிட்டாத சேர்மங்கள் என்றால் என்ன?

தெவிட்டிய சேர்மங்கள்

கார்பனின் நான்கு இணைதிறன்களும் முழுமையாக நிறைவு செய்யப்பட்ட சேர்மங்கள் தெவிட்டிய சேர்மங்கள் (நிறைவுற்ற சேர்மங்கள்) எனப்படும்

எ.கா. ஒற்றைப் பிணைப்பு சேர்மங்கள்

தெவிட்டாத சேர்மங்கள்

கார்பனின் நான்கு இணைதிறன்களும் முழுமையாக நிறைவு செய்யப்பட்டாத சேர்மங்கள்  தெவிட்டாத சேர்மங்கள் (நிறைவுற்ற சேர்மங்கள்) எனப்படும்

எ.கா. இரட்டைப் பிணைப்பு சேர்மங்கள்,முப்பிணைப்பு சேர்மங்கள்

7. கார்பன் மோனாக்ஸைடில் கார்பனின் இணைதிறன் என்ன?

ஒரு சேர்மத்திலுள்ள தனிமங்களின் ஆக்ஸிஜனேற்ற எண்களின் கூடுதல் பூஜ்ஜியம். இங்குள்ள ஆக்ஸிஜனின் ஆக்ஸிஜனேற்ற எண் – 2.

C-ன் ஆக்ஸிஜனேற்ற எண்  X என்க

X – 2

C = 0

X – 2 = 0

   X = +2

கார்பன் மோனாக்ஸைடில் (CO) கார்பனின் இணைதிறன் : 2

V. விரிவாக விடையளி.

1. சங்கிலித் தொடர் என்றால் என்ன? கார்பன் எவ்வாறு சங்கிலித்தொடர் சேர்மங்களை உருவாக்குகிறது?

சங்கிலித் தொடராக்கம் என்பது ஒரு தனிமம் அதே தனிமத்துடனோ அல்லது மற்ற தனிமங்களுடனோ நான்முக இணைதிறன் மூலம் இணைந்து திறந்த சங்கிலிச் சேர்மங்களையோ அல்லது மூடிய சங்கிலிச் சேர்மங்களையோ உருவாக்குவதாகும். சங்கிலித் தொடராக்கம் மூலம் மிக நீண்ட சங்கிலிகளை உடைய சேர்மங்களை உருவாக்கக்கூடிய ஒரு முக்கியமான தனிமம் கார்பனாகும். கார்பன் அணுக்கள் அவற்றுடன் மீண்டும் மீண்டும் சகப்பிணைப்பின் மூலமாக இணைந்து நீண்ட சங்கிலி, கிளைச் சங்கிலி மற்றும் வளையச் சங்கிலிகளை உருவாக்குகின்றன.

கார்பனின் இந்த சங்கிலித் தொடராக்கப் பண்புதான் உலகில் இவ்வளவு கார்பன் சேர்மங்கள் உருவாகக் காரணமாக உள்ளது. எனவே, கரிம வேதியியல் என்பது சங்கிலித் தொடராக்கத்தின் மூலம் பிணைக்கப்பட்ட கார்பன் சேர்மங்களைப் பற்றியதாகும்.

9th Science Guide Carbon and its Compounds Answers in Tamil carbon compounds

கார்பனின் இந்த சங்கிலித் தொடராக்கப் பண்புதான் உலகில் இவ்வளவு கார்பன் சேர்மங்கள் உருவாகக் காரணமாக உள்ளது. எனவே, கரிம வேதியியல் என்பது சங்கிலித் தொடராக்கத்தின் மூலம் பிணைக்கப்பட்ட கார்பன் சேர்மங்களைப் பற்றியதாகும்.

2. கார்பனின் சில வேதி வினைகளைக் கூறுக.

ஆக்ஸிஜனேற்றம் (ஆக்ஸிஜனோடு வினை புரிதல்)

உயர் வெப்பநிலையில் கார்பனானது ஆக்ஸிஜனோடு வினைபுரிந்து கார்பன் மோனாக்ஸைடு மற்றும் கார்பன் டைஆக்ஸைடு போன்றவற்றை வெப்பத்துடன் உருவாக்குகின்றது. ஹைட்ரோ கார்பன் போன்ற கரிம கார்பன் சேர்மங்களும் ஆக்ஸிஜனேற்றம் அடைந்து ஆக்ஸைடுகளையும் நீராவியையும் உருவாக்குகின்றன. அவற்றோடு வெப்பமும் தீச்சுடரும் வெளிப்படும். இதற்கு எரிதல் என்ற மற்றொரு பெயரும் உண்டு.

2C(s) + O2(g)) → 2 CO(g)+ வெப்பம்

C(s) + O2(g)→ C O2(g)+ வெப்பம்

CH4(g) + 2O2(g) → CO2(g) + 2H2O(g) + வெப்பம்

நீராவியுடன் வினை

கார்பன் நீராவியுடன் வினைபுரிந்து கார்பன் மோனாக்ஸைடையும் ஹைட்ரஜனையும் தருகிறது. இந்த கலவைக்கு நீர் வாயு என்று பெயர்.

C(s) + H2O(g) → C O(g) + H2(g)

கந்தகத்துடன் வேதி வினை

உயர்வெப்பநிலையில் கந்தகத்துடன் இணைந்து கார்பன் டைசல்ஃபைடை உருவாக்குகிறது.

C(g) + S(g) → C S2(g)

உலோகத்துடன் வேதி வினை

உயர் வெப்ப நிலையில் கார்பன் சில உலோகங்களுடன் வினைபுரிந்து அவற்றின் கார்பைடுகளை உருவாக்குகிறது.

W(s) + C(g) → WC(s)

3. ஆபத்தான மூன்று ரெசின் குறியீடுகள் எவை? அவற்றின் தன்மையை விவரி.

VI. உயர் சித்தனை வினாக்கள்.

1. கார்பன் பெரும்பாலும் இணைந்த நிலையிலேயே கிடைக்கின்றது, ஏன்?

கேட்டனேஷன், டெட்ரா வேலன்சி மற்றும் பல பிணைப்புகளின் உருவாக்கம் ஆகியவற்றின் காரணமாக கார்பன் பெரும்பாலும் இணைந்த நிலையில் உள்ளது

2. குறைந்தளவு காற்றோட்டமுள்ள அறையில் கார்பன் எரிபொருளை எரிக்கும்போது, அங்கு இருப்பது ஆபத்தானது, ஏன்?

குறைந்த காற்றோட்டமான அறையில் கார்பன் எரிபொருள் எரியும் போது, அது கார்பன் மோனாக்சைடை உருவாக்குகிறது, இது மிகவும் நச்சுத்தன்மையுடையது, ஏனெனில் இது ஹீமோகுளோபினின் ஆக்ஸிஜன் சுமந்து செல்லும் திறனை பாதிக்கிறது. எனவே அங்கேயே தங்குவது ஆபத்தானது.

3. டையாக்ஸின் எவ்வாறு உருவாகிறது? இதனோடு தொடர்புடைய நெகிழி வகை எது? ஏன் இது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது?

PVC இன் எரிப்பு டையாக்ஸின்களை வெளியிடுகிறது. டையாக்ஸின்கள் மனிதர்களுக்கு மிகவும் நச்சுத்தன்மையுடையவை, ஏனெனில் அவை தோல், கல்லீரல் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன மற்றும் நரம்பு, நாளமில்லா மற்றும் இனப்பெருக்க அமைப்புகளை பாதிக்கின்றன.

4. யோகா நெகிழியாலான தண்ணீர் புட்டி வாங்க விரும்புகிறாள். அவள் கடையில் சென்று வாங்க முற்படும்போது, அங்கு ரெசின் குறியீடு 1, 2, 3 மற்றும் 7 எனக் குறிக்கப்பட்ட நான்கு வகையான நெகிழிப் புட்டிகளைக் காண்கிறாள். அவள் எந்தக் குறியீடு உடைய புட்டியை வாங்க வேண்டும்? ஏன்?

பிசின் குறியீடுகள் 1,3,7 தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக்குகள் ஆனால் பிசின் குறியீடு 5 PP(பாலி புரோபிலீன்) ஆகும். இது பாதுகாப்பான பிளாஸ்டிக் ஆகும். எனவே அவள் பிசின் குறியீடு 5 கொண்ட பிளாஸ்டிக் பாட்டிலை வாங்க வேண்டும்.

VII. மிகக் சுருக்கமாக விடையளி.

1. கார்பன் எத்தனை இணைதிறன் எலக்ட்ரான்களைக் கொண்டுள்ளது?

கார்பன் நான்கு இணைதிறன் எலக்ட்ரான்களைக் கொண்டுள்ளது

2. நவீன கரிம வேதியியலின் தந்தை என அழைக்கப்படுவர் யார்?

நவீன கரிம வேதியியலின் தந்தை என அழைக்கப்படுவர் ஃபிரடெரிக் ஹோலர்

3. ஆபத்தான மூன்று ரெசின் குறியீடுகள் எவை?

  • 3 – PVC
  • 6 – PS
  • 7 – Other

VI. கீழ்க்கண்டவைகளுக்கு விடை தருக.

1. இது கார்பனின் கடினமான புறவேற்றுமை வடிவம்.

வைரம்

2. இரட்டைப் பிணைப்பு கொண்ட கார்பன் அணுக்களால் உருவாகும் கரிமச் சேர்மங்கள்.

அல்கீன்

3. கார்பன் ஆக்ஸிஜனுடன் வினைபுரிந்து கிடைப்பது.

கார்பன்-டை-ஆக்ஸைடு

4. இந்த மூலக்கூறில், கார்பன் நான்கு ஹைட்ரஜன் அணுக்களுடன் இணைந்துள்ளது.

மீத்தேன்

5. கார்பன் மற்ற தனிமங்களுடன் ___________ பிணைப்பால் இணைகிறது.

விடை: சகபிணைப்பால்

6. வெடி மருந்து தயாரிக்கப் பயன்படுவது.

கரி

7. _________ ஆல் தயாரிக்கப்பட்ட நெகிழி, ரெசின் குறியீடு 6 ஐப் பெற்றுள்ளது.

விடை: பாலிஸ்டைரின்

8. ஒரு முறை பயன்பாட்டு நெகிழி.

உறிஞ்சுகுழல்

9. ஒரு முறை பயன்படும் நெகிழி _________ பாதிப்பை ஏற்படுத்தும்.

விடை: சுற்றுச்சூழல்

10. விரிவடைந்த பாலிஸ்டைரினின் வணிகவியல் பெயர்.

தெர்மோகோல்

 

பயனுள்ள பக்கங்கள்