9th Std Science Term 3 Solution in Tamil | Lesson.5 பயன்பாட்டு வேதியியல்

பாடம் 5. பயன்பாட்டு வேதியியல்

9th Standard Science Guide in Tamil | பயன்பாட்டு வேதியியல்

பாடம் 5. பயன்பாட்டு வேதியியல்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. ஒரு நானோ மீட்டர் என்பது

  1. 10-7 மீட்டர்
  2. 10-8 மீட்டர்
  3. 10-6 மீட்டர்
  4. 10-9 மீட்டர்

விடை :  10-9 மீட்டர்

2. பென்சிலின் எனப்படும் எதிர் நுண்ணுயிரி  ……………………………… லிருந்து பெறப்படுகிறது.

  1. தாவரங்கள்
  2. நுண்ணுயிரிகள்
  3. விலங்குகள்
  4. சூரிய ஒளி

விடை : நுண்ணுயிரிகள்

3. அயோடோபார்ம் ………………………………………… ஆக பயன்படுத்தப்படுகிறது.

  1. எதிர் நுண்ணுயிரி
  2. மலேரியா
  3. புரைத் தடுப்பான்
  4. அமில நீக்கி

விடை :  புரைத் தடுப்பான்

4. ஒரு மின் வேதிக்கலத்தில் எதிர் மின்வாயில் நிகழும்.

  1. ஆக்ஸிஜனேற்றம்
  2. ஒடுக்கம்
  3. நடுநிலையாக்கல்
  4. சங்கிலி இணைப்பு

விடை :  ஒடுக்கம்

5. இறந்த விலங்குகளின் வயதைத் தீர்மானிக்க ஐ சோடோப்பைப் பயன்படுத்தலாம்.

  1. கார்பன்
  2. அயோடின்
  3. பாஸ்பரஸ்
  4. ஆக்ஸிஜன்

விடை :  கார்பன்

6. பின்வருவனவற்றுள் எது இயற்கைச் சாயம் இல்லை?

  1. உருளைக்கிழங்கு
  2. பீட்ருட்
  3. கேரட்
  4. மஞ்சள்

விடை :  உருளைக்கிழங்கு

7. …………………………………… வகை உணவுகள் குறைபாட்டு நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.

  1. கார்போஹைட்ரேட்
  2. வைட்டமின்கள்
  3. புரதங்கள்
  4. கொழுப்புகள்

விடை :  வைட்டமின்கள்

8. கதிரியக்கவியலுடன் தொடர்புள்ளது எது

  1. ஆக்ஸிஜனேற்றம்
  2. மின்கலங்கள்
  3. ஐசோடோப்புகள்
  4. நானோதுகள்கள்

விடை :  ஐசோடோப்புகள்

9. ஒரு கரிமச் சேர்மத்தின் நிறத்திற்குக் காரணமான குழுக்கள் …………………………………. என அழைக்கப்படுகின்றன.

  1. ஐசோடோப்புகள்
  2. நிற உயர்த்தி
  3. நிற ஜனனிகள்
  4. நிறத் தாங்கி

விடை :  நிறத் தாங்கி

9. குளோரினேற்றப்பட்ட ஹைட்ரோ கார்பன்கள் ஆக பயன்படுத்தப்படுகின்றன.

  1. உரங்கள்
  2. பூச்சிக்கொல்லிகள்
  3. உணவு நிறமிகள்
  4. உணவு பதப்படுத்திகள்

விடை :  பூச்சிக்கொல்லிகள்

II. கோடிட்ட இடங்களை நிரப்பு.

1. மின் ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றும் மின்வேதிக்கலம் ……………………… ஆகும்.

விடை :  மின்பகுப்புக்கலம்

2. வலி மருந்துகள் ………………………….. என்று அழைக்கப்படுகின்றன.

விடை :  வலி நீக்கிகள்

3. ஆஸ்பிரின் ஒரு …………………………… ஆகும்

விடை :  வலி நிவாரனி மற்றும் காய்ச்சல் நிவாரனி

4. ……………………, ……………………………. மற்றும் …………………………. ஆகியவை தாவர வளர்ச்சிக்குத் தேவையான பெரும நுண் ஊட்டத் தனிமங்கள் ஆகும்.

விடை :  நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசிம்

5. கைரேகைப் பதிவைக் கண்டறியப் பயன்படும் வேதிப்பொருள் ………………………… ஆகும்.

விடை :  நின்ஹைட்ரின்

III. பொருத்துக

1. காய்ச்சல் நிவாரணி  பெரிய மேற்பரப்புப் பகுதி
2. அரிப்பைத் தடுத்தல் ஆக்ஸிஜனேற்றம்
3. ஹைப்பர்தைராய்டிசம் காய்ச்சல்
4. நானோதுகள்கள் புற்று நோய் செல்களைக் கண்டறிதல்
5. நானோ ரோபாட்டிக்ஸ் மின் முலாம் பூசுதல்
விடை : 1 – இ, 2 – உ, 3 – ஆ, 4 – அ, 5 – ஈ

IV. சுருக்கமாக விடையளி.

1. வேதிச்சிகிச்சை என்றால் என்ன?

மனித உடலின் செல்களைப் பாதிக்கமால் வியாதிகளை உண்டாக்கும் கிருமிகளை மட்டும் அழித்து ஒரு சில நோய்களைக் குணப்படுத்துவதற்காக சில கரிமச் சேர்மங்களைப் பயன்படுத்துவதையே வேதி மருத்துவம் என்கிறோம். இது பெரும்பாலும் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுகிறது.

2. மயக்கமூட்டிகள் என்றால் என்ன? அவை எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?

உணர்வை இழக்கச் செய்யும் மருந்துகள் மயக்க மருந்துகள் எனப்படும். இவை, அறுவை சிகிச்சையின்பாேது நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.

இதன் அடிப்படையில் மயக்க மருந்துகளில் இரண்டு வகைகள் உள்ளன.

பொது மயக்க மூட்டிகள்:

இவை எல்லா வகையான உணர்வுகளையும் இழக்கச் செய்பவை. குறிப்பாக வலி உணர்வை மீள்தன்மையுடன் இழக்கச்செய்கின்றன.

உதாரணமாக நோயாளிகளுக்கு உள் உறுப்புகளில் பெரிய அறுவை சிகிச்சை செய்யப்படும் போது இந்த மயக்க மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. நோயாளிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு உணர்வை இழந்து (அறுவை சிகிச்சையின் கால அளவைப் பொறுத்தது) மீண்டும் உணர்வைப் பெறுகின்றனர்.

குறிப்பிட மயக்க மூட்டிகள் :

இவை குறிப்பிட்ட இடத்தை உணர்விழக்கச் செய்யும் காரணிகள் ஆகும். பொது உணர்வைப் பாதிக்காமல், வலியுள்ள இடத்தில் மட்டும் இவை வலி உணர்வை நீக்குகின்றன.

உதாரணமாக பல் மருத்துவர்கள் தங்களது நோயாளிகளுக்கு பற்களில் சிறிய அறுவை சிகிச்சை அளிக்கும்போது இத்தகைய மருந்தினை வழங்குகின்றனர

3. பயிர்த்துறையில் இரசாயன வேதியியல் உரங்களின் தேவை என்ன?

தாவர வளர்ச்சிக்கு தேவையான நுண்ணூட்ட மற்றும் பெரும் ஊட்டச்சத்துக்களை வழங்க, உற்பத்தியை பெருக்க பயிர்த்துறையில் இரசாயன வேதியியல் உரங்களின் தேவைப்படுகிறது.

4. தடயவியல் வேதியியலின் தொடர்புகள் யாவை?

தடவியல் குற்றப் பிண்ணனி மற்றும் அதற்கான ஆதாரங்கள், சான்றுகள் சேகரிக்கவும், உறுதிபடுத்தவும், சோதனைகளுக்காகவும் வேதியியல் பயன்படுகிறது.

V. உயர் சிந்தனை வினாக்கள்

1. கைபேசியில் பயன்படுத்தப்படும் மின்கலங்களை மறு ஊட்டம் (ரீசார்ஜ்) செய்ய வேண்டும். அதேபோல், நீங்கள் கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் மின்கலங்களை மறு ஊட்டம் செய்யமுடியுமா? ஆராய்ந்து பதில் கூறுக.

இவ்வகை மின்கலன்களை மீண்டும் முன்னேற்றம் செய்ய இயலாது. எனவே இவற்றை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த இயலும். பொதுவாக முதன்மை மின்கலன்கள் சிறிய உருவ அளவுகளில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.

2. சுதாவுக்கு தீ விபத்து ஏற்பட்டது. அவள் எந்தவித மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்?

நியோஸ்போரின், பேசிட்ராசின், சில்வேடென் மருந்துகளை பொதுவாக தீக்காயங்களுக்கு மருந்தாக பயன்படுத்தலாம்.

3. ஓர் பயிர் நிலத்தில் மண்ணின் pH மதிப்பு 5. அங்கு என்ன வகையான உரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்?

அமிலத்தன்மை உடைய நிலங்களில் pH அளவை அதிகரிக்க சுண்ணாம்பு சத்து நிறைந்த உரங்களை பயன்படுத்தலாம்.

 

பயனுள்ள பக்கங்கள்