9th Std Science Term 3 Solution in Tamil | Lesson.7 பாெருளாதார உயிரியல்

பாடம் 7. பாெருளாதார உயிரியல்

9th Standard Science Guide in Tamil | பாெருளாதார உயிரியல்

பாடம் 7. பாெருளாதார உயிரியல் 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. மீன் உற்பத்தி மற்றும் மேலாண்மை என்பது

  1. பிஸ்ஸி கல்ச்சர்
  2. செரிகல்ச்சர்
  3. அக்வா கல்ச்சர்
  4. மோனா கல்ச்சர்

விடை : பிஸ்ஸி கல்ச்சர்

2. கீழ்கண்டவற்றில் எது அயல்நாட்டு இனம் அல்ல?

  1. ஜெர்சி
  2. ஹேல்ஸ்டீன் – பிரிஸன்
  3. ஷகிவால்
  4. ப்ரெளன் சுவிஸ்

விடை : ஷகிவால்

3. பின்வருவனவற்றில் எது அயல்நாட்டு மாட்டு இனம் அல்ல?

  1. ஏபிஸ் மெல்லிபெரா
  2. ஏபிஸ் டார்சோட்டா
  3. ஏபிஸ் ப்ளோரா
  4. ஏபிஸ் சிரானா

விடை : ஏபிஸ் மெல்லிபெரா

4. கீழ்கண்டவற்றில் இந்திய கால்நடை எது?

i) பாஸ் இண்டிகஸ் ii) பாஸ் டொமஸ்டிகஸ்
iii) பாஸ் புபாலிஸ் iv) பாஸ் வல்காரிஸ்
  1. (i) மற்றும் (ii)
  2. i மற்றும் iii
  3. ii மற்றும் iii
  4. iii மற்றும் iv

விடை : i மற்றும் iii

5. பின்வருவனவற்றில் எந்த ஒன்று முக்கிய இந்திய கெண்டை மீன் இல்லை?

  1. ரோகு
  2. கட்லா
  3. மிரிகால்
  4. சின்காரா

விடை : சின்காரா

6. தேன் கூட்டில் காணப்படும் தேனீக்கள் இதிலிருந்து உருவாகிறது?

  1. கருவுறாத முட்டை
  2. கருவுற்ற முட்டை
  3. பார்த்தினோஜெனிஸிஸ்
  4. ஆ மற்றும் இ

விடை : கருவுறாத முட்டை

7. கீழ்கண்டவற்றில் அதிக அளவு பால் கொடுக்கும் பசுவினம் எது?

  1. ஹோல்ஸ்டீன் – பிரிஸன்
  2. டார்ஸெட்
  3. ஷகிவால்
  4. சிவப்பு சிந்தி

விடை : ஹோல்ஸ்டீன் – பிரிஸன்

8. கீழ்கண்டவற்றில் எந்த ஒன்று சிவப்பு புழுக்கள் என்று அழைக்கப்படுகிறது?

  1. எஸ்செனியா பெட்டிடா
  2. யூட்ரிலஸ் ஜெனியா
  3. பெரியோனிக்ஸ் எக்ஸ்காவட்டஸ்
  4. லாம்பிட்டோ மாரிட்டி

விடை : எஸ்செனியா பெட்டிடா

9. தேனீ வளர்ப்பில் பொதுவாக பயன்படுத்தப்படும் இந்திய தேனீ எது?

  1. ஏபிஸ் டார்சோட்டா
  2. ஏபிஸ் ப்ளோரா
  3. ஏபிஸ் பெல்ல பெரா
  4. ஏபிஸ் இண்டிகா

விடை : ஏபிஸ் இண்டிகா

10. மெசானா என்பது ஒரு _________ இனம்.

  1. மாடு
  2. எருமை
  3. வெள்ளாடு
  4. செம்மறி ஆடு

விடை : எருமை

11. நிலவேம்பின் இடு சொல்பெயர் _________

  1. லூக்காஸ் ஆஸ்பெரா
  2. ஆன்ரோ கிராபிஸ் பானிகுலோட்டா
  3. குரோட்டலேரியா ஜன்சியா
  4. கேஷியா பஸ்துலா

விடை : ஆன்ரோ கிராபிஸ் பானிகுலோட்டா

12. மண்ணில்லாமல் தாவரங்களை வளர்க்கும் முறை _____________

  1. தோட்டக்கலை
  2. ஹைட்ரோபோனிக்ஸ்
  3. போமாலஜி
  4. இவற்றில் எதுவுமில்லை

விடை : ஹைட்ரோபோனிக்ஸ்

13. பூஞ்சைகள் மற்றும் வாஸ்குலார் தாவரங்கள் நடத்தும் கூட்டுயிர் வாழ்க்கை _____________

  1. லைக்கன்
  2. ரைசோபியம்
  3. மைக்கோரைசா
  4. அசிட்டோபாக்டர்

விடை : மைக்கோரைசா

14. காளான்களின் தாவர உடலம் என்பது _____________

  1. காளான் விதை
  2. மைசீலியம்
  3. இலை
  4. இவைகள் அனைத்தும்

விடை : மைசீலியம்

II. கோடிட்ட இடங்களை நிரப்பு.

1. லெகூம் தாவரங்களில் வேர் முடிச்சு காணப்படும் நுண்ணுயிரி _____________

விடை :  ரைசோபியம்

2. குயினைன் மருந்து _________________ லிருந்து பெறப்படுகிறது.

விடை : சின்காேனா அபிசினாலிஸ

3. கேரிக்கா பப்பையா இலை _____________ நோயை சரிசெய்ய பயன்படுகிறது.

விடை : டெங்கு

4. கானோடெர்மா லூசிடம் என்ற காளான் பொதுவாக __________________ என்று அழைக்கப்படுகிறது.

விடை : லிங்லி

5. நவீன தேன் கூட்டில் தேனீக்கள் கூட்டத்தினைப் பராமரிப்பது _________ ஆகும்.

விடை : வேலைக்காரத் தேனீக்கள்

6. மண்புழு உரத்தை உருவாக்குவது ______________ மற்றும் நுண்ணுயிரிகள் ஆகும்.

விடை : மண்புழு

7. ____________________ வளர்பின் மூலம் இறால், முத்து மற்றும் உண்ணக்கூடிய சிப்பிகளை உற்பத்தி செய்யலாம்.

விடை : கடல் வாழ் உயிரி

8. தேன் கூட்டில் உள்ள வளமான பெண் தேனீ ______________ ஆகும்.

விடை : இராணித் தேனீ

9. _______________ ஆல் தேன் பதப்படுத்தப்படுகிறது.

விடை :  பார்மிக் அமிலம்

10. ______________ முறையில் பல்வே றுபட்ட மீன் வகைகளை நீர் நிலைகளில் வளர்க்கலாம்

விடை : பல்வகை மீன் வளர்ப்பு

III. சரியா, தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் வாக்கியத்தை சரி செய்க

1. மருத்துவத் தாவரங்களில் உள்ள கூட்டுப் பொருள்கள் நோய்களை குணப்படுத்தப் பயன்படுகின்றன.  ( சரி )

2. ஆந்ரோகுயினைன் என்ற மருந்து ஆசிமம் சாஸ்டம் என்ற தாவரத்திலிருந்து கிடைக்கிறது.  ( தவறு )

விடை : பயன்பாட்டு எண்ணெய் ஆசிமம் சாஸ்டம் என்ற தாவரத்திலிருந்து கிடைக்கிறது

3. மைக்கோரைசா ஒரு பாசி.   ( தவறு )

விடை : மைக்கோரைசா ஒரு பூஞ்சை

4. அக்வாபொனிக்ஸ் என்ற தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி தாவரங்களை வளர்த்து அதன் வேர்களுக்கு காற்றில் உள்ள ஈரப்பத்தினை அளிக்கலாம்.    ( தவறு )

விடை : எரோபோனிக்ஸ் என்ற தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி தாவரங்களை வளர்த்து அதன் வேர்களுக்கு காற்றில் உள்ள ஈரப்பத்தினை அளிக்கலாம்.

5. பால் கொடுக்கும் விலங்குகள், விவசாயம் மற்றும் போக்குவரத்திற்குப் பயன்படுகின்றன.    ( தவறு )

விடை : இழுவை இனங்கள் விவசாயம் மற்றும் போக்குவரத்திற்குப் பயன்படுகின்றன.

6. ஏபிஸ் புளோரியா என்பது பாறைத் தேனீ.    ( தவறு )

விடை : ஏபிஸ் டார்கேட்டா என்பது பாறைத் தேனீ

7. ஓங்கோல் கால்நடைகள் ஒரு வெளிநாட்டு இனம்.    ( தவறு )

விடை : ஓங்கோல் கால்நடைகள் ஒரு உள்நாட்டு இனம்

8. வெள்ளாட்டு எருவானது தொழு உரத்தைக் காட்டிலும் அதிக சத்தினைக் கொண்டுள்ளது.  ( சரி )

IV. பொருத்துக

நுண்ணுயிரிகள் அதன் பங்கு
1. பெரிய கடல் நண்டு கடல் மீன்
2. கட்லா முத்து
3. கொடுவா மீன் ஓடு மீன்
4. முத்துச் சிப்பி நெல்
5. பொக்காலி துடுப்பு மீன்
6. பிளிரோட்டஸ் சிற்றினம் சோரியாஸிஸ்
7. சர்ப்பகந்தா சிப்பி காளான்
8. ஒலேரி கலச்சர் ரெஸ்பிரைன்
9. டிங்டோரியா காய்கறிப் பண்
விடை : 1 – இ, 2 – உ, 3 – அ, 4 – ஆ, 5 – ஈ, 6 – எ, 7 – ஏ, 8 – ஐ, 9 – ஊ

V. கீழ்க்கண்டவற்றை வரையறு.

அ) மீன் வளர்ப்பு

பிசிகல்ச்சர் அல்லது மீன் வளர்ப்பு என்பது மீன்களை, குளம், நீர்த்தேக்கம் (டேம்), ஏரிகள், ஆறுகள் மற்றும் விளைநிலங்கள் போன்ற இடங்களில் இனப்பெருக்கம் செய்யவைத்து, வளர்த்தெடுக்கும் செயல்முறையாகும்.

ஆ) தேனீ வளர்ப்பு

தேனுக்காக தேனீக்களை வளர்த்தலே தேனீ வளர்ப்பு எனப்படும். இது தேனீக்களைப் பராமரித்தல் என்றும் அழைக்கப்படுகிறது.

இ) மண்புழு வளர்ப்பு

செயற்கையான முறையில் மண்புழுக்களை வளர்ப்பதும், இயற்கையான கரிமக் கழிவுகளிலிருந்து மண்புழு உரத்தை உருவாக்கும் முறை

ஈ) கடலுயிரி வளர்ப்பு

கடற்கரை அருகில், கடல் நீரில் மீன்களையும் மற்ற நீர்வாழ் உயிரினங்களையும்
வளர்ப்பது பல்லுயிரி வளர்ப்பது எனப்படுகிறது

உ) மலரியில்

மலர்களையும், அழகுத் தாவரங்களையும் மலர்ப் பண்ணையில் வளர்த்து சாகுபடி செய்வது மலரியல் எனப்படுகிறது.

ஊ) கலப்பு உரம்

பயிர்க் கழிவுகள், விலங்கு எச்சங்கள், உணவுக் கழிவுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் நுண்ணுயிரிகளால் இயற்கையான முறையில் சிதைவடையச் செய்து தயாரிக்கப்படுவது கலப்பு உரம் ஆகும்.

எ) கனியியல்

பழங்களில் உற்பத்திக் காலத்தை முறைப்படுத்தி உற்பத்திச் செலவைக் குறைத்து சரியான உற்பத்தி முறைகள் மூலம் தரமான கனிகளை விளைவிப்பது கனியியல் எனப்படும்.

ஏ) பொருந்துதல்

இது காளான் வளர்ப்பு முறைகளில் ஒன்றாகும்

உடலமானது சிறிய மொட்டு விடத் தொடங்கி காளானாக வளர்கின்றது. குண்டூசி போல் காணப்படும் இந்த வெண்மையான மொட்டுக்கு ஊசிகள் என்று பெயர்

VI. கீழ்க்கண்டவற்றை வேறுபடுத்துக.

அ) அயல்நாட்டு இனம் மற்றும் பாரம்பரிய இனம்

அயல்நாட்டு இனங்கள்

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ப்படுகின்றன. ஜெர்ஸி, ப்ரெளன் ஸ்விஸ் மற்றும் ஹோல்ஸ்டீய்ன் ஃப்ரெய்ஸ்யன் ஆகியவை இவ்வகை இனங்களுள் அடங்கும். அதிகமான பால் சுரப்பு காலத்தை கொண்டிருப்பதால் இவை அதிகம் தேர்ந்தெடுக்கப்படுகின்றன

உள்நாட்டு இனங்கள்

இந்தியாவை தாயமாகக் கொண்டவை. சாகிவால், சிவப்பு சிந்தி, தியோனி, கிர் இவற்றுள் அடங்கும். இவ்வகை இனங்கள் வலவான கால்களையும், நிமிர்ந்த திமில்களையும், தளர்வான தோல்களையும் கொண்டுள்ளன.

ஆ) மகரந்தம் மற்றும் தேன் ரசம்

மகரந்தம்

தாவர ஆண் இனப்பெருக்க உறுப்பு அவரை விதை வடிவ மகரந்த பையும் அதைத் தாங்கும் மகரந்த இழையும் இதில் இருக்கும்.

தேன் ரசம்

இனிப்பு சுவையுடைய திரவமானது தாவரத்தின் மலர்களில் உருவாகிறது. இது தேன் ரசம் எனப்படும். இத்திரவத்தினை தேனீக்கள் உறிஞ்சுகிறது

இ) கூனி இறால் மற்றும் இறால்

கூனி இறால்

பெனெய்டு இறால்கள் கூனி இறால்கள் என அழைக்கப்படுகின்றன

எ.கா.- பினேயாஸ் இண்டிகஸ்

இறால்

பெனெய்டு அல்லாதா இறால்கள் இறால்கள் என அழைக்கப்படுகிறது

எ.கா. – பலேமோன் சிற்றினங்கள், மேக்ரோபிராகியம் சிற்றினங்கள்

ஈ) துடுப்பு மீன் மற்றும் ஓடு மீன்

துடுப்பு மீன் 

துடுப்பு என்பது மீனின் உடலமைப்பில் காணப்படும் ஒரு பகுதி. இதன் உதவியால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திதிற்கு நீந்திச் செல்ல பயன்படுகிறது.

எ.கா.- கட்லா மீன்

ஓடு மீன்

நீரில் வாழும் மெல்லுடலிகள் ஓடுடையதாக காணப்படும். பெரும்பாலும் உண்ணத் தக்கது.

எ.கா. – நத்தை, இறால், நண்டு

உ) தொழு உரம் மற்றும் வெள்ளாட்டு எரு

தொழு உரம்

இது கால்நடைகளின் சாணம், சிறுநீர் மற்றும் மாட்டுக் காெட்டங்களில் தரைமேல் இருக்கும் கழிவுகள் மற்றும் பண்ணைக் கழிவுகள் ஆகியவற்றின் கலவையாகும்.

0.5% நைட்ரஜன், 0.2% பாஸ்பேட், மற்றும் 0.5% பொட்டாசையும் இது காெண்டுள்ளது.

வெள்ளாட்டு எரு

இது தாெழுப் பண்ணை உரத்தைக் காட்டிலும் அதிக சத்துக்களைக் காெண்டதாகும்.

3% நைட்ரஜன், 1% பாஸ்பரஸ் பென்டாக்ஸைடு, 2% பொட்டாசியம் ஆக்சைடு ஆகியவற்றை இது காெண்டுள்ளது.

VII. சுருக்கமான விடையளி

1. இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப் பொருட்கள் யாவை?

இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப் பொருள்கள் தாவரங்களின் பாதுகாப்பு, போட்டி மற்றும் சிற்றினங்களின் உடன் தொடர்பு ஆகியவற்றிக்குப் பயன்படுகின்றன.

எ.கா: அல்கலாய்டுகள், டெர்பினாய்டுகள், பிளவோனாய்டுகள் மற்றும் பல .

2. AYUSH பற்றி நீ அறிவது என்ன?

பெரும்பாலான மருந்து க ள் தாவரங்களிலிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பெறப்படுகின்றன. அநேக மருத்துவ முறைகளான ஆயுர்வேதா, யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி (AYUSH) போன்ற மருத்துவ முறைகள் தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து பெறப்படும் மருந்துகளைப் பயன்படுத்துகின்றன.

3. காய்கறித் தோட்டங்களின் வகைகள் யாவை?

காய்கறி வளர்ப்பு என்பது காய்கறித் தாவரங்களை வளர்ப்பது பற்றிய அறிவியல் ஆகும்.

காய்கறி வளர்ப்பு கீழ்க்காணும் வகுப்புகளாகப் பிரிக்கப்படுகிறது.

  1. சமையலறை அல்லது உணவுத் தோட்டங்கள்
  2. வணிகத் தோட்டங்கள்
  3. செயற்கைக் காய்கறித் தோட்டங்கள

4. காளான்களைப் பதப்படுத்தும் இரண்டு முறைகளைக் கூறுக.

  1. குளிர்வித்தல்
  2. உலர்த்துதல்
  3. கலனில் அடைத்தல்
  4. வெற்றிட குளிர்வித்தல்
  5. காமா கதிர்வீச்சு மற்றும் 15°C வெப்பநிலையில் சேமித்தல்.

5. அரியானா மற்றும் கான்கிரேட்ஜ் இனங்கள் இரட்டைப் பயன்பாட்டு இனங்கள் என அழைக்கப்படுவது ஏன்?

இந்த வகை இனங்கள் பால் உற்பத்திக்காகவும், பண்ணை வேலைகளைச் சிறப்பாகச் செய்வதற்காகவும் பயன்படுகின்றன. இந்தியாவில் இவ்வகையைச் சார்ந்த மாடுகள் அதிகமாக விவசாயிகளால் விரும்பி வளர்க்கப்படுகின்றன. ஏனெனில் இவைகளின் பசுக்கள் அதிகளவு பால் சுரப்பவையாகவும், காளைகள் சிறப்பாக இழுவை வேலைகளைச் செய்பவையாகவும் உள்ளன. அர்யானா மாடுகள், ஓங்கோல் மாடுகள், நான்கரேஜ் மாடுகள் மற்றும் தார்பார்கர் மாடுகள் ஆகியவை பால் உற்பத்தி மற்றும் இழுவை ஆகிய இரண்டிற்கும் பயன்படுபவையாகும்.

6. தேனீக்களில் வேலைப் பகிர்வு எவ்வாறு நடைபெறுகிறது?

தேன்கூட்டில் மூன்று வகையான தேனீக்கள் காணப்படுகின்றன.

அவையாவன:

  1. இராணித்தேனீ
  2. ஆண் தேனீ
  3. வேலைக்காரத் தேனீ

அ. இராணித் தேனீ :-

இராணித் தேனீயானது, தேன் கூட்டிலுள்ள மிகப்பெரிய உறுப்பினராகவும், இனப் பெருக்கம் செய்யும் பெண் தேனீயாகவும் உள்ளது. இவை ஆரோக்கியமான முட்டைகளிலிருந்து உருவாகின்றன. தேன் கூட்டில் முட்டையிடுவது இதன் பொறுப்பாகும். இராணித் தேனீக்களின் ஆயுள் காலம் 3-4 ஆண்டுகள் ஆகும்.

ஆ. ஆண் தேனீ (ட்ரோன்கள்):-

இவை இனப்பெருக்கம் செய்யும் திறனுடைய ஆண் தேனீக்களாகும். இவை வேலைக்காரத் தேனீக்களைவிட அளவில் பெரியதாகவும், இராணித் தேனீக்களைவிட அளவில் சிறியதாகவும் உள்ளன. இராணித் தேனீ இடக்கூடிய முட்டைகளை கருவுறச் செய்தலே இதன் முக்கியப் பணியாகும்.

இ. வேலைக்காரத் தேனீ :-

இவை இனப்பெருக்கத் திறனற்ற பெண் தேனீக்கள் ஆகும். இவை தேன் கூட்டிலுள்ள மிகச்சிறிய உறுப்பினர்களாகும். தேன் சேகரித்தல், சிறிய தேனிக்களைப் பராமரித்தல், தேனடையைச் சுத்தம் செய்தல், தேன் கூட்டைப்பாதுகாத்தல் மற்றும் தேன்கூட்டின் வெப்பத்தைப் பராமரித்தல் போன்றவை இவற்றின் பணிகளாகும்.

7. மீன் எண்ணெயின் ஊட்டச்சத்து முக்கியத்துவம் என்ன? மீன் எண்ணெய் கிடைக்கும் இரண்டு மீன் வகைகளைக் கூறுக?

மீனின் ஈரல் எண்ணெய் :

காட் மீன், சூறை மீன் (ட்யூனா), பெரியதட்டை மீன் (ஹாலிபட்) மற்றும் சுறாமீன் போன்றவற்றின் ஈரல் எண்ணெய்கள் மிகவும் சிறந்த மதிப்புமிக்க மருத்துவக் குணமுடை­யவைகளாகவும், A, D மற்றும் E போன்ற வைட்டமின்களைக் கொண்டவைகளாகவும் உள்ளன.

மீனின் உடல் எண்ணெய்:

உடல் எண்ணெயானது, மத்தி மீன் (சார்டின்ஸ்) ஹெர்ரிங்மீன், சாலமீன், கானாங்கெளுத்தி மீன் (மாக்கெரெல்ஸ்) மற்றும் நெத்திலி மீன் (அன்கோவீஸ்) போன்ற மீன்களில் இருந்து எடுக்கப்படுகிறது. இவைகள் தொழிற்சாலைகளில் உயவு எண்ணெய்கள், வண்ணங்கள், பளபளப்பான மேற்பூச்சு மற்றும் அழகு சாதனப்பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன.

8. வேதி உரங்களைக் காட்டிலும் மண்புழு உரம் எவ்வாறு சிறந்தது என்பதைப் பட்டியலிடு.

  • இது தாவர வளர்ச்சிக்குத் தேவையான முக்கியமான ஊட்டச்சத்து மூலமாகும். இது மண்ணை வளப்படுத்துகிறது.
  • இது மண்ணின் அமைப்பு, வடிவம், காற்றோட்டம், நீரைத் தக்கவைத்திருக்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதோடு, மண் அரிப்பைத் தடுக்கவும் உதவுகிறது.
  • தாவரங்களின் வளர்ச்சி மற்றும் விளைச்சலுக்குத் தேவையான முக்கிய வைட்டமின்கள், நொதிகள் மற்றும் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் பொருள்களைக் கொண்டுள்ளது.
  • கரிமப் பொருள்கள் மண்ணில் சிதைவடைவதை இது மேம்படுத்துகிறது.
  • இது நோய்க்கிருமிகள் மற்றும் நச்சுத்தன்மை அற்றது.
  • மண்புழு உரமானது, நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளைக் கொண்டுள்ளது.

9. வளர்ப்பு மீன்களின் சிறப்புப் பண்புகள் யாவை?

உணவளிப்பை அதிகரித்து, நன்னீர் மற்றும் கடல் நீர் உணவுகளை ஆதரமாகக் கொண்டுள்ளவர்களின் ஊட்டச்சத்து நிலையையும் மேம்படுத்துகிறது. இந்த உயிரினங்கள் அதிக அளவிலான விளங்குப் புரதங்களையும், வைட்டமின்கள் மற்றும் தாதுப் பொருள்களையும் கொண்டுள்ளன.

10. தேனின் வேதிப்பொருட்களைப் பட்டியலிடுக?

  • தேன் ஒரு இனிப்பான, பாகு நிலைகொண்ட இயற்கையான தாவர உணவுப்பொருள் ஆகும்.
  • டெக்ஸ்ட்ரோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்றவை தேனுக்கு இனிப்பு சுவையைத் தருகின்றன.
  • புரதம், அமினோஅமிலங்கள், அஸ்கார்பிக்அமிலம், வைட்டமின்கள், நியாசின், ரிபோபிளாவின் மற்றும் தையமின் போன்றவை தேனில் உள்ளன. தேனில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் மற்றும் மாங்கனீசு போன்ற தாது உப்புக்கள் காணப்படுகின்றன.
  • தேனில் சிட்ரிக் அமிலம், குளுக்கோனிக் அமிலம் மற்றும் பார்மிக் அமிலம் ஆகியவை காணப்படுகின்றன.
  • பார்மிக் அமிலம் தேனைக் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது.
  • தேனில் இன்வர்டோஸ் என்ற நொதியும் காணப்படுகிறது.

11. மண்புழு வளர்ப்பில் பயன்படும் மண்புழு சிற்றினங்கள் யாவை?

பல்வேறு வகையான மண்புழுக்கள் மண்ணில் வாழ்கின்றன. அவற்றுள், ஒரு சிலவற்றை மட்டுமே மண்புழு உரம் தயாரிப்பில் பயன்படுத்தமுடியும்.

அவையாவன:

  • பெரியோனிக்ஸ் எஸ்கவேட்டஸ் ( இந்திய நீலவண்ண மண்புழு)
  • எஸ்செனியா பெடிடா (சிவப்பு மண்புழு)
  • யூட்ரிலஸ் யூஜினியே (இரவில் ஊர்ந்து செல்லும் ஆப்பிரிக்க மண்புழு)

VIII. காரணம் மற்றும் கூற்று

கீழ்க்காணும் ஒவ்வொரு வினாக்களிலும், ஒரு கூற்றும் அதன் கீழே அதற்கான காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வாக்கியங்களில் ஒன்றை சரியான பதிலாகக் குறிக்கவும்.

  1. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
  2. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
  3. கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
  4. கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.

1. கூற்று: மண்ணில்லா நீர் ஊடக தாவர வளர்ப்பு என்பது மண்ணில்லாமல் நீரிலேயே தாவரங்களை வளர்ப்பதாகும்.

காரணம்: தாவரங்களுக்குத் தேவையான நீர், தாது உப்புகள், போதிய ஊட்டச்சத்துக்கள் கொடுக்கப்படுமானால் மண்ணில்லாச் சூழலிலும் நன்கு வளர்ந்து நல்ல விளைச்சலைத் தரும்.

விடை : கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

2. கூற்று: மீன் மற்றும் மேலும் சில நீர் வாழ் உயிரிகள் உணவாகப் பயன்படுகின்றன.

காரணம்: மீன் மற்றும் சில நீர் வாழ் உயிரிகள் ஊட்டச்சத்து மிகுந்தவை ஆகும்.

விடை : கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

3. கூற்று: விலங்குகளிலிருந்து உணவுப் பொருள் தயாரித்தல் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது

காரணம் : பால் செயல்முறைத் திட்டம் மற்றும் நீலப்புரட்சியால் உணவு தயாரித்தல் அதிகரித்துள்ளது

விடை : கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

 

பயனுள்ள பக்கங்கள்