9th Std Science Term 3 Solution in Tamil | Lesson.9 வன்பொருளும் மென்பொருளும்

பாடம் 9. வன்பொருளும் மென்பொருளும்

9th Std Science Guide in Tamil | வன்பொருளும் மென்பொருளும்

பாடம் 9. வன்பொருளும் மென்பொருளும்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. மையச்செயலகப் பெட்டியினுள் காணப்படாதது எது?

  1. தாய்ப்பலகை
  2. SMPS
  3. RAM
  4. MOUSE

விடை : MOUSE

2. கீழ்வருவனவற்றுள் எது சரியானது?

  1. இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்.
  2. இயக்க மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்.
  3. இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்.
  4. இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்.

விடை : இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்.

3. LINUX என்பது

  1. கட்டண மென்பொருள்
  2. தனி உரிமை மென்பொருள்
  3. கட்டணமில்லா மற்றும் தனி உரிமை மென்பொருள்
  4. கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்

விடை :  கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்

4. கீழ்வருவனவற்றுள் எது கட்டண மற்றும் தனி உரிமை மென்பொருள்?

  1. WINDOWS
  2. MAC OS
  3. Adobe Photoshop
  4. இவை அனைத்தும்

விடை :  இவை அனைத்தும்

5. ……………………………………………………….. என்பது ஒரு இயங்குதளமாகும்.

  1. ANDROID
  2. Chrome
  3. Internet
  4. Pendrive

விடை : ANDROID

II. பொருத்துக

1. MAC OS இலவச மற்றும் கட்டற்ற மென்பொருள்
2. Software கட்டண மற்றும் தனி உரிமை மென்பொருள்
3. Hardware உள்ளீட்டு கருவி
4. Keyboard RAM
5. LINUX Geogebra
விடை : 1 – ஆ, 2 – உ, 3 – ஈ, 4 – இ, 5 – அ

III. சிறுவினா

1. வன்பொருள் மற்றும் மென்பொருள் விளக்குக.

வன்பொருள்

கணினியில் நம்மால் பார்த்து தொட்டு உணரக்கூடிய அனைத்து பாகங்களும் வன்பொருளகளே. உள்ளீட்டு (INPUT), வெளியீட்டு (OUTPUT) கருவிகள் மற்றும் கணினியின மையசெயலகப் பெட்டியினுள (CPU Cabinet) அமைந்திருக்கும் நினைவகம் (Hard Disk), தாய்ப்பலகை (MOTHER BOARD), SMPS, CPU, RAM, CD DRIVE, GRAPHICS CARD ஆகியவை இதில அடங்கும்.

வன்பொருள்

மென்பொருள் இல்லா வன்பொருள் மடடும் ஒரு முழுக்கணினியாக முடியாது. மென்பொருள்கள் என்பது வன்பொருள் இயங்வதற்குத் தேவையான தரவுகளை உள்ளடக்கிய, கணினியால் மட்டும் புரிந்து கொள்ளக்கூடிய குறியீட்டு மொழியைக் கொண்ட அமைப்பு ஆகும்.வன் பொருளைப் போல் நம்மால் இதைத் தொட்டு உணர இயலாது. ஆனால் கணினித்திரை மூலம் கணடு கட்டளைகளைக் கொடுத்துப் பயனபடுத்த முடியும்.

2. இயங்குதளம் என்றால் என்ன? அவற்றின் செயல்பாட்டை எழுதுக?

கணினியின சாதனங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் மென்பொருள் இயக்க மென்பொருள் ஆகும். கணினி இயங்குவதற்குத் தேவையான அடிப்படைத் தரவுகளைக் (Data) கொண்ட மென்பொருளை, இயக்க மென்பொருள் என்கிறோம். இயக்க மென்பொருள் (OS) இன்றி கணினியைப் பயன்படுத்த இயலாது.

எ.கா. :-

  • Linux,
  • Windows
  • Mac
  • Android.

3. கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்கள் என்றால் என்ன? இரண்டு உதாரணங்கள் தருக?

கட்டற்ற மென்பொருள்களைப் பயனர் இலவசமாகப் பெற்றுப் பயன்படுத்தவும், பகிரவும் செய்யலாம். திறந்த மூல மென்பொருள்களில் அவற்றின நிரல்களைத் (Coding’s) திருத்திக் கொள்ளவும் உரிமம் வழங்கப்படும். இதன மூலம் புதிய மென்பொருள் வடிவத்தை உருவாக்க வாய்ப்பு கிடைக்கிறது.

சில கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்

  1. லினக்ஸ் (LINUX)
  2. ஓபன் ஆபீஸ் (Open Office)
  3. ஜியோ ஜீப்ரோ (Geogebra), etc
  4. இயக்க மென்பொருள் (Operating System)

 

பயனுள்ள பக்கங்கள்