9th Std Social Science Term 1 Solution | Lesson.10 மேம்பாட்டை அறிவோம் : தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத்தன்மை

பாடம் 10. மேம்பாட்டை அறிவோம் : தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத்தன்மை

9th Standard Social Science Book Term 1 - மேம்பாட்டை அறிவோம் : தொலைநோக்கு அளவீடு மற்றும் நிலைத்தன்மை

பாடம் 10. மேம்பாட்டை அறிவோம் : தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத்தன்மை

I. சரியான வி்டையைத் தேர்வு செய்க. 

1. கூற்று (A) : மேம்பாடு வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறது.

காரணம் (R) : மக்கள் அதிக வருவாய், சிறந்த கல்வி, உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து, குறைந்த வறுமை பெறுவோர்கள்.

  1. (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.
  2. (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை.
  3. (A) சரியானது மற்றும் (R) தவறானது.
  4. (A) தவறானது மற்றும் (R) சரியானது.

விடை : (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.

2. மனித வளம் எனும் சொல் குறிப்பிடுவது

  1. ஏழை மக்கள் மீதான முதலீடு
  2. வேளாண்மை மீதான செலவு
  3. சொத்துக்கள் மீதான முதலீடு
  4. ஒட்டு மாெத்த மக்களின் திறமை

விடை : ஒட்டு மாெத்த மக்களின் திறமை

3. கோடுகளுக்கு இடையேயோன மேம்பாட்டை ஒப்பிட அவர்களின் மிக முக்கிய பண்புகளில் ஒன்றாக கருதப்படுவது.

  1. வளர்ச்சி
  2. வருமானம்
  3. செலவீனம்
  4. சேமிப்புகள்

விடை : வருமானம்

4. தேசிய வருமானத்தின் உண்மை மதிப்பீடாக இவை கருதப்படுகிறது.

  1. மொத்த தேசிய உற்பத்தி
  2. மொத்த உள் நாட்டு உற்பத்தி
  3. நிகர தேசிய உற்பத்தி
  4. நிகர உள் நாட்டு உற்பத்தி

விடை : நிகர உள் நாட்டு உற்பத்தி

5. …………………… வருவாயை தலா வருமானம் என்றும் அழைக்கிறோம்.

  1. சராசரி
  2. மொத்த
  3. மக்கள்
  4. மாத

விடை : சராசரி

6. ஜி – 8 நாடுகளின் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் இல்லாத ஒன்று

  1. ஜப்பான்
  2. கனடா
  3. ரஷ்யா
  4. இந்தியா

விடை : இந்தியா

7. சார்க் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் இல்லாத ஒன்று

  1. இந்தியா
  2. பாகிஸ்தான்
  3. சீனா
  4. பூடான்

விடை : சீனா

8. கூற்று (A) : நிகர தேசிய உற்பத்தி என்பது தேசிய உற்பத்தி அளவின் உண்மை மதிப்பீடாக கருதப்படுகிறது.

காரணம் (R) : இது தேசிய வருமானம் என்று அழைக்கப்படுகிறது.

  1. (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.
  2. (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை.
  3. (A) சரியானது மற்றும் (R) தவறானது.
  4. (A) தவறானது மற்றும் (R) சரியானது.

விடை : (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.

9. கூற்று (A) : எந்த ஒரு நாட்டின் மேம்பாட்டிற்கும் மனித வளம் அத்தியாவசியமாக இருக்கிறது.

காரணம் (R) : கல்வி மற்றும் மக்கள் நலத்தில் முதலீடு செய்வதன் விளைவாக அவர்களின் எதிர்காலத்தில் அதிக அளவு பலன் கிடைக்கும்.

  1. (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.
  2. (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை.
  3. (A) சரியானது மற்றும் (R) தவறானது.
  4. (A) தவறானது மற்றும் (R) சரியானது.

விடை : (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.

10. மனிதவள மேம்பாட்டு குறியீடு (HDI) கணக்கில் தேசிய கல்வியறிவு எந்தப் பரிமாணத்தை எடுத்துக் கொள்ளவில்லை?

  1. பாலினம்
  2. உடல் நலம்
  3. கல்வி
  4. வருமானம்

விடை : பாலினம்

11. பின்வரும் எம்மாநிலத்தின் கல்வியறிவு தேசிய கல்வியறிவு விகிதத்தை காட்டிலும் அதிகமாக உள்ளது?

  1. ஆந்திரபிரதேசம்
  2. உத்திரபிரதேசம்
  3. தமிழ்நாடுக்ஷ
  4. இவற்றில் எதுவுமில்லை

விடை : தமிழ்நாடு

12. பாலின விகிதம் என்பது

  1. வயதான ஆண் மற்றும் வயதான பெண் விகிதம்
  2. ஆண்கள் மற்றும் பெண்கள் விகிதம்
  3. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிலவும் சமூக தொடர்பு
  4. ஆயிரம் ஆண்களுக்கு எத்தனை பெண்கள் என்ன விகிதம்

விடை : ஆயிரம் ஆண்களுக்கு எத்தனை பெண்கள் என்ன விகிதம்

13. பரம்பரை ரீதியான சமத்துவம் எந்த நடைமுறையில் உறுதி செய்யப்படுகிறது?

  1. தொழிற்சாலை
  2. பொருளாதார மேம்பாடு
  3. நிலையான மேம்பாடு
  4. பொருளாதார வளர்ச்சி

விடை : நிலையான மேம்பாடு

14. பொருந்தாத ஒன்றை கண்டறி

  1. சூரிய ஆற்றல்
  2. காற்று ஆற்றல்
  3. காகிதம்
  4. இயற்கை வாயு

விடை : காகிதம்

15. இந்தியாவில் அதிகபட்ச சூரிய ஆற்றல் உற்பத்தியைச் செய்யும் மாநிலம்

  1. தமிழ்நாடு
  2. மேற்கு வங்காளம்
  3. கேரளா
  4. ஆந்திரப்பிரதேசம்

விடை : தமிழ்நாடு

16. பல ஆண்டுகளின் உபயோகத்திற்குப் பிறகு தீர்ந்து போகும் வளம்

  1. இயற்கை
  2. புதுப்பிக்க இயலும்
  3. புதுப்பிக்க இயலாது
  4. புதியவை

விடை : புதுப்பிக்க இயலாது

17. அனல் மின் நிலையம் அதிக அளவிலான …………………. வெளியிடுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.

  1. ஆக்சிஜன்
  2. நைட்ரஜன்
  3. கார்பன்
  4. கார்பன் – டை – ஆக்சைடு

விடை : கார்பன் – டை – ஆக்சைடு

II. காேடிட்ட இடங்களை நிரப்புக

1. எந்த ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாடு ……………………………………………என்று அறியப்படும்.

விடை : பொருளாதார முன்னேற்றம்

2. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தலைமையகம் ……………………………………………

விடை : புது தில்லியில்லுள்ள சாஸ்திரி பவன்

3. இந்தியாவில் அதிக கல்வியறிவு பெற்றுள்ள மாநிலம் ……………………………………………

விடை : கேரளா

4. உலகளவில் மனிதவள மேம்பாட்டு அறிக்கையைத் தயாரித்து வெளியிடுகின்ற நிறுவனம் ……………………………………………

விடை : ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம்

5. An Uncertain Glory என்ற புத்தகத்தை எழுதியவர் ……………………………………………

விடை : அமர்த்தியா சென்

II. பொருத்துக 

1. மேம்போடுவனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம்
2. மனித வளம்புதுப்பிக்க தக்க வளங்கள்
3. சூரிய சக்திதினசரி வாழ்க்கையின் ஒரு பகுதி
4. 1972கல்வி
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – ஆ, 4 – அ

IV. சிறுவினாக்கள்

1. மேம்பாடு என்பதற்கு நீங்கள் என்ன பாெருள் காெள்கிறீர்கள்?

  • மேம்பாடு என்னும் சொல், ஒரு குறிப்பிட்டத் துறையின் அல்லது ஒரு குறிப்பிட்ட நபரின் மேம்பாட்டைக் குறக்கிறது.
  • ஒரு நாட்ட்டின் பொருளாதார முன்னேற்றம் என்பது அதன் பொருளாதார மேம்பாடு என்று அறியப்படுகிறது

2. பாெருளாதார மேம்பாட்டின் குறியீடுகள் என்ன?

  • NNP – நிகர நாட்டு உற்பத்தி
  • PCI – தனி நபர் வருமானம்
  • PPP – வாங்கும் திறன் சமநிலை
  • HDI – மனிதவள மேம்பாட்டுக் குறியீடு

3. ஒரு நாட்டின் வளர்ச்சியைப் பிற நாடுகளுடன் ஒப்பிடுவதற்கு நிகர நாட்டு உற்பத்தி பயனுள்ள அளவீடாகக் கருதப்படாதது ஏன்?

  • ஒரு நாட்டின் வளர்ச்சியைப் பிற நாடுகளுடன் ஒப்பிடுவதற்கு நிகர நாட்டு உற்பத்தி பயனுள்ள அளவீடாகக் கருதப்படவில்லை.
  • ஒவ்வொரு நாடுகளிலும் பல்வேறு இன மக்கள் வாழ்கிறார்கள். நாட்டின் வருவாயை ஒப்பிட்டு சராசரி தனிநபர் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளதென்று சொல்ல முடியாது.
  • நாட்டின் தலா வருமானமே ஒரு நாட்டின் வளர்ச்சியை பிற நாடுகளுடன் ஒப்பிட முடியும்.

4. எந்த ஒரு நாட்டினுடைய முதன்மை வளமாக மனிதவளம் கருதப்படுவது ஏன்?

  • எந்த ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் மனிதவளம் அவசியமாகும்.
  • நாட்டின் பிற வளங்களை உற்பத்தி வளங்களாக மாற்ற கூடிய திறமை மனித வளத்திடம் மட்டுமே உள்ளது.
  • மனிதனின் உடல் திறன், சுகாதார திறன்கள், கல்வி, உடல்நலன், அதிக வருமானத்திற்கான முதலீடு அனைத்தும் மனித வளத்தில் அடங்கும்.

5. பின்வருவனவற்றை விரிவாக்கம் செய்க

  1. PPP =  வாங்கும் திறன் சமநிலை
  2. HDI =  மனித வள மேம்பாட்டு குறியீடு

6. பின்வருவனவற்றை விரிவாக்கம் செய்க

  1. NNP =  நிகர நாட்டு உற்பத்தி
  2. PCI =  தலா வருமானம்

7. சூரிய சக்தி என்றால் என்ன?

சூரிய சக்தி என்பது சூரிய ஒளி மூலம் மின்சக்தியை நேரடியாக சூரிய ஒளியின் மின்னழுத்த செல்கள் மூலம் உற்பத்தி செய்து பயன்படுத்துவது ஆகும்.

V. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளி

1. நிலையான மேம்பாட்டிற்கான கொள்கைகளை விவரி

மரபு சாரா வளங்களை பயன்படுத்துதல்

  • இந்தியாவின் மின்சார தேவைகளுக்கு அனல் மின்சார மற்றும் புனல் மின்சார நிலையங்களையே நாம் சார்ந்துள்ளோம்.
  • இவை கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகின்றது.

சூரிய சக்தி

  • சூரிய ஒளி தகடுகள் சூரிய ஒளியினை மின் சக்தியாக மாற்றுகின்றன.
  • இதன் மூலம் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு தேவையான மின்சாரத்தை தயாரிக்க முடியும்.

சுற்றுச் சூழல் கொள்கைகள்

  • காற்று, நீர் மாசுபாடு, கழிவு மேலாண்மை மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு போன்ற சிக்கல்களை எதிர்கொள்ளும் விதமாக சுற்றுசூழல் கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • இந்தியா குறைவான வளங்களுடன் பொருளாதார மேம்பாட்டை அடைய பல்வேறு சவால்களை எதிர் கொள்ள வேண்டியுள்ளது.
  • இந்தியாவில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்புகள், நீதிமன்ற வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் அதிகாரங்கள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

2. இந்தியாவின் சுற்றுச்சூழல் கொள்கைகளைப் பற்றி விளக்கமாக விவரிக்கவும்

  • இந்தியா தன் சுற்றுச்சூழல் கொள்கைக் கடந்த முப்பது ஆண்டுகளாக உருவாக்கி கொண்டு வந்துள்ளது.காற்று, நீர் மாசுபாடு, கழிவு மேலாண்மை மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு போன்ற சிக்கல்களை எதிர்கொள்ளும் விதமாக சுற்றுசூழல் கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • இந்தியாவில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்புகள், நீதிமன்ற வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் அதிகாரங்கள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
  • இந்திய அரசியலமைப்பின் பிரிவு 51A(g) காடுகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் காட்டு உயிரிகள் மற்றும் இயற்கைச் சூழலைப் பேணவும் மேம்படுத்துவும் அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கவும் இந்தியாவின் உள்ள ஒவ்வொரு குடிமகனும் கடமைப்பட்டுள்ளன என்று வலியுறுத்துகிறது.
  • மக்களுக்கு அதிக வருமானம், திறன் மிக்க கல்வி, சிறந்த சுகாதாரம், ஊட்டச்சத்து உணவு, வறுமையற்ற நிலை, சம வாய்ப்பு ஆகியவற்றைக் கொண்டு வாழ்வதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துவதே இந்தியாவின் சுற்று சூழல் கொள்கையாகும்.

3. புதுப்பிக்கத் தக்க வளங்கள் மற்றும் புதுப்பிக்கத்தகாத வளங்கள் – வேறுபடுத்துக

புதுப்பிக்கத் தக்க வளங்கள்புதுப்பிக்கத்தகாத வளங்கள்
1. மீண்டும் மீண்டும் எளிதாக உற்பத்தி செய்யக்கூடிய வளங்கள் புதுப்பிக்கக்கூடிய வளங்களாகும்.பயன்பாட்டிற்குப் பிறகு மீண்டும் கிடைக்க இயலாத வளங்கள் புதுப்பிக்க இயலாத வளங்கள் ஆகும்.
2. இந்த வளங்கள் புதுப்பிப்பதற்கான ஒரு குறுகிய நேரத்தை எடுத்துக்  கொள்கிறது.இந்த வளங்கள் உருவாக்குவதற்குப் பல நூற்றாண்டுகள்  தேவைப்படுகின்றன.
3. புதுப்பிக்கத் தக்க வளங்கள் மாசற்ற மற்றும் சுற்றுச்சூழல் நலம் காக்கிறது.புதுப்பிக்கத் தகாத வளங்கள் சூழலை மாசுப்படுத்தவும் சேதப்படுத்தவும் செய்கின்றன.
4. எ.கா. சூரியசக்தி, காற்று சக்தி, நீர், மரம், காகிதம்எ.கா. உலோகங்கள், கண்ணாடி, புதைப்படிவ எரிபொருட்கள் (நிலக்கரி, பெட்ரோல், இயற்கை எரிவாயு டீசல்)

4. ஏதேனும் ஐந்து சுற்றுச்சூழல் சட்டங்களையும் அவற்றின் செயல்களையும் விவிரி

இந்தியாவில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்புகள், நீதிமன்ற வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் அதிகாரங்கள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தேசிய சூழல் தீர்ப்பாய சட்டம் 2010

  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காடுகள் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கிறது

பல்லுயிர்மை பாதுகாப்புச் சட்டம் 2002

  • பல்லுயிர்மைகளைப் பாதுகாத்தல்

சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1983

  • சுற்றுச் சூழலைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தலுக்கான அதிகாரம் வழங்குதல்

வன (பாதுகாப்பு) சட்டம் 1980

  • காடுகளை அழித்தலை தடைசெய்தல் மற்றும் காடுகள் அல்லாத பகுதிகளில் மரம் வளர்த்தலை ஊக்கப்படுத்துதல்

வன விலங்குகள் பாதுகாப்பு சட்டம் 1972

  • காட்டு விலங்குகள் மற்றும் பறவைகளுக்குப் பாதுகாப்பு வழங்கிறது

 

சில பயனுள்ள பக்கங்கள்