9th Std Social Science Term 1 Solution | Lesson.3 தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

பாடம் 3. தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

9th Standard Social Science Book Term 1 - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

பாடம் 3. தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

I. சரியான வி்டையைத் தேர்வு செய்க. 

1. சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட எழுத்து முறை யாது?

 1. ஆங்கிலம்
 2. தேவநாகரி
 3. தமிழ்-பிராமி
 4. கிரந்தம்

விடை : தமிழ்-பிராமி

2. தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்ற வியாபாரிகளையும்
குதிரை வணிகர்களையும் பற்றிக் குறிப்பிடுகின்ற, இலங்கையின் பாலி
மாெழி வரலாற்று நூல் எது?

 1. தீபவம்சா
 2. அர்த்தசாஸ்திரா
 3. மகாவம்சா
 4. இண்டிகா

விடை : மகாவம்சா

3. காடாக இருந்த இடங்களை வேளாண் நிலங்களாக மாற்றுதல், நீர்பாச வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய பெருமைகளுக்கு உரிய சோழ அரசன் யார்?

 1. கரிகாலன்
 2. முதலாம் இராஜராஜன்
 3. குலோத்துங்கன்
 4. முதலாம் இராஜேந்திரன்

விடை : கரிகாலன்

4. சேரர்களை பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு எது?

 1. புகளூர்
 2. கிரிநார்
 3. புலிமான் கோம்பை
 4. மதுரை

விடை : புகளூர்

5. “காயல் சிறந்த நகரம்” என்று விவரித்த வெனீஸ் நகரப்பயணி யார்?

 1. வாஸ்கோடகாமா
 2. அல்பெருனி
 3. மார்கோபோலாே
 4. மெகஸ்தனிஸ்

விடை : மார்கோபோலாே

6. i) பொருள் பரிமாற்றத்துக்கான ஊடகமாக நாணயங்கள் சங்க காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.

ii) மெளரியர் காலத்தில் வட இந்தியாவில் இருந்த சாதாரண மக்கள் பிராகிருத மொழி பேசினார்கள்.

iii) ரோாமானிய ஆவணமான வியன்னா பாப்பிரெஸ் முசிறி உடனான வாணிகத்தை குறிப்பிடுகிறது.

iv) தமிழ் இலக்கண நூலான பத்துப்பாட்டில் திணை குறித்த கருத்து இடம் பெற்றுள்ளது.

 1. (i) சரி
 2. (ii) சரி
 3. (i) மற்றும் (ii) சரி
 4. (iii) மற்றும் (iv) சரி

விடை : (i) மற்றும் (ii) சரி

7. (i) பதிற்றுப்பத்து பாண்டிய அரசர்களையும் அவர்களின் ஆட்சிப் பகுதிகளையும் குறித்து சொல்கிறது

(ii) காவிரிப்பூப்பட்டினத்தில் நடந்த வணிக நடவடிக்கைகளை அகநானூறு விவரிக்க்கிறது.

(iii) சோழர்களின் சின்னம்  புலி ஆகும். அவர்கள் புலி உருவம் பொறித்த, சதுர வடிவிலான செம்பு நாணயங்களை வெளியிட்டார்.

(iv) நெய்தல் என்பது மணற்பாங்கான பாலைவனப் பகுதி ஆகும்.

 1. (i) சரி
 2. (ii) மற்றும் (iii) சரி
 3. (iii) சரி
 4. (iv) சரி

விடை : (iii) சரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக. 

1. கற்கள், செப்பேடுகள், நாணயங்கள், மோதிரங்கள் ஆகியவற்றின மீது பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் ___________ ஆகும்.

விடை : கல்வெட்டுச் சான்றுகள்

2. கடந்தகாலச் சமூகங்கள் குறித்து அறிந்து காெள்வதற்கான சான்றுகளாக உள்ள சில பொருட்களை மீட்டெடுப்பதற்கு ஓரிடத்தை முறைப்படி தாேண்டுதல் ____________ ஆகும்.

விடை : தொல்லியல் ஆய்வு

3. சுமேரியர் காலத்தில் ஆட்சிக்கலை மற்றும் பொருளாதாரம் குறித்து கெளடில்யர் எழுதிய நூல் ____________ ஆகும்.

விடை : அர்த்தசாஸ்திரம்

4. _________ என்பது பிரிவு அல்லது வகை என்ற பொருளில் செய்யுள்களில்
பயன்படத்தப்பட்ட கருப்பொருள்; மேலும், இது ஒரு வாழ்விடத்தை அதன்
தனித்தன்மை வாய்ந்த இயற்கைக் கூறுகளுடன் குறிப்பதாகவும் உள்ளது.

விடை : திணை

5. கிரேக்கர்கள், ரோமானியர்கள், மேற்கு ஆசியர்கள் ஆகியாேரை உள்ளடக்கிய மேற்கத்தியர்களை ____________ எனனும் கோல் குறிக்கிறது.

விடை : யவனர்

III. சரியான கூற்றைத் தேர்வு செய்க. 

1. அ) இரும்பை உருக்கியதற்கான சான்றுகள் கொடுமணல், குட்டூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.

ஆ) எரித்ரியன் கடலின் பெரிப்ளஸ் இந்தியா உடனான மிளகு வணிகம் குறித்து கூறுகிறது.

இ) இந்தியாவில் தொடக்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்களில் உருவங்கள் பொறிக்கபட்டிருந்தன. நாணயங்கள் பெரும்பாலும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன

ஈ) சங்ககாலம் வெண்கலக் காலத்தில் வேரூன்றத் தொடங்கியது

சரியான கூற்று : அ) இரும்பை உருக்கியதற்கான சான்றுகள் கொடுமணல், குட்டூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.

2. அ) சேரர்கள் காவிரிப்பகுதியை ஆட்சி செய்தனர். அவர்களின் தலைநகரம் உறையூர் ஆகும்.

ஆ) மாங்குளம் தமிழ்-பிராமி கல்வெட்டுக் குறிப்புகள் அரசன் கரிகாலனைக் குறிப்பிடுகின்றன

இ) தமிழ்-பிராமி கல்வெட்டுக் குறிப்புகளில் காணப்படும் வணிகன், நிகமா ஆகிய சொற்கள் வணிகர்களில் வெவ்வேறு வகையினரைக் குறிப்பிடுவதாகும்.

ஈ) உப்பு விற்றவர்கள் வணிகர்கள் என்று அழைக்கப்பட்டனர்; அவர்கள் வாணிகத்துக்காக மாட்டு வண்டியில் தங்கள் குடும்பத்தினருடன் பயணம் செய்தார்கள்.

சரியான கூற்று : இ) தமிழ்-பிராமி கல்வெட்டுக் குறிப்புகளில் காணப்படும் வணிகன், நிகமா ஆகிய சொற்கள் வணிகர்களில் வெவ்வேறு வகையினரைக் குறிப்பிடுவதாகும்.

IV. பொருத்துக

1. கல்வெட்டியல்முக்கியமான வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பு
2. காலவரிசைக் குறிப்புகள்சங்க காலத் துறைமுகம்
3. மேய்ச்சல் வாழ்க்கைவிலையுயர்ந்த கல்லில் செய்யப்பட்ட ஆபரணம்
4. படைப்பு மணிகள்கல்வெட்டுக் குறிப்புகளை ஆராய்வது
5. அரிக்கமேடுஎகிப்திய அரசர்
விடை : 1 – உ, 2 – அ, 3 – ஈ. 4 – ஆ, 5 – இ

V. சுருக்கமான விடை தருக.

1. தொல்லியல் ஆய்வுக்களங்கள் கடந்த கால வரலாற்றுச் சான்றுகளை அளிக்கின்றன – உன் கருத்துக்களை முன் வைக்கவும்

 • அரிக்கமேடு, அழகன்குளம், கீழடி, கொடுமணல், உறையூர், கரூர், காஞ்சிபுரம், காவிரிப்பூம்பட்டினம், கொற்கை, வசவசமுத்திரம் ஆகிய இடங்களில் மேற்கொண்ட அகழாய்வுகளிலிருந்து சங்க கால மக்களின்
 • பண்டைய மக்கள் வாழ்நத இடங்களை தொல்லியல் ஆய்வுகள் மூலம் மட்டும் தான் ஆய்வு செய்ய முடியும்.

2. சங்க காலம் குறித்து அறிந்துகொள் நாணயங்கள் எந்தளவுக்கு ஒரு முக்கியமான சான்றாக உள்ளன?

 • சேர, சோழ, பாண்டிய அரசர்களின் முத்திரை பொறிக்கப்பட்ட நாணயங்கள் அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவுகின்றன.
 • ரோமானிய நாணயங்கள் சங்க கால கடல் கடந்த வணிகம் பற்றி அறிய உதவுகின்றது.

3. தமிழ் அரசர்கள் மெளரிய அரசின் அதிகாரத்துக்கு உட்படாமல் இருந்தார்கள்- இந்த கூற்றுக்கு உன் விளக்கம் என்ன?

 • சங்க காலத்தில் வேளாண்மை முதலிடத்தில் இருந்தது. நெல், கரும்பு, சிறுதானியங்கள் பயிரிடப்பட்டன.
 • நன்செய்நிலத்திலும், புன்செய் நிலத்திலும் பயிர் தொழில் நடைபெற்றது.
 • செந்நெல், வெண்ணெல், ஐவன நெல் என பல வகையான நெல்கள் இலக்கியங்களில் காணப்படுகின்றன.
 • ஆதிச்சநல்லூரிலும், பொருந்தல் என்ற இடத்திலும் அகழாய்வில் தாழிகளுடன் நெல்லும் கிடைத்துள்ளது.

4. சங்க காலத்தில் விவசாயம் ஒரு முக்கியமான வாழ்வாதாரமாக இருந்தது. இதற்கான காரணங்களை கூறு.

 • யவனர் என்று அழைக்கப்பட்ட கிரேக்க, ரோமானிய மேற்கு ஆசிய வணிகர்கள் பழங்கால தமிழகத்துடன் வணிகத்தொடர்பு வைத்துள்ளனர்.
 • மிளகு போன்ற நறுமணப் பொருட்களும், யானைத் தந்தம், நவமணிகள் தமிழ்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.
 • செங்கடல் துறைமுகங்களான பெர்னிகே, குசேர் அல் காதிம் போன்ற இடங்களில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த பானை ஓடுகள், சுடுமண் பாண்டத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
 • தாய்லாந்து நாட்டில் குவான்லுக் பாட் என்ற இடத்தில் அரிய கல் ஒன்று கிடைத்துள்ளது.

5. அயல் நாடுகளுடனான தொடர்பு பழங்காலத் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தது – இதற்கான சான்றுகளுடன் இக்கூற்றை நிறுவுக

தமிழகமும் வெளிநாட்டுத் தொடர்புகளும்

 • கிழக்கிலும் மேற்கிலும் பல வெளிநாடுகளுடன் தமிழர்கள் வணிகத் தொடர்பு வைத்திருந்தன.
 • ரோமானியக் கப்பல்கள் பருவக்காற்று வீசும் சமயத்தில் மேலைக்கடலான அரபிக்கடலைக் கடந்து தமிழகக் கடற்கரைகளும் வந்தன.
 • மிளகு போன்ற நறுமணப் பொருள்களும், யானைத்தந்தம், நவமணிகள் உள்ளிட்ட அரிய பொருள்களும் ஏற்றுமதமி ஆயின.
 • தங்கம், வெள்ளி, செம்பு உள்ளிட்ட உலோகங்களும் இறக்குமதி செய்யப்பட்டன.
 • இந்தியப் பானையும், தேக்கு மரப்பலகைத் துண்டுகளும், தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த (தமிழக) பானை ஓடு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டன.
 • தென் கிழக்கு ஆசியாவைத் தமிழ் இலக்கியங்கள் சுவர்ணபூமி என்று குறிப்பிடுகின்றனர்.

VI. தலைப்பு வினாக்கள்

ஒவ்வொரு தலைப்பின் கீழேயும் உள்ள அனைத்து வினாக்களுக்கும் விடையளி

1. நடுகற்கள்

அ) மேய்ச்சல் சமூகங்களுக்கிடையே காணப்பட்ட பொதுவான நடைமுறை என்ன?

போர்களத்தில் ஆநீரை கவரும் சண்டைகளிலும் வீரமரணம் அடைந்தவர்கள் நினைவாக நடுகற்கள் நடப்பட்டன.

ஆ) பகைவர்களின் கால்நடைச் செல்வத்தை கவர்ந்தவர்கள் யாவர்?

அருகருகே வாழ்ந்த இனக்குழுவின் மற்ற குழுவினர் மற்ற குழுவினரின் கால்நடைகளைக் கவர்ந்து தமதாக்கி கொண்டனர்

இ) இறந்த வீரர்களை மக்கள் எவ்வாறு நினைவு கூர்ந்தனர்?

இறந்த வீரர்களை மக்கள் நடுகற்கள் நட்டு நினைவு கூர்ந்தனர்

ஈ) நடுகற்களை நிறுவுவதற்கான வழிமுறைகளை விளக்கும் தமிழ் நூல் எது?

நடுகற்களை நிறுவுவதற்கான வழிமுறைகளை விளக்கும் தமிழ் நூல் தொல்காப்பியர்

2. தமிழ் அல்லாத சான்றுகள் (வெளி நாட்டவர் குறிப்புகள்)

அ) தமிழ் அல்லாத சான்றுகள் மூலம் நாம் அறிந்துகாெள்வது என்ன?

பண்டைத் தமிழ் சமூகம் உலகெங்கிலும் விரிந்த தொடர்புகளைக் கொண்டிருந்ததை தமிழ் அல்லாத சான்றுகள் மூலம் நாம் அறிந்து கொள்கிறோம்.

ஆ) பாண்டிய நாட்டிலிருந்து முத்தும் சங்கும் வந்தகைக் கூறும் மெளரியர் காலச் செவ்வியல் நூல் யாது?

பாண்டிய நாட்டிலிருந்து முத்தும் சங்கும் வந்தகைக் கூறும் மெளரியர் காலச் செவ்வியல் நூல் பாண்டிய காவாடகா

இ) காலவரிசையான வரலாற்றுக் குறிப்பு என்றால் என்ன?

முக்கியமான வரலாற்று நிகழ்வுகளைக் கால வரிசையில் விவரிக்கும் குறிப்பு வரலாற்றுக் குறிப்பு எனப்படும்

ஈ) இந்தியாவுக்கும் ரோமானியப் பேரரசுக்கும் இடையே நடந்த மிளகு வணிகம் குறித்துக் கூறியவர் யார்?

இந்தியாவுக்கும் ரோமானியப் பேரரசுக்கும் இடையே நடந்த மிளகு வணிகம் குறித்துக் கூறியவர் ரோமானிய வரலாற்று ஆசியர் பிளினி

3. இந்தியத் தொழில்துறைகள் மற்றும் சங்ககாலக் கைவினைகள்

அ) நகர மயமாக்கத்தின் முக்கியமான கூறுகளைக் கூறுக.

திட்டமிட்ட வடிவமைப்பும், செங்கல் கட்டுமானங்களும் கொண்ட மக்கள் வசிப்பிடம் பற்பல உற்பத்திப் பணிகள் நடைபெறும் இடம்

ஆ) மட்கலம் செய்பவருக்கான இன்னொரு தமிழ் பெயர் என்ன?

மட்கலம் செய்பவருக்கான இன்னொரு தமிழ் பெயர் குயவர்

இ) பானை செய்தலின் வெவ்வேறு வகைகள் யாவை?

 • கரியநிறத்தவை
 • செந்நிற வண்ணம் பூசிய வெள்ளைக் கோடுகள் வரையப்பட்டவை
 • கருப்பு – சிவப்பு நிறத்தவை

ஈ) விவசாயத்திலும் போரிலும் இரும்பின் பயன்பாடுகள் என்ன?

இரும்பால் உழகருவிகளும், வாள், ஈட்டி, கத்தி போன்ற படைக்கருவிகளுகம் தயாரிக்கப்பட்டன

VII. விரிவான விடையளிக்கவும்

1. தமிழகத்தின் அரசியல் சக்திகள் எந்தளவுக்குச் சங்க கால ஆட்சி அமைப்பின் மீது தாக்கம் செலுத்தின?

சங்ககாலத்தின் தாக்கம் தமிழக அரசியலில் காலகாலமாக இருந்து வந்துள்ளது,

குழு வாழ்வும் – குழுத்தலைவனும்

மக்கள் குழுக்களாக வாழ்ந்து வந்தனர். குழுக்களிலிருந்து உருவான தலைவர்களில் இருந்தே வரலாற்றின் தொடக்கக் காலத்தில் வேந்தர்கள் தோன்றினார்கள். வேளிர்கள் என்போர் சங்க காலத்தின் குறுநில மன்னர்கள் ஆவர்.

மூவேந்தர் – அரசியல் நிலப் பிரிவுகள்

சங்க கால ஆட்சியாளர்களில் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்களே முன்னிலையில் இருந்தனர்.

சேரர்

தற்காலத்து கேரளத்தையும், தமிழ்நாட்டின் மேற்கு பகுதிகளையும் ஆட்சி புரிந்தனர்.

 • தலைநகர் – வஞ்சி
 • துறைமுகங்கள் – முசிறி, தொண்டி
 • புகழ்பெற்ற அரசர் – சேரன் செங்குட்டுவன்
 • இலச்சினை – வில்லும் அம்பும்

சோழர்

காவிரி வடிநிலப்பகுதியையும், தமிழ்நாட்டின் வட பகுதிகளையும் ஆட்சி புரிந்தனர்.

 • தலைநகர் -உறையூர
 • துறைமுகங்கள் – பூம்புகார் (எ) காவிரிபூம்பட்டினம்
 • புகழ்பெற்ற அரசர் – கரிகால சோழன்
 • இலச்சினை – புலி

சேரர்

தென் தமிழகத்தை ஆட்சி புரிந்தனர். தமிழ்ச்சங்கங்களை நிறுவி ஆதரவு அளித்தார்கள்

 • தலைநகர் – மதுரை
 • புகழ்பெற்ற அரசர் – பாண்டியன் நெடுஞ்செழியன்
 • இலச்சினை – மீன்

குறுநில மன்னர்கள்

பாரி, காரி, ஓரி, நள்ளி, பேகன், ஆய், அதியமான் போன்ற குறுநில மன்னர்கள் மூவேந்தர்களோடு துணைநின்றோ, மூவேந்தர்களை எதிர்த்தோ ஆட்சி புரிந்தனர்.

2. சங்க காலத்தில் தொழில்களும் கைவினைக் கலைகளும் எவ்வாறு பொருளாதாரத்தை மேம்படுத்தின?

வேளாண்மைத் தொழில்

சங்க காலத்தில் வேளாண்மை முதலிடத்தில் இருந்தது. நெல், கரும்பு, சிறுதானியங்கள் பயிரிடப்பட்டன. நன்செய் நிலத்தில் நெல்லும், புன்செய் நிலத்தில் தானியங்களும் பயிரிடப்பட்டது.

கால்நடை வளர்ப்பு

பசு, எருமை, காளை உள்ளிட்ட மாடுகள், வெள்ளாடு, செம்மறி ஆடுகளை வளர்த்தார்கள்.

கைவினை மற்றும் தொழிற் கூடங்கள்

 • மட்கலங்கள் செய்தல், கல்லினால் ஆன அணிகலன்கள், தங்க ஆபரணங்கள், கண்ணாடி மணிகள், முத்துக்குளித்தல், சங்கு வளையல்கள், துணி நெசவு போன்ற பல துறைகளில் சங்ககால மக்கள் திறன் பெற்றிருந்தனர்.
 • மட்கலங்கள் கரிய நிறத்தவை. செந்நிற வண்ணம் பூசிய வெள்ளைக் கோடுகள் வரையப்பட்டவை. கருப்பு – சிவப்பு நிறத்தவை என பலவிதமாக தயாரிக்ப்பட்டன.
 • இரும்பால் உழகருவிகளும், வாள், ஈட்டி, கத்தி போன்ற படைக் கருவிகளுகம் தயாரிக்கப்பட்டன.
 • செல்வந்தர்கள் செம்பு, தங்கம், வெள்ளி போன்ற  உலோகங்களில் செய்த நகைகளில் நவமணிகளையும் பதித்து அணிந்தனர்.
 • கண்ணாடி மணிகள் பல்வேறு வண்ணங்களிலும் வடிவங்களிலும் தயாரிக்கப்பட்டன.

 

சில பயனுள்ள பக்கங்கள்