9th Std Social Science Solution | Lesson.29 தமிழக மக்களும் வேளாண்மையும்

பாடம் 29. தமிழக மக்களும் வேளாண்மையும்

9th Std Social Science Book Back Answers in Tamil Lesson-29

பாடம் 29. தமிழக மக்களும் வேளாண்மையும் 

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் .

1. பயிர் செய்யப்படும் பரப்பளவில் பாசன வசதி பெற்ற நிலத்தின் பரப்பளவு

  1. 27%
  2. 57%
  3. 28%
  4. 49%

விடை: 57%

2. இவற்றுள் உணவல்லாத பயிர் எது?

  1. கம்பு
  2. கேழ்வரகு
  3. சோளம்
  4. தென்னை

விடை: தென்னை

3. 2014-15ஆம் ஆண்டில் நெல் உற்பத்தித் திறன்

  1. 3,039 கி.கி
  2. 4,429 கி.கி
  3. 2,775 கி.கி
  4. 3,519 கி.கி

விடை: 4,429 கி.கி

4. தமிழகத்தின் வேளாண் உற்பத்தித்திறன் மற்றும் உணவு உற்பத்தி ஆகிய இரண்டுமே

  1. குறைந்துள்ளது
  2. எதிர்மறையாக உள்ளது
  3. நிலையாக உள்ளது
  4. அதிகரித்துள்ளது

விடை: அதிகரித்துள்ளது

5. தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை பொழியும் மாதங்கள்

  1. ஆகஸ்டு – அக்டோபர்
  2. செப்டம்பர் – நவம்பர்
  3. அக்டோபர் – டிசம்பர்
  4. நவம்பர் – ஜனவரி

விடை: அக்டோபர் – டிசம்பர்

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. தமிழக மக்களில் பெரும்பான்மையினர் __________ தொழிலையே சார்ந்திருக்கின்றனர்.

விடை: வேளாண்

2. தமிழகத்திற்குப் பெரும் நீர் ஆதாரமாக இருப்பது __________ பருவ மழையாகும்.

விடை: வட கிழக்கு

3. தமிழகத்தின் மொத்தப் புவியியல் பரப்பு __________ ஹெக்டேர்கள் ஆகும்.

விடை: 1,30,33,000

பொருத்துக

1. உணவல்லாத பயிர்கள்79,38,000
2. பருப்பு வகைகள் செய்வோர்ஒரு ஹெக்டேருக்கும் குறைவான பரப்பில் சாகுபடி
3. வடகிழக்குப் பருவமழைஅக்டோபர் – டிசம்பர்
4. குறு விவசாயிகள்உளுந்து, துவரை, பாசிப்பயிறு
5. 2015 இல் விவசாயிகளின் எண்ணிக்கைதென்னை
விடை : 1 – உ, 2 – ஈ, 3 – இ, 4 – ஆ, 5 – அ

குறுகிய வினாக்களுக்கு விடையளி

1. உணவுப்பயிர்களுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகளும், உணவல்லாத பயிர்களுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகளும் எழுதுக.

உணவுப்பயிர்கள் – நெல், சோளம், கம்பு, கேழ்வரகு

உணவல்லாத பயிர்கள்  – தென்னை, பனை

2. பயிர்கள் பயிரிடப்படும் பரப்பளவு மாறுவதற்கான காரணிகள் யாவை?

  1. மழைப்பொழிவு
  2. நீர் இருப்பு
  3. காலநிலை
  4. சந்தை விலை

3. நிலத்தடி நீரின் அளவையும் தன்மையையும் யாரால் கண்காணிக்கப்படுகிறது?

நிலத்தடி நீரின் அளவையும் தன்மையையும் நிலத்தடி நீர் வாரியம் கண்காணிக்கிறது.

4. பயிர்களின் விளைச்சல் எதனைச் சார்ந்து இருக்கிறது?

பயிர்களின் விளைச்சல் பயிரிடப்படும் பரப்பளவு மட்டுமின்றி பயிர்களின் உற்பத்தித் திறனையும் சார்ந்து இருக்கிறது

5. சிறு மற்றும் குறு விவசாயிகளை வேறுபடுத்துக.

சிறு விவசாயிகள்குறு விவசாயிகள்
1-2 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்வோர்1 ஹெக்டேருக்கும் குறைவான பரப்பில் சாகுபடி செய்வோர்
2. இவர்கள் விவசாயம் செய்யும் பரப்பளவு 26 விழுக்காடு ஆகும்இவர்கள் விவசாயம் செய்யும் பரப்பளவு மொத்த சாகுபடி பரப்பளவில் 36 விழுக்காடு ஆகும்
3. தமிழகத்தில் சிறு விவசாயிகள் 14% உள்ளனர்தமிழகத்தில் குறு விவசாயிகள் 14% உள்ளனர்

6. நெல் உற்பத்தித் திறனை 1965 முதல் 2015 வரை பட்டியலிடுக.

ஆண்டுநெல்லின் உற்பத்தித்திறன்
1965-661,409 கிலோ
1975-762,029 கிலோ
10 ஆண்டுகளுக்கு பிறகு2,712 கிலோ
2010–113,039 கிலோ
2014-154,429 கிலோ

விரிவான விடையளி

1. தமிழகத்தின் நீர் ஆதாரம் பற்றி சிறு குறிப்பு வரைக.

  • தமிழகத்தில் வற்றாத நதிகள் இல்லை. தமிழகம் தனது தேவைக்கான நீரை வடகிழக்கு மற்றும் தென்மேற்குப் பருவ மழைகளிலிருந்து பெறுகிறது
  • தமிழகத்திற்குப் பெரும் நீர் ஆதாரமாக இருப்பது வடகிழக்குப் பருவ (அக்டோர் – டிசம்பர்) மழையாகும்.
  • வடகிழக்குப் பருவமழை நீரைத் தேக்கங்களிலும், கண்மாய்கள், ஏரிகளிலும் தேக்கி வேளாண்மையை மேற்கொள்கின்றனர்.
  • தமிழக வேளாண்மைக்கான நீரை வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள், கிணறுகள் ஆகியவை வழங்குகின்றன.
  • தமிழகத்தில் 2,239 வாய்க்கால்கள் ஏறத்தாழ 9,750 கிலோமீட்டர் தூரம் பாய்கின்றன.
  • சிறு ஏரிகள் 7,985ம் பெரிய ஏரிகள் 33,142ம் உள்ளன.
  • திறந்த வெளி கிணறுகள் 15 இலட்சம் உள்ளன.
  • 3,54,000 ஆழ்துளைக் கிணறுகள் பயன்படுத்தப்படுகின்றன.
  • இந்த ஆதாரங்களைக் கொண்டே தமிழகத்தில் வேளாண்மை மேற்கொள்ளப்படுகிறது.

2. வேளாண்மைக்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் யாவை?

  • தமிழக வேளாண்மை பெரும் அளவிற்கு நிலத்தடி நீரையே நம்பி இருக்கிறது.
  • நிலத்தடி நீரை வேளாண்மைக்குப் பயன்படுத்துவது பல இன்னல்களையும் உருவாக்கவல்லது.
  • நிலத்தடியிலிருந்து நீரை எடுக்கும் அளவும் மழைப் பாெழிவின் பாேது நிலத்தடிக்குச் செல்லும் நீரின் அளவும் சமமாக இருந்தால் துன்பம் இல்லை.
  • மாறாக எடுக்கும் அளவு கூடக்கூட நீர் மட்டம் கீழே செல்லும். ஒன்று நீர் முற்றிலும் வற்றிப் போகலாம் அல்லது பாசனத்திற்கு உதவாத நீராக மாறவும் வாய்ப்புண்டு.

3. வேளாண் நீர் ஆதாரம் பற்றி ஆய்வு செய்க.

  • தமிழகத்தில் 2,239 வாய்க்கால்கள் ஏறத்தாழ 9,750 கிலோமீட்டர் தூரம் பாய்கின்றன.
  • சிறு ஏரிகள் 7,985ம் பெரிய ஏரிகள் 33,142ம் உள்ளன.
  • திறந்த வெளி கிணறுகள் 15 இலட்சம் உள்ளன.
  • இவையல்லாது 3,54,000 ஆழ்துளைக் கிணறுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஆதாரங்களைக் கொண்டே தமிழகத்தில் வேளாண்மை மேற்கொள்ளப்படுகிறது.
  • ஏரிகளிலிருந்து பாசன வசதி பெறும் நிலத்தின் பரப்பளவுதான் மிகவும் குறைவானது.
  • ஏறத்தாழ 3.68 லட்சம் ஹெக்டேர் பரப்பு ஏரிகளின் வாயிலாக நீர் பெறுகின்றன. வாய்க்கால்கள் 6.68 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவிற்கு நீர் வழங்குகின்றன.
  • ஆழ்துளைக் கிணறுகள் 4.93 இலட்சம் ஹெக்டேருக்கும் திறந்த வெளிக் கிணறுகள் 11.91 இலட்சம் ஹெக்டர் நிலத்திற்கும் பாசன வசதி வழங்குகின்றன.

4. தமிழத்தில் விளையும் பயிர்களைப் பட்டியலிடுக.

  • தமிழகத்தில் பயிரிடப்பட்ட நிலத்தின் மொத்தப் பரப்பளவில் 2014 – 15 ஆம் ஆண்டில் 59இலட்சத்து 94 ஆயிரம் ஹெக்டேர்களாக இருந்தது. இதில் 76 விழுக்காடு பரப்பளவில் உணவல்லாத பயிர்கள் பயிரிடப்பட்டன.
  • நெல் சாகுபடி தான் பெரிய அளவில் 30 விழுக்காடு மேற்காெள்ளப்படுகிறது.
  • இதர உணவுப் பயிர்கள் 12 விழுக்காடு பரப்பிலும் பயிரிடப்படுகின்றன. சிறுதானிய சாகுபடி குறைந்த அளவிலேயே நடைபெறுகிறது.
  • சோளம் 7 விழுக்காடு நிலப்பரப்பிலும் கம்பு ஒரு விழுக்காடு பரப்பிலும் கேழ்வரகு 1.7 விழுக்காடு பரப்பிலும் இதர சிறுதானியங்கள் 6 விழுக்காடு பரப்பிலும் 2014 – 15 ஆண்டில் பயிரிடப்பட்டன.
  • மழைப்பொழிவு, நீர் இருப்பு, காலநிலை, சந்தை விலை போன்ற பல காரணிகளின் விளைவாகப் பயிர்கள் பயிரடப்படும் பரப்பளவு ஆண்டுக்கு ஆண்டு மாறும்.

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment