9th Std Social Science Term 3 Solution | Lesson.2 தொழிற்புரட்சி

பாடம் 2. தொழிற்புரட்சி

9th Standard Social Science Book Term 3 - தொழிற்புரட்சி

பாடம் 2. தொழிற்புரட்சி

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் .

1. நீராவி படகுப் போக்குவரத்துச் சேவையை நிறுவியவர் யார்?

  1. ஆர்க்ரைட்
  2. சாமுவேல் கிராம்ப்டன்
  3. ராபர்ட் ஃபுல்டன்
  4. ஜேம்ஸ் வாட்

விடை : ராபர்ட் ஃபுல்டன்

2. மான்செஸ்டர் நகரம் ஏன் ஜவுளி உற்பத்திக்கு உகந்த இடமாகப் கருதப்பட்டது?

  1. நிலம் கிடைக்கப் பெற்றமை
  2. மிகுந்த மனித வளம்
  3. நல்ல வாழ்க்கைச் சூழல்
  4. குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை

விடை : குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை

3. தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார்?

  1. எலியாஸ் ஹோவே
  2. எலி- விட்னி
  3. சாமுவேல் கிராம்டன்
  4. ஹம்ப்ரி டேவி

விடை : எலியாஸ் ஹோவே

4. நீராவி இயந்திரத்தை பிரான்சில் அறிமுகம் செய்த குடும்பம் எது?

  1. டி வெண்டெல்
  2. டி ஹிண்டல்
  3. டி ஆர்மன்
  4. டி ரினால்ட்

விடை : டி வெண்டெல்

5. சிலேட்டரை அமெரிக்கக் தொழில் புரட்சியின் தந்தை என அழைத்தவர் யார்?

  1. எப்.டி. ரூஸ்வெல்ட்
  2. ஆண்ட்ரூ ஜேக்சன்
  3. வின்ஸ்டன் சர்ச்சில்
  4. உட்ரோ வில்சன்

விடை : ஆண்ட்ரூ ஜேக்சன்

6. கீழ்க் காண்பனவற்றில் எது ஹே மார்க்கெட் நிகழ்ச்சியின் நினைவுநாளாகக் கடைபிடிக்கப்படுகிறது?

  1. சுதந்திர தினம்
  2. உழவர் தினம்
  3. உழைப்பாளர் தினம்
  4. தியாகிகள் தினம்

விடை : உழைப்பாளர் தினம்

7. எங்கு ஜோல் வெரெய்ன் சுங்க ஒன்றியம் உருவாக்கப்பட்டது?

  1. இங்கிலாந்து
  2. ஜெர்மனி
  3. பிரான்ஸ்
  4. அமெரிக்கா

விடை : ஜெர்மனி

8. பிரான்சில் முதல் மோட்டார் வாகனங்களை உற்பத்தி செய்தவர் யார்?

  1. லூயி ரெனால்ட்
  2. ஆர்மாண்ட் பீயுஜ்காட்
  3. தாமஸ் ஆல்வா எடிசன்
  4. மெக் ஆடம்

விடை : லூயி ரெனால்ட்

9. எக்கண்டுபிடிப்பு பருத்தியிலிருந்து கொட்டைகளைப் பிரித்தது?

  1. உருட்டாலைகள்
  2. பஞ்சுக் கடைசல் இயந்திரம்
  3. ஸ்பின்னிங் மியூல்
  4. இயந்திர நூற்புக் கருவி

விடை : பஞ்சுக் கடைசல் இயந்திரம்

10. கீழ்க்காண்பனவற்றில் எது இரும்பை உருக்குவதற்காக முற்காலத்தில் பயன்படுத்தப்பட்டது?

  1. கற்கரி
  2. கரி
  3. விறகு
  4. காகிதம்

விடை : கரி

II கோடிட்ட இடங்களை நிரப்புக

1. _______ இங்கிலாந்தில் ஆடவர்க்கு வாக்குரிமை கோரியது.

விடை : சாசன இயக்கம்

2. ________ உலகம் முழுவதும் சாலைகள் அமைக்கப்படும் முறையை மாற்றியமைத்தது.

விடை : மெக் ஆடமைஸ்டு சாலை முறை

3. விரைவாகவும் குறைந்த செலவிலும் எஃகை உற்பத்தி செய்யும் முறையை ________ கண்டுபிடித்தார்.

விடை : ஹென்றிபெஸ்ஸிமர்

4. விஞ்ஞான சோசலிஸத்தை முன்வைத்தவர் ______ ஆவார்.

விடை : கார்ல்மார்க்ஸ்

5. ஜெர்மனியில் முதல் இருப்புப்பாதை ______ ஆண்டில் இயக்கப்பட்டது.

விடை : 1835

III) பொருத்துக.

1. பென்ஸ்அமெரிக்கா
2. பாதுகாப்பு விளக்குலூயி ரெனால்ட்
3. நான்கு சக்கர வாகனம்ஹம்பரி டேவி
4. மாபெரும் ரயில்வேலங்காஷையர் ஊழியர் போராட்டம்
5. நிலக்கரி வயல்ஜெர்மனி
விடை : 1 – உ, 2 – இ, 3 – ஆ, 4 – அ, 5 – ஈ

III சரியான கூற்றினைக் கண்டுபிடி

i) இங்கிலாந்துச் சுரங்க முதலாளிகள் சுரங்கங்களுக்குள் நீர்க்கசிவு ஏற்படும் பிரச்சனையை எதிர்கொண்டனர்.

ii) இவ்வேலையில் மனித உழைப்பை ஈடுபடுத்துவது குறைவான செலவுடையதாக இருக்கும்.

iii) சுரங்கங்களிலிருந்து நீரை வெளியேற்றும் நீராவி இயந்திரத்தை நியூட்டன் கண்டுபிடித்தார்.

iv) சுரங்கங்களிலிருந்து நிலக்கரியைப் பெறவேண்டுமானால் நீரை வெளியேற்றியாக வேண்டும்.

  1. i) சரி
  2. ii) மற்றும் iiii) சரி
  3. i) மற்றும் iv) சரி
  4. iii) சரி

விடை : i) மற்றும் iv) சரி

2. i) தங்கள் உரிமைகளைப் பெறுவதற்காகத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை உருவாக்கிக்கொண்டனர்.

ii) ஜெர்மனியின் அரசியல் முறை தொழிற்புரட்சிக்குக், குறிப்பிடத்தக்க முக்கியச் சவாலாக அமைந்திருந்தது.

iii) முதலாளிகளைப் பாதுகாப்பதற்காகக் கார்ல் மார்க்ஸ் சோசலிஸத்தை முன் வைத்தார்

iv) ஜெர்மனியில் இயற்கை வளங்கள் ஏதுமில்லை

  1. i) சரி
  2. ii) மற்றும் iii) சரி
  3. i) மற்றும் iv) சரி
  4. iii) சரி

விடை : i) சரி

3. கூற்று : விடுமுறை பெறுவதற்குத் தொழிலாளர் உரிமை பெற்றிருந்தனர்

காரணம் : பணியாளர்களைப் பாதுகாக்கச் சட்டங்கள் இருந்தன.

  1. கூற்று சரி காரணம் தவறு
  2. கூற்று, காரணம் இரண்டுமே தவறு
  3. கூற்று, காரணம் இரண்டுமே சரி
  4. கூற்று சரி காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமல்ல.

விடை : கூற்று, காரணம் இரண்டுமே தவறு

4. கூற்று : சிலேட்டர் அமெரிக்கத் தொழிற்புரட்சியின் தந்தை என அழைக்கப்படுகிறார்

காரணம் : அவருடைய நூற்பாலையின் நகலாகப் பல நூற்பாலைகள் உருவாயின. அவருடைய தொழில் நுட்பம் பிரபலமானது.

  1. கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
  2. கூற்று தவறு, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
  3. கூற்று, காரணம் இரண்டுமே தவறு
  4. கூற்று, காரணம் இரண்டுமே சரி

விடை : கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

V. ஒவ்வொரு தலைப்பின் கீழும் கொடுக்கப்பட்டுள்ள எல்லாக் கேள்விகளுக்கு விடையளிக்கவும்

1. தொழிலாளர் இயக்கம்

அ) தொழிலாளர் அமைப்புகள் உருவாவதைத் தடை செய்த சட்டம் எது?

கூட்டுச்சட்டம

ஆ) சொத்துக்கள் உடைய மத்திய தரவர்க்கத்திற்கு வாக்குரிமை வழங்கிய மசோதாவின் பெயர் என்ன?

சாசன இயக்கம்

இ) தொழிலாளர் இணைவதைத் தடை செய்யும் சட்டம் எந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது?

1824

ஈ) சாசனவாதிகளின் கோரிக்கைகள் யாவை?

  • 21 வயதான அனைவருக்கும் வாக்குரிமை
  • ரகசிய வாக்கெடுப்பு மூலம் நாடாளுமன்றத் தேர்தல்
  • நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தகுதியில் சொத்துரிமையை நீக்குதல்
  • ஆண்டுதோறும் நாடாளுமன்றத் தேர்தல்
  • சமமான பிரதிநிதித்துவம்

2. போக்குவரத்து மற்றும் தகவல் தொழில்நுட்பம்

அ) இங்கிலாந்தில் முதன்முதலாகத் திறக்கப்பட்ட இருப்புப்பாதை எது?

ஸ்டாக்டன், டார்லிங்டன் ஆகிய நகரங்களுக்கு இடையே திறக்கப்பட்டது (1825)

ஆ) உற்பத்திப் பண்டங்கள் எவ்வாறு சந்தைக்கு எடுத்துச்செல்லப்பட்டன?

உற்பத்திப் பொருட்கள் புதிய கால்வாய்கள், சாலைகள், இரும்புப் பாதைகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன.

இ) நீராவி இயந்திர ரயிலைக் கண்டுபிடித்தவர் யார்

ராபர்ட் ஃபுல்டன்

ஈ) நியூயார்க்கிலிருந்து ஆல்பனி வரை சென்ற நீராவிப் படகின் பெயரினை எழுது.

கிளர்மோண்ட்

VI கீழ்க்காணும் கேள்விகளுக்குச் சுருக்கமாகப் பதிலளிக்கவும்

1. தொழிற்புரட்சியின் போது இங்கிலாந்தில் தொழிலாளர்களின் வாழ்விடங்களின் நிலை எவ்வாறு இருந்தன?

  • தொழிலாளர்கள் மிகவும் சிறிய, அழுக்கடைந்த, சுகாதாரமற்ற வீடுகளில் வாழ்ந்தனர்.
  • தொழிலாளர்கள் விரும்பினாலும் கூடத் தமது சுற்றுப்புறத்தைச் சுத்தப்படுத்தவோ மாற்றவோ அவர்களுக்கு நேரம் இருக்கவில்லை.
  • இதனால் டைஃபாயிடு, காலரா, பெரியம்மை போன்ற நோய்கள் பரவின.

2. இங்கிலாந்தில் நகரமயமாதலுக்கான காரணங்களைக் கூறு.

  • தொழிற்புரட்சியின் வருகையைத் தொடர்ந்து, உலகின் தொழிற்பட்டறையாக இங்கிலாந்து மாறியது.
  • வேளாண்மை உற்பத்தியில் பொதுவான வீழ்ச்சி காணப்பட்டது.
  • மக்கள் கிராமங்களிலிருந்து தொழில் நகரங்களை நோக்கிச் செல்லத் தொடங்கினர்.
  • கிராமப்பகுதிகளிலிருந்து இடப்பெயர்வு அதிகரிக்க, அதிகரிக்க, சிறிய நகரங்கள் பெருநகரங்களாயின.

3. ஹே மார்க்கெட் படுகொலை பற்றிக் குறிப்பு வரைக.

  • சிகாகோவின் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் 1886 மே மாதம் 4ஆம் தேதி ஒரு தொழிலாளர் ஆர்ப்பாட்டம் நடந்தது
  • நாளொன்றக்கு எட்டு மணி நேர வேலை கோரிக்கையை முன் அமைதியாகத் தொடங்கிய இக்கூட்டத்தில காவல்துறை பல சுற்று துப்பாக்கி நடத்திப் பலரைச் சுட்டுக் கொன்றது.
  • இந்தத் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மே 1 தொழிலாளர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

4. லூயி ரெனால்ட் பற்றி நீங்கள் அறிந்தது என்ன?

  • பிரான்ஸ் நாட்டை சார்ந்த லூயி ரெனால்ட் என்பவர் 1898இல்  நான்கு சக்கர வாகனத்தை உருவாக்கினார்.
  • சொசைட்டெ ரெனால்ட் ஃபெரெர்ஸ் என்ற தனது நிறுவனத்தின் மூலம் அதிக எண்ணிக்கையில் வாகனங்களைத் தயாரித்தார்.

5. தொழிற்புரட்சியின் இரு முக்கிய விளைவுகளைக் கோடிட்டுக் காட்டுக.

  • வணிக விரிவாக்கம்
  • உணவு உற்பத்தி அதிகரிப்பு
  • ஆலைத் தொழிலாளர்கள் எனும் ஒரு புதிய வர்க்கம் உருவாகியது
  • போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு வளர்ச்சியடைந்தது.

VII விரிவாக விடையளிக்கவும்

1. அமெரிக்காவில் இரண்டாவது தொழிற்புரட்சி நடைபெற்றதற்கான காரணங்களை வரிசைப்படுத்துக.

  • உடலுழைப்பிலிருந்து தொழில்நுட்பம் மற்றும் இயந்திரம் சார்ந்த உற்பத்திக்கு மாறியது அமெரிக்கத் தொழிற்புரட்சியின் தொடக்கமாகும்.
  • 19ஆம் நூற்றாண்டில் அமெரிக்கர்கள் புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் உருவாக்குவதி முனைந்தது.
  • ராபர்ட் ஃபுல்டன் நீராவிப் படகுப் போக்குவரத்தினைத் தொடங்கினார். சாமுவேல் மோர்ஸ் தந்தி, எலியாஸ் ஹோவே தையல் இயந்திரம், தாமல் ஆல்வா எடிசன் மின் விளக்கு, அலக்சாண்டர் கிரஹாம்பெல் தொலைபேசி அகிய கண்டுபிடிப்புகள் முழு உலகையும் அடையாளர் காண முடியாத அளவிற்கு மாற்றின.
  • அமெரிக்காவின் பெரிய அளவிலான முதல் கனரக எஃகு உற்பத்தி ஆண்ட்ரு கார்னேகி என்பவரால் தொடங்கப்பட்டது.
  • இது மக்கள் போக்கவரத்து, சரக்கு போக்குவரத்து மூலப்பொருட்களை எடுத்து வருதல் ஆகியவற்றுக்கு பயன்பட்டது.
  • இதன் விளைவாக அமெரிக்காவில் எதிர்பாாரத வண்ணம் நகரமயமாக்கும், எல்லை விரிவடைதல்களும் நடந்தன.
  • ஒரு கிராமப்புற சமூகமாகத் திகழ்ந்த அமெரிக்கா நகர்ப்புறச் சமூகமாக மாறுவதை தொழிற்புரட்சி விரைவுபடுத்தியது.

2. இங்கிலாந்தின் தொழிற்புரட்சியினால் இந்தியாவில் ஏற்பட்ட விளைவுகள் யாவை?

  • வங்கத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரிகள் மற்றும் அவர்களின் எஜெண்டு கரங்களில் சிக்கிப் பெரும் துன்பத்துக்கு ஆளாயினர். அவர்கள் முதலில், உற்பத்திப்பொருள்களை ஓரிடம் விட்டு வேறிடம் எடுத்துச்செல்ல போக்குவரத்துத் தீர்வை செலுத்த வேண்டும் என்று இந்திய நெசவாளர்கள் மீது கடும் சுமையைத் திணித்தனர்.
  • இங்கிலாந்தின் தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் வணிகப் பயிர்களை மட்டும் சாகுபடி செய்ய வற்புறுத்தினர்.
  • இங்கிலாந்தின்
    தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட பருத்தி ஆடைகளை இந்தியச் சந்தைகளில் குவித்து அழித்தனர்.
  • கைத்தறியில் நெய்யப்பட்ட பருத்தி ஆடைகளுக்கான சந்தை இழப்பால் இந்தியா பண்டைய உற்பத்தித் துறையில் வகித்து வந்திருந்த இடத்தை இழந்து மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மட்டுமே மாறியது.
  • பிரிட்டன் துணி ஆலைகளில் உற்பத்தியான துணிகள் இந்தியச் சந்தைகளில் குறைவான விலைக்கு விற்கப்பட்டமையால் இந்திய நெசவாளர்கள் வேலையற்றுத் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உணவுக்கும் வழியற்றவர்களாயினர்.

பயனுள்ள பக்கங்கள்