Tamil Nadu 9th Standard Tamil Book Term 1  ஆறாம் திணை Solution | Lesson 1.4

பாடம் 1.4. ஆறாம் திணை

நூல்வெளி

  • எழுத்தாளர் அ.முத்துலிங்கம் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்துக்கு அருகிலுள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர்.
  • பணி தொடர்பாக பல நாடுகளுக்குப்  பயணித்திருக்கும் இவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார்.
  • அக்கா, மகாராஜாவின் ரயில்வண்டி,  திகடசக்கரம் உள்ளிட்ட பல சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கின்றார்.
  • வம்சவிருத்தி என்னும் சிறுகதை தொகுப்பிற்காக 1996 தமிழ்நாடு அரசின் முதல் பரிசை பெறறவர்.
  • வடக்குவீதி என்னும் சிறுகதை தொகுப்பிற்காக 1999-ல் இலங்கை அரசின் சாகித்தியப் பரிசையும் பெற்றிருக்கின்றார்.

பாடநூல் வினாக்கள்

நெடுவினா

புலம் பெயர்ந்த மனிதர்களின் அகத்திலும் புறத்திலும் எங்ஙனம் பாதிப்பு தெரிகின்றது என்பதை ஆறாம் திணை வாயிலாக விவரிக்க.

முன்னுரை:

புலம் பெயர்ந்த மனிதர்களின் அகத்திலும் புறத்திலும் எங்ஙனம் பாதிப்பு தெரிகின்றது என்பதை ஆறாம் திணை வாயிலாகக் காண்போம்.

முத்துலிங்கம்

இலங்கையில் உள்நாட்டுப் போர் காலம் அது. அப்போது முத்துலிங்கத்தின் குடும்பம் அங்கு இருந்தது.எப்போதும் தூங்காது,உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருந்தனர்.

அகதிகள் முகாம்

அனைவரும் அகதிகள் முகாமிற்குச் சென்றனர். யாரோ போட்ட உடைகள்கைதிகளைப் போல வரிசையில் நின்று சாப்பாட்டிற்கு கை ஏந்துகின்றனர். அங்கு இரண்டு கரண்டி தான் சோறு கிடைக்கும்.

வேறு நாடு

உயிர் வாழ வேறு நாட்டிற்குச் சென்றனர். 30வயதுள்ள புலம்பெயர்ந்த தமிழ் இளைஞர்.பல நாடுகளில் சிறை,பனிச்சரிவு. அடி உதை அனுபவித்தார். எங்கும் வேலை கிடைக்கவில்லை.8வது இடம் கேட்ட கேள்விக்கு, “இன்று வரைக்கும் உயிர் தப்பி வாழ்கிறேன் என்றால் அது என் திறமை * என்றார். அவர் இப்போது வரை கனரக வாகனம் ஓட்டுகிறார்.

முடிவுரை

புலம் பெயர்ந்த மனிதர்களின் அகத்திலும் புறத்திலும் எங்ஙனம் பாதிப்பு தெரிகின்றது என் பதை ஆறாம் திணை வாயிலாகக் காண்போம்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. கனடாவில் புதிய சாலைக்கு சூட்டப்பட்ட பெயர்

  1. காவற்புரைச்சாலை
  2. கூழைக்கடை வீதி
  3. அகச்சாலை
  4. வன்னிவீதி

விடை : வன்னிவீதி

2.  அ.முத்துலிங்கம் குறிப்பிடும் ஆறாம் திணை

  1. காடும் காடு சார்ந்த இடமும்
  2. மலையும் மலை சார்ந்த இடமும்
  3. பனியும் பனி சார்ந்த இடமும்
  4. கடலும் கடல் சார்ந்த இடமும்

விடை : பனியும் பனி சார்ந்த இடமும்

3. பின்வரும் அயலகத் தமிழர் தினத்துடன் செயல்படுத்தப்படும் திட்டம்

  1. அயலக தமிழர் மண் திட்டம்
  2. தாய்மண் திட்டம்
  3. உள்ளாட்சி திட்டம்
  4. மக்கள் திட்டம்

விடை : தாய்மண் திட்டம்

4. ராபின்சன் குருசோ என்ற நூலின் ஆசிரியர் 

  1. பாரதியார்
  2. டேனியல் டிஃபோ
  3. சாண்டில்யன்
  4. சுரதா

விடை : டேனியல் டிஃபோ

5. கடல்புறா நூலின் ஆசிரியர்

  1. பாரதியார்
  2. டேனியல் டிஃபோ
  3. சாண்டில்யன்
  4. சுரதா

விடை : சாண்டில்யன்

6. ஒரு இனத்தை அழிப்பதற்கு அவர்கள் நூலை எரித்தால் போதும் என்று குறிப்பிடும் நூல்

  1. கடல்புறா
  2. ராபின்சன் குருசோ
  3. பறவை
  4. ஃபாரன்ஹீட் 451

விடை : ஃபாரன்ஹீட் 451

7. தமிழர் பாரம்பரிய நாள்

  1. ஜனவரி 13
  2. பிப்ரவரி 13
  3. ஜனவரி 14
  4. பிப்ரவரி 14

விடை : ஜனவரி 14

8. அயலகத் தமிழர் தினம் கொண்டாடப்படும் நாள்

  1. பிப்ரவரி 13
  2. பிப்ரவரி 12
  3. ஜனவரி 12
  4. ஜனவரி 13

விடை : ஜனவரி 12

9. ______ என்னும் சிறுகதை தொகுப்பிற்காக அ.முத்துலிங்கம் இலங்கை அரசின் சாகித்தியப் பரிசை பெற்றார்.

  1. திகட சக்கரம்
  2. அக்கா
  3. வடக்குவீதி
  4. வம்சவிருத்தி

விடை : வடக்குவீதி

சிறுவினா

1. எழுத்தாளர் அ.முத்துலிங்கம் பற்றிய குறிப்பு வரைக

  • எழுத்தாளர் அ.முத்துலிங்கம் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்துக்கு அருகில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர்.
  • பணி தொடர்பாக பல நாடுகளுக்குப்  பயணித்திருக்கும் இவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார்.
  • அக்கா, மகாராஜாவின் ரயில்வண்டி,  திகடசக்கரம் உள்ளிட்ட பல சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கின்றார்.
  • வம்சவிருந்தி என்னும் சிறுகதை தொகுப்பிற்காக 1996 தமிழநாடு அரசின் முதல் பரிசை பெறறவர்.
  • வடக்குவீதி என்னும் சிறுகதை தொகுப்பிற்காக 1999-ல் இலங்கை அரசின் சாகித்தியப் பரிசையும் பெற்றிருக்கின்றார்.

2. அயலகத் தமிழர் தினம் பற்றி குறிப்பு வரைக

பல்வேறு அயலகப் பகுதிகளில் உள்ள தமிழர்களை ஒருங்கிணைக்கவும், அவர்களின் பங்களிப்பை ஏற்கவும் வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து ஒவ்வொர் ஆண்டும் ஜனவரி 12ஆம் நாள் அயலகத் தமிழர் தினமாகத் கொண்டாடப்படுகிறது. இத்தினமானது இணையவழியில் கொண்டாடப்படுகிறது. மேலும் தாய் மண் திட்டம் இதனுடன் செயல்படுத்தப்படுகிறது.

 

சில பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment