Tamil Nadu 9th Standard Tamil Book Term 1 எழுத்து – அளபெடை Solution | Lesson 1.5

பாடம் 1.5 எழுத்து – அளபெடை

மதிப்பீடு

பலவுள் தெரிக

பின்வருவனவற்றில் அளபெடை இடம்பெறாத தொடர் எது?

  1. குக்கூ எனக் குயில் கூவியது.
  2. கொக்கரக்கோஒ எனச் சேவல் கூவியது
  3. அண்ணாஅ என அழைத்தான்
  4. ஓடி வா ஓடி வா

விடை: ஓடி வா ஓடி வா

குறு வினா

அளபடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?

அளபடை இரண்டு வகைப்படும். அவை

உயிரளபெடை, ஒற்றளபெடை

கூடுதல் வினாக்கள்

குறு வினா

1. சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

சார்பெழுத்துகள் பத்து வகைப்படும். அவை

  • உயிர்மெய்
  • ஆய்தம்
  • உயிரளபெடை
  • ஒற்றளபெடை
  • குற்றியலுகரம்
  • குற்றியலிகரம்
  • ஐகாரக்குறுக்கம்
  • ஔகாரக்குறுக்கம்
  • மகரக்குறுக்கம்
  • ஆய்தக்குறுக்கம்

2. குறுக்கங்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

குறுக்கங்கள் நான்கு வகைப்படும். அவை

ஐகாரக்குறுக்கம், ஔகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம்

3. உயிரளபெடை என்றால் என்ன?

செய்யுளில் ஓசை குறையும்போது, அதனை நிறைவு செய்ய , மொழிக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கிற உயிர் நெட்டெழுத்துகள் ஏழும் தத்தம் அளவில் நீண்டு ஒலிக்கும். அதைக் குறிக்க நெட்டெழுத்துகளின் இனமான குற்றெழுத்துகள் அவற்றின் பின்னால் வரும். இவ்வாறு வருவது உயிரளபெடை எனப்படும்.

4. செய்யுளிசை அளபெடை என்றால் என்ன?

செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய, நெட்டெழுத்துகள் அளபெடுத்தலைச் செய்யுளிசை அளபெடை என்போம்.

இதனை இசைநிறை அளபெடை என்றும் கூறுவர்

சான்று : உழாஅர் (உழா / அர்)

5. ஒற்றளபெடை என்றால் என்ன? சான்று தருக

செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவுசெய்ய மெய்யெழுத்துகளான ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள் ஆகிய பத்தும், ஃ என்னும் ஆய்த எழுத்தும் அளபெடுப்பது ஒற்றளபெடை ஆகும்.

மொழியை ஆள்வோம்!

மாெழிபெயர்க்க

1. Linguistics

விடை: மொழியியல்

2. Literature

விடை: இலக்கியம்

3. Philologist

விடை: மெய்யிலாளர் (தத்துவவியலாளர்)

4. polyglot

விடை: பன்மொழியாரளர்கள்

5. Phonologist

விடை: ஒலிச்சின்ன வல்லுநர்

6. Phonetics

விடை: ஒலிப்பியல்

அடைப்புக்குள் உள்ள சொற்களைக் கொண்டு கோடிட்ட இடங்களில் பொருத்தமான வினைமுற்றாக மாற்றி எழுதுக.

1. இந்திய மொழிகளின் மூலமும் வேருமாகத் தமிழ் ______ (திகழ்)

விடை: திகழ்கிறது

2. வைதேகி நாளை நடைபெறும் கவியரங்கில் ______ (கலந்துகொள்)

விடை: கலந்துகொள்வாள்

3. உலகில் மூவாயிரம் மொழிகள் ______ (பேசு)

விடை: பேசப்படுகின்றன

4. குழந்தைகள் அனைவரும் சுற்றுலா ______ (செல்)

விடை: சென்றனர்

5. தவறுகளைத் ____________ (திருத்து)

விடை: திருத்துவேன்

தொடரைப் பழமொழிகொண்டு நிறைவு செய்க.

1. இளமையில் கல்வி ______

விடை: சிலைமேல் எழுத்து

2. சித்திரமும் கைப்பழக்கம் ______

விடை: செந்தமிழும் நாப்பழக்கம்

3. கல்லாடம் படித்தவரோடு ______

விடை: சொல்லாடாதே

4. கற்றோர்க்குச் சென்ற ______

விடை: இடமெல்லாம் சிறப்பு

கொடுக்கப்பட்டுள்ள பாடலைப் படித்து நயம் பாராட்டுக.

விடுகின்ற நெடுவானில், கடற்பரப்பில்
விண்ணோங்கு பெருமலையில், பள்ளத்தாக்கில்
பொழிகின்ற புனவருவிப் பொழிலில், காட்டில்
புல்வெளியில், நல்வயலில், விலங்கில் புள்ளில்
தெரிகின்ற பொருளிவெல்லாம் திகழ்ந்து நெஞ்சில்
தெவிட்டாத நுண்பாட்டே, தூய்மை ஊற்றே.
அழகு என்னும் பேரொழுங்கே, மெய்யே, மக்கள்
அகத்திலும் நீ குடியிருக்க வேண்டுவேனே!

-ம.இலெ. தங்கப்பா

திரண்ட கருத்து

வானம், கடல், மலை. அருவி, புல்வெளி,வயல், விலங்கு, பறவை என அனைத்திலும் காணுகின்ற பாடலே! தூய்மை ஊற்றே! மக்கள் உள்ளத்தில் நிலையாக இருக்க வேண்டுகின்றேன்.

பொருள் நயம்

தெவிட்டாத நுண்பாட்டே, தூய்மை ஊற்றே என்பதில் பொருள் நயம் சிறப்பாக உள்ளது.

சொல் நயம்

காட்டில், புல்வெளியில்,நல்வயலில் ஆகிய சொற்கள் சொல் நயம் தோன்ற உள்ளது.

மோனை நயம்

முதல் எழுத்து ஒரே மாதிரி வருவது மோனை.

  • விரிகின்ற – விண்ணோங்கு
  • தெரிகின்ற – தெவிட்டாத

எதுகை நயம்

இரண்டாம் எழுத்து ஒரே மாதிரி வருவது எதுகை.

  • பொழிகின்ற பொழிலில்
  • புல்வெளியில் நல்வயலில்

அணி நயம்

இப்பாடலில் உயர்வு நவிற்சி அணி பயின்று வந்துள்ளது.

சந்த நயம்

சிந்து சந்தத்தில் இப்பாடல் அமைந்துள்ளது.

சுவை நயம்

பெருமிதச் சுவையில் இப்பாடல் அமைந்துள்ளது.

மொழியை விளையாடு

அந்தாதிச் சொற்களை உருவாக்குக.

அத்தி, குருவி, விருது, இனிப்பு, வரிசையாக

1. அத்தி

விடை: அத்தி – திகைப்பு – புகழ்ச்சி – சிரிப்பு – புன்னகை – கைபேசி – சிறப்பு – புதுமை – மைனா

2. குருவி

விடை: குருவி – விளக்கு – குரங்கு-குறும்பு – புங்கை – கைதி – திகைப்பு -புத்தி – திண்ணை

3. விருது

விடை: விருது – துடிப்பு – புலம்பு – புதுவை – வைகை – கையெழுத்து – துடித்த – தங்கு – குரங்கு

4. இனிப்பு 

விடை: இனிப்பு – புளிப்பு – புதியது – துணிவு – உடைமை – மைஞ்சு – சுக்கு – கும்மி – மிக்கவை

5. வரிசையாக

விடை: வரிசையாக – கல்வி – விருது – துடுக்கு – குரங்கு – குத்து – துதி – திங்கள்

கொடுக்கப்பட்ட வேர்ச்சொற்களைப் பயன்படுத்தி விடுபட்ட கட்டங்களில் காலத்திற்கேற்ற வினைமுற்றுகளை நிறைவு செய்க

வா
இறந்த காலம்நிகழ்காலம்எதிர்காலம்
நான்வந்தேன்வருகிறேன்வருவேன்
நாங்கள்வந்தோம்வருகிறோம்வருவோம்
நீவந்தாய்வருகிறாய்வருவாய்
நீங்கள்வந்தீர்கள்வருகிறீர்கள்வருவீர்கள்
அவன்வந்தான்வருகிறான்வருவான்
அவள்வந்தாள்வருகிறாள்வருவாள்
அவர்வந்தார்வருகிறார்வருவார்
அவர்கள்வந்தார்கள்வருகிறார்கள்வருவார்கள்
அதுவந்தவருகிறதுவரும்
அவைவந்தனவருகின்றனவரும்

அகராதியில் காண்க

1. நயவாமை

விடை: விரும்பாமை

2. கிளத்தல்

விடை: சிறப்பித்து கூறுதல், புலப்படக் கூறுதல்

3. கேழ்பு

விடை: உவமை, ஒளி, நிறம்

4. செம்மல்

விடை: தலைவன், தலைமை, இறைவன், சிவன்

5. புரிசை

விடை: மதில், அரண், அரணம், இஞ்சி

கலைச்சொல் அறிவோம்

  • Comparative Grammar – ஒப்பிலக்கணம்
  • Vowels – உயிரொலிகள்
  • Lexicon – பேரகராதி
  • Consonants – மெய்யொலிகள்

அறிவை விரிவு செய்

  • திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் – ராபர்ட் கால்டுவெல்
  • மொழிபெயர்ப்பு ஒலிபெயர்ப்பும் – மணவை முஸ்தபா
  • தமிழ்நடைக் கையேடு

 

சில பயனுள்ள பக்கங்கள்