Tamil Nadu 9th Standard Tamil Book Term 1 பட்ட மரம் Solution | Lesson 2.2

பாடம் 2.2. பட்ட மரம்

 9ஆம் வகுப்பு தமிழ், பட்ட மரம் பாட விடைகள் - 2023

உயிருக்கு வேர் > 2.2. பட்ட மரம்

கவிஞர் தமிழ் ஒளி (1924–1965) புதுவையில் பிறந்தவர்.

இயற்பெயர் விஜயரங்கம்

பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதானின் மாணவராகவும் விளங்கியவர்.

மக்களுக்காகப் பல படைப்புகளை உருவாக்கியவர்.

நிலைபெற்ற சிலை, வீராயி, கவிஞனின் காதல், மே தின வருக, கண்ணப்பன் கிளிகள், குருவிப்பட்டி, தமிழர் சமுதாயம், மாதவி காவியம் முதலானவை இவரின் படைப்புகளுள் குறிப்பிடத்தக்கவை.

இப்பாடப்பகுதி தமிழ் ஒளியின் கவிதைகள் என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

I. சொல்லும் பொருளும்

  • குந்த – உட்கார
  • கந்தம் – மணம்
  • மிசை – மேல்
  • விசனம் – கவலை
  • எழில் – அழகு
  • துயர் – துன்பம்

II. இலக்கணக்குறிப்பு

  • வெந்து – வினையெச்சம்
  • வெம்பி – வினையெச்சம்
  • எய்தி – வினையெச்சம்
  • மூடுபனி – வினைத்தொகை
  • ஆடுகிளை – வினைத்தொகை
  • வெறுங்கனவு – பண்புத்தொகை

III. பகுபத உறுப்பிலக்கம்

1. விரித்த = விரி + த் + த் +அ

  • விரி – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்தகால இடைநிலை
  • அ – பெயரச்ச விகுதி

2. குமைந்தனை = குமை + த்(ந்) + த் +அன் +ஐ

  • குமை – பகுதி
  • த் – சந்தி
  • த்-ந் ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • அன் – சாரியை
  • ஐ – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி

IV. பலவுள் தெரிக

1. மிசை என்பதன் எதிர்ச்சொல் என்ன?

  1. கீழே
  2. மேலே
  3. இசை
  4. வசை

விடை : கீழே

V. சிறு வினா

பட்டமரத்தின் வருத்தங்கள் யாவை?

  • அமர நிழல் கொடுத்தேன்.
  • நறுமண மலர் கொடுத்தேன்
  • பறவைகள் என் மீது அமர்ந்து பாடல் புனையும்.
  • என் கிளை மீது ஏறி சிறுவர்கள் குதிரை விளையாடுவார்கள்.
  • இவையெல்லாம் போய் இன்று பட்டமரமாய் போய்விட்டேன் என்று பட்டமரம் வருந்தியது.

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடத்தை நிரப்புக

1. ___________ பாரதியாரின் வழித்தோன்றல் ஆவார்

விடை : தமிழ் ஒளி

2. பாரதிதாசனின் மாணவராக விளங்கியவர்  ___________

விடை : தமிழ் ஒளி

3. பட்டமரம் கவிதை இடம் பெறும் நூல்  ___________

விடை : தமிழ் ஒளியின் கவிதைகள்

4. நம் முன்னோரின் வாழ்க்கை ___________ இயைந்தது.

விடை : இயற்கையோடு

5. மரம் என்பது ___________ மிகவும் இன்றியமையாதது.

விடை : மனித வாழ்வில்

II. குறு வினா

1. நம் முன்னோரின் வாழ்க்கை எதனோடு இயைந்தது?

நம் முன்னோரின் வாழ்க்கை இயற்கையோடு இயைந்தது.

2. நம் முன்னோர்கள் எவற்றையெல்லாம் போற்றி காத்தனர்?

நம் முன்னோர்கள் மரம், செடி, கொடிகளையும் பாேற்றிக் காத்தனர்.

3. எது மனித வாழ்வில் மிகவும் இன்றியமையாதது?

மரம் என்பது மனித வாழ்வில் மிகவும் இன்றியமையாதது.

4. பட்ட மரம் என்ற தலைப்பில் அமைந்த கவிதை இடம் பெறும் நூல் எது?

பட்ட மரம் என்ற தலைப்பில் அமைந்த கவிதை இடம் பெறும் நூல் “தமிழ் ஒளியின் கவிதைகள்”

5. பட்ட மரம் என்ற தலைப்பில் அமைந்த கவிதை இடம் பெறும் நூலின் ஆசிரியர் யார்?

பட்ட மரம் என்ற தலைப்பில் அமைந்த கவிதை இடம் பெறும் நூலின் ஆசிரியர் “தமிழ் ஒளி (விஜயரங்கம்)”

6. மரம் எதைப்போல் எய்தி உழன்றது?

காலமாகிய பயுல் தாக்கம்போது அழுது கை நீட்டிக் கதறும் மனிதன் போல மரம் உழன்றது.

7. மரங்கள் இல்லை என்றால் நமக்கு எவை கிடைக்காமல் போய்விடும்?

மரங்கள் இல்லை என்றால் நமக்கு உயிர்வளி கிடைக்காமல் போய்விடும்.

பட்ட மரம் – பாடல்

மொட்டைக் கிளையொடு
நின்று தினம்பெரு
மூச்சு விடும்மரமே !

வெட்டப் படும்ஒரு
நாள்வரு மென்று
விசனம் அடைந்தனையோ ?

குந்த நிழல்தரக்
கந்த மலர்தரக்
கூரை விரித்தஇலை !

வெந்து கருகிட
இந்த நிறம்வர
வெம்பிக் குமைந்தனையோ ?

கட்டை யெனும்பெயர்
உற்றுக் கொடுந்துயர்
பட்டுக் கருகினையே !

பட்டை யெனும்உடை
இற்றுக் கிழிந்தெழில்
முற்றும் இழந்தனையே !

காலம் எனும்புயல்
சீறி எதிர்க்கக்
கலங்கும் ஒருமனிதன்

ஓலமி டக்கரம்
நீட்டிய போல்இடர்
எய்தி உழன்றனையே!

பாடும் பறவைகள்
கூடி உனக்கொரு
பாடல் புனைந்ததுவும்

மூடு பனித்திரை
யூடு புவிக்கொரு
மோகங் கொடுத்ததுவும்

ஆடுங் கிளைமிசை
ஏறிச் சிறுவர்
குதிரை விடுத்ததுவும்

ஏடு தருங்கதை
யாக முடிந்தன!
இன்று வெறுங்கனவே!

-கவிஞர் தமிழ்ஒளி

சில பயனுள்ள பக்கங்கள்