Tamil Nadu 9th Standard Tamil Book Term 1 தண்ணீர் Solution | Lesson 2.5

பாடம் 2.5 தண்ணீர்

நூல்வெளி

கந்தர்வனின் இயற்பெயர் நாகலிங்கம்.

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

தமிழ்நாடு அரசின் கருவூலக் கணக்குத்துறையில் பணியாற்றிவர்.

கவிதைகளையும் எழுதியிருக்கிறார்.

சாசனம், ஒவ்வொரு கல்லாய், கொம்பன் முதலியவை இவரது குறிப்பிடத் தகுந்த சிறுகதைத் தொகுப்புகள்.

பாடநூல் மதிப்பீட்டு வினா

தண்ணீர் – கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக

முன்னுரை

கந்தர்வன் அவர்கள் படைத்த சிறுகதைகளி்ல் ஒன்று தண்ணீர். குடிநீர்ப் பற்றாக்குறையால் ஏற்படும் அவலங்களைப் பற்றி இக்கதை விரிவாக எடுத்துரைக்கிறது.

ஊரில் தண்ணீர்ப் பஞ்சம்

ஊரில் கிணறுகளில் ஒரு பொட்டுத தண்ணீர் இல்லை. தண்ணீருக்காக மூன்று மைல் தூரம் நடந்து சென்று பிலாப்பட்டியில் தான் தண்ணீர்ப் பிடித்து வர வேண்டும். ஊருணியில நீர் ஊற ஊறத்தான் தண்ணீர்ப் பிடிக்க முடியும். பிலாப்பட்டி மக்கள் மதியம் வரை தண்ணீர் எடுப்பார்கள். பிறகு தான் வெளியூர்க்காரர்கள் பிடிக்க வேண்டும்

ரயில் தண்ணீர்

தண்ணீர் எங்கு இல்லை என்றாலும் ரயிலுகு்கு மட்டும் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றிவிடுவார்கள். எனவே குடிநீருக்கு ரயில் வண்டியில் பிடிக்கலாம் என்று ஊர்க்காரர்கள் முடிவு செய்தார்கள். இந்திராவும் மற்ற பெண்களும் ஆளுக்கு இரண்டு, மூன்று குடங்களை எடுத்துக்  கொண்டு ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு புகை வண்டி நிலையம் நோக்கி ஓடுவார்கள். ஸ்டேசன் மாஸ்டர் எப்பவும் இவர்களைத் திட்டுக் கொண்டே இருப்பார்

இந்திராவின் ஆதங்கம்

வழக்கம் போல பாசஞ்சர் வண்டி வந்ததும், முட்டி மோதி இந்திராவும் தண்ணீர்ப் பிடிக்க பெட்டியில் ஏறினாள். தண்ணீர்ப படிப்பதற்குள் இன்ஜின் ஊதல் ஒலி கேட்டது பிளாட்பாரம் முனை நெருங்கியதும் குதித்து விடலாம் என்று நினைத்து மீதிக் குடத்தை  நிறைத்து குதிக்கும் போது வடக்த்தியப் பெண் இவள் தற்கொலைக்கு முயல்வதாக நினைத்து பெட்டிக்குள் இந்திராவை இழுத்து விடுகிறாள். வண்டி வேகமாக செல்கின்றது. தண்ணீரப் பிடிக்கப் போனவர்கள் எல்லாம் வந்துவிட்டார்கள். வண்டியும் போய்விட்டுது. ஐயோ! இந்திரா வண்டியோட போய்ட்டா என்று அலறி அடித்து அம்மா, ஐயா, சின்னவன், உறவினர், ஊர்க்காரர்கள் எல்லாம் வண்டி பிடித்து இராமநாதபுரம் நிலையத்திற்குச் சென்றார்கள். இந்திராவின் அம்மா எம்புள்ள எந்த ரயில் தண்டவாளத்தில்  கிடக்கிறாளோ? நானும் சாகிறேன் என்று ஓட இந்திரா திட்டிக் கொண்டே குடத்தைக் தூக்கிட்டு வருகிறாள். மகளே இவ்வளவு நடந்தும் இத சுமந்து வரனுமா என்று ஐயா கூற, நாளைக்கு வரைக்கும் தண்ணிக்கு எங்கப் போறது என்றாள் இந்திரா.

முடிவுரை

தண்ணீர் இது கதையல்ல. எதிர்காலத்தின் பிம்பமாய் உண்மையை எச்சரிக்கை செய்கிறது. தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, தண்ணீர்ப் பற்றாக்குறையைக் களைய முயற்சிப்போம்.

கூடுதல் வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

1. நாகலிங்கம் என்னும் இயற்பெயர் கொண்டவர்

  1. கல்யாண்ஜி
  2. கந்தர்வன்
  3. தமிழன்பன்
  4. பிச்சமூர்த்தி

விடை: கந்தர்வன்

2. கந்தர்வன் _________ மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

  1. இராமநாதபுரம்
  2. தூத்துக்குடி
  3. கன்னியாகுமரி
  4. திருநெல்வேலி

விடை: இராமநாதபுரம்

3. தமிழ்நாடு அரசின் கருவூலக் கணக்குத்துறையில் பணியாற்றிவர்.

  1. கல்யாண்ஜி
  2. தமிழன்பன்
  3. பிச்சமூர்த்தி
  4. கந்தர்வன்

விடை: கந்தர்வன்

4. கந்தர்வன் படைப்புகளில் பொருந்தாதது

  1. சாசனம்
  2. ஒவ்வொரு கல்லாய்
  3. தமிழின்பனம்
  4. கொம்பன்

விடை: தமிழின்பனம்

 

சில பயனுள்ள பக்கங்கள்