Tamil Nadu 9th Standard Tamil Book Term 1 துணைவினைகள் Solution | Lesson 2.6

பாடம் 2.6. துணைவினைகள்

I. பலவுள் தெரிக.

பொருத்தமான வினையை எடுத்து எழுதுக.

கதிர் அலுவலகத்திலிருந்து விரைவாக —————. அவன் பையன் பள்ளியிலிருந்து இன்னும் ————–.

  1. வந்தான் , வருகிறான்
  2. வந்துவிட்டான், வரவில்லை
  3. வந்தான் , வருவான்
  4. வருவான், வரமாட்டான்

விடை : வந்துவிட்டான், வரவில்லை

கூடுதல் வினாக்கள்

I. பலவுள் தெரிக

1. தமிழில் ________ துணை வினைகள் உள்ளன

  1. 45
  2. 40
  3. 30
  4. 12

விடை: 40

2. வினைச் சொற்களை அமைப்பின் அடிப்படையில் _________ வகைப்படுத்தலாம்.

  1. 3
  2. 2
  3. 4
  4. 5

விடை: 2

3. தமிழ் மற்றும் ஜப்பானிய மொழிகளில் துணைவினைகள் முதல் வினைகளுக்குப் ________ இடம் பெறும்.

  1. முன்பே
  2. பின்பே
  3. இடையில்
  4. நடுவில்

விடை: பின்பே

II. குறு வினா

1. வினைச்சொற்களை அமைப்பின் அடிப்படையில் எத்தனை வகைப்படுத்தலாம்?

வினைச்சொற்களை அமைப்பின் அடிப்படையில் தனி வினை, கூட்டு வினை என இரு வகைப்படுத்தலாம்.

2. தனி வினை என்றால் என்ன?

தனிவினையடிகளைக் கொண்ட வினைச்சொற்களைத் தனிவினை என்பர்.

3. கூட்டு வினை என்றால் என்ன?

கூட்டுவினையடிகளைக் கொண்ட வினைச்சொற்களைக் கூட்டுவினை என்பர்.

4. முதல் வினை என்றால் என்ன?

ஒரு கூட்டுவினையின் முதல் உறுப்பாக வந்துதன் அடிப்படைப் பொருளைத் தரும் வினை முதல் வினை (MAIN VERB) எனப்படும்.

5. துணை வினை என்றால் என்ன?

ஒரு கூட்டு வினையின் இரண்டாவது உறுப்பாக வந்து தன் அடிப்படைப் பொருளை விட்டுவிட்டு முதல் வினைக்குத் துணையாக வேறு இலக்கணப் பொருளைத் தரும் வினை துணை வினை எனப்படும்.

II. சிறு வினா

துணைவினைகளின் பண்புகள் யாவை

1. துணை வினைகள் பேசுவோரின் மனநிலை, செயலின் தன்மை போன்றவற்றைப் புலப்படுத்துகின்றன.

2. இவை முதல் வினையைச் சார்ந்து அதன் வினைப்பொருண்மைக்கு மெருகூட்டுகின்றன.

3. பேச்சு மொழியிலேயே துணைவினைகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

கற்பவை கற்றபின்…

I. பொருத்தமான துணைவினைகளைப் பயன்படுத்துக.

1. மனிதனையும் விலங்குகளையும் (வேறு) _____________ மொழியாகும்.

விடை : வேறுபடுத்துவது

2. திராவிட மொழிகள் சில, பொதுப் பண்புகளைப் (பெறு) _____________

விடை : பெற்றிருக்கின்றன

3. காலந்தோறும் தன்னைப் (புதுப்பித்து) _____________ மொழி தமிழ்.

விடை : புதுபித்துக் கொள்ளும்

4. என் ஐயத்தைக் கேட்பதற்கு எவரேனும் கிடைக்கமாட்டார்களா என்று (தேடு) _____________

விடை : தேடிக் கொண்டிருக்கிறேன்

II. துணைவினைகளைப் பயன்படுத்திப் புதிய தொடர்களை எழுதுக.

(வேண்டும், பார், உள், வா, விட)

1. வேண்டும் – சான்றோர் காட்டிய பாதையில் நடக்க _________

விடை : வேண்டும்

2. பார் – படத்தை உற்றுப் _________

விடை : பார்

3. உள் – கடல் நீரினை _________ வாங்கியது

விடை : உள்

4. வா – நாளை என் வீட்டுக்கு _________

விடை : வா

5. விடு – நான் நாளை பள்ளிக்கு வந்து _________ வேன்

விடை : விடு

III. பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துகையில் துணைவினைகளைச் சேர்க்கிறோம். பிறமொழிச் சொற்களைத் தமிழ்ச் சொற்களாக மாற்றி, ஏற்ற துணைவினைகளை இட்டு எழுதுக

பிற மொழிச் சொற்கள்தமிழ்ச் சொற்கள்துணை வினை சொற்களுடன்
மார்னிங் எழுந்துகாலையில் எழுந்துகாலையில் எழுந்துவிட்டாள்
பிரஷ் பண்ணிபல் துலக்கிபல் துலக்கி முடித்தாள்
யூனிஃபார்ம் போட்டு ஸ்கூலுக்குப் போனாள்சீருடை அணிந்து பள்ளிக்கு போனாள்சீருடை அணிந்து கொண்டாள்.

பள்ளிக்கு பறப்பட்டுப் போனாள்.

மொழியை ஆள்வோம்!

I. இணையான தமிழ்ப் பழமொழிகளை எழுதுக.

1. Every flower is a soul blossoming in nature – Gerard De Nerval

மொழி பெயர்க்க : எல்லா பூக்களும் இயற்கையில் உயிருடன் இருக்கிறது

பழமொழி : மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு

2. Sunset is still my favourite colour, and rainbow is second – Mattie Stepanek

மொழி பெயர்க்க : சூரிய அஸ்தமனேம் முதலில் எனக்கு பிடித்த வண்ணம், வானவில்லின் வண்ணம் அடுத்த நிலை தான்

பழமொழி : தோல்வியே வெற்றிக்கு அடிப்படை (அ) ஒன்றன் மறைவில் இருந்தே புதியன தோன்றும்

3. An early morning walk is a blessing for the whole day – Henry David Thoreau

மொழி பெயர்க்க : அதிகாலையில் நடைப்பயிற்சி அந்நாளுக்கே ஒரு வரமாகும்

பழமொழி : நன்றாய் தொடங்கும் செயல் நன்றாகவே முடியம் (அ) சிறந்த தொடக்கமே வெற்றிக்கு அடிப்படை

4. Just living is not enough… One must have sunshine, freedom, and a little flower – Hans Christian Anderson

மொழி பெயர்க்க : வெறுமையான வாழ்வு மட்டும் போதாது, ஒவ்வொருவருக்குள்ளும் ஒளி, ஆற்றல், விடுதலை மலர் என இருத்தல் வேண்டும்.

பழமொழி : இலட்சியமுள்ள வாழ்வே சிறந்த வாழ்வாகும். வெறும் வாழ்வு வீணாகும்

II. பிழை நீக்கி எழுதுக.

1. சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டியது. 

விடை : சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார்.

2. மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தாள்.

விடை : மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தான்.

3. மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றன.

விடை : மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றது.

4. நீலனும் மாலனும் அவசரகாலத் தொடர்புக்கான தொலைப்பேசி எண்களின் பட்டியலை வைத்திருக்கிறோம்.

விடை : நீலனும் மாலனும் அவசரகாலத் தொடர்புக்கான தொலைப்பேசி எண்களின் பட்டியலை வைத்திருக்கின்றனர்.

5. சூறாவளியின் போது மேல்மாடியில் தங்காமல் தரைத்தளத்திலேயே தங்கியதால் தப்பிப்பான்.

விடை : சூறாவளியின் போது மேல்மாடியில் தங்காமல் தரைத்தளத்திலேயே தங்கியதால் தப்பித்தான்.

III. பழமொழிகளைப் பயன்படுத்திச் சொற்றொடர் அமைக்க.

1. நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல.

விடை : நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல படிக்கும் நல்லார் சொன்ன அறிவுரை தீயவருக்கும் போய் சேர்ந்தது.

2. தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும்.

விடை : தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் போலப் பிறர் கூறும் அறிவுரை கடினமானாலும் அது நம்மை நல்வழிப்படுத்தும்.

3. மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும்.

விடை : மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும் போல கடினமான செயலையும் விடாமுயற்சியுடன் செய்தால் வெற்றி பெற முடியும்

4. கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது

விடை : கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது போல பிறருக்கு நாம் சொல்லிக் கொடுப்பதால் நம்முடைய அறிவானது குறைபடாது.

மொழியோடு விளையாடு

I. சொல்லுக்குள் சொல் தேடுக.

1. ஆற்றங்கரையோரம்

  • ஆறு
  • கரை
  • ஓரம்

2. கடையெழுவள்ளல்கள்

  • கடை
  • ஏழு
  • வள்ளல்கள்

3. எடுப்பார்கைப்பிள்ளை

  • எடு
  • பார்
  • கை
  • பிள்ளை

4. தமிழ்விடுதூது

  • தமிழ்
  • விடு
  • தூது

5. பாய்மரக்கப்பல்

  • பாய்
  • மரம்
  • கப்பல்
  • கல்

6. எட்டுக்கால்பூச்சி

  • எட்டு
  • கால்
  • பூச்சி

II. அகராதியில் காண்க.

1. கந்தி

  • கழுகு, வாசம், கந்தகம், தவப்பெண்

2. நெடில்

  • நீளம், மூங்கில், நெட்டெழுத்து

3. பாலி

  • ஆலமரம், அணை, எல்லை, ஒரு பாஷை, பாற்பசு, செம்பருத்தி, கரை

4. மகி

  • பூமி, பசு

5. கம்புள்

  • சங்கு, கம்பங்கோழி, வானம்பாடி

6. கைச்சாத்து

  • கையொப்பம், பொருள்பட்டி

III. சொற்களை இணைத்துத் தொடர்களை விரிவுபடுத்துக.

1. அரிசி போடுகிறேன்.

  • புறாவுக்கு அரிசி போடுகிறேன்.
  • காலையில் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.
  • நாள்தோறும் காலையில் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.
  • நான் நாள்தோறும் காலையில் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.
  • நான் நாள்தோறும் காலையில் மறக்காமல் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.
  • நான் நாள்தோறும் காலையில் ஒருபோதும் மறக்காமல் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.

2. மழை பெய்தது.

  • மாலையில் மழை பெய்ததது.
  • நேற்று மாலையில் மழை பெய்ததது.
  • நாள்தோறும் மாலையில் மழை பெய்ததது.
  • நாள்தோறும் மாலையில் விடாமல் மழை பெய்ததது.
  • நாள்தோறும் மாலையில் விடாமல் தொடர்ந்து மழை பெய்ததது.
  • நாள்தோறும் மாலையில் தவறாமல் மழை பெய்ததது.

3. வானவில்லைப் பார்த்தேன்.

  • மாலையில் வானவில்லைப் பார்த்தேன்.
  • நாள்தோறும் மாலையில் வானவில்லைப் பார்த்தேன்.
  • நான் மாலையில் மழைபெய்யும் போது வானவில்லைப் பார்த்தேன்.
  • நான் மாலையில் மழைபெய்யும் போது கிழக்குப் பக்கம் வானவில் பார்த்தேன்.
  • நான் நாள்தோறும் மாலையில் மழைபெய்யும் போது கிழக்குப் பக்கம் வானவில் பார்த்தேன்.
  • நான் நாள்தோறும் மாலையில் மறக்காமல் மழைபெய்யும் போது கிழக்குப் பக்கம் வானவில் பார்த்தேன்.

4. குழந்தை சிரித்தது.

  • தாெட்டிலில் குழந்தை சிரித்தது.
  • தாெட்டிலில் அழுத குழந்தை சிரித்தது.
  • அம்மாவைப் பார்த்ததும் அழுத குழந்தை சிரித்தது.
  • அழுத குழந்தை அம்மாவைப் பார்த்து பார்த்து  சிரித்தது.
  • அழுத குழந்தை அம்மாவைப் பார்த்து மேலும் பொக்கைவாய் திறந்து  சிரித்தது.
  • அழுத குழந்தை நீக்கிப் பார்த்துச் சிரித்தது.

5. எறும்புகள் போகின்றன.

  • எறும்புகள் வரிசையாகப் போகின்றன.
  • எறும்புகள் வரிசையாகப் கல்லில் போகின்றன.
  • எறும்புகள் வரிசையாகப் புற்றுக்குள்போகின்றன.
  • சர்க்கரையை நோக்கி எறும்புகள் வரிசையாகப் போகின்றன.
  • அடுக்கில் உள்ள சர்க்கரையை நோக்கி எறும்புகள் போகின்றன.

6. படம் வரைந்தான்

  • அவன் படம் வரைந்தான்.
  • அவன் விலங்குகளின் படம் வரைந்தான்.
  • இயற்கையைப் படம் வரைந்தான்.
  • இயற்கை மரங்களை படமாக வரைந்தான்
  • பறக்கும் பறவைகளை அழகாக படம் வரைந்தான்.

IV. வேறுபட்ட வினையெச்சங்களைப் பயன்படுத்தி, முதல்வினைகளைத் துணைவினைகளாக மாற்றுக.

முதல்வினைகள் – பார்த்தேன், கொடுத்தார், நடந்தான், சேர்ந்தார், அமைத்தோம்.

1. பார்த்தேன்

 9ஆம் வகுப்பு தமிழ், துணைவினைகள் பாட விடைகள் - 2021

  1. எழுதிப் பார்த்தான்
  2. தடுக்கப் பார்த்தான்
  3. கொடுத்துப் பார்த்தான்
  4. ஓடப் பார்த்தான்
2. கொடுத்தார்

 9ஆம் வகுப்பு தமிழ், துணைவினைகள் பாட விடைகள் - 2021

  1. எழுதிக் கொடுத்தார்
  2. படிக்கக் கொடுத்தார்
  3. வாங்கிக் கொடுத்தார்
  4. பார்த்துக் கொடுத்தார
3. நடந்தான்

 9ஆம் வகுப்பு தமிழ், துணைவினைகள் பாட விடைகள் - 2021

  1. பார்த்து நடந்தான்
  2. கேட்டு நடந்தான்
  3. வாங்கி நடந்தான்
  4. சிரித்து நடந்தான்
4. சேர்ந்தான்

  1. வந்து சேர்ந்தார்
  2. போய்ச் சேர்ந்தார்
  3. நடந்து சேர்ந்தார்
  4. ஓய்ந்து சேர்ந்தார்
5. அமைத்தாேம்

  1. பார்த்து அமைத்தோம்
  2. கண்டு அமைத்தோம்
  3. கேட்டு அமைத்தோம்
  4. ஓய்ந்து அமைத்தோம்

V. வினையடிகளை முதல்வினையாகவும் துணைவினையாகவும் அமைந்த தொடர்களாக உருவாக்குக.

வினையடி – வை, வா, போ, செய், மாற்று, இரு, கொடு, கொள், எழுது, விடு, போடு.

வினையடிமுதல்வினைதுணைவினை
வைமூட்டையைத் தலையில் வைத்தான்அம்மா குழந்தையைத் தூங்க வைத்தார்.
வாநீ நாளை வீட்டுக்கு வாஆங்கிலேயர் நம்மை ஆண்டு வந்தனர்
போநான் நூலகத்துக்குப் போனேன்நான் பயந்து போனேன்
செய்அவன் அதைச் செய்தான்அவன் அதைச் செய்ய வைத்தான்
மாற்றுஅவன் கடையை மாற்றினான்அவன் கடையை மாற்றச் செய்தான்
இருநான் தனியாக இருந்தேன்அவனை தனியாக இருக்கச் செய்தேன்
கொடுஅவள் கொடுத்தாள்அவளுக்குக் கொடுக்க செய்தான்
கொள்நீ அதைக் கொள்அவன் அதை ஏற்றுக் கொள்ளட்டும்.
எழுதுமாறன் எழுதினான்நான் அவனை எழுதச் செய்தேன்
விடுயாரையும் உள்ளே விடாதேஅப்பா இனி வந்து விடுவார்
போடுதொப்பியை கீழே போடுசாப்பிட்டவுடன் இலையைச் சுருட்டிப் போட வேண்டும்.

நிற்க அதற்குத் தக…

கலைச்சொல் அறிவோம்

  1. குமிழிக் கல் – Conical Stone
  2. நீர் மேலாண்மை – Water Management
  3. பாசனத் தொழில்நுட்பம் – Irrigation Technology
  4. வெப்ப மண்டலம் – Tropical Zone

அறிவை விரிவு செய்

  • அழகின் சிரிப்பு – பாவேந்தர் பாரதிதாசன்
  • தண்ணீர் தண்ணீர் – கோமல் சுவாமிநாதன்
  • தண்ணீர் தேசம் – வைரமுத்து
  • வாய்க்கால் மீன்கள் – வெ. இறையன்பு
  • மழைக்காலமும் குயிலோசையும் – மா. கிருஷ்ணன்

 

சில பயனுள்ள பக்கங்கள்