Tamil Nadu 9th Standard Tamil Book Term 1 மார்கழிப் பெருவிழா Solution | Lesson 3.3

பாடம் 3.3 மார்கழிப் பெருவிழா

சொல்லும் பொருளும்

  1. ஆனைச்சாத்தன் – கரிக்குருவி
  2. அரவம் – ஓசை
  3. கைபேர்த்து – கைஅசைத்து
  4. குழல் – கூந்தல்
  5. நகை – சிரிப்பு
  6. புலர்ந்தின்றோ – விடியவில்லையோ?

நூல் வெளி

திருப்பாவை

  • திருப்பாவை திருமாலை முழுமுதற் கடவுளாகக்கொண்ட வைணவ சமயத்தில் ஆழங்கால்பட்ட பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார் ஆண்டாள்.
  • திருப்பாவையை இயற்றிய இவர் பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்டவர்.
  • சுடர்க்கொடி என சூடிக்கொடுத்த அழைக்கப்படுகிறார்.
  • முப்பது பாடல்கள் கொண்ட இந்நூலில் ஏழாவது பாடல் நம் பாடப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

திருவெம்பாவை

  • சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சைவ சமயத்தில், சமயக்குரவர் எனம் போற்றப்படும் நால்வருள் மாணிக்கவாசகரும் ஒருவர்.
  • இவர் திருவாதவூரில் பிறந்ததால் திருவாதவூரடிகள் என அழைக்கப்படுகிறார்.
  • இவர் அருளிச்செய்த திருவாசகத்தில் உள்ள பதிகம் திருவெம்பாவை.
  • இருபது பாடல்கள் கொண்ட திருவெம்பாவையில் நான்காவது பாடல் நமது பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ளது,

மதிப்பீட்டு வினாக்கள்

பலவுள் தெரிக.

பொருந்தாத தொடரைக் கண்டறிக

  1. பன்னிரு ஆழ்வார்களுள் ஆண்டாளும் ஒருவர்
  2. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று ஆண்டாள் அழைக்கப்படுகிறார்.
  3. திருவெம்பாவையை இயற்றியவர் ஆண்டாள்
  4. நம்மாழ்வாரின் மகளாவார் ஆண்டாள்

விடை : திருவெம்பாவையை இயற்றியவர் ஆண்டாள்

சிறு வினா

1. கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன், கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ இடஞ்சுட்டிப் பொருள் தருக.

இடம்:

ஆண்டாள் இயற்றிய திருப்பாவைப் பாடல்.

விளக்கம்:

ஆனைச்சாத்தன் குருவிகள் ஒலியெழுப்புவதால் பொழுது விடிந்தது என அறியலாம். நீ இன்னும் உறங்குகிறாயே!

2. கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
    உண்ணெக்கு நின்றுருக யாமாட்டோ நீயேவந்த இவ்வடிகளில் கண்ணுக் கினியான் என்பது யாரைக் குறிக்கிறது?

கண்ணுக்கினியான் :

அடியவர் கண்ணுக்கு இனியவனாகத் தோன்றும் சிவபெருமானைக் குறிக்கிறது.

குறுவினா

1. திருப்பாவை குறிப்பிடும் காலை வழிபாட்டு நிகழ்வை விளக்குக.

காலை வழிபாட்டு நிகழ்வு :·

  • இளம்பெண்களின் கூட்டத்திற்கே தலைவி நீ உறங்கலாமா!
  • நாராயணன் மும்மூர்த்திகளின் தலைவன்! கேசவன்! என்று கண்ணனை எல்லாரும் பாடிடும் ஒலி கூடவா உன் காதில் விழவில்லை?
  • கண்ணன் நினைவில் உணர்வற்று உலகை மறந்து கிடக்கின்றாயா? ஒளிபடைத்த கண்ணழகி! எழுந்திரு!
  • கதவைத் திற! நீராடச் செல்வோம்.
  • பாவை நோன்பு எடுப்போம் வாடீ! என ஒரு பெண் அழைக்கின்றாள்.

2. தோழியை எழுப்பும் நிகழ்வைத் திருவெம்பாவை எவ்வாறு காட்சிப்படுத்துகிறது?

தோழியை எழுப்பும் நிகழ்வு:

  • பாடிவரும் பாவையருள் ஒருத்தி ‘ஒளிமிக்க முத்துப் போன்ற பல் தெரிய சிரிக்கும் தோழி! உனக்கு இன்னும் பொழுது விடியவில்லையோ?’ என்கிறாள்.
  • உறங்கிக் கொண்டிருந்த முத்துப்பல்லழகி அழகிய கிளிமொழி பேசும் பாவையர் எல்லாரும்
    வந்திருக்கின்றனரா?’ என்கிறாள்.
  • எழுப்பியவருள் மற்றொருத்தி, உன் கேள்விக்கு வந்துள்ளவரை எண்ணிப் பார்த்தல்லவோ விடை கூற வேண்டும்’ என்கிறாள்.
  • மூன்றாவது பெண் ‘அப்படிச் செய்யாதே. தோழி! அதுவரையில் கண்ணைமூடி உறங்கப் பார்க்கிறாயா? நம் மார்கழி நோன்பு நேரத்தை வீணாகக் கழித்து விடாதே’ என்கிறாள்.
  • நான்காவதாக ஒருத்தி, ‘விண்ணவர்க்கு ஒப்பற்ற அமிழ்தாக உள்ளவனை. நான்மறைகள் போற்றும் உயர்ந்தவனை, அடியவர் கண்ணுக்கு இனியவனை புகழ்ந்துப் பாடி மனம் குழைந்து உருவிடவா என்கிறாள்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. திருப்பாவையை இயற்றியவர்

  1. மாணிக்கவாசகர்
  2. ஆண்டாள்
  3. சுந்தரர்
  4. பெரியாழ்வார்

.விடை : ஆண்டாள்

2. திருப்பாவையிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை

  1. முப்பது
  2. இருபது
  3. நாற்பது
  4. எழுபது

.விடை : முப்பது

3. திருவெம்பாவையிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை

  1. பத்து
  2. முப்பது
  3. நாற்பது
  4. இருபது

.விடை: இருபது

4. திருவாதவூரடிகள் என அழைக்கப்படுகிறவர்?

  1. மாணிக்கவாசகர்
  2. ஆண்டாள்
  3. சுந்தரர்
  4. பெரியாழ்வார்

.விடை : மாணிக்கவாசகர்

சிறுவினா

1. திருப்பாவை பற்றி குறிப்பு வரைக

  • திருப்பாவை திருமாலை முழுமுதற் கடவுளாகக்கொண்ட வைணவ சமயத்தில் ஆழங்கால்பட்ட பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார் ஆண்டாள்.
  • திருப்பாவையை இயற்றிய இவர் பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்டவர்.
  • சுடர்க்கொடி என சூடிக்கொடுத்த அழைக்கப்படுகிறார்.
  • முப்பது பாடல்கள் கொண்ட இந்நூலில் ஏழாவது பாடல் நம் பாடப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

2. திருவெம்பாவை பற்றி குறிப்பு வரைக

  • சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சைவ சமயத்தில், சமயக்குரவர் எனம் போற்றப்படும் நால்வருள் மாணிக்கவாசகரும் ஒருவர்.
  • இவர் திருவாதவூரில் பிறந்ததால் திருவாதவூரடிகள் என அழைக்கப்படுகிறார்.
  • இவர் அருளிச்செய்த திருவாசகத்தில் உள்ள பதிகம் திருவெம்பாவை.
  • இருபது பாடல்கள் கொண்ட திருவெம்பாவையில் நான்காவது பாடல் நமது பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

 

சில பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment