Tamil Nadu 9th Standard Tamil Book Term 1 வல்லினம் மிகும் இடங்கள் Solution | Lesson 3.4

பாடம் 3.4. வல்லினம் மிகும் இடங்கள்

பலவுள் தெரிக

பின்வருவனவற்றுள் தவறான செய்தியைத் தரும் கூற்று –

  1. அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய நாணயங்கள் கிடைத்தன.
  2. புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூலிலும் ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது.
  3. எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.
  4. பட்டிமண்டபம் பற்றிய குறிப்பு மணிமேகலையில் காணப்படுகிறது.

விடை : எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.

இரு பெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும் என்பதற்கான எடுத்துக்காட்டு

  1. தனிச் சிறப்பு
  2. தைத்திங்கள்
  3. வடக்குப் பக்கம்
  4. நிலாச் சோறு

விடை : தைத்திங்கள்

குறுவினா

1. இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களில் வல்லினம் மிகுந்து வருவதைச் சான்றுடன் விளக்குக.

ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களில் வல்லினம் மிகும்.

சான்று:

  • கதவைத் திற
  • தகவல்களைத் திரட்டு
  • காட்சியைப் பார்

2. உரிய இடங்களில் வல்லின மெய்களைச் சேர்த்து எழுதுக.

பிறநாட்டுச் சிற்பங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டுச் சிற்பங்கள் தனித்தன்மையுடன் திகழ்கின்றன. யோகக்கலை, நாட்டியக்கலைக் கூறுகளும் தமிழ்நாட்டுச் சிற்பக்கலையில் இடம் பெற்றுள்ளன.

  • பிறநாட்டுச் சிற்பங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டுச் சிற்பங்கள் தனித்தன்மையுடன் திகழ்கின்றன.
  • யோகக்கலை, நாட்டியக்கலைக் கூறுகளும் தமிழ்நாட்டுச் சிற்பக்கலையில் இடம் பெற்றுள்ளன.

சிறுவினா

எண்ணுப்பெயர், திசைப்பெயர்களில் வல்லினம் மிகுந்து வருவதைச் சான்றுடன் எழுதுக.

எட்டு, பத்து என்னும் எண்ணுப்பெயர்களின் பின் வல்லினம் மிகும்.

  • (எ.கா)  எட்டுத்தொகை, பத்துப்பாட்டு

திசைப்பெயர்களின் பின் வல்லினம் மிகும்

  • (எ.கா) கிழக்குப் பகுதி. வடக்குப்பக்கம்

கூடுதல் வினாக்கள்

குறுவினா

1. வல்லினம் மிகுதல் என்றால் என்ன?

வல்லெழுத்துகள் க, ச, த, ப ஆகிய நான்கும் மொழிக்கு முதலில் வரும். இவை நிலைமொழியுடன் புணர்கையில் அவற்றின் மெய்யெழுத்துகள் தோன்றிப் புணரும். இதை வல்லினம் மிகுதல் என்பர்.

2. விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?

தோன்றல், திரிதல், கெடுதல் என விகாரப் புணர்ச்சி மூன்று வகைப்படும்.

3. வல்லின எழுத்துகளின் புணர்ச்சி இலக்கணம் எதற்காக தேவைப்படுகிறது.?

சொல்லமைப்பின் கட்டுப்பாடுகளைப் பேணவும் பொருள் மயக்கத்தைத் தவிர்க்கவும் பேச்சின் இயல்பைப் பேணவும் இனிய ஓசைக்காகவும் இவ்வல்லின எழுத்துகளின் புணர்ச்சி இலக்கணம் தேவைப்படுகிறது.

4. வல்லினம் மிகும், மிகா இடங்களை அறிவதற்கு வழிகள் யாவை?

வல்லினம் மிகும் இடங்களை இனங்கண்டு பயன்படுத்தத் தொடங்கினாலே, தவறுகளைத் தவிர்த்து விடலாம்.

மரபையும் பட்டறிவையும் தாண்டி, சொற்களை ஒலித்துப் பார்ப்பதும் வல்லினம் மிகும், மிகா இடங்களை அறிவதற்கு எளியவழி எனலாம்.

சிறுவினா

1. தற்கால உரைநடையில் வல்லினம் மிகவேண்டிய இடங்களாகக் எவற்றை கூறலாம்?

வல்லினம் மிகவேண்டிய இடங்கள்சான்று
அ, இ என்னும் சுட்டெழுத்துகளுக்குப் பின்னும்ச் சட்டை
அந்த, இந்த என்னும் சுட்டுப் பெயர்களின் பின்னும்இந்தக்காலம்
எ என்னும் வினாவெழுத்தின் பின்னும்த் திசை?
எந்த என்னும் வினாச் சொல்லின்
பின்னும்
எந்தப்பணம்?
ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களில்கதவைத் திற, காட்சியைப்பார்
கு என்னும் நான்காம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களில்முதியவருக்குக்கொடு, மெட்டுக்குப்பாட்டு
என, ஆக போன்ற சொல்லுருபுகளின் பின்எனக்கேட்டார், வருவதாகக்கூறு

2. வல்லினம் மிகும் இடங்களை அட்டவணைப்படுத்துக

வல்லினம் மிகும் இடங்கள்சான்று
அதற்கு, இதற்கு, எதற்கு என்னும் சொற்களின் பின்அதற்குச் சொன்னேன், இதற்குக் கொடு, எதற்குக் கேட்கிறாய்?
இனி, தனி ஆகிய சொற்களின் பின்இனிக் காண்போம், தனிச் சிறப்பு
மிக என்னும் சொல்லின் பின்மிகப் பெரியவர்
எட்டு, பத்து என்னும் எண்ணுப் பெயர்களின் பின்எட்டுத் தொகை, பத்துப்பாட்டு
ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின்தீப் பிடித்தது, பூப் பந்தல்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின்கூவாக் குயில், ஓடாக் குதிரை
வன்தொடர்க் குற்றியலுகரங்கள் நிலை மொழியாக இருந்து புணர்கையில்கேட்டுக் கொண்டான், விற்றுச் சென்றான்
(அகர, இகர ஈற்று) வினையெச்சங்களுடன் புணர்கையில்ஆடச் சொன்னார், ஓடிப் போனார்
ஆறாம் வேற்றுமைத் தொகையில்புலித்தோல்
திசைப் பெயர்களின் பின்கிழக்குப் பகுதி, வடக்குப் பக்கம்
இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில்மல்லிகைப்பூ, சித்திரைத் திங்கள்
உவமைத் தொகையில்தாமரைப்பாதம்
சால, தவ, தட, குழ என்னும் உரிச் சொற்களின் பின்சாலப்பேசினார், தவச் சிறிது
தனிக் குற்றெழுத்தை அடுத்துவரும் ஆகார எழுத்தின் பின்நிலாச் சோறு, கனாக் கண்டேன்
சில உருவகச் சொற்களில்வாழ்க்கைப்படகு, உலகப்பந்து

கற்பவை கற்றபின்…

வல்லினம் மிகலாமா?

அ) பெட்டிச்செய்தி

ஆ) விழாக்குழு

இ) கிளிப்பேச்சு

ஈ) தமிழ்த்தேன்

உ) தைப்பூசம்

ஊ) கூடக்கொடு

எ) கத்தியை விடக்கூர்மை

ஏ) கார்ப்பருவம்

தொடர் தரும் பொருளைக் கூறுக.

அ) சின்னக்கொடி / சின்னகொடி

  1. சின்னக்கொடி – சின்னம் வரையப்பட்ட கொடி
  2. சின்ன கொடி – சிறிய கொடி

ஆ) தோப்புக்கள் / தோப்புகள்

  1. தோப்புக்கள் – தோப்பிலிருந்து இறக்கிவரப்பட்ட கள்
  2. தோப்புகள் – பல மரங்கள் சேர்ந்தது தோப்புகள்

இ) கடைப்பிடி / கடைபிடி

  1. கடைப்பிடி – கொள்கையைக் கடைபிடிப்பது
  2. கடைபிடி – வாணிகம் தொடங்கக் கடை பிடிப்பது

ஈ) நடுக்கல் / நடுகல்

  1. நடுக்கல் – அடையாளமாக நடுவது நடுக்கல்
  2. நடுகல் – நினைவுச்சின்னம்

உ) கைம்மாறு / கைமாறு

  1. கைம்மாறு – உதவி செய்தல்
  2. கைமாறு – கையில் உள்ள மாறு (விளக்குமாறு)

ஊ) பொய்ச்சொல் / பொய்சொல்

  1. பொய்ச்சொல் – நீ சொன்னது பொய்ச்சொல்
  2. பொய் சொல் – பொய் சொல்வது தவறு

சிந்தனை வினா

நாளிதழ்கள் சிலவற்றில் வல்லினம் மிக வேண்டிய இடத்தில் மிகாமல் எழுதிவருவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவ்வாறு எழுதுவது மொழிக்கு வளம் சேர்க்குமா? வல்லினம் மிக வேண்டியதன் முக்கியத்துவத்தை எழுதுக.

அதற்க்கு – தவறுஅதற்கு = அது+அன்+கு
அது (சுட்டுப்பெயர்) + அன் (சாரியை) + கு (வேற்றுமை உருபு)
அதன்+கு = அதற்கு – என்பதே சரி
(எ.கா.)
இந்தப் பொருள் வேண்டாம். அதற்குப் பதிலாக இதை வைத்துக்கொள்.
கடைபிடித்தல்

கடைப்பிடித்தல்

கடைபிடித்தல் – கடையைப்பிடித்தல்
கடைப்பிடித்தல் – பின்பற்றுதல்
(எ.கா.)
சேகர் புதிதாக வாணிகம் தொடங்கக் கடைபிடித்தார்.
நாங்கள் என்றும் தூய்மையைக் கடைப்பிடிப்போம்.

அதற்க்கு – தவறு

வல்லெற்றுக்கு அருகில் இன்னொரு வல்லினம் மிகாது. அதற்கு என்றே எழுத வேண்டும்

கடைபிடி. கடைப்பிடி

இதில் கடைபிடி என்பது கடையைப்பிடி என்று பொருள், அதே சொல்லில் வல்லினம் மிகுந்து “கடைப்பிடி” என வரும்போது பின்பற்றுதல் என்னும் பொருள் தரும்.

எனவே வல்லினம் இட்டு எழுதுவதில் கவனம் தேவை

வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக.

பழங்கால மக்களின் நாகரிகம், பண்பாடு தொடர்பான வரலாறுகளை அகழாய்வில் கிடைக்கின்றப் பொருள்களும் உறுதிபடுத்துகின்றன. பல்வேறு இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வகையில் ஆய்வு நடைபெறுகின்ற இடங்களில் கீழடியும் ஒன்று.

கீழடியில் வாழ்ந்த மக்களுள் பலர்ச் செல்வந்தர்களாக இருந்துள்ளனர் என்பதை அகழாய்வில் கிடைத்தப் பொருள்கள் நமக்கு உணர்த்துகின்றன. இங்கு குறைவான எண்ணிக்கையில் தான் தங்கத்தினாலானப் பொருள்கள் கிடைக்கின்றன.

மேலும் இரும்பை பயன்படுத்தி செய்தக் கோடரி, குத்தீட்டிகள் முதலான கருவிகளும் யானை தந்தத்தினால் செய்தச் சீப்பு, மோதிரம், பகடை, காதணிகள், கண்ணாடிப் பொருள்களில் உருவாக்கிய மணிகள், வளையல், தோடு போன்றவையும் கிடைத்துள்ளன.

விடை : பழங்கால மக்களின் நாகரிகம், பண்பாடு தொடர்பான வரலாறுகளை அகழாய்வில் கிடைக்கின்றப் பொருள்களும் உறுதிபடுத்துகின்றன. பல்வேறு இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வகையில் ஆய்வு நடைபெறுகின்ற இடங்களில் கீழடியும் ஒன்று.

கீழடியில் வாழ்ந்த மக்களுள் பலர் செல்வந்தர்களாக இருந்துள்ளனர் என்பதை அகழாய்வில் கிடைத்தப் பொருள்கள் நமக்கு உணர்த்துகின்றன. இங்குக் குறைவான எண்ணிக்கையில் தான் தங்கதினாலானப் பொருள்கள் கிடைக்கின்றன.

மேலும் இரும்பைப் பயன்படுத்தி செய்தக் கோடரி, குத்தீட்டிகள் முதலான கருவிகளும் யானை தந்தத்தினால் செய்த சீப்பு, மோதிரம், பகடை, காதணிகள், கண்ணாடிப் பொருள்களில் உருவாக்கிய மணிகள், வளையல், தோடு போன்றவையும் கிடைத்துள்ளன.

மொழியை ஆள்வோம்!

மொழிபெயர்க்க.

1. Strengthen the body

  • உடலினை உறுதி செய்

2. Love your Food

  • உணவை நேசி

3. Thinking is great

  • நல்லதே நினை

4. Walk like a bull

  • ஏறு போல் நட

5. Union is Strength

  • ஒற்றுமையே பலம்

6. Practice what you have learnt

  • படித்ததைப் பழகிக் கொள்

மரபுத் தொடர்களைக் கொண்டு தொடர் அமைக்க.

எட்டாக்கனிஉடும்புப்பிடிகிணற்றுத்தவளை
ஆகாயத் தாமரைஎடுப்பார் கைப்பிள்ளைமேளதாளத்துடன்

1. எட்டாக்கனி

விடை : முயன்றால் எந்தச் செயலிலும் வெற்றி என்பது எட்டாக்கனி இல்லை.

2. உடும்புப்பிடி 

விடை : நட்பில் அன்பு உடும்புப்பிடி போன்றது

3. கிணற்றுத்தவளை 

விடை : வெறும் படிப்பறிவு மட்டும் இருப்பது கிணற்றுத்தவளை போலத்தான்.

4. ஆகாயத்தாமரை

விடை : பாலைவனத்தில் நீர் கிடைப்பது ஆகாயத்தாமரை பூப்பது போலத்தான்

5. எடுப்பார் கைப்பிள்ளை

விடை : பிறரின் பேச்சைக் கேட்டு எடுப்பார் கைப்பிள்ளை போல இருக்கக் கூடாது.

6. மேளதாளத்துடன்

மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.

1. இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்.

விடை : இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை வேய்ந்தனர்.

2. கயல் பானை செய்யக் கற்றுக் கொண்டான்.

விடை : கயல் பானை வனையக் கற்றுக் கொண்டாள்

3. நேற்று தென்றல் காற்று அடித்தது.

விடை : நேற்று தென்றல் காற்று வீசியது.

4. தென்னை மட்டையிலிருந்து நார் எடுத்தார்.

விடை : தென்னை மட்டையிலிருந்து நார் உரித்தனர்.

5. அணில் பழம் சாப்பிட்டது.

விடை : அணில் பழம் கொறித்தது.

6. கொடியிலுள்ள மலரை எடுத்து வா .

விடை : கொடியிலுள்ள மலரைப் பறித்து வா .

பொன்மொழிகளை மொழிபெயர்க்க.

1. A nation’s culture resides in the hearts and in the soul of its people – Mahatma Gandhi

விடை: ஒரு நாட்டின் பண்பாடானது மக்களின் இதயங்களிலும், ஆன்மாவிலும் தங்கியுள்ளது

2. The art of people is a true mirror to their minds – Jawaharlal Nehru

விடை: மக்களின் கலை உணர்வே அவர்களின் உள்ளத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும் – ஜவஹர்லால் நேரு

3. The biggest problem is the lack of love and charity – Mother Teresa

விடை: அன்புக் குறைவும், தொண்டுப் பற்றாக்குறையும் தான் இன்றைய மிகப்பெரிய பிரச்சனை – அன்னைதெராசா

4. You have to dream before your dreams can come true – A.P.J. Abdul Kalam

விடை: உங்கள் கனவுகள் நனவாகும் வரை கனவு காணுங்கள் – ஏ.பி.ஜே.அப்துல் கலாம்

5. Winners don’t do different things; they do things differently – Shiv Khera

விடை: வெற்றியாளர்கள் வேறுபட்ட செயல்களைச் செயவதில்லை, அவர்கள் செயல்களை வித்தியாசமாகச் செய்கிறார்கள் – ஷிவ் கேரா

மொழியோடு விளையாடு

விடையைத் தமிழ் எண்களில் எழுதுக

1. பதினெண் கீழ்கணக்கு 

விடை : ௧௮

2. திருக்குறளின் அதிகாரங்கள் 

விடை : ௧௩௩

3. சிற்றிலக்கியங்கள்

விடை : ௯௩

4. சைவத் திருமுறைகள் 

விடை : ௧௨

5. நாயன்மார்கள்

விடை : சா௩

6. ஆழ்வார்கள் 

விடை : ௧௨

கண்டுபிடிக்க.

1. எண்ணும் எழுத்தும் கண் – இந்தத் தொடரை ஒருவர் 1 2 3 4 1 5 6 7 4 8 2 என்று குறிப்பிடுகிறார். இதே முறையைப் பின்பற்றிக் கீழ்க் காணும் சொற்களை எப்படிக் குறிப்பிடுவார்?

  1. எழுது → 1, 5, 7
  2. கண்ணும் → 8, 2, 3, 4
  3. கழுத்து → 8, 5, 6, 7
  4. கத்து → 8, 6, 7

2. என் வகுப்பில் படிக்கும் அனைவரும் புதிய புத்தகம் வைத்திருந்தனர். இராமனும் புதிய புத்தகம் வைத்திருந்தான். எனவே, இராமன் என் வகுப்பு மாணவன் – இக்கூற்று

  1. உண்மை
  2. பொய்
  3. உறுதியாகக் கூறமுடியாது

விடை : உறுதியாகக் கூறமுடியாது

காரணம் : அனைவரும் என்று, கூறிய பின் இராமன் வேறு வகுப்பு மாணவனாகக் கூட இருக்கலாம்.

அகராதியில் காண்க.

1. ஏங்கல்

  • அஞ்சல்
  • அழுதல்
  • இரங்கல்
  • வாடல்
  • வாய்விடல்
  • கவலைப்படல்

2. கிடுகு

  • வட்டவடிவப்பாறை
  • கேடகம்
  • சட்டப்பலகை
  • தேரின் மரச்சுற்று
  • முடைந்த ஓலைக்கீற்று

3. தாமம்

  • மாலை
  • இடம்
  • உடல்
  • ஒளி
  • பிறப்பு
  • பெருமை
  • யானை

4. பான்மை

  • குணம்
  • தகுதி
  • தன்மை
  • பங்கு
  • ஊழ்
  • நல்வினைப்பயன்

5. பொறி

  • அறிவு
  • எழுத்து
  • செல்வம்
  • தீப்பொறி
  • தேர்
  • வண்டு
  • முத்திரை
  • வரி
  • பதுமை

உவமைத் தொடர்களை உருவகத் தொடர்களாக மாற்றுக.

1. மலர்விழி வீணை வாசித்தாள் ; கேட்டவர் வெள்ளம் போன்ற இன்பத்தில் நீந்தினர்.

  • விழிமலர் வீணை வாசித்தாள், கேட்டவர் இன்ப வெள்ளத்தில் நீந்தினர்

2. குழலியின் இசையைச் சுவைத்தவர், கடல் போன்ற கவலையிலிருந்து நீங்கினர்.

  • குழலியின் இசையைச் சுவைத்தவர் கவலை கடலிருந்து நீங்கினர்

3. தேன் போன்ற மொழியைப் பவளவாய் திறந்து படித்தாள்.

  • மொழித்தேனை வாய்பவளத்தால் திறந்து படித்தாள்

4. முத்துநகை தன் வில் போன்ற புருவத்தில் மை தீட்டினாள்.

  • நகைமுத்து தன் புருவவில்லில் மை தீட்டினாள்

நிற்க அதற்குத் தக

கலைச்சொல் அறிவோம்

  • Cave temple – குடைவரைக் கோவில்
  • Treasury – கருவூலம்
  • Sculpture – சிற்பம்
  • Statue – சிலை
  • Embossing – புடைப்பு
  • Honorary Doctorate – மதிப்புறு முனைவர்
  • Document short film – ஆவணக் குறும்படம்
  • Melody – மெல்லிசை
  • Combination – புணர்ச்சி

நிற்க அதற்குத் தக

  • நட்புக்காலம் – கவிஞர் அறிவுமதி
  • திருக்குறள் கதைகள் – கிருபானந்த வாரியார்