பாடம் 4.5. வல்லினம் மிகா இடங்கள்
பலவுள் தெரிக
ஆடுகளம் இச்சொல்லில் வல்லினம் மிகாது என்பதற்கான காரணம் யாது?
- எழுவாய்தொடரில் வல்லினம் மிகாது.
 - வினாப்பெயரில் வல்லினம் மிகாது.
 - வினைத்தொகையில் வல்லினம் மிகாது.
 - இரட்டைக்கிளவியில் வல்லினம் மிகாது.
 
விடை: வினைத்தொகையில் வல்லினம் மிகாது
சிறு வினா
தற்கால உரைநடையில் வல்லினம் மிகா இடங்களை கூறு.
| வல்லினம் மிகா இடங்கள் | சான்று | 
| அது, இது என்னும் சுட்டுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது. | அது செய், இது காண் | 
| எது, எவை வினாப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது. | எது கண்டாய்? எவை தவறுகள்? | 
| எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது. | குதிரை தாண்டியது, கிளி பேசும். | 
| மூன்றாம், ஆறாம் வேற்றுமை விரிகளில் வல்லினம் மிகாது. | அண்ணனோடு போ, எனது சட்டை. | 
| விளித் தொடர்களில் வல்லினம் மிகாது. | தந்தையே பாருங்கள், மகளே தா. | 
| பெயரெச்சத்தில் வல்லினம் மிகாது. | வந்த சிரிப்பு, பார்த்த பையன் | 
| இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது. | நாடு கண்டான், கூடு கட்டு | 
| படி என்று முடியும் வினையெச்சத்தில் வல்லினம் மிகாது. | வரும்படி சொன்னார், பெறும்படி கூறினார். | 
| வியங்கோள் வினைமுற்றுத் தொடரில் வல்லினம் மிகாது. | வாழ்க தமிழ், வருக தலைவா! | 
| வினைத்தொகையில் வல்லினம் மிகாது. | குடிதண்ணீர், வளர்பிறை, திருவளர்செல்வன்  | 
கற்பவை கற்றபின்…
வல்லினம் வருமா?
| அ) தோழி __ கூற்று : நிலைமொழி உயர்திணையாய் அமையும் பெயர்த் தொகையில் வல்லினம் மிகாது. | |
| ஆ) பெரிய __தம்பி : குறிப்புப் பெயரச்சத்தில் வல்லினம் மிகாது. | |
| இ) சிறிய __ பறவை : குறிப்புப் பெயரச்சத்தில் வல்லினம் மிகாது. | |
| ஈ) பழகு __தமிழ் : வினைத்தொகையில் வல்லினம் மிகாது. | |
| உ) இது __கேள் : இது என்னும் சுட்டுப் பெயர்களில் வல்லினம் மிகாது. | |
| ஊ) எலி __ கடிக்கும் : எழுவாய் தொடரில் வல்லினம் மிகாது. | |
| எ) ஓடிய __ குதிரை : பெயரச்சத்தில் வல்லினம் மிகாது. | |
| ஏ) தரும்படி __ சொன்னார் : படி என முடியும் வினையெச்சத்தில் வல்லினம் மிகாது. | |
| ஐ) வாழ்க __ தலைவர் : வியங்கோள் வினைமுற்றுத் தொடரில் வல்லினம் மிகாது. | |
| ஒ) கார் __ காலம் : காலப் பெயர்ச்சொல் எனவே வல்லினம் மிகாது. | 
வல்லினம் இடலாமா?
அ) வாழ்த்து __கள்
- கள் என்னும் பன்மை விகுதி சேரும்போது வல்லினம் இடுதல் கூடாது.
 
ஆ) எழுத்து__ கள்
- கள் என்னும் பன்மை விகுதி சேரும்போது வல்லினம் இடுதல் கூடாது.
 
இ) திருநிறை __ செல்வன்
- திருநிறை ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடரில் வல்லினம் இடுதல் கூடாது.
 
ஈ) திருவளர் __ செல்வி
- வளர்செல்வி வினைத்தொகையில் வல்லினம் இடுதல் கூடாது.
 
எது சரி? எது தவறு? காரணம் கூறுக.
அ) அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (சரி)
காரணம்:- அண்ணாமலை என்னும் பெயரை அடுத்து வல்லினம் இடுதல் கூடாது. இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லினம் மிகும்.
எனவே பல்கலைக்கழகம் என்பதில் வல்லினம் இட்டு எழுவதும் சரியே
ஆ) அத்தனைச் சிறிய (தவறு)
அத்தனை சிறிய என்பதுதான் சரி
காரணம்:- அத்தனை என்ற சொல்லின் பின் வல்லினம் இடுதல் கூடாது.
இ) ஆத்திச்சூடி (சரி)
காரணம்:- அத்தி – அகர ஈறு, இகர ஈறு புணரும் போது வல்லினம் மிகும்.
ஈ) எடுத்துக்காட்டுகள் (சரி)
காரணம்:- வன்தொடர் குற்றியலுகரத்தில் பின் வல்லினம் இட்டு எழுத வேண்டும்.
உ) கீழ்பக்கம் (தவறு)
கீழ்ப்பக்கம் என்பது தான் சரி
காரணம்:- இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும்.
ஊ) சான்றோர் பேரவை (சரி)
காரணம்:- நிலை மொழியில் உயர்திணை வரும்போது வல்லினம் இடுதல் கூடாது.
ஒ) சென்னைப் பல்கலைக்கழகம் (சரி)
காரணம்:- இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் இடுதல் வேண்டும்.
ஓ) தயிர்ச்சோறு (சரி)
காரணம்:- இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் இடுதல் வேண்டும்.
வல்லினம் மிகும், மிகா இடங்களைக் கண்டறிந்து அதற்கான இலக்கணம் அறிக.
அ) வங்கி கடன் (வல்லினம் மிகும்) – வங்கிக்கடன்
காரணம்:- இகர ஈற்றில் வல்லினம் மிகும். (வினையாக வந்தாலும் பெயராக வந்தாலும் வல்லினம் மிகும்)
ஆ) பழங்களை பறிக்காதீர்கள் (வல்லினம் மிகும்) – பழங்களைப் பறிக்காதீர்கள்
காரணம்:- ஐ என்னும் இரணடாம் வேற்றுமை உருபபு வெளிப்படும் தொடர் அதனால் வல்லினம் மிகும்.
இ) திட்ட குழு (வல்லினம் மிகாது)
காரணம்:- பெயரச்சத்தில் வல்லினம் மிகாது.
ஈ) அரசு ஆணை பிறப்பித்தது (வல்லினம் மிகாது)
காரணம்:- ஆணை பிற்ப்பித்தது என்பது இரண்டாம் வேற்றுமை தொகை எனவே வல்லினம் மிகாது
உ) மருந்து கடை (வல்லினம் மிகும்) – மருந்துக்கடை
காரணம்:-
- மென் தொடர் குற்றியலுகரத்தின் பின்னும் வல்லினம் மிகும்.
 - இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும்.
 - குறிப்பு:- மென்தொடர் குற்றியலுகரம் எச்சப் பொருளில் வந்தால் வல்லினம் மிகாது. இச்சொல்லில் “மருந்து” பின் வல்லினம் மிகும்
 
ஊ) வேலையில்லா பட்டதாரி (வல்லினம் மிகும்) – வேலையில்லாப் பட்டதாரி
காரணம்:- ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சத்தில் வல்லினம் மிகும்
எ) சிறப்பு பரிசு (வல்லினம் மிகும்) – சிறப்புப்பரிசு
காரணம்:- வன்தொடர் குற்றியலுகரத்தில் வல்லினம் மிகும்
மொழியை ஆள்வோம்!
மாெழி பெயர்க்க
A deer, a turtle, a crow and a rat were friends. One day the deer was caught in a hunter’s trap. Friends made a plan to save him. According to the plan, the deer lay motionless as if it were dead. The crow sat on the deer and started poking. The turtle crossed the hunter’s path to distract him. The hunter left the deer, assuming it dead, and went after the turtle. Meanwhile, the rat chew open the net to free the deer. The crow picked up the turtle and quickly took it away from the hunter. From this Panchatantra story, we learn that the teamwork can achieve great results.
விடை :-
ஒரு மான், ஆமை, ஒரு காகம் மற்றும் எலி நண்பர்கள். ஒரு நாள் மான் ஒரு வேட்டைக்காரனின் வலையில் சிக்கியது. நண்பர்கள் அவரைக் காப்பாற்ற ஒரு திட்டத்தை உருவாக்கினர். திட்டத்தின் படி, மான் இறந்ததைப் போல அசையாமல் கிடந்தது. காகம் மானின் மீது அமர்ந்து குத்த ஆரம்பித்தது. ஆமை அவரை திசைதிருப்ப வேட்டைக்காரனின் பாதையை கடந்தது. வேட்டைக்காரன் மானை விட்டுவிட்டு, இறந்து விட்டதாகக் கருதி, ஆமைக்குப் பின் சென்றான். இதற்கிடையில், எலி மெல்லும் மானை விடுவிக்க வலையைத் திறக்கிறது. காகம் ஆமை எடுத்து விரைவாக வேட்டைக்காரனிடமிருந்து எடுத்துச் சென்றது. இந்த பஞ்சதந்திர கதையிலிருந்து, குழுப்பணி சிறந்த முடிவுகளை அடைய முடியும் என்பதை அறிகிறோம்.
பொருத்தமான இடங்களில் அடைமொழியிட்டு, சொற்றொடரை விரிவாக்குக.
1. புத்தகம் படிக்கலாம் ( நல்ல, ஆழ்ந்து, நாளும், தேர்ந்து, மகிழ்ந்து, உணர்ந்து)
(எ.கா.) நல்ல புத்தகம் படிக்கலாம், நாளும் நல்ல புத்தகம் படிக்கலாம்
- நாளும் நல்ல புத்தகம் ஆழ்ந்து, உணர்ந்து, மகிழ்ந்து படிக்காலாம்.
 
2. விளையாடுவது நன்று (ஓடியாடி, மாலையில், சேர்ந்து, திடலில், அனைவருடன்)
- திடலில் அனைவருடன் மாலையில் சேர்ந்து ஓடியாடி விளையாடுவது நன்று
 
பிழை நீக்குக.
பெறுந்தலைவர் காமராசர் பள்ளிப் படிப்பை நிரைவு செய்யவிள்ளை எண்ராலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகங்கள் படிக்கும் அலவுக்கு புலமைகள் பெற்றிருந்தது பலருக்குத் தெரியாது. ஆங்கிலச் செய்தி இதழ்கலை நாள்தோறும் படித்தது. எப்போது அரையை விட்டு வெளியே போனாலும் மின்விசிரியை நிருத்த மறப்பதில்லை. வெளியூருக்குச் செல்லும்போது தம்முடைய துணிமனிகளைத் தாமே எடுத்துவைத்துக்கொள்வார்.
பெருந்தலைவர் காமராசர் பள்ளிப் படிப்பை நிறைவு செய்யவில்லை என்றாலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகங்கள் படிக்கும் அளவுக்கு புலமைகள் பெற்றிருந்தது பலருக்குத் தெரியாது. ஆங்கிலச் செய்தி இதழ்களை நாள்தோறும் படித்தது. எப்போது அறையை விட்டு வெளியே போனாலும் மின்விசிறியை நிறுத்த மறப்பதில்லை. வெளியூருக்குச் செல்லும்போது தம்முடைய துணிமணிகளைத் தாமே எடுத்துவைத்துக்கொள்வார்.
பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்கள்
| நாக்குதான் ஐம்புலன்களிலேயே ரொம்ப வீக்கு! அதற்கு நான்கு ஆதார ருசிகள்தாம் தெரியும். எலுமிச்சையின் புளிப்பு, சர்க்கரை யின் தித்திப்பு, காபியின் கசப்பு, உப்பு. இவை தவிர ஸேவரி என்று சொல்கிற டேஸ்ட் எல்லாம் இந்த நான்கு ஆதார ருசிகளின் கலப்புதான். இந்த ருசிகளைத் தொட்டு அறிய நாக்கில் வெவ்வேறு இடங்கள் உண்டு. தித்திப்பு – நுனி நாக்கு, உப்பு – பரவலாக, குறிப்பாக நுனியில். கசப்பு – உள்நாக்கு. புளிப்பு, ஸேவரி – நாக்கின் வலது – இடது புறங்கள்! ஒரு சராசரி மனிதனுடைய நாக்கில் 9,000 சுவை அரும்புகள் உண்டு. அலட்டல் வேண்டாம். குழந்தையின் நாக்குடன் ஒப்பிடும்போது இது ஒன்றுமே இல்லை. ஏதாவது மருந்தை நாக்கில் தொட்டால் குழந்தைகள் என்னமாக எக்ஸ்பிரஷன் காட்டுகின்றன! சுவைக்கு வாசனையும் சேரவேண்டும். இரண்டும் ஒத்துழைத்தால் தான் பாதாம் அல்வா, ஐஸ்க்ரீம் போன்றவற்றை ரசிக்க முடியும். மூக்கைப் பிடித்துக் கொண்டு ஐஸ்க்ரீம் சாப்பிட்டுப் பாருங்கள். ஜில்லென்று இருக்கும். அவ்வளவே. கூடவே சூடும், உணவின் தோற்றமும் முக்கியம். மூக்குக்கு மொத்தம் ஏழு வாசனைகள். கற்பூர வாசனை, பெப்பர்மிண்ட் வாசனை, மலர்களின் வாசனை, மஸ்க் என்னும் அரபுசேக் செண்ட் வாசனை, ஈத்தர் அல்லது பெட்ரோல் வாசனை, அழுகிய முட்டை வாசனை, காட்டமான அமில வாசனை. இந்த ஏழு வாசனைகளின் கலப்புகளால் நம்மால் ஆயிரக்கணக்கான வாசனைகளை உணர முடிகிறது. ( ஏன்? எதற்கு? எப்படி? – சுஜாதா)  | 
| சொற்கள் | தமிழாக்கம் | 
| ரொம்ப வீக்கு | நிரம்ப சபலம் | 
| ஆதார ருசிகள் | அடிப்படைச் சுவைகள் | 
| காபி | குழம்பி, கோப்பி, கொட்டை வடிநீர் | 
| ஸேவரி | காரசுவையுண்டி | 
| டேஸ்ட் | சுவை | 
| ருசிகள் | சுவைகள் | 
| சராசரி | ஏறத்தாழ | 
| அலட்டல் | மிகைப்படுத்தி சொல்லுதல் | 
| எக்ஸ்பிரஷன் | விளைவுகள் | 
| வாசனை | நறுமணம் | 
| பாதாம் அல்வா | பாதாம் இனிப்புக்களி | 
| ஐஸ்க்ரீம் | பனிக்குழைவு | 
| ரசிக்க | களிக்க | 
| ஜில்லென்று | குளிர்ச்சி என்று | 
| கற்பூர வாசனை | சூடம் நறுமணம் | 
| பெப்பர்மிண்ட் வாசனை | புதினாச்சுவையுள்ள மிட்டாய்கள் | 
| மஸ்க் அரபுசேக் செண்ட் | ஆண்மானிலிருந்து எடுக்கப் பெற்ற வாசனைத் திரவியம் | 
| ஈத்தர் | தீப்பற்றக் கூடிய பொருள் | 
| பெட்ரோல் வாசனை | கல்நெய் (கன்னெய்) | 
| அமில வாசனை | காடிப்புளியம் | 
நயம் பாராட்டுக.
பொங்கியும் பொலிந்தும் நீண்ட புதுப்பிடர் மயிர்சி லிர்க்கும்
சிங்கமே! வான வீதி திகுதிகு எனஎரிக்கும்
மங்காத தணற்பி ழம்பே! மாணிக்கக் குன்றே! தீர்ந்த
தங்கத்தின் தட்டே! வானத் தகளியிற் பெருவி ளக்கே!
கடலிலே கோடி கோடிக் கதிர்க்கைகள் ஊன்று கின்றாய்
நெடுவானில் கோடி கோடி நிறைசுடர்க் கைகள் நீட்டி
இடைப்படு மலையோ காடோ இல்லமோ பொய்கை ஆறோ
அடங்கநின் ஒளிஅ ளாவ அமைந்தனை! பரிதி வாழி!
– பாரதிதாசன்
மோனை நயம்
பாடலின் அடி அல்லது சீரில் முதல் எழுத்து ஒரே மாதிரியாக வருவது மோனை
- தங்கத்தின் – தகளியில்
 - கடலிலே – கதிர்க்கைகள்
 
எதுகை நயம்
பாடலின் அடி அல்லது சீரில் இரண்டாம் எழுத்து ஒரே மாதிரியாக வருவது எதுகை
- பொங்கி – சிங்கேம
 - தங்கத்தின் – மங்காத
 
அணி நயம்
இப்பாடலில் சூரியனைத் தங்கத்தட்டு, மாணிக்கப் குன்று என்று உருவகப்படுத்துவதால் உருவக அணி பயின்று வந்துள்ளது.
சந்த நயம்
நாட்டுப்புறச் சிந்து இராகத்தில் இப்பாடலை பாடலாம்.
சுவை நயம்
இப்பாடலில் பெருமிதச் சுவை பயின்றுள்ளது.
மொழியோடு விளையாடு
புதிர் அவிழ்க்க.
நான்கெழுத்துக்காரன்;
முதல் இரண்டும்
அம்மாவில்
“மா“வைத் தொலைத்து நிற்கும்;
அடுத்த எழுத்தைச் சேர்த்தால்
வில்லின் துணைவன்;
கடை இரண்டும்
கணக்கில் ’இது’ என்பர்.!
முழுதாய்ப் பார்த்தால்
மேகத்திடை தெரிவான்!
அவன் யார்?
விடை : அம்புலி
பண்புத்தொகைகளை இட்டு நிறைவு செய்க
(இன்னோசை, பேரொளி, சிற்றோடை, பேரின்பம், பைங்கிளி, பேரூர், செந்தாமரை)
மானாமதுரை ஓர் அழகான பேரூர்; நீண்ட வயல்களும் சிற்றோடைகளும் நிறைந்த அவ்வூரின் நடுவே வானுயர்ந்த கோபுரத்துடன் கூடிய கோவில் குளத்தில் எங்கும் செந்தாமரை பூக்கள் மலர்ந்துள்ளன; கதிரவன் பேரொளி வீசிட, சோலைப் பைங்கிளிகளின் இன்னோசை கேட்போலைப் பேரின்பம் அடையச் செய்கிறது.
வட்டத்திற்குள் உள்ள எழுத்துகளைக்கொண்டு சொற்களை உருவாக்குக.

| கால் | காலை | 
| புத்தி | அகல் | 
| அதிகம் | கறி | 
| வலை | அறிவன் | 
| கவலை | காவல் | 
| புத்தகம் | புல் | 
| அவல் | கல் | 
| தறி | புதன் | 
| கலை | கத்தி | 
| அலை | தில்லை | 
அகராதியில் காண்க.
1. ஈகை
விடை: கொடை, கற்பகமரம், காடை, பொன், முகில், வண்மை
2. குறும்பு
விடை: அரணிருக்கை, சிறுமை, பொல்லாங்கு, குறும்புத்தனம்
3. கோன்
விடை: அரசன், இடையன், தலைவன், எப்பொருட்கும் இறைவன்
4. புகல்
விடை: உடல், உபாயம், குதிர், சொல், தஞ்சம், சரண்
5. மாெய்ம்பு
விடை: தோள்வலி பலம்
6. இமிழ்தல்
விடை: இனிதாதல், ஒலித்தல், கக்குதல்
7. இசைவு
விடை: இணக்கம், சம்மதி, பொருத்து, தகுதி, ஏற்றது, உடன்பாடு, ஓட்டம்
8. துவனம்
விடை: அக்னி, நெருப்பு
9. சபலை
விடை: இலக்குமி, திப்பிலி, நா, மின்னல், வேசி
10. துகலம்
விடை: பங்கு
ஒரு சொல்லால் தொடரின் இரு இடங்களை நிரப்புக.
(விலங்கு, எழுதி, அகல், கால், அலை)
- எண்ணெய் ஊற்றி அகல் விளக்கு ஏற்றியவுடன், இடத்தைவிட்டு அகல்
 - எனக்கு கால் பங்கு பிரித்துக் கொடுக்க வா! கீழே ஈரம்; பார்த்து உன் கால் ஐ வை.
 - கைப்பொருளைக் கடல் அலையில் தொலைத்துவிட்டு, கரையில் தேடி அலைந்தால் கிடைக்குமா?
 - வீட்டு விலங்கு ஆன நாயுடன் விளையாடுவது மகிழ்ச்சி தரும்; வெளியில் அதனைக் கழுத்து விலங்கு உடன் மட்டுமே பிடித்துச் செல்ல வேண்டும்.
 - எழுத்தாணி கொண்டு எழுதிய தமிழை, ஏவுகணையில் எழுதி எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்.
 
ஒரு தொடரில் இருவினைகளை அமைத்து எழுதுக.
(குவிந்து – குவித்து; சேர்ந்து – சேர்த்து; பணிந்து – பணித்து; பொருந்து – பொருத்து; மாறு – மாற்று)
1. விரிந்தது – விரித்தது
மழைக்காற்று வீசியதால், பூவின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது.
2. குவிந்து – குவித்து
காட்டாற்று வெள்ளம் அடித்து வந்த மணல் குவிந்தது ;வாங்கிய மணலை குவித்து வைத்தோம்
3. சேர்ந்து – சேர்த்து
காசு சேர்ந்தது; அதனால் சேர்த்து வைத்தோம்
4. பணிந்து – பணித்து
தலைவர் சொல்லுக்கு தொண்டர்கள் பணிந்து நடந்தனர்; மக்கள் பணியில் சேவை செய்யுமாறு பணித்து இருக்கிறார்
5. பொருந்து – பொருத்து
மேடைப் பேச்சுக்குப் பொருந்துமாறு, உவமைகளை பொருத்திப் பேச வேண்டும்
6. மாறு – மாற்று
கைம்மாறு எதிர்பார்க்காமல் செய்யும் வேலை அனைவரையும் உன் பக்கம் மாற்றும்
கலைச்சொல் அறிவோம்
- Martyrs – உயிர்த்தியாகம் செய்தவர்கள்
 - Combination – புணர்ச்சி
 - Indian National Army – இந்திய தேசிய இராணுவம்
 - Patriotism – நாட்டுப்பற்று
 - World War – உலகப்போர்
 - Launch Vehicle – ஏவு ஊர்தி
 - Missile – ஏவுகணை
 - Nautical Mile – கடல்மைல்
 - Video Conference – காணொலிக் கூட்டம்
 - Download – பதிவிறக்கம்
 - Passenger Name Record (PNR) – பயணியர் பெயர்ப் பதிவு
 - Electronic devices – மின்னணுக் கருவிகள்
 
கலைச்சொல் அறிவோம்
- ஆகாயத்துக்கு அடுத்த வீடு – மு.மேத்தா
 
- தமிழ்ப் பழமொழிகள் – கி.வா.ஜெகந்நாதன்
 
- இருட்டு எனக்கு பிடிக்கும் (அன்றாட வாழ்வில் அறிவியல்) – ச.தமிழ்ச்செல்வன்
 
கூடுதல் வினாக்கள்
கோடிட்ட இடத்தை நிரப்புக
1. எழுவாய்த் தொடரில் வல்லினம் ________.
விடை: மிகாது
2. குடிதண்ணீர் இலக்கணக்குறிப்பு ________.
விடை: வினைத்தொகை
3. வாழ்க இலக்கணக்குறிப்பு ________.
விடை: வியங்கோள் வினைமுற்று
4. தாய்தந்தை இலக்கணக்குறிப்பு ________.
விடை: உம்மைத் தொகை
5. பார் பார் ________ தொடர்.
விடை: அடுக்குத்
சில பயனுள்ள பக்கங்கள்