Tamil Nadu 9th Standard Tamil Book Term 2 செய்தி Solution | Lesson 3.4

பாடம் 3.4. செய்தி

நூல்வெளி

தி. ஜானகிராமன் தஞ்சை மண்வாசனையுடன் கதைகளைப் படைத்தவர்.

உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகவும் வானொலியில் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகவும் பணியாற்றியவர்.

வடமொழி அறிவும் சிறந்த இசையறிவும் கொண்ட இவர்தம் கதைகள் மணிக்கொடி, கிராம ஊழியன், கணையாழி, கலைமகள், சுதேசமித்திரன், ஆனந்த விகடன், கல்கி போன்ற இதழ்களில் வெளிவந்தன.

நாவல்களையும் நாடகங்களையும் இவர் படைத்துள்ளார்.

“அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை” என்னும் கோட்பாட்டைக் கொண்டவர் இவர்.

தமிழ்க் கதையுலகம் நவீனமயமானதில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

செய்தி என்னும் சிறுகதை சிவப்பு ரிக்ஷா என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. மிகவும் உயர்ந்த இசை சிறந்த கலைஞனால் கையாளப்படும்போது சொற்களின் எல்லையைத் தாண்டி இசையின் மூலமாகவே பெதருள் கொடுக்கிறது என்பதை இக்கதை உணர்த்துகிறது.

தஞ்சாவூர் தமிழுக்கு அளித்த கொடை உ.வே. சாமிநாதர், மெளனி, தி.ஜானகிராமன், தஞ்சை பிரகாஷ், தஞ்சை இராமையா தாஸ், தஞ்சாவூர்க் கவிராயர் ஆகியோர்.

I. நெடு வினா

இசைக்கு நாடு, மொழி இனம் தேவையில்லை என்பதைச் செய்திக் கதையின் விளக்குக

முன்னுரை:-

செய்தி என்னும் சிறுகதையின் ஆசிரியனர் தி.ஜானகிராமன். இக்கதை “சிவப்பு ரிக்சா என்ற சிறுகதை தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இசைக்கு நாடு, மொழி, இனம் தேவையில்லாமல் என்பதை இக்கதையில் காண்போம்.

வித்துவான்:-

இசைக்கு மயங்காத உயிர்கள் இல்லை. அத்தகைய இசைக்கு காரணம் இசைக் கருவிகள் தமிழக இசையில் தன் முத்திரை பதித்தது நாதஸ்வரம். இதில் பல இராகங்களை கொண்டு வித்துவான் வாசித்தார். அத நிகழ்ச்சியில் பிலிப் போல்ஸ்கா என்ற வித்துவானும் வந்திருந்தார்.

இசைமயக்கம்:-

நாதஸ்வரக் கலைஞர் வாசிக்கத் தொடங்கினார். நாதஸ்வர இசை இனிக்க ஆரம்பித்தது. போஸ்கோ சிரித்தபடியே தன்னையே இழந்து இரசிக்கின்றார். இசை வெள்ளத்தில் மிதக்கின்றார். வெளிநாட்டவர் தமிழக இசைக்கு மெய் மறக்கின்றனர். வித்துவானின் சாமாராகம் அனைவரையும் மயங்கச் செய்தது. ஆடவும் செய்தது.

செய்தி:-

வித்வானிடம் சாந்தமுலேகாவை 5, 6 முறை வாசிக்கக் கேட்டு மகிழ்ந்தார். இதில் ஒரு செய்தி இருப்பதாகவும். ஏதோ ஒரு உலகத்தில் இருந்து வந்த செய்தி கேட்கிறது. நான் அதில் மூழ்கி விட்டேன் என்றார் போஸ்கா. எனக்கு அனுப்பிய செய்தி, உலகத்திற்கே அனுப்பிய செய்தி, அது தமிழ் இசையின் செய்தி. வேறு எந்த சங்கீதமும் இதனை கொடுக்கவும் இல்லை. அதனை நான் வாங்கிக் கொண்டேன்.

முடிவுரை:

போஸ்கோவின் செயல்பாடுகள் இசைக்கு நாடு, மொழி, மதம் என எதுவும் இல்லை என்பதை உணர்த்துகிறது.

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடத்தை நிரப்புக

1. கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு _________.

விடை: தூண்டுகோல்

2. தி.ஜானகிராமன் தனது ஜப்பான் பயண அனுபவங்களை உதயசூரியன் என்னும் தலைப்பில் _________வார இதழில் எழுதினார்.

விடை: சுதேசமித்திரன்

2. தி.ஜானகிராமன் தனது ஜப்பான் பயண அனுபவங்களை உதயசூரியன் என்னும் தலைப்பில் _________வார இதழில் எழுதினார்.

விடை: சுதேசமித்திரன்

3. தி.ஜானகிராமன் தனது ஜப்பான் பயண அனுபவங்களை நூலாக _________ ஆண்டு வெளியிட்டுள்ளார்.

விடை: 1967

4. தி.ஜானகிராமன் ரோம், செக்கோஸ்லொவோக்கியா சென்ற அனுபவங்களைக் கருங்கடலும் கலைக்கடலும் என்னும் தலைப்பில் _________ நூலாக வெளியிட்டார்.

விடை: 1974

5. __________ தஞ்சை மண்வாசனையுடன் கதைகளைப் படைத்தவர்.

விடை: தி.ஜானகிராமன்

6. __________ என்னும் சிறுகதை சிவப்பு ரிக்ஷா என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

விடை: செய்தி

I. குறு வினா

1. தஞ்சாவூர், தமிழுக்கு அளித்த கொடையாளர்கள் யாவர்?

 • உ.வே. சாமிநாதர்
 • மெளனி
 • தி.ஜானிகிராமன்
 • தஞ்சை பிரகாஷ்
 • தஞ்சை இராமையா தாஸ்
 • தஞ்சாவூர் கவிராயர்

2. இசை எப்படிபட்டது?

 • இசை மொழியைக் கடந்தது.
 • அமைதியின் நாக்காக அது எல்லா மொழிகளையும் பேசுவது.
 • மனங்களைக் கரைத்து அந்தரவெளியில் உலவச் செய்வது.
 • சொற்களைப் புறக்கணித்துத் தனக்குள்ளிருக்கும் செய்தியை எந்தமொழி மனதிற்குள்ளும் செலுத்துவது.
 • ஆரவாரங்கள், குழப்பங்கள், கூச்சல்கள் , துயரங்கள் என எல்லாவற்றையும் கடந்த அமைதி வெளியில் மனங்களைக் கூட்டுவது.
 • இசையின் செவ்வியில் தலைப்படும் மனமானது இனம், நாடு என்ற எல்லைக்கோடுகளைத் தாண்டிவிடும். இசை தாண்டவைக்கும்.

3. சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள் யாவர்?

 • 1970 – அன்பளிப்பு (சிறுகதைகள்) – கு. அழகிரிசாமி
 • 1979 – சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு) – தி. ஜானகிராமன்
 • 1987 – முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு) – ஆதவன்
 • 1996 – அப்பாவின் சிநேகிதர் (சிறுகதைத் தொகுப்பு) – அசோகமித்ரன்
 • 2008 – மின்சாரப்பூ (சிறுகதைகள்) – மேலாண்மை பொன்னுசாமி
 • 2010 – சூடிய பூ சூடற்க (சிறுகதைகள்) – நாஞ்சில் நாடன்
 • 2016 – ஒரு சிறு இசை (சிறுகதைகள்) – வண்ணதாசன்.

4. தி.ஜானகிராமனின் பயண அனுபவங்களை விவரி?

தி.ஜானகிராமன் அவர்கள், தனது ஜப்பான் பயண அனுபவங்களை உதயசூரியன் என்னும் தலைப்பில் சுதேசமித்திரன் வார இதழில் எழுதினார். இது 1967 இல் நூலாக வெளியிடப்பெற்றது.

ரோம், செக்கோஸ்லோவோக்கியா சென்ற அனுபவங்களைக் கருங்கடலும் கலைக்கடலும் என்னும் தலைப்பில் 1974இல் நூலாக வெளியிட்டார்.

தமது காவிரிக்கரை வழியான பயணத்தை நடந்தாய் வாழி காவேரி என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார்.

இவரது மற்றுமொரு பயணக்கட்டுரை, அடுத்த வீடு ஐம்பது மைல் என்ப தாகும்.

II. நெடு வினா

1. சிறுகதை பற்றி புதுமைபித்தன் கூறுவதென்ன?

சிறுகதை என்றால் சிறிய கதை, கொஞ்சப் பக்கங்களில் முடிந்து விடுவது என்பதல்ல; சிறுகதை என்ற பிரிவு இலக்கியத்தில் அதில் எடுத்தாளப்படும் பொருள் பற்றியது;

ஒரு சிறு சம்பவம், ஒரு மனோநிலை, மனநிலை ஆகியவற்றை மையமாக வைத்து எழுதப்படுவது; எடுத்து எழுதுவது.

சிறுகதையில் சம்பவமோ , நிகழ்ச்சியோ அல்லது எடுத்தாளப்படும் வேறு எதுவோ அது ஒன்றாக
இருக்க வேண்டும்.

சிறுகதைப் பின்னலில் ஆரம்பம், மத்திய சம்பவம், அதன் வளர்ச்சி அல்லது வீழ்ச்சி என்ற மூன்று
பகுதிகள் உண்டு.

சாதாரணமான கதைகளில் இம்மூன்றும் படிப்படியாக வளர்ந்துகொண்டே போகும்.

சமீபத்தில் எழுதப்பட்ட அமெரிக்க சிறுகதைகளில் பழைய சம்பிரதாயமான ஆரம்பம், முடிவு என்ற இரண்டு பகுதிகளும் கிடையவே கிடையாது.

கதை திடீரென்று மத்திய சம்பவத்தின் உச்சஸ்தானத்தில் ஆரம்பிக்கிறது. அதிலேயே முடிவடைகிறது.

இன்னும் வேறு ஒரு விதமான கதைகளும் உண்டு. அவற்றில் முடிவு என்ற ஒன்று கிடையாது.

அதாவது கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல்.

2. சிறுகதை பற்றி புதுமைபித்தன் கூறுவதென்ன?

இந்திய இசையின் அழகான நுட்ப ங்களைத் தெளிவாக வாசித்துக் காட்டக்கூடிய இசைக்கருவிகளில் நாகசுரமும் ஒன்று.

மங்கலமான பல நிகழ்வுகளில் இக்கருவி இசைக்கப்படுகிறது. இந்தச் சிறப்பான கருவி 600 ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழகத்தில் வாசிக்கப்பட்டது.

13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சங்கீத இரத்னாகரம் என்னும் நூலில் இந்தக் கருவி கூறப்படவில்லை. 13ஆம் நூற்றாண்டு வரையிலுள்ள எந்தப் பதிவுகளிலும் இந்தக் கருவி பற்றிக் குறிப்பிடப்படவில்லை.

தமிழகப் பழைமை வாய்ந்த கோவில் சிற்பங்களிலும் இந்தக் கருவி காணப்படவில்லை. ஆகவே இந்தக் கருவி 13ஆம் நூற்றாண்டிற்குப் பின் ஏற்பட்டிருக்கலாம் என்று அறியமுடிகிறது. நாகசுரம் என்ற பெயரே சரியானது. நாகசுரக் கருவி ஆச்சா மரத்தில் செய்யப்படுகிறது.

வெட்டப்பட்ட ஆச்சா மரத்துண்டுகளை நீண்ட நாள்கள் வைத்திருந்த பிறகே இக்கருவி உருவாக்கப்படுகிறது. எனவே பழைய வீடுகளிலிருந்து பிரிக்கப்பட்ட ஆச்சா மரக்கட்டைகளைக் கொண்டே நாகசுரம் செய்யப்படுகிறது.

நாகசுரத்தின் மேல்பகுதியில் சீவாளி என்ற கருவி பொருத்தப்படுகிறது. சீவாளி, நாணல் என்ற புல் வகையைக்கொண்டு செய்யப்படுகிறது.

சில பயனுள்ள பக்கங்கள்