Tamil Nadu 9th Standard Tamil Book Term 3 பழந்தமிழர் சமூக வாழ்க்கை Solution | Lesson 1.1

பாடம் 1.1. பழந்தமிழர் சமூக வாழ்க்கை

9ஆம் வகுப்பு தமிழ், பழந்தமிழர் சமூக வாழ்க்கை பாட விடைகள் - 2022

வாழிய நிலனே > 1.1. பழந்தமிழர் சமூக வாழ்க்கை

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. துணி தைப்பவர் ______________ எனப்பட்டனர்.

விடை : துன்னக்காரர்

2. முல்லை நிலத்தில் ______________ ஆண்மகனின் வீரத்தை புலப்படுத்துகிறது.

விடை : ஏறுதழுவுதல்

3. பழந்தமிழர் வாழ்வு ___________, ___________ என இருதிறப்பட்டதாக இருந்தது.

விடை : அகம், புறம்

4. அக வாழ்வைப் பாடுவது ______________ எனப்பட்டது.

விடை : அன்பின் ஐந்திணை

5. அம்மானை என்பது ______________

விடை : பெண்களின் விளையாட்டு

6. அறத்தின் வழிபட்ட வாழ்க்கையைப் ______________ வாழ்ந்தனர்.

விடை : பழந்தமிழர்

II. சிறு வினா

1. தமிழரின் சமூக வாழ்க்கை எப்படி சிறப்புடையதாகத் திகழ்கிறது?

தமிழரின் சமூக வாழ்க்கை, தாமும் வாழ்ந்து, தம்மைச் சுற்றியிருக்கும் அனைவரையும் வாழ்வைக்கும் சிறப்புடையதாகத் திகழ்கிறது.

2. கஞ்சுகம் என்றால் என்ன?

ஆடவர் அணிந்திருந்தமேற்சட்டையை கஞ்சுகம் எனப்படும்.

3. இல்லறத்தார்கள் எவற்றை தலையாய கடமையாக கொண்டிருந்தன?

இல்லறத்தார்கள் விருந்தோம்பல், சுற்றம் தழுவல், வறியோர் துயர் துடைத்தல் ஆகியவை தலையாய கடமையாக கொண்டிருந்தன.

4. பழந்தமிழர் காலத்தின் கல்வி கற்கும் இடங்கள் யாவை?

  • மரத்தடி
  • ஊர் மன்றங்கள்
  • ஆசிரியர் வீடுகள்
  • வீட்டுத் திண்ணைகள்

5. பழகாலத் தமிழர் ஓவிய மரபு தொன்மையானது என்பதற்கு சான்று எது?

பழகாலத் தமிழர் ஓவிய மரபு தொன்மையானது என்பதற்கு பாறை ஓவியங்கள் சான்று ஆகும்.

6. வேத்தியல் என்றால் என்ன?

மன்னர்க்குரிய கூத்து வேத்தியர் என்று அழைக்கப்பட்டன

7. பொதுவியல் என்றால் என்ன?

மன்னர் அல்லாமல் மற்றவர்களுக்கு உரிய கூத்து பொதுவியல் என்று அழைக்கப்பட்டன.

8. வீரத்தை உரைத்த வீரர்களுககு ‘நடுகல் வழிபாடு செய்வதும் வழக்கத்தில் இருந்தது என்பதை உணர்த்தும் அகநானூறு பாடல்களை எழுதுக.

நல்லமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி அதர்தாெறும்
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் – அகநானூறு 67 (அடி 8 – 10)

9. விழாக்களை பழந்தமிழர் கொண்டாடுவதை இலக்கியங்கள் மூலம் கூறுக

அறுமீன் சேரும் அகலிரு நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாலை தூக்கி – அகநானூறு 141 (அடி 8 – 9)

வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்
வெறியாட்டு அயர்ந்த காந்தளும் – தாெல். புறத். 63

10. கஞ்சுகம் என்றால் என்ன?

மேற்சட்டையைக் ‘கஞ்சுகம்’ என்றனர்.

11. கஞ்சுகம் என்றால் என்ன?

துணி தைப்பவர், ‘துன்னக்காரர்’ எனப்பட்டார்

12. சங்கத்தமிழர்கள் அணிந்திருந்த அணிகலன்களை பற்றி சங்க இலக்கிய பாடலில் உணர்த்துவதை எழுதுக.

புகைவிரிந்தன்ன பொங்கு துகில் உடீஇ

– புறம். 398, அடி: 20

ஆவியன்ன அவிர் நூற் கலிங்கம்

– பெரும்பாணாற்றுப்படை, அடி : 469

13. பழந்தமிழர் கால உணவு பற்றிய சிறுபாணாற்றுப்படை நூல் வரிகளை எழுதுக

அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு
கவைத்தாள் அலவன் கலவையாேடு
பெறுகுவிர்

– சிறுபாணாற்றுப்படை, அடி: 194, 195

III. குறு வினா

1. பெண்கள் எவ்வகை விளையாட்டுகளில் ஈடுபட்டார்கள்?

  • கழங்காடல்
  • அம்மானை
  • பந்தாடுதல்
  • ஓரையாடுதல்

2. பழந்தமிழ் இசை நூல்கள் யாவை?

  • பஞ்சமரபு
  • முதுநாரை
  • முதுகுருகு
  • பெருநாரை
  • பெருங்குருகு
  • பஞ்சபாரதீயம்
  • இசை நுணுக்கம்

3. தமிழர்களின் திணை நிலத் தெய்வங்களை கூறுக

நிலம் தெய்வம்
குறிஞ்சி முருகன்
முல்லை திருமால்
மருதல் இந்திரன்
நெய்தல் வருணன்
பாலை கொற்றவை

4. பழந்தமிழர்களின் விழாக்களை கூறுக

  • தைத்திங்கள் நோன்பு
  • தைந்நீராடல்
  • கார்த்திகை திருநாள்
  • திருவாதிரை விழா
  • பங்குனி உத்திர விழா
  • இந்திர விழா
  • வேலன் வெறியாட்டு விழா
  • இளவேனில் விழா

5. பழந்தமிழர்களின் பழக்க வழக்கங்ளை விவரி

  • பழந்தமிழர்கள் தீ மூட்ட கல்லை உரசினர்
  • நேரத்தையும் காலத்தையும் ஞாயிறு, நிலவு, விண்மீன்கள், கோள்கள், மலர்கள் பூக்கும் வேளை ஆகியவற்றைக் கொண்டு கணக்கிட்டனர்.
  • இறந்தவர்களை முதுமக்கள் தாழியில் இட்டு புதைத்தனர்.
  • முதுமக்களை வீட்டின் வாசல் வரை வெளியே வந்த வழியனுப்பினர்.

IV. நெடு வினா

1. பழந்தமிழ் மக்களின் ஆடை, அணிகலன்கள் பற்றி கூறுக

சங்கால மக்கள் நேர்த்தியும், அழகும் மிக்க பல்வேறு ஆடை அணிகலன்களை அணிந்திருந்தனர்.

ஆடவர் இடையில் ஓர் ஆடையும், மேலே ஒரு துண்டும் அணிந்திருந்தனர். சிலர் மேற்சட்டை அணித்தனர். மேற்சட்டையை கஞ்சுகம் என்றனர்.

பெண்கள் புடவை அணிந்ததனர். பட்டு, பருத்தியாலான ஆடைகளை அனைவரும் பயன்படுத்தினார்.

மெல்லி இழைகளால் நெய்யப்பட்ட ஆடைகள் பாம்பின் சட்டை போன்றும், புகையைப் போலவும், பாலாவிபோலவும் விளங்கின.

துணிகளுக்கு வண்ணம் ஏற்றும் கலையையும் பழந்தமிழர்கள் அறிந்திருந்தனர். துணி தைக்கும் பழக்கழும் இருந்ததது. துணி தைப்பவர் துன்னக்காரர் எனப்பட்டனர்.

சங்கத்தமிழர்கள் உலோகங்களாலும் விலையுயர்ந்த கற்களாலும் ஆன அணிகலன்களை அணிந்தனர்.

சிலம்பு. மேகலை, குழை. மோதிரம், கடகம் முதலானவற்றை பெண்கள் அணிந்தனர்.

சிறுவர் ஐம்படைத்தாலி என்னும் கழுத்தாணியை அணிந்தனர்.

2. இல்லற வாழ்வில் பழந்தமிழ் மக்களின் நிலைபற்றி கூறுக.

அறத்தின் வழிபட்ட வாழ்க்கையைப் பழந்தமிழர் வாழ்ந்தனர். இதன் காரணத்தால் தான் குடும்ப வாழ்க்கையை இல்லறம் எனப்பட்டது.

இல்லறத்தார்க்கு விருந்தோம்பல், சுற்றம் தழுவல், வறியோர் துயர் துடைத்தல் ஆகியவை தலையாய கடமையாக இருந்தன.

தமிழர் தம் இல்வாழ்க்கை அன்பின் வழியதாகும். தலைவன் தலைவியர் செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை நெஞ்சம் கலந்தவர்கள்.

இம்மை மாறி மறுமை ஆயினும் நீயாகியர் என் கணவர் என் மனைவியும் நரைமுடிய வரினும் தலைநாள் போன்ற அன்போடு மனைவியைப் போற்றுவதைக் கணவரும் தம் கடமையாக கருதினர்.

அறிவறிந்த மக்களைப் பெறுவது இல்லறத்தின் நற்பேறு என வாழ்ந்தனர்.

3. பழந்தமிழர்களின் கல்வி முறையை பற்றி கூறுக

திருக்குறளில் கல்வி, கேள்வி, அறிவுடைமை முதலான அதிகாரங்கள் அக்காலக் கல்வியின் சிறப்பை விளக்குவன.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் கல்வியின் சிறப்பு பல இடங்களில் விளக்கப்பட்டுள்ளது.

எண்ணும் எழுத்தும் கண்ணெனப் போற்றப்பட்டன. இவற்றுடன் மருத்துவம் போன்றவையும் கற்பிக்கப்பட்டன.

கல்வி ஒருவனுக்கு உயர்வளிக்கும் என உறுதியாக நம்பியதால் என்குடிப் பிறப்பினும் யாவேர ஆயினும் அக்குடியில் கற்போரை மதித்தனர்.

அக்காலத்தில் மரத்தடியும், ஊர் மன்றங்களும், ஆசிரியர் வீடுகளும், வீட்டுத் திண்ணைகளும் கல்வி கற்கும் இடங்களாக இருந்தன.

பனையோலையில் எழுத்தாணி கொண்டு எழுதும் முறையை பழக்கமாக கொண்டிருந்தன.

சில பயனுள்ள பக்கங்கள்