Tamil Nadu 9th Standard Tamil Book Term 3 சீவக சிந்தாமணி Solution | Lesson 1.2

பாடம் 1.2. சீவக சிந்தாமணி

ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று.விருத்தப்பாவில் இயற்றப்பட்ட முதல் காப்பியம்.

மணநூல் என அழைக்கப்படுகிறது.

இலம்பகம் என்ற உட்பிரிவுகளை கொண்டது.

13 இலம்பகங்களை கொண்டது.

இதனை இயற்றியவர் திருத்தக்க தேவர்

சமண மதத்தை சார்ந்தவர்

இன்பச்சுவை மிக்க இலக்கியமும் இயற்ற முடியும் என்று நிறுவும் வகையில் இக்காப்பியத்தை இயற்றினார்.

இவர் கி.பி. 9-ம் நூற்றாண்டைச் சார்ந்தவர்

சீவக சிந்தாமணியை பாடுவதற்கு முன்னோட்டமாக நரிவிருத்தம்  என்னும் நூலை இயற்றியுள்ளார்.

I. சொல்லும் பொருளும்

 • தெங்கு – தேங்காய்
 • இசை – புகழ்
 • வருக்கை – பலாப்பழம்
 • நெற்றி – உச்சி
 • மால்வரை – பெரியமலை
 • மடுத்து – பாய்ந்து
 • கொழுநிதி – திரண்ட நிதி
 • மருப்பு – கொம்பு
 • வெறி – மணம்
 • கழனி – வயல்
 • செறி – சிறந்த
 • இரிய – ஓட
 • அடிசில் – சோறு
 • மடிவு – சோம்பல்
 • கொடியன்னார் – மகளிர்
 • நற்றவம் – பெருந்தவம்
 • வட்டம் – எல்லை
 • வெற்றம் – வெற்றி

II. இலக்கணக் குறிப்பு

 • நற்றவம், தண்டகல், தேமாங்கனி – பண்புத்தொகை
 • தேர்ந்த – பெயரச்சம்
 • விளைக, இறைஞ்சி  – வினையெச்சம்
 • கொடியனால் – இடைக்குறை

III. பகுபத உறுப்பிலக்கணம்

1. இறைஞ்சி = இறைஞ்சு +இ

 • இறைஞ்சு – பகுதி
 • இ – வினையெச்ச விகுதி

2. ஓம்புவார் = ஓம்பு + வ் +ஆர்

 • ஓம்பு – பகுதி
 • வ் – எதிர்கால இடைநிலை
 • ஆர் – பலர் பால் வினைமுற்று விகுதி

IV. பலவுள் தெரிக

1. வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே இவ்வடி உணர்த்தும் பாெருள் யாது?

 1. மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்
 2. வறண்ட வயலில் உழவர் வெள்ளமாய் அமர்ந்திருந்தனர்
 3. செறிவான வயலில் உழவர் வெள்ளமாய் கூடியிருந்தனர்
 4. பசுமையான வயலில் உழவர் வெள்ளமாய் நிறைந்திருந்தனர்

விடை : மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்

2. பாதிரி ஒத்த பூ, செய்கோலம் இலக்கணக் குறிப்புத் தருக

 1. உருவகத்தொடர், வினைத்தொகை
 2. உவமைத்தாெடர், வினைத்தொகை
 3. வினைத்தொகை, பண்புத்தொகை
 4. வினைத்தொகை, உருவகத்தொடர்

விடை : உவமைத்தாெடர், வினைத்தொகை

V. குறு வினா

சுருக்கொண்ட பச்சைப் பாம்பு எதற்கு உவமையாக்கப்பட்டுள்ளது?

சுருக்கொண்ட பச்சைப் பாம்பு நெற்பயிர்களின் தோற்றத்திற்கு உவமையாக்கப்பட்டுள்ளது

VI. சிறு வினா

ஏமாங்க நாட்டில் எவையெல்லாம் ஆயிரக்கணக்கில் இருப்பதாக திருத்தக்க தேவர் பாடியுள்ளார்?

 • ஆயிரம் வகையான உணவுகள்
 • உணவளிக்கும் அறச்சாலைகள் ஆயிரம்
 • மகளிர் ஒப்பனை செய்ய மணிமணிமாடம் ஆயிரம்
 • கம்மியர் ஆயிரம் பேர்
 • திருமணங்கள் ஆயிரம்

இப்படி ஆயிரம் நிகழ்வுகள் ஏமாங்க நாட்டில் குறைவின்றி நடக்கின்றன.

VII. நெடு வினா

ஏமாங்க நாட்டு வருணணைகளை நும் ஊர் குறித்த வளங்களோடு ஒப்பிடுக

ஏமாங்க வருணணைஎங்கள் ஊர் வளம்
தென்னை மரத்திலிருந்து விழுகின்ற தேங்காய் தேனடையைக் கிழித்து பலாப் பழத்தைப் பிளந்து, மாங்கனியை சிதற வைத்து, வாழைப்பழத்தை உதிரச்செய்ததுதேங்காய்கள் வயல் ஓடைகளில் விழுந்து பூக்களை தழுவிச் செல்கிறது.
வள்ளல்களைப் போன்றது வெள்ளம். அது மலையில் இருந்து செல்வத்தை அடித்து வந்து ஊர் மக்களுக்கு வழங்கும் வகையில் பாய்கின்றது.பூக்களையும், பழங்களையும் வெள்ளம் அடித்து வந்து ஊரினில் சேர்க்கும்.
எருமைகளும், எருதுகளும் பேரொலி எழுப்புகின்றன. அது கேட்டு வாரல் மீன்கள் ஓடுகின்றன.ஏர் மாடுகளின் சத்தம் வயல்களில் எங்கும் கேட்கும்.

கூடுதல் வினாக்கள்

I. பலவுள் தெரிக

1. விருத்தப்பாவில் இயற்றப்பட்ட முதல் காப்பியம்

 1. மணிமேகலை
 2. சீவகசிந்தாமணி
 3. சிலப்பதிகாரம்
 4. குண்டலகேசி

விடை: சீவகசிந்தாமணி

2. திருத்தக்கதேவர் கி.பி. ______ -ம் நூற்றாண்டைச் சார்ந்தவர்

 1. 7
 2. 8
 3. 9
 4. 6

விடை: 9

3. திருத்தக்கதேவர் ______ மதத்தை சார்ந்தவர்

 1. பெளத்தம்
 2. வைணவம்
 3. சமண
 4. சைவம்

விடை: சமண

4. திருத்தக்கதேவர் தம் பெயருக்கு இட்டபெயர்

 1. திருத்தக்கதேவர் சரிதம்
 2. மணநூல் சரிதம்
 3. சிந்தாமணியின் சரிதம்
 4. விருத்தப்பா காவியம்

விடை: சிந்தாமணியின் சரிதம்

4. சீவக சிந்தாமணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

 1. 3145
 2. 3245
 3. 3415
 4. 3425

விடை: 3145

5. சீவக சிந்தாமணிக்கு வழங்கப்படும் பெயர்களில் பொருந்தாதது

 1. மணநூல்
 2. முக்திநூல்
 3. காமநூல்
 4. தமிழ் இலக்கியமணி

விடை: தமிழ் இலக்கியமணி

5. சீவக சிந்தாமணி உணர்த்தும் உண்மைகளில் பொருந்தாது

 1. அமைச்சரை ஆராய்ந்து தெளிதல் வேண்டும்.
 2. பெண்வழிச்சேறல் பெருந்துன்பம் விளைவிக்கும்.
 3. தன்ஆட்சியர் கட்டளைப்படி நடத்தல் வேண்டும்.
 4. தன்னிலை மறவாது இருத்தல் வேண்டும்.

விடை: தன்னிலை மறவாது இருத்தல் வேண்டும்.

5. பொருந்தாதவற்றை தேர்க

 1. தெங்கு – தேங்காய்
 2. இசை – புகழ்
 3. வருக்கை – பெரியமலை
 4. நெற்றி – உச்சி

விடை : வருக்கை – பெரியமலை

7. பொருந்தாதவற்றை தெரிவு செய்க

 1. மடுத்து – பாய்ந்து
 2. கொழுநிதி – திரண்ட நிதி
 3. மருப்பு – கொம்பு
 4. வெறி – பாய்ந்து

விடை : வெறி – பாய்ந்து

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. சீவகனைத் தலைவனாக கொண்டு தோன்றிய காப்பியம் __________

விடை : சீவக சிந்தாமணி

2. இன்பங்களை துறந்து துறவு பூண வேண்டும் என்பது ________ மையகருத்து

விடை : சீவக சிந்தாமணியின்

3. சீவக சிந்தாமணி ________ பாவால் ஆனது.

விடை : விருத்தப்பா

4. ________ நரிவிருத்தத்தை பாடியவர்.

விடை : திருத்தக்கதேவர்

5. நாட்டு வளம் இடம் பெறும் இலம்பகம் ________

விடை : நாமகள் இலம்பகம்.

6. சீவக சிந்தாமணியில் _________ இலம்பகம் உள்ளன.

விடை : 13

7. சீவக சிந்தாமணி ________ என அழைக்கப்படுகிறது

விடை : மணநூல்

II. பொருத்துக

மருப்புவயல்
வெறிசோம்பல்
கழனிகொம்பு
அடிசில்மணம்
மடிவுசோறு
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – உ, 5 – ஆ

V. குறு வினா

1. ஐம்பெருங்காப்பியங்கள் யாவை?

 • சிலப்பதிகாரம்
 • மணிமேகலை
 • குண்டலகேசி
 • வளையாபதி
 • சீவக சிந்தாமணி

2. நல்லவர்களின் பணிவைப் போல் உள்ளது எது?

பயிர்கள் முற்றியவுடன் சாய்ந்து இருப்பது நல்லவர்களின் பணிவைப் போல் உள்ளது.

3. ஏமாங்க நாட்டில் பேரொலி எழுப்பியவை எவை? களைந்து ஓடியவை எவை?

 • ஏமாங்க நாட்டில் பேரொலி எழுப்பியவை எருதுகள்.
 • களைந்து ஓடியவை வாரல் மீன்கள்.

4. ஏமாங்க நாட்டில் செழித்திருந்த மரங்கள் யாவை?

 • தென்னை
 • பாக்கு
 • பலா
 • மாங்கனி
 • வாழை

5. சீவக சிந்தாமணியின் இலம்பகங்களை எழுதுகு

 1. நாமகள் இலம்பகம்
 2. கோவிந்தையார் இலம்பகம்
 3. காந்தருவதத்தையார் இலம்பம்
 4. குணமாலையார் இலம்பம்
 5. பதுமையார் இலம்பம்
 6. கேமசரியார் இலம்கம்
 7. கனகமாலையார் இலம்பகம்
 8. விமலையார் இலம்பகம்
 9. சுரமஞ்சியார் இலம்பகம்
 10. மண்மகள் இலம்பகம்
 11. பூமகள் இலம்பகம்
 12. இலக்கணையார் இலம்பகம்
 13. முத்தி இலம்பகம்

சீவக சிந்தாமணி – பாடல் வரிகள்

பார் போற்றும் ஏமாங்கதம்

1. காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகின் நெற் றிப்
பூமாண்ட தீந்தேன் தொடை கீறி வருக்கை போழ்ந் து
தேமாங்கனி சிதறி வாழைப் பழங்கள் சிந்தும்
ஏமாங்கதம் என்று இசையால்திசை போயது உண்டே! (31)

வாரி வழங்கும் வள்ளல்

2. வள்ளல் கைத்தல மாந்தரின் மால்வரைக்
கொள்ளை கொண்ட கொழுநிதிக் குப்பையை
உள்ளம் இல்லவர்க்கு ஊர்தொறும் உய்த்துஉராய்
வெள்ளம் நாடு மடுத்து விரைந்ததே. (36)

மணம் கமழும் கழனி

3. நெறிமருப்பு எருமையின் ஒருத்தல் நீள்இனம்
செறிமருப்பு ஏற்றினம் சிலம்ப ப் பண் உறீஇப்
பொறிவரி வராலினம் இரியப் புக்குடன்
வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே . (44)

தலைவணங்கி விளைந்த நெற்பயிர்

4. சொல்அரும் சூல்பசும் பாம்பின் தோற்றம்போல்
மெல்லவே கருஇருந்து ஈன்று மேலலார்
செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்தநூல்
கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே. (53)

எல்லாம் ஆயிரம் ஆயிரமாய்

5. அடிசில் வைகல் ஆயிரம் அறப்புறமும் ஆயிரம்
கொடியனார் செய் கோலமும் வைகல்தோறும் ஆயிரம்
மடிவுஇல் கம்மியர்களோடும் மங்கலமும் ஆயிரம்
ஒடிவுஇலை வேறுஆயிரம் ஓம்புவோரின் ஓம்பலே. (76)

நாடுகள் சூழந்த ஏமாங்கதம்

6. நற்றவம் செய்வோர்கஙகு இடம்தவம் செய்வோர்க்கும் அஃது இடம்
நற்பொருள் செய்வோர்க்கு இடம்பொருள் செய்வோர்க்கும் அஃதுஇடம்
வெற்ற(ம்) இன்பம் விழவிப்பான் விண்உவந்து வீழ்ந்தென
மற்றநாடு வட்டமாக வைகுமற்ற நாட்ரோ. (77)

சில பயனுள்ள பக்கங்கள்