தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பற்றிய பள்ளிக்கல்வித்துறை

அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை?

ஆகஸ்ட் 3ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்று வெளியான செய்தி வதந்தி என்றும் தற்போதைய சூழலில், மாணவர் சேர்க்கை நடத்துவது பற்றி எந்த முடிவையும் எடுக்கப்படவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்திருந்தது.

Tamilnadu School Education Department News 29th July 2020

இதைப்பற்றி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் விளக்கம்,

  • அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை.
  • அடுத்த மாதம் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடுவது குறித்து தெரிவிக்க உள்ளோம். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
  • மதிப்பெண் முறையிலா கிரேடு முறையிலா என்பதை முடிவுசெய்யப்பட்டவுடன் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.
  • தனியார் பள்ளிகளில் மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்களை விளம்பரப்படுத்த கூடாது. மீறி விளம்பரப்படுத்தும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்துள்ளார்.